உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by சக்தி18 Yesterday at 7:15 pm

» தெரிந்து கொள்ளலாம் வாங்க..
by சக்தி18 Yesterday at 7:10 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» கோடை மறைந்தால் இன்பம் வரும்….
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by T.N.Balasubramanian Yesterday at 6:01 pm

» கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:49 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» ஆசையே அலை போலே
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» ஓட்டு போட மட்டும் வந்துட்டுப் போறா…!
by சக்தி18 Yesterday at 3:39 pm

» சினிமா பாடல வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» பொது அறிவு வினா விடைகள்.!!
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பெயர்ச் சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:20 am

» காந்திஜி வாழ்வில்…
by ayyasamy ram Yesterday at 10:18 am

» கற்பனைத் திறன் மிக முக்கியம்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» பயத்தை விரட்ட வழி…!
by ayyasamy ram Yesterday at 10:15 am

» டாஸ் மாக் கடைக்கு போவதை மறக்க…
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இடுப்பில் மாட்டிக்கொள்ள சானிடைசர் ஸ்பிரே!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வேலன்:-புகைப்படங்களில் வேண்டிமாற்றங்கள்செய்திட -Image Tuner.
by velang Yesterday at 7:30 am

» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:08 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Fri Jun 05, 2020 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Fri Jun 05, 2020 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Fri Jun 05, 2020 8:58 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Fri Jun 05, 2020 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Fri Jun 05, 2020 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Fri Jun 05, 2020 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Fri Jun 05, 2020 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Fri Jun 05, 2020 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Fri Jun 05, 2020 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Fri Jun 05, 2020 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Fri Jun 05, 2020 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

Admins Online

`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்

`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம் Empty `நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்

Post by ayyasamy ram on Fri Mar 29, 2019 11:48 am

`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம் Sumathi_17393

-----
பிரார்த்தனை

ஒருநாளும் பள்ளிப் பேருந்தில்
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்,
பார்த்து விடக்கூடாது,
பேருந்திற்காகக் காத்திருக்கும்
தன் மகளின் பள்ளிச் சீருடையை
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை.


வாழ்வின் ஒரு கணத்தை உறையவைக்கும் இந்தக் கவிதையை எழுதியவர், சுமதி ராம். `கோடிட்ட இடங்களை நிரப்புக' எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் கவனம் ஈர்த்தவர். `பேரன்பு' படத்தில், `அன்பின் அன்பே' என்ற பாடலின் வழியே தமிழ்த் திரை உலகில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். முதல் பாடலைப்போல அல்லாமல்,

// வானத்தையும் நிலத்தையும் நிரப்பிட ஒரு பறவை போதும் //

// கடல் சுமந்த சிறு படகு //

// நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேசப் பேச பூக்கள் பேசுதே! //

ஆகிய வரிகள் தேர்ந்த பாடலாசிரியரின் வரிகளாக ஈர்க்கின்றன.

---

----
சமீபத்தில் நடந்த `பேரன்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இத்திரைப்படத்தில் பாட்டு எழுதிய அனுபவத்தை மிகச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். தன் கணவரின் படத்தில் பாட்டெழுத கிடைத்த வாய்ப்பு பற்றி சுமதி ராமிடம் கேட்டேன்.

``நா.முத்துக்குமாரின் இழப்பு, ராம் சாருக்குத் தாங்கமுடியாத இழப்பு. `பேரன்பு' படம் நடந்துகொண்டிருந்தபோது, இதை நினைத்துப் பலமுறை கவலைப்படுவார். அவரைச் சமாதானப்படுத்த, `நீங்களே பாடல்களை எழுதுங்களேன்' என்றேன். அதற்கு அவர், `இல்லையில்லை. பாட்டு எழுதுவது வேறு ஜானர்' என்று மறுத்தார். ஒருநாள், `படத்துக்கு நான் ஏதேனும் உதவிசெய்ய முடியும் என்றால் சொல்லுங்க' என்றேன். வேறு வேலை ஏதாவது கொடுப்பார் என்றே நினைத்துச் சொன்னேன்.

ஆனால், `பாட்டு எழுதிக்கொடு' என்றது ஆச்சர்யமாக இருந்தது. நான் தயங்கிக்கொண்டே மறுத்துவிட்டேன். அவர் விடவில்லை. யுவன் ஷங்கர் ராஜா சாரின் டியூனை அனுப்பி, வரிகளை எழுதச் சொன்னார். அப்போதும் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை. சும்மா சொல்கிறார் என்றே நினைத்தேன். அவர் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்ததால் எழுதினேன்."
`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம் Sumathi_with_ram_18244
---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம் Empty Re: `நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்!' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்

Post by ayyasamy ram on Fri Mar 29, 2019 11:52 am


``எழுதிக்கொடுத்ததும் ஓகே சொல்லிவிட்டாரா?"

(சிரிக்கிறார்) "அது பெரிய கதை. எழுதிக்கொடுத்ததைப் படித்துவிட்டு, `உனக்கு டியூனுக்கு எழுதத் தெரியுது. அதையே படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு எழுது' என்பார். பல்லவி எழுதிக்கொடுத்தால், ஓகே என்பார்.  அடுத்த நாளே `சரியில்லை வேறு எழுது' என்பார். இப்படியே நான்கு மாதங்கள் ஆயிற்று. திடீரென, `முதலில் எழுதிய வரிகளைக் கொடு' என்பார். வீட்டில் இருக்கும் எல்லா பேப்பரிலும் எழுதிப் பார்த்துக்கொண்டே இருப்பேன். `நா.முத்துக்குமார் எழுதவேண்டிய பாடல். அவன் இயற்கையை நேசிக்கும் மனோபாவத்தோடு வாழ்க்கையைப் பற்றிய புரிதலை எளிமையாகவும் எழுதுவான். அவன் எழுதுவதுபோல உன்னிடம் எதிர்ப்பாக்கலை. ஆனால், அவன் இடத்திலிருந்து நீ எழுதுறதை மட்டும் நினைவில் வெச்சுக்கோ' என அடிக்கடி சொல்வார். அது வேறு பயமுறுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஹெட்மாஸ்டர் இம்போசீஷன் எழுதச் சொல்வதுபோல எழுதவைத்தார். தினமும் `என்ன வரிகளை மாற்றி எழுதினே?' எனக் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருகட்டத்தில், நம்மால் முடியாது என ஒதுங்க நினைத்தேன். `முத்துக்குமார் எவ்வளவு பிராக்டிஸ் பண்ணியிருப்பானு நினைச்சுக்கோ' எனச் சொன்னார். 24 வகைகளாக எழுதிக் காட்டினேன். அவற்றிலிருந்து அவருக்குத் தேவையான வரிகளைத் தேர்வுசெய்துகொண்டார்."

``உங்கள் பாடல் வரிகளைப் படித்ததும் யுவன் ஷங்கர் ராஜா என்ன சொன்னார்?"

``எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் யுவன் சார் கூடுதல் ஸ்பெஷல். ராம் சார் ஓகே சொல்லிவிட்டார் என்றதும் அவருக்கும் ஓகே. ஏனென்றால், அவருக்கு முழு நிறைவு கிடைக்காமல் விடமாட்டார் என்று யுவன் சாருக்குத் தெரியும். இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. பாட்டு எழுதத் தயக்கமாக இருந்தது என்று சொன்னேன் இல்லையா... அப்போது, `யுவனின் டியூனே ரொம்ப நல்லா இருக்கு. இதை அப்படியே வெச்சுக்கலாமே' என்றுகூடச் சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். உண்மையில் அந்த டியூன் அவ்வளவு பிடித்திருந்தது. அதை நான்கு மாதங்கள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த நேரங்களில் நான் தியான நிலையை உணர்ந்தேன். நான் பாட்டு எழுதியதைவிட இது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. இசை வெளியீட்டு விழாவில்தான் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு அமைந்தது."

பேரன்பு

``பாடல் வரிகளைப் படத்தில் காட்சியாகப் பார்க்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?"
``பாடல் வரிகளை விட காட்சி ரொம்ப ரிச்சாக இருந்தது என்றே நினைக்கிறேன்"

``உங்கள் பாடலைக் கேட்டதும் பிள்ளைகளின் ரியாக்‌ஷன்?''

``பல்லவி எழுதியதும் கேட்ட என் பையன், அதைத் தொடர்ந்து `ஹம்' செய்துகொண்டே இருந்தான். அப்பவே இது பலருக்கும் பிடிக்கும் என நினைத்தேன். என் பொண்ணுக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது."

``நா.முத்துக்குமாரின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தது எது?"

``முத்து அண்ணாவின் எல்லா பாடல்களுமே பிடிக்கும். முத்து அண்ணாவை ஐந்து முறைதான் பார்த்திருக்கிறேன். ராமின் நண்பராகத் தெரியும். கோயம்புத்தூரில் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதேபோல அவர் எழுதிய பாடல்களை கேசட்டில் கொண்டுவந்தார். பிறகு, சென்னைக்கு வந்தபின் நிறைய உதவிகள் செய்தார்.

ஆனந்த விகடனில் என்னுடைய ஒரு கவிதை வெளிவந்திருந்தது. `கற்றது தமிழ்' பட விவாதத்தின்போது, அந்தக் கதையை ஒட்டியவாறே வந்த அந்தக் கவிதையை அவரிடம் காட்டிய முத்து அண்ணா, `என்னிடம் சொல்லவே இல்லையே?' எனக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு என் கவிதை வந்த விஷயம் தெரியும். அந்தக் கவிதை பற்றி ரொம்ப சிலாகித்துப் பாராட்டினார் முத்து அண்ணா. அவரை வெளி ஆளாக ஒருநாளும் நாங்கள் நினைத்தது இல்லை. அவர் எங்கள் வீட்டில் ஒரு நபர்."

``தொடர்ந்து பாடல்களை எழுதுவீர்களா?"

``அவரிடம் உரிமையாக நினைத்ததைச் சொல்லிவிடலாம். மற்றவர்களிடம் அப்படிச் சொல்ல முடியாது அல்லவா... (யோசிக்கிறார்) பார்ப்போம்"
-
வி.எஸ்.சரவணன்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை