ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

Go down

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! Empty யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

Post by ayyasamy ram Sun Mar 31, 2019 12:52 pm

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! Open-pannajpg
-
சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்ற வழக்கமான பட்டியலே
பெரும் பாலான விருது விழாக்களின் சட்டகமாக இருக்கும்.

தொலைக் காட்சிகள் நடத்தும் நடத்தும் இதுபோன்ற விழாக்கள்
ஒரே தோற்றம் தருவதற்கும் இதுதான் காரணம். ஆனால், சற்று
புதுமையாக, 'ஓபன் பண்ணா' என்ற யூடியூப் சேனல் முற்றிலும்
சினிமா தொழில்நுட்ப கலைஞர்களைக் கௌரவம் செய்யும்
விருது விழா ஒன்றைச் சென்னையில் நடத்துகிறது.

ஏப்ரல் 6-ம் தேதி மாலை 4 மணி முதல் சேத்துப்பட்டில் உள்ள
லேடி ஆண்டாள் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

இப்படியொரு வித்தியாச விருது விழா நடத்த வேண்டும் என்ற
யோசனை எப்படி வந்தது? இது பற்றி 'ஓபன் பண்ணா' யூடியூப்
சேனலின் அபிஷேக்கிடம் கேட்டபோது ஆர்வமாகப் பேசத்
தொடங்கிவிட்டார்.

“முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சார்ந்தே நம்ம சினிமா
இயங்குகிறது. ‘நான் ஒரு சண்டை இயக்குநராக வேண்டும்,
சவுண்ட் மிக்ஸிங் பண்ண வேண்டும், ஸ்பெஷல் மேக்-அப்
துறையில் நுழையவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.

ஆனால் சவால் நிறைந்த பல்வேறு தொழில்நுட்பத் துறைகள்
திரையுலகை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் வியக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நம்மிடம்
இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலிகளை அங்கீகரித்து விருதுகள்
வழங்கி, அவர்களது படைப்புப் பங்களிப்பை வெளியுலகுக்கு
அடையாளம் காட்டி கௌரவப்படுத்த விரும்பினோம்.

அப்படி உருவானதுதான் இந்த விருது விழா. இது உண்மையான
திறமைகளின் வியர்வையை நுகர்ந்து கொண்டாடும் விழா”
என்றவரிடம் எத்தனை பிரிவுகளில் விருது என்றதும் 26 என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! Empty Re: யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

Post by ayyasamy ram Sun Mar 31, 2019 12:53 pm


“உதாரணமாக, ஒரு பாடலுடைய மிக்ஸிங் பொறியாளருக்கு
கிராமி விருது பட்டியலில் இடமுண்டு. அதை இங்கு
வழங்கவுள்ளோம். தமிழில் ஒரு பாடல் நன்றாக இருக்கிறது
என்றால், இசையமைப்பாளர் மட்டுமே நம் கண்ணுக்குத்
தெரிகிறார்.

ஆனால், அப்பாடலைச் சரியான கலவையாகத் தொகுத்து
வழங்கிய பொறியாளரை நாம் கண்டுகொள்வதில்லை.

ஒரு படப்பிடிப்பில் இயக்குநருடைய அணி தான் பம்பரமாகச்
சுழன்று அனைத்து சரியாக இருக்கிறதா என்பது வரை
பார்ப்பார்கள். அவை எந்தப் படத்தில் சரியாக இருந்தது என்று
பார்த்து விருது கொடுக்கவுள்ளோம்.

அந்த அணியை ஒட்டுமொத்தமாக மேடையேற்றவுள்ளோம்.”
என்று கூறி ஆச்சரியப்படுத்திய அவர், விருதுக்கு தேர்ந்தெடுத்த
ஒருவரைப் பற்றிக் கூறுங்கள் என்றதும் சந்துரு என்பவரைப்
பற்றிக் கூறினார்.

“ஒரு படத்தின் பெயரை அழகாக வடிவமைத்ததற்காக
சந்துரு என்பவருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து,
‘உங்களுக்கு விருது கொடுக்கவுள்ளோம்’ என்றவுடன்,
யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று கட் பண்ணிவிட்டார்.

அப்படித்தான் உள்ளது இன்றைய நிலைமை.
விருது வென்றவர்களை தொலைபேசியில் அழைத்த போது
, ‘குடும்பத்துடன் வரலாமா?’ என்று தான் கேட்டார்கள்.

ஏனென்றால், இவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று
அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருக்கிறது.
-

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் ‘ரஜினிகாந்த்’ என்று
ஒவ்வொரு எழுத்தாக வரும் கிராஃபிக்ஸ் எழுத்துகளை
வடிவமைத்தவர் பெயர் யாரென்று
இங்கு பலருக்கும் தெரியாது. அவர் பெயர் மைக்கேல் வி.சேகர்.

அவரை கௌரவித்து விருது வழங்கவுள்ளோம். உலக புகழ் வாய்ந்த
இயக்குநர்கள் பலருடைய படங்களுக்கு அவர் பணிபுரிந்துள்ளார்.
இவர்களைப்போல் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கலைஞர்களைத்
தேடித் தேடி உலகத்துக்கு ‘ஓபன் பண்ணா’ என்று காட்டுவோம்,
அவர்களைக் கொண்டாடுவோம்” என்கிறார்.
-
----------------------------------------
முத்து
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! Empty Re: யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

Post by Guest Sun Mar 31, 2019 2:49 pm

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! 1571444738
வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது! Empty Re: யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum