ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி

3 posters

Go down

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி Empty 18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி

Post by ayyasamy ram Thu Feb 28, 2019 2:05 pm

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி 201902281251137873_Mother-carries-her-daughter-to-fulfill-her-aim-to-become_SECVPF

குத்தாலம்:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.
சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது.
2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து
வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார்.

அம்மாணவி படித்து வக்கீலாக விரும்புகிறார். மனதை தொடும்
இவர்கள் பற்றிய தகவல்கள் வருமாறு:-

நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தை
சேர்ந்த பழனிசாமி-தேவகி தம்பதியின் மகள் பாரதி (வயது 18).
இவர் போதிய உயரம் வளராமல் 2½ அடியில் குள்ளமாக உள்ளார்.

இருந்தபோதிலும் இவருக்கு படித்து பெயர் புகழுடன் வாழ
வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அந்த எண்ணத்தை வெறும்
கனவாக்கி விடாமல் நனவாக்கும் புதுமை பெண்ணாக பாரதி
திகழ்கிறார்.

தற்போது இவர் மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்
கல்லூரியில் படித்து வருகிறார்.

மகள் பாதுகாப்பாக கல்லூரிக்கு சென்று வரவேண்டும்
என்பதற்காக தேவகி தினமும் காலையிலேயே வீட்டு வேலைகளை
முடித்து விட்டு மகளுடன் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு
புறப்பட்டு செல்கிறார். அவருடன் 18.கி.மீ. பயணம் செய்து கல்லூரி
வகுப்பறையில் விடுகிறார்.

பின்னர் மாலை வரை அங்கேயே காத்திருந்து கல்லூரி நேரம்
முடிந்ததும் மகளை தூக்கி கொண்டு பஸ்சில் ஏறி வீட்டை
வந்தடைகிறார்.

மகள் கல்விக்காக தேவகி கடந்த 18 ஆண்டுகளாக அவரை பள்ளிக்கு
அழைத்து செல்வதிலும், கல்லூரிக்கு அழைத்து செல்வதிலும் மிகுந்த
அக்கறை காட்டி வருகிறார். மேக்கிரிமங்கலம், குத்தாலம் ஆகிய
இடங்களில் உள்ள பள்ளியில் பாரதி தனது பள்ளி படிப்பை படித்து
முடித்துள்ளார்.

பாரதி கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல பரிசுகளை
வென்றுள்ளார். 12ம் வகுப்பு படிக்கும் போது அவர் போபாலில் நடந்த
ஆர்.எம்.எஸ்.ஏ. கலா உத்சவ் 2017 என்ற தேசிய அளவிலான
போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடமும், தேசிய
அளவில் இண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தாயின் விருப்பப்படி படித்து வேலைக்கு செல்வதே தனது லட்சியம்
என்று கூறும் பாரதி தனக்கு படித்து வக்கீலாக வேண்டும் என்பதே
லட்சியம் என்கிறார்.

18 ஆண்டுகளாக மகளை தூக்கி சுமக்கும் தேவகி தனக்கு
ஒரு இருசக்கரவாகனம் இருந்தால் உதவியாக இருக்கும் என்று
தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழ்நாடு அனைத்துவகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்திடம்
இருசக்கரவாகனம் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

தேவகிக்கு மேலும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
பாரதியின் கனவும், தேவகியின் ஆசையும் நிறைவேற அனைவரும்
வாழ்த்துவோம்.
-
---------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி Empty Re: 18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி

Post by சிவனாசான் Fri Mar 01, 2019 7:07 pm

வக்கீலுக்கு படிக்கலாம் ஆனால் பணியாற்ற அருள் வேண்டுமே. ஆசை இருக்கு அரசாள அம்சை இருக்கனும் ...................இறைவன் படைப்பில் இப்படி ஓர் ..................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி Empty Re: 18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி

Post by SK Mon Mar 04, 2019 7:52 pm

அந்த மாணவிக்கு நம் பாராட்டுக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி Empty Re: 18 வருடமாக தூக்கி சுமக்கும் தாய்- வக்கீலுக்கு படிக்க விரும்பும் 2½ அடி உயர கல்லூரி மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum