ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

3 posters

Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:39 pm

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. சுதாரித்தால் நல்லது!

சென்னை: ஒரு கட்சி நம் கண்ணெதிரே விதையாகி வளர்ந்து விருட்சமாகி.. இறுதியில் பட்டு போவதையும் நாம் பார்க்கிறோம் என்றால் அது தேமுதிகதான்... இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் தேமுதிகவேதான்!
கட்சி ஆரம்பித்தபோதும், தேர்தலில் தனித்து நின்ற போதும், பல்வேறு தரப்பினராலும் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் விஜயகாந்த். திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுப்போட்ட விரக்தியில் இருந்த மக்களுக்கு விஜயகாந்த் ஒரு மாற்று சக்தியாக தென்பட்டார்.இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Vijayakanth455-1551954803
அதனால்தான் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அன்று அவரது அணுகுமுறையும் நடைமுறையும் மிகவும் பக்குவமாக இருந்தது. அதற்கு காரணம் ஒருவேளை அப்போது உடனிருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் வழிகாட்டுதலாக கூட இருக்கலாம்.

பாதி பலம்

எப்போது பண்ருட்டியை பகைத்து கொண்டார்களோ அப்போதே தேமுதிக பாதி பலம் குறைந்தது. இதன்பிறகு வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் இவர்கள் எல்லாம் தேமுதிகவில் இருந்து வெளியே வந்தார்களோ அப்போது மீதியும் போய்விட்டது. அதற்கு பிறகு கட்சி வளரவே இல்லை. அந்த கட்சி யாரையும் வளர்க்கவும் இல்லை. குடும்ப ரீதியான தலையீடுகளால் இன்று வரை அக்கட்சியால் எழ முடியவில்லை என்பதுதான் உண்மை.

தொடர்ச்சி........

நன்றி தட்ஸ்தமிழ் 

ரமணியன் 

Last edited by T.N.Balasubramanian on Thu Mar 07, 2019 4:41 pm; edited 1 time in total (Reason for editing : editing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:43 pm

தொடர்ச்சி 

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Vijayakanth57-600-1551955035
  
உடல்நலம்

விஜயகாந்த் நன்றாக இருந்தால் இந்த பிரச்சனையே இல்லை. ஆனால் அவர் இல்லாமல் பார்த்தால், அந்த கட்சியில் வேறு யாரும் நல்ல தலைவர்கள் இல்லை, உறுதியான முடிவுகளை எடுக்க நல்ல குழு இல்லை. கட்சியை வழி நடத்தி செல்ல மூத்த தலைவர்கள் இல்லை.

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Vijayakanth4545008-1551955092
  
விஜயகாந்த் மகன்

பொருளாளர் என்ற போர்வையில் பிரேமலதா பேசுவதைக் கூட கேட்க முடிகிறது. அவரது பேச்சில் ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் விஜயகாந்த்தின் மகன் பேசுவதெல்லாம்.. ரொம்ப டூ மச் ஓவர் ரகமாக இருக்கிறது. அதிலும், விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரிக்க வந்த தலைவர்களை அவன் இவன், ஏண்டா வீடு தேடி வர்றீங்க என்று பேசுவதை யாரும் ரசிக்க முடியாது.

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Lk-sudish3434-1551955117
  
முதிர்ச்சியின்மை

தேமுதிக ஒரு அரசியல் கட்டமைப்புடன் இப்போது இல்லை. நல்ல தலைவர்கள் அங்கு இல்லை. அரசியல் பக்குவம் குறைவானவர்கள்தான் நிறைய உள்ளனர் சுதீஷ் உட்பட! ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை கூட இவர்களால் இன்று நடத்த முடியாததே இவர்களின் முதிர்ச்சியின்மைக்கு சிறந்த உதாரணம்.
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:46 pm

தொடர்ச்சி  

துரைமுருகன்

எதற்காக திமுக-தேமுதிக சந்திப்பு நடந்தது என்ற கேள்விக்கு நேரடியான தெளிவான பதிலை அக்கட்சியில் உள்ள அனகாபுத்தூர் முருகேசன், இளங்கோவனால் சொல்ல முடியவில்லை. மாறாக அசிங்கமாக போய் விடும் என்று பேசி தனது கோபத்தை வெளிக்காட்டிச் சென்றார் சுதீஷ். இதே கேள்விதான் துரைமுருகனிடத்திலும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் யாரையுமே அசிங்கமோ, அவமானமோ படுத்தாமல் சொன்ன பதில்தான் முதிர்ச்சி அரசியல்.

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Premalatha3434-1551955175

நிர்வாகிகள் யார்?

இவ்வளவு குறைகளையும் ஒரு கட்சி வைத்திருப்பது சரிதானா? விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக மற்றவர்கள் எவ்வளவுதான் பார்ப்பார்கள்? ஒரு கட்சிக்கான கட்டுக்கோப்பையும் இழந்து காணப்படுகிறது தேமுதிக. விஜயகாந்த் வீட்டுக்கு கூட்டணி தொடர்பாக தலைவர்கள் சென்றபோதும் சரி, மற்ற இடங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையின்போதும் சரி, பிரேமலதா, சுதீஷ் தவிர வேறு யாராவது நிர்வாகிகள் அங்கு இருந்தார்களா? இப்படி முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் இவர்களாகவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் அந்த கட்சியை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? நாலு பேருக்கு இவர்கள் நிர்வாகிகள் என்று சொல்லி உட்கார வைத்தால்தானே அவர்களை ஜனங்களுக்கு தெரியவரும்?

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Vijayakanth-premalatha76-1551955219

நன்றி தட்ஸ்தமிழ் 

.............

ரமணியன் 
  
Last edited by T.N.Balasubramanian on Thu Mar 07, 2019 5:00 pm; edited 1 time in total (Reason for editing : editing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:48 pm

களப்பணி அவசியம்

இப்படி எல்லா பக்கமும் அரசியல் லட்சணங்களை இழந்து கிடக்கிறது ஒரு அரசியல் கட்சி. இனி இக்கட்சி எப்போது மீண்டெழும் தெரியாது. விஜயகாந்த்தும் முன்பு போல் ஓடியாடி உழைக்க முடியாது. ஆனால் கட்சி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது. அதற்கு களப்பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Vijayakanth34345-1551955664
  
வித்தியாசமான விஜயகாந்த்

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தொண்டர்கள் கொஞ்சம் தேமுதிக பக்கம் இருக்கிறார்கள். இந்த சாதகமான ஒரு அம்சத்தை விதையாக போட்டு திரும்பவும் விருட்சமாக்க தேமுதிக தலைமை வரவேண்டும். கேமராவுக்கு முன்னால் என்றோ, மக்களுக்கு முன்னால் என்றோ விஜயகாந்த்து கிடையாது. எல்லா பக்கமும் விஜயகாந்த் ஒன்றேதான்.. ஒரே குணம்.. ஒரே பேச்சு!! இது அரசியலுக்கு அப்பாற்பட்டு கிடக்கும் அரிய இயல்பு. பாவனை செய்யும் அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டதால்தான் தேமுதிக தொண்டர்கள் இன்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்! அதுவும் விஜயகாந்த்துக்காக மட்டும்தான்!!
இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3
புரிஞ்சா சரி!
நன்றி தட்ஸ்தமிழ் 
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:59 pm

இன்று தேமுதிக நடத்திய விளக்கவுரை எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பினார்கள்.

விளக்கங்கள் அபத்தமாக இருந்தது. குழந்தைத்தனமாக இருந்தது.

சுதீஷின் பேச்சுக்கள் மற்றும் இரு பொறுப்பாளர்கள் பேச்சு மிகவும் ஆச்சர்யத்தையே ஊட்டியது.
இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது......................
தொண்டர்களை நினைத்தால்தான் ரொம்ப ரொம்ப பாவமாக இருக்கிறது.

துரைமுருகன் பேச்சு --அரசியல்வாதியின் முதிர்ச்சியை காண்பித்தது என்றால் சுதீஷ்,மற்றவர் 
பேச்சு அதற்கு எதிர்மாறாகவே இருந்தது. இவர்கள் பேச்சை கேட்டவர்கள் இவர்களுக்கு ஒட்டு போடுவதை திரும்பவும் யோசிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 5:05 pm

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் அளித்த பேட்டி: 
சுதீஷ், என்னுடன் தொலைபேசியில் பேசினார். கூட்டணி வைக்க விரும்புவதாக கூறினார். இன்று, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் எனக் கூறி, மூன்று பேர், என் வீட்டிற்கு வந்தனர். 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு, எங்களுக்கு விருப்பம் இல்லை. தி.மு.க., அணியில் சேர விரும்புகிறோம்' என்றனர். 
'நீங்கள் இங்கு வருவது, விஜயகாந்திற்கு தெரியுமா' என்று கேட்டேன்.'நாங்கள், ஏற்கனவே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டோம். உங்கள் கவுரவத்திற்கு ஏற்ற தொகுதிகள் இல்லை. தலைவரும் வெளியூரில் இருக்கிறார். 'தொகுதி வழங்கும் அதிகாரம், தலைவருக்கு மட்டும் தான் உண்டு. அவர் வந்ததும், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்' எனக் கூறி, அவர்களை அனுப்பினேன்.
பின், ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக, போன் சொன்னது. பின், தொடர்பு கொண்டபோது, அவர் துாங்குவதாக கூறினர். 'ஏதும் முக்கிய விஷயமா' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை எனக் கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன்.இப்போது பார்த்தால், 'நாங்கள், அ.தி.மு.க.,விடம் பேசி வருகிறோம்' என, சுதீஷ் பேட்டி அளிக்கிறார். இவர்களை நம்பி, எப்படி முடிவெடுப்பது; முதலில், அவர்கள், ஒரு முடிவுக்கு வரட்டும்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.:

நன்றி தினமலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 5:10 pm

சுதீஷ் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகிறார்: துரைமுருகன் கோபம்

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Download-5jpg
துரைமுருகன் , சுதீஷ்- கோப்புப் படம்

திமுக தலைமை பற்றி தன்னிடம் துரைமுருகன் குறை சொன்னார் என சுதீஷ் கூறியதற்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
தேமுதிக, திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் துரைமுருகன் ஆம் என்று சொல்ல, சுதீஷ் இல்லை என மறுக்க, அனைத்து தகவல்களையும் துரைமுருகன் கூற நான் பேசவில்லை என சுதீஷ் மறுக்க மோதல் வலுத்தது.

தவறவிடாதீர்

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Download-3jpg
[size=10]துரைமுருகன் திமுக தலைமை பற்றி என்னிடம் குறை கூறியதை வெளியே சொல்லட்டுமா?- சுதீஷ் ஆவேசம்

கோபத்தின் உச்சியிலிருந்த சுதீஷ், ''அண்ணன் துரைமுருகனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அவரும் நானும் பேசாத விஷயமில்லை. தனிப்பட்ட முறையில் பேசியதை வெளியில் சொல்லமாட்டேன். ஏனென்றால் என் வளர்ப்பு அப்படி. ஆனால் அவர் சொல்கிறார். அவர் அப்படி'' என்று தெரிவித்தார்.
பின்னர் ஒருபடி மேலே சென்று, ''துரைமுருகன் என்னிடம் பேசும்போது கட்சியைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைமை பற்றியும் பேசியதையும் வெளியில் சொல்லட்டுமா?'' என ஆவேசமாக சுதீஷ் கேட்டார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், ''நாங்கள் காரில் வரும்போதுதான் பேசினார். அப்படியெல்லாம் அவர் சொன்னார் என்றால் சுதீஷின் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கு அவரே ஒரு குந்தகத்தை ஏற்படுத்துகிறார் என்று அர்த்தம். அவர் எனது நண்பர். இரண்டு முறை என்னை எதிர்த்து நின்றவர். எங்க ஊர்க்காரர். அவர் அப்படி சொல்கிறார் என்றால் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார்.

நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் [/size]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by Dr.S.Soundarapandian Thu Mar 07, 2019 10:54 pm

ஆமோதித்தல்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by ayyasamy ram Sat Mar 09, 2019 4:29 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. Empty Re: இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum