ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி....

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய செய்தி.... Empty இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:45 am

புதுடில்லி, 'வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன் கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது.வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:47 am

புதுச்சேரி:குடும்பத் தகராறில் மனமுடைந்து, எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு வன்னியர் தெருவை சேர்ந்தவர் விஜி.50. டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (43). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். குடிபழக்கம் காரணமாக விஜி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.தொடர்ந்து இதேபோல் பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த பரமேஸ்வரி, கடந்த மாதம் 4ம் தேதி எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:48 am

புதுடில்லி, 'அரசியல் கட்சிகளுக்கு, பணமில்லா பரிவர்த்தனை முறையில் நன்கொடை வழங்குவதற்கு வசதியாக, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வாயிலாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்' என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.லோக்சபா தேர்தல், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக, அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை உள்ளிட்ட பண பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை பின்பற்றுவதற்காக, மத்திய நிதி அமைச்சகம், தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசியல் கட்சிகளுக்கு, பணமில்லா பரிவர்த்தனை முறையில், நன்கொடை வழங்குவதற்காக, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வாயிலாக, தேர்தல் பத்திரங்களை மூன்று கட்டங்களாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள, ௨௯ அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில், இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.மார்ச், ௧ - ௧௫ம் தேதி வரையிலும், ஏப்ரல், ௧ - ௨௦ம் தேதி வரையிலும், மே, ௬ - ௧௫ம் தேதி வரையிலும் மூன்று கட்டங்களாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த பத்திரங்கள், வழங்கப்பட்ட தேதியிலிருந்து, ௧௫ நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.இந்திய குடிமகன் அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகியோர், இந்த பத்திரங்களை வாங்குவதற்கு தகுதி உள்ளவர்கள். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும், கடந்த லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், 1 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்ற கட்சியாகவும் உள்ளவர்களும், இந்த பத்திரங்கள் வாயிலாக நன்கொடையை பெறலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:49 am

புதுச்சேரி:மின்சாரம் தாக்கியதில் டிங்கரிங் தொழிலாளி உயிரிழந்தார்.புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (52); டிங்கரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில்,தனதுவீட்டில்பழுதடைந்தடியூப்லைட்டைமாற்றிக்கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்ததில் தட்சணா
மூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஜிப்மர் மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தட்சணாமூர்த்தி
உயிரிழந்தார். தட்சணாமூர்த்திக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:50 am

புதுச்சேரி:குடும்பத் தகராறில் மனமுடைந்து, எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு வன்னியர் தெருவை சேர்ந்தவர் விஜி.50. டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (43). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். குடிபழக்கம் காரணமாக விஜி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.தொடர்ந்து இதேபோல் பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த பரமேஸ்வரி, கடந்த மாதம் 4ம் தேதி எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:51 am

திருநெல்வேலி, தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனர், நேற்று ஓய்வுபெறும் நிலையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக இருந்த, ஜெயராஜ், 58, நேற்று ஓய்வு பெற இருந்தார். இவர், மூன்று மாதங்களுக்கு முன், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலராக பணி புரிந்தார். அவரது பணி காலத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், ஆசிரியர்கள் நியமனத்தில், முறைகேடு நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் விசாரணை நடத்தினார்.ஜெயராஜ், ஓய்வுபெறும் நேரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில், விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று, ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து, பள்ளிகல்வித்துறை அரசு செயலர், உத்தரவிட்டார். இதற்கான நகல், பள்ளிகல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:52 am

காரைக்கால்:காரைக்காலில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.காரைக்கால், குரும்பகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி மகன் ராஜ்குமார், 21; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவர் கடந்த 2016ம் ஆண்டு, 5ம் வகுப்பு படித்த 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார்.இது குறித்து, பாதிக்கப் பட்ட சிறுமி சார்பில் நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி சிவகடாச்சம், ராஜ் குமாருக்கு 3 ஆண்டு சிறை, 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:53 am

புதுச்சேரி:பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னரை முற்றுகையிட முயன்ற, வவுச்சர் ஊழியர்கள் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு, தினசரி ரூ.200 சம்பளம், 16 நாள் பணி என்பதை உயர்த்தி வழங்க வேண்டும், கருவூலம் மூலம் மாதத்தின் முதல் நாள் சம்பளம் வழங்க வேண்டும், 14 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வவுச்சர் ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட, அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று கூடினர்.அப்போது, கவர்னர் கிரண்பேடி, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். வவுச்சர் ஊழியர்கள், கவர்னரை சந்தித்து மனு அளிக்க போவதாக தெரிவித்தனர். இதற்கு, போலீசார் அனுமதி அளிக்கவில்லை.ஆய்வை முடித்துக் கொண்டு வெளியே வந்த கவர்னரை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் வவுச்சர் ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை தள்ளி, ஊழியர்கள் முன்னேற முயன்றனர்.அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 36 ஊழியர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து, கலெக்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:54 am

ராணிப்பேட்டை, தமிழக அரசின், 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், விண்ணப்ப படிவம் வழங்காததை கண்டித்து, அரசு பஸ்சை, தி.மு.க.,வினர் சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, ஏழைகளுக்கு, 2,000 ரூபாய் நிதி வழங்குவதாக முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். இதையடுத்து, அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில், இதற்கான படிவங்கள், ஒரு வாரமாக வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்க, நேற்று கடைசி நாள். இதனால், ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் சென்று, படிவம் வாங்கினர். வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள், படிவம் கேட்டுள்ளனர்.அங்கிருந்த அதிகாரிகள், அ.தி.மு.க.,வினருக்கு மட்டுமே படிவங்களை கொடுத்து, மற்றவர்களுக்கு மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. தகவலறிந்த, தி.மு.க.,வினர், காலை, 8:00 மணிக்கு, ஊராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, டவுன் பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 'சிப்காட்' போலீசார் நடத்திய பேச்சுக்கு பின், அனைவருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, 9:00 மணிக்கு, மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 4:55 am

புதுச்சேரி:நிலுவை சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்க கோரி, அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மகளிர் மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவில்லை.இந்நிலையில், எஸ்.டபிள்யூ.ஒ. பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் தாட்சாயிணி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர் நலச்சங்க தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சம்மேளன பொறுப்பாளர் முருகவேணி நன்றி கூறினார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி.... Empty Re: இன்றைய செய்தி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum