ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலி

2 posters

Go down

தலைவலி Empty தலைவலி

Post by தாமு Thu Dec 24, 2009 5:08 am

தலைவலிகள்
நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக நீங்கக்கூடியவை.
பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை. ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள். மருத்துவரானவர் தலைவலியானது தீவிர பாதிப்பிற்குரியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என சோதிப்பார்.



எப்பொழுது தலைவலி ஆபத்துக்குரியது?




அனைத்து தலைவலிகளுக்கும் மருத்துவ உதவி தேவை இல்லை. சில தலைவலிகள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததாலும், ஒவ்வாமையாலும், தசைப்பிடிப்பாலும் ஏற்படும். அவைகளை வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம். இதர தலைவலிகள் தீவிரமானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே உடனடி மருத்துவ உதவி அவசியம்.
தலைவலிக்குரிய கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்,உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.

  • அதிக வலியுடன் திடீரென்று எதிர்பாராது வரக்கூடிய தலைவலி - அதாவது என் வாழ்க்கையிலேயே வந்த மிக மோசமான தலைவலி என்று புலம்ப வைக்கக்கூடிய தலைவலி.
  • சுய கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சியற்ற நிலைக்குத் தள்ளும் நிலை, குழப்பங்கள் (தடுமாற்றங்கள்), பார்வையில் மாற்றம் அல்லது வேறு உடல் கோளாறுகளுடன் தொடர்புடைய தலைவலிகள்.
  • காய்ச்சல் மற்றும் கழுத்து பிடிப்புடன் கூடிய தலைவலி

தலைவலிக்குரிய கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், மருத்துவ சிகிச்சை தேவை

  • தூக்கத்தில் இருந்து உங்களை எழுப்பக்கூடிய தலைவலி
  • தலைவலி வரக்கூடிய முறையிலோ அல்லது வந்து செல்லும் கால இடைவெளிகளிலோ எதிர்பாராத மாற்றங்கள்
  • உங்களுக்கு ஏற்படும் தலைவலியின் தன்மையைத் தங்களால் யூகிக்க முடியவில்லை என்றால்,உங்கள் மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைப் பெறுவதே நல்லது.

பரபரப்புத் தன்மை (டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி, ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) & தொகுப்புத் தலைவலி எனத் தலைவலிகளைப் வகைப்படுத்தலாம். ஒற்றைத்தலைவலி(மைக்ரேன்) & தொகுப்புத் தலைவலி ஆகியவை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட தலைவலிகளின் வகைகளாகும். அளவுக்கு மீறிய அதிக உடல் உழைப்பும் இத்தலைவலியை அதிகப்படுத்துகின்றது. தலைப்பகுதியைச் சுற்றிலும் உள்ள திசுக்களில் ஓடக்கூடிய இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது வீங்குவதாலோ, தலையைக் குத்துவது போன்றோ அல்லது அடிப்பது போன்றோ வலிக்கச்செய்யும். தொகுப்புத் தலைவலியை விட ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்) அதிக அளவில் காணப்படுகிறது.

தொகுப்புத் தலைவலி வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அடிக்கடி தொடர்ந்து வரும். இந்த தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இது தீவிரமான வலியைத் தரும்.





கண்டறியும் முறை





பெரும்பாலான தலைவலிகள் ஆபத்துக்குரிய காரணங்களால் வருவதில்லை. இவ்வகைத் தலைவலிகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வழங்கப்படும் மருந்துகளால் சரி செய்யலாம். மைக்ரேன் போன்ற ஆபத்துக்குரிய இதர வகைத் தலைவலிகளை சரி செய்ய மருத்துவரின் கவனிப்பும் அவருடைய அறிவுறுத்தலின்படியான சிகிச்சை முறையும் அவசியமாகின்றது.





பரபரப்புத் தன்மை(டென்ஷன்) காரணமாக ஏற்படும் தலைவலி:






  • பரபரப்பு அல்லது தசைச் சுருக்கத் தலைவலிகள் பொதுவாகத் தென்படக்கூடியவை. ஒருவரிடம் அதிக மன அழுத்தம் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வலியைக் கொடுக்கும்.
  • பரபரப்புத் தலைவலிகளுடன் தொடர்புடைய வலியானது மந்தமாக( குறைந்த அளவில்) இருந்தாலும் நீடித்து இருக்கக்கூடியது. நெற்றி, தலைப்பொட்டு & கழுத்தின் பின்பகுதியில் வலியை உணரலாம்.
  • மக்கள் பரபரப்புத் தலைவலி வந்தால் தலைப்பகுதியைச்சுற்றிலும் கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டதுபோல் இருக்கும் என்பார்கள்.
  • பரபரப்புத் தலைவலி அதிக காலங்களுக்கு தொல்லைகொடுத்தாலும், மன அழுத்தம் இருக்கும் காலகட்டங்கள் வரை மட்டுமே தொல்லை தரும். அதன் பிறகு நின்று விடும்.
  • பரபரப்புத் தலைவலிகள் பொதுவாக பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது அல்ல. ஒற்றைத்தலைவலிக்கு(மைக்ரேன்) வருவது போன்று முன் கூட்டிய அறிகுறிகள் ஏதும் இதற்கு கிடையாது.ஏற்படுகின்ற தலைவலிகளில் 90% தலைவலிகள் பரபரப்புத் தலைவலிகளே.





சைனஸ் தலைவலிகள்




சைனஸ் நோய் அல்லது அலர்ஜியின் காரணமாக இத்தலைவலி வரும். சளி அல்லது ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து சைன பாதைகள், மூக்கின் மேற்புறம் மற்றும் பின்புறம் உள்ள எலும்புகளில் உள்ள காற்றறைகள் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியால் சைனஸ் தலைவலிகள் ஏற்படும். சைனஸ் பகுதிகளில் அடைப்பு அல்லது கிருமிகளின் பாதிப்பு அதிகமாகும் போது தலையில் வலி உண்டாக ஆரம்பிக்கும். இவ்வலியானது தீவிரமாகவும், தொடர்ந்தும் இருக்கும். காலை முதல் வலிக்க ஆரம்பிக்கும். இவ்வலி தலை குனிந்தால் துடிக்கச் செய்யும் அளவுக்கு வலிக்கும்.
சைனஸ் தலைவலியின் பொதுவான அறிகுறிகள்:

  • கண்களைச் சுற்றிய பகுதிகள், கன்னங்கள் மற்றும் நெற்றிப்பகுதிகளில் ஏற்படும் வலி & அழுத்தம்.
  • மேல் வரிசைப்பற்களில் வலி இருப்பது போன்ற உணர்வு.
  • காய்ச்சல் மற்றும் குளிர்
  • முக வீக்கம்

சைனஸ் தலைவலியால் உருவாகும் முக வீக்கத்தைக் குறைக்க சூட்டுடன் ஒத்தனம் மற்றும் ஐஸ்கட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.





ஒற்றைத் (மைக்ரேன்) தலைவலிகள்




ஒற்றைத் தலைவலிகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் பெயருக்கு ஏற்றாற்போல் இந்த அதீத வலி தலையின் ஒரு புறம் மட்டுமே வரலாம்; தலையின் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது மற்ற அறிகுறிகளுடனும் சேர்ந்து வரலாம். வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல், வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், பார்வை மங்கல், காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவையும் ஏற்படும்.
ஒற்றைத் தலைவலிக்கான பொதுவான அறிகுறிகள்:


  • பார்வையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படும் வலி
  • தலைப்பகுதியின் ஒரு புறத்தில் மிதமான வலியிலிருந்து தீவிரமான துடிக்க வைக்கும் வலி
  • வாந்தி அல்லது குமட்டல்
  • வெளிச்சம் & இரைச்சலுக்கு எளிதில் உணர்ச்சிக்கு உள்ளாகுதல்.
பல்வேறு காரணிகள் மைக்ரேன் தலைவலியைத் தூண்டக்கூடியவை. இக்காரணிகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். மது, சாக்லேட், நாள்பட்டபால்கட்டி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கஃபீன் போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆல்கஹால் மற்றும் கஃபீன் பொருட்களைப் பயன்படுத்துதல் தலைவலியைத் தூண்


குறிப்பு : மோசமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமேயானால், மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள், பாதிப்புத்தன்மை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.


Health
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தலைவலி Empty Re: தலைவலி

Post by kirupairajah Thu Dec 24, 2009 8:32 pm

தலைவலியில் இத்தனை விடயங்கள் அடங்கியிருக்கிறதே, அனேகமானோர் தலைவலியை சாதாரணமாக நினைத்து, தக்க சிகிச்சை செய்வதில்லை, நல்லதோர் மருத்துவ தகவல், நன்றி தாமு!


தலைவலி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum