ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.

Go down

அரசியல்  துளிகள். Empty அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Sun Mar 03, 2019 8:00 pm

பிரதமர் மோடி, எப்போதும், அதிரடி முடிவுகள் எடுப்பவர்' என, பா.ஜ., தலைவர்கள் சொல்வது வழக்கம்; ஆனால், வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு மூத்த அதிகாரி, சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.மோடி பிரதமரான பின், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலரிடம் பேசும் வாய்ப்பு, அந்த அதிகாரிக்கு கிடைத்தது. அப்போது, 'இதுவரை இந்திய பிரதமராக இருந்தவர்களுக்கும், மோடிக்கும் வித்தியாசம் உள்ளது; மற்றவர்களைப் போல மோடியை நினைக்க வேண்டாம்; மோடியிடம், பாக்., கவனமாக இருக்க வேண்டும்' என, அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்தாராம்.தான் பதவியில் இருந்தபோது, மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அந்த அதிகாரி தெரிவித்தார். ஒரு விவகாரத்தில், 'நீங்கள் சொல்வதை செய்வது கஷ்டம்; அதை, இப்படித்தான் செய்ய வேண்டும்' எனச் சொல்லி, அது தொடர்பான சில ஆவணங்களைக் காட்டினாராம், அந்த அதிகாரி.அதற்கு பதிலளித்த மோடி, 'அந்த ஆவணங்களை நீங்களே படித்துக் கொண்டிருங்கள்; ஆனால், எனக்கு தேவை, இது தான்; நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்' எனக் கூறி, அந்த அதிகாரியை அனுப்பி விட்டாராம்.'பொதுவாக, எந்த ஒரு திட்டத்தை முன்வைத்தாலும், ஏதாவது சட்டங்களை கூறி, அதை செய்ய விடாமல், அதிகாரிகள் தடுப்பது வழக்கம்' எனக் கூறிய அந்த மூத்த அதிகாரி, 'பிரதமர் மோடியிடம், அது எடுபடாது' என, உறுதியாக கூறினார்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Sun Mar 03, 2019 8:02 pm

பாட்னா: ஊழல் செய்வதில் ஒன்றிப்போகும் எதிர்கட்சியினர் தம்மை வீழ்த்தவும் ஒன்று சேர்ந்துள்ளனர் என பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசியதாவது: சமீபத்தில் வீரமரணம் அடைந்த நமது தியாகிகளுக்கு நான் தலைவணங்கி எனது உரையை துவக்குகிறேன். மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் அனைவரும் ஆதரவாக இருப்போம். இந்த பீகாரில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தியாகிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.முதல்வர் நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தை முன்னெடுத்து செல்கிறார். வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கிறது. இங்குள்ள பாட்னா நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ளது. பீகாரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அரும்பாடுபட்டு வருகிறது. மாநிலம் அபரித வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவது மக்கள் அறிவர். ரயில்வே, மின்சாரம், விமானம், மெட்ரோ என பல வளர்ச்சி கிட்டியுள்ளது.கால்நடைத்தீவன ஊழல் மூலம் பலர் பயன்பெற்றனர். இந்த ஊழல் அனைத்து மக்களாலும் அறியப்பட்டது. தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர் இல்லை. யாரும் அரசு பணத்தை திருடவுமில்லை. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. எதிர்கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடுகின்றனர். சமீபத்திய இந்தியாவின் தாக்குதல் விஷயத்தில் நாட்டை பலவீனப்படுத்துகின்றனர். ஊழல் செய்தவர்கள் ஒன்று சேருகின்றனர். என்னை அழிக்கவும் ஒன்று சேர்ந்துள்ளனர்.எங்கள் ஆட்சியில் 7 கோடிக்கும் மேல் இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். விவசாயிகள் பலர் பலன் பெற்றுள்ளனர். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. எங்களின் இலக்கு நாட்டின் வளர்ச்சியே. இவ்வாறு மோடி பேசினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Sun Mar 03, 2019 8:10 pm

முத்திரை கட்டணம் இல்லை>>>>>>>>>>>
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்துகளை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Wed Mar 06, 2019 7:38 pm

புதுடில்லி:'சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால், ஓட்டுப் பதிவு நாளன்று, செய்தித் தாள்களில், அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் தேர்தல் குழுவின் திட்டம், வரும் லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்படாது' என்ற, தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் பிரசாரத்தின்போது, மின்னணு ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில், அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வது வழக்கம்.ஓட்டுப் பதிவு நாளுக்கு, 48 மணி நேரத்துக்கு முன், 'டிவி' ரேடியோ மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்தித் தாள்களில், ஓட்டுப்பதிவு நாளன்றும் விளம்பரங்கள் வெளியாகின்றன. இந் நிலையில், மின்னணு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, செய்தித் தாள்களுக்கும் நீட்டிக்க, மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திட்ட முன்மொழிவை, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு, தேர்தல் குழு அனுப்பியது. ஆனால், இதற்கு, சட்ட அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால், 'வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு நாளன்று, செய்தித் தாள்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படாது' என, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Wed Mar 06, 2019 7:40 pm

திருச்சி: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, வக்கீல் ஒருவர் விருப்ப மனு கொடுத்துள்ளார்.லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமல் அறிவித்து உள்ளார். இதற்காக, அந்தக் கட்சியினரிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன. திருச்சியைச் சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர், 'திருச்சி லோக்சபா தொகுதியில், கமல் போட்டியிட வேண்டும்' என விருப்பமனு கொடுத்துள்ளார். இதனால், கமல், இந்த தொகுதியில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.பொள்ளாச்சி சம்பவம் குறித்து கமல் அறிக்கை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், சமூக வலைதளங்கள் வழியாக சிலர், 60க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியுள்ளனர். இதை, மக்கள் நீதி மையம், வன்மையாக கண்டிக்கிறது.குற்றவாளிகளை கைது செய்த, காவல் துறையின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதே வேகத்தில், அடுத்தகட்ட நடவடிக்கையையும், போலீசார் மேற்கொள்ள வேண்டும். நேர்மையான, விரைவான நடவடிக்கை மட்டுமே, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Wed Mar 06, 2019 7:42 pm

சென்னை:''அ.தி.மு.க., கூட்டணியில் சேர, பா.ம.க.,வுக்கு, 300 கோடி ரூபாய் வழங்கியதாக கூறுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ம.க.,வுக்கு, அ.தி.மு.க., சார்பில், 300 கோடி ரூபாய் வழங்கியதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அ.தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்த தால், தி.மு.க.,வினர் வயிற்றெரிச்சலால் அவதுாறு பரப்பும் விதமாக, பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் எடுபடாது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Thu Mar 07, 2019 4:38 am

சென்னை : தமிழக அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக செய்த இரட்டை வேலையால் இன்று (மார்ச் 6) குழப்பம் ஏற்பட்டது.அதிமுகவுடன் ஒரு பக்கம் பேசிக்கொண்டே இன்னொருபுறம் திமுக உடனும் தேமுதிக பேசியது. இதை அறிந்து அதிமுக, திமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை அதிமுகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது தேமுதிக. கிட்டத்தட்ட கூட்டணி இறுதியாகிவிடும் என அதிமுக எதிர்பார்த்தது. அதிலும் திருப்தி அடையாமல், ரகசியமாக திமுகவிடமும் பேச்சு நடத்தியது அக்கட்சி. இன்றே அதுவும் நடந்தது.
இன்று திமுகவினரிடமும் தேமுதிக நிர்வாகிகள் பேசியதை அறிந்ததும், திமுக பொருளாளர் துரைமுருகனை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் பேசிய துரைமுருகன், ''இன்று (மார்ச் 6) காலை சுதீஷ் எனக்கு போன் செய்து, 'நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். உங்களுடன் கூட்டணி சேர விரும்புகிறோம் என்றார். அதற்கு நான், எங்கள் தலைவரும் ஊரில் இல்லை. கொடுப்பதற்கு சீட்டும் இல்லை' என்றேன். பின் தேமுதிகவின் சில நிர்வாகிகள் வந்து பேசினர். அவர்களிடமும் இதையே கூறினேன்'' என்று போட்டு உடைத்தார்.இந்நிலையில், தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சு நடத்தி விட்டு வெளியே வந்த சுதீஷிடம், துரைமுருகன் கூறியது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''நான் சில நாட்களுக்கு முன் துரைமுருகனிடம் கூட்டணி பற்றி பேசியது உண்மை. இன்று பியூஸ் கோயலுடன் நடந்த சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை. பிரதமர் வருவதால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. பியூஸ் சீக்கிரம் பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல வேண்டி இருந்தது. மீண்டும் பேசுவோம்'' என்றார். இப்படி துரைமுருகன் ஒன்றையும் சுதீஷ் இன்னொன்றையும் கூற, கூட்டணி பேச்சுவார்த்தையில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. திமுகவுடன் தேமுதிக பேசி வருவது தெரிந்ததும். பிரதமர் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் படம் உடனடியாக அகற்றப்பட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Thu Mar 07, 2019 8:31 pm

புதுடில்லி: இன்னும் 5 நாட்களுக்குள் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நடப்பு லோக்சபா வரும் ஜூன் மாதம் 3 ம் தேதியுடன் காலாவதியாகிறது. தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணியும் ஓரளவு முடிவாகியுள்ளது.இந்நிலையில் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்பது குறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சில வாரங்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளனர். தேர்தல் தேதியை இந்த வார இறுதிக்குள் அல்லது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளதால் இம்மாநிலத்திற்கு தேர்தல் இருக்குமா என்பது சந்தேகமே.534 லோக்சபா தொகுதிகளுக்கு ஏறக்குறைய 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதாக இருக்கும். கடந்த 2014 ல் மார்ச் 5 ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 9 ம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 17 ம் தேதி முதல்கட்ட தேர்தலும், மே.12 ம் தேதி கடைசிக்கட்ட தேர்தலும் நடந்தது.வரும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Thu Mar 07, 2019 8:31 pm

புதுடில்லி: இன்னும் 5 நாட்களுக்குள் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நடப்பு லோக்சபா வரும் ஜூன் மாதம் 3 ம் தேதியுடன் காலாவதியாகிறது. தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணியும் ஓரளவு முடிவாகியுள்ளது.இந்நிலையில் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்பது குறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சில வாரங்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளனர். தேர்தல் தேதியை இந்த வார இறுதிக்குள் அல்லது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளதால் இம்மாநிலத்திற்கு தேர்தல் இருக்குமா என்பது சந்தேகமே.534 லோக்சபா தொகுதிகளுக்கு ஏறக்குறைய 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதாக இருக்கும். கடந்த 2014 ல் மார்ச் 5 ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 9 ம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 17 ம் தேதி முதல்கட்ட தேர்தலும், மே.12 ம் தேதி கடைசிக்கட்ட தேர்தலும் நடந்தது.வரும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by சிவனாசான் Fri Mar 08, 2019 8:33 pm

ஜேபோர்(ஒடிசா): மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்டசபையிலும், லோக்சபாவிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது முக்கியமாகும். இதனை நிறைவேற்ற காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வோம். உ.பி.,யில் எம்எல்ஏ மீது பெண் ஒருவர் பலாத்கார புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமரும், உ.பி., முதல்வரும் அமைதியாக உள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு ராகுல் பேசினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசியல்  துளிகள். Empty Re: அரசியல் துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum