ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Wed Feb 27, 2019 6:42 pm

அன்பு நட்பூக்களே பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் வாரத்தில் ஆறு நாட்கள் உங்களை சந்திக்க வந்து விடுவார்கள். இவர்களின் உரையாடலில் ஆரோக்கியம் காப்போம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, உணவுபழக்கம், பழங்கால வாழ்வுமுறைக்கும் இன்றைய வாழ்வு முறைக்கும் ஒப்பீடு , பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள், செயல்களும் அதன் எதிர் வினைகளும் காய்கறி பழங்களும் அதன் நன்மை தீமைகளும் என பலவிஷயங்களை கையில் எடுத்து கொள்வார்கள். இதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எதிர்வரும் நாட்களில் தலைப்புக்கள் மாறலாம் எனவே தயவு செய்து இவர்களுடன் பயணம் செய்யும் போது உங்கள் கருத்துக்களை கூற மறவாதீர்கள். இதோ இவர்களை பற்றி ஒரு மினி அறிமுகம்: பாலு தாத்தா அந்தகால பட்டதாரி மனதால் இளைஞர், மாலு பாட்டி அனுபவபட்டதாரி ஜாடிகேத்த மூடி.... நன்றி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Wed Feb 27, 2019 6:42 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம் -1
காலை 10 மணி நல்ல வெயிலில் கீரை கீரை என கூவிக்கொண்டே வந்தாள் நம்ம அஞ்சலை காலை சாப்பாடு முடிந்து பாலுதாத்தா அவர் சினேகித பட்டாளங்களுடன்(எல்லாம் நண்டு சிண்டுங்கதான்) அவர் வீட்டு வாசலில் உள்ள வேப்பமரத்தடியில் தர்பார்{ வம்புமடம் }நடத்தி கொண்டிருந்தார்
அஞ்சலையின் குரல் கேட்டு வாடிம்மா பொண்ணே மாலு கிழவி இவளோ நேரம் உனக்காக தான் காத்திண்டிருந்தா சித்த இரு அவளை கூப்பிடறேன் என சொல்லிவிட்டு உட்புறம் திரும்பி மால்ஸ் அஞ்சலை வந்திருக்கா பாரு என குரல் கொடுத்தார்
ஏற்கனவே அஞ்சலை வர நேரமாகி விட்டதால் கடுங்கோவத்தில் இருந்த பாட்டியோ வந்துட்டாளா? இந்தோ வரேன் என அவசர அவசரமாக கையில் கிடைத்த பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்
தளதளவென கூடையில் கீரை அவரை பார்த்து சிரிக்க அதுவரை அஞ்சலை மேல் இருந்த கோவமெல்லாம் அதை பார்த்த உடன் போயேபோச்சு
முகத்தில் புன் சிரிப்புடன் வந்த மாலு பாட்டி ஏண்டிமா அஞ்சலை இன்னிக்கு இவ்வளோ நேரம் பண்ணிட்டே என கேட்டுக்கொண்டே கீரை கட்டை எடுத்து ஆராய ஆரம்பித்தார்
யம்மா நீங்கதான் இன்னைக்கு முத போணி இன்னமும் காலேல இருந்து சாப்பிட கூட இல்லை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு அனுப்பிவிடுங்கமா என கேட்க
என்னது காலையில இருந்து இன்னும் சாப்பிடலயா? என குறுக்கிட்ட பாலுதாத்தா மால்ஸ் அவ கீரைய எடுத்து வைப்பா நீ போய் அவளுக்கு சாப்பிட எதாவது எடுத்துண்டு வா என சொல்லி அனுப்பினார்
அதெல்லாம் எதுக்குப்பா? என அஞ்சலை சங்கடபட அவளை இலகுவாக்கும் பொருட்டு கிழவி சமையல் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும் ஹீம் என்ன பண்றது ? இன்னைக்கு உனக்கு அதுதான் தலைஎழுத்து இப்படி இனி மாட்டிக்க கூடாதுனா காலேல சாப்புடாம இருக்காதே என சொல்லிவிட்டு திரும்பி பார்க்க அவர் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த பாட்டி மினி பத்ரகாளியாக மாறிருந்தாள்
அஞ்சலையிடம் சாப்பாடையும் தண்ணீரோடு கொடுத்து விட்டு நீ சாப்பிடுடி இந்த மனுஷனை இன்னைக்கு லங்கணம் (பட்டினி) போடலை நான் மாலதி இல்ல
கிழவியாமே ஐயாவுக்கு கொஞ்சும் குமரன் நு நினைப்போ ? ஏண்டா வானரங்களா நொடிக்கு நொடி மால்ஸ் பாட்டி அது பண்ணிகுடுங்கோ இது பண்ணிகுடுங்கோ நு கேட்டு வாங்கி சாப்பிடறேளே என் சமையல குத்தம் சொல்லறார் உங்க தாத்தா அவர் கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசாம அவர் பேசறத்துக்கு எல்லாம் வாயை மூடிண்டு கமுக்கமா ரசிச்சு சிரிக்கரேளா? இனி யாராவது எதாவது வேணும் நு கேட்டுண்டு வாங்கோ அப்புறம் இருக்கு சேதி
பாட்டியின் கோபம் தாத்தாவுக்கு பீதியை கிளப்ப அதற்க்குள் சாப்பிட்டு முடித்து விட்ட அஞ்சலை போதும்மா எதோ தெரியாம சொல்லிட்டாரு மன்னிச்சு விட்டுருங்க என சிபாரிசு செய்ய மலை இறங்கினார் பாட்டி

அவரை குளிர்விக்கும் பொருட்டு ஏன்மா காலைல சாப்பிடுறது அவ்வளவு முக்கியமா? எனகேட்க அவ்வளவுதான் காலை உணவின் அவசியத்தை தாத்தாவும் பாட்டியும் சபீனா போடாத குறையாக விளக்கினர் அவங்க சொன்னதெல்லாம் அங்க இருந்தவங்க தொகுத்துதர பாய்ண்ட் பாய்ண்டா கீழ குடுத்திருக்கேன்
சாப்பிடும் முறை

காலையில் 1 பங்கு சாதம் என்றால் மதியம அரை பங்கு சாதம் பின் இரவில் பெரும்பாலும் கால் பங்கு மற்றும் பால் குடித்தாலே போதுமானது. இதுதான் உணவின் ரகசியம்




காலைஉணவு மிக அவசியம். !
1. இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும்
2. . காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும்.
3. அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.
4. காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும். உடல் எடை அதிகரிக்கும்
5. சுறுசுறுப்புடனும் இருக்க நமது காலை உணவு மிக அவசியம். ..
காலையில் சாப்பிட ஏற்ற உணவுகள்.
1. குளித்து முடித்து விட்டு நல்ல கஞ்சியில் சாதத்தை கரைத்து தொட்டுக்க மிளகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் எடுத்து வைத்துக்கொண்டு வயிறார சாப்பிடவேண்டும்.
2. ஒரு முழு சாதம் சாப்பிடவேண்டும் கடைசியில் கண்டிப்பாக ரசம் இருக்க வேண்டும்.
3. காலையில் எக்காரணம் கொண்டும் அசைவம் வேண்டாம். மதியவேலையில் பார்த்துக்கொள்ளலாம்.
4. சைவப்பிரியர்கள் சாப்பிடவேண்டியது கண்டிப்பாக கீரை மற்றும் கொண்டைக்கடலை வகைகள் தான்.
5. தோசை மாவு இட்லி மாவு உற்றி செய்யும் பண்டங்களை இரவில் வைத்துக்கொள்ளுங்கள்.


பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம் -2
ஷ் அப்பாடி என்ன விலை விக்கிது பார் இந்த நெல்லிக்காய் என முனகியவாறே மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த நெல்லிக்காயுடன் தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பக்கத்து வீட்டு கமலா பாட்டியை அசிரீரிபோல தடுத்தாட்கொண்டது வேற யாரோ இல்லிங்க நம்ம பாலு தாத்தாதான் கமலா பாட்டிக்கு பாலுதாத்தா அத்தை மகன் (கமலா பாட்டி பாலுதாத்தாவ விட ஒருநாள் முன்னாடி பிறந்தவங்க)
என்ன கமலி இப்ப தான் மார்கெட் போயிட்டு வரயா என அரட்டையை (மாலு பாட்டி பாஷையில ஜொள்ளு)துவங்கினார் நம்ம பாலுதாத்தா (எல்லாம் மாலு பாட்டி கோவிலுக்கு போய் இருக்கிற தைரியம்தான்)
என்ன பாலு விஸ்தாரமா காத்து வாங்கிண்டு இருக்கறாப்புல இருக்கு மால்ஸ் வீட்டுல இல்லயா ? என கமலா பாட்டி எதிர் கேள்வி போட
அந்த கிழவி இப்போதான் கோவிலுக்கு போய் கொஞ்சநேரம் ஆறது ஆமாம் நீ என்ன சந்தியாகாலத்துல (மாலை நேரம்) மார்கெட் போயிட்டு வந்திருக்க என்னதான் அப்படி வாங்கினே காட்டேன் பாப்போம் என உரிமையாக அவர் கையில் இருக்கும் பையை பிடுங்கி பார்க்க அதில் நெல்லிக்காய்கள் சும்மா அதிர்ந்தன
தாத்தாவின் கூடவே எட்டி பார்த்த அவரின் வானரபடைகளின் முகம் போன போக்கை பார்க்க கமலாபாட்டிக்கு சிரிப்பாய் வந்தது ஆனால் தாத்தாவின் முகமோ ஆயிரம் சூரியனாய் ஒளிர்ந்தது மறுகணமே கூம்பியும் விட்டது
இதை கண்ட கமலா பாட்டி ஏண்டா பாலு என்னாச்சு என கேட்க நெல்லிக்காய பாத்த உடனே எங்க அம்மா போடுற தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் நியாபகம் வந்திடுத்து கமலி என சொல்ல
இதுக்கு எதுக்கு முகத்தை தூக்குற மாலு கிட்ட சொன்னா அவ போட்டு தரப்போறா என சொல்லி சமாதானபடுத்த முனைந்தார் கமலா பாட்டி

ஹீம் அவதானே நல்லா போட்டு குடுத்துட்டாலும் என நொடித்தார் அந்நேரம் பார்த்தா கோவிலுக்கு போன மாலு பாட்டி திரும்பிவந்து சேர அவரின் வருகையை கண்டு கொண்ட கமலா பாட்டி சரி பாலு நான் கிளம்பறேன் என நழுவதொடங்கினார்
இது புரியாத நம்ம பாலுதாத்தா கெஞ்சும் குரலில் கமலி நீதான் நெல்லிக்காய் தயிர் ஊறுகாய் நல்லா போடுவியே நீ போடும்போது அந்த கிழவிக்கு தெரியாம கொஞ்சம் எனக்கு குடேன் என கேட்க தனது தோழனின் கோரிக்கையை ஏற்று கொள்வதாய் தலையசப்பின் மூலம் தெரிய படுத்தி விட்டு அவ்விடம் விட்டு எஸ்கேப் ஆனார் கமலி பாட்டி
அவர் கிளம்பும் முன் தாத்தாவை பார்த்து பரிதாப பார்வை ஒன்றை வீசிவிட்டு செல்ல அதன் அர்த்தம் புரியாது திகைத்த பாலு தாத்தாவை நடப்புக்கு கொண்டு வந்தது அவருக்கு பின்னால் இவ்வளவு நேரம் சத்தம் காட்டாது நின்றிருந்த மாலுபாட்டியின் ஆவேச குரல்
எழு கழுதை வயசு ஆச்சு இன்னும் நாக்கை கட்ட தெரியலை எனக்கு தெரியாம பக்கத்து வீட்டுகாரிகிட்ட நெல்லிக்காய் ஊறுகாய் அதுவும் தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கி சாப்பிட சொல்லுது
கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த நடப்பு வேணும் இந்தோ இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரத்துக்குளே அக்கம்பக்கம் இருக்குறவங்க கிட்ட கிழவி இத பண்ணா அதை பண்ணாஅப்படி இப்படினு என்னபத்தி குத்தம் சொல்லலேனா பொழுதே போகாதே உங்களுக்கு அப்படி என்ன இந்த வயசுல ஜொள்ளு என எகிற மாட்டி கொண்டு முழிப்பது தாத்தாவின் முறையாயிற்று
சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த கமலிபாட்டி விடு மாலு யார் கிட்ட கேட்டான் எங்கிட்டதானே? இதுக்கு ஏன் இப்படி கோவிச்சுகுற அவன் சொன்னா நான் நம்பிறுவேனா நீ இந்தாத்துக்கு வந்ததுல இருந்து அவனை எப்படி பாத்துக்கறேனு நானும் தினமும் பாத்துண்டுதானே இருக்கேன் எதோ சொல்லிட்டான் நு அவனை காய்ச்சாதே உனக்கும் அந்த தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் பிடிக்கும்தானே அப்புறம் என்ன ? என சமாதானபடுத்த சுற்றி நின்ற வானரங்கள் ஓ மாலுபாட்டிக்கும் தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் பிடிக்குமா?


ஆமாம் கமலி பாட்டி அப்படி என்ன இருக்கு நெல்லிக்காய் ல என கேட்க தாற்காலிக போர்நிறுத்தம் செய்த மாலுபாட்டி பாலுதாத்தா கமலா பாட்டி என மூவரும் சேர்ந்து சொன்ன விஷயங்கள் எல்லாத்தையும் தொகுத்து போட்டிருக்கேன் எல்லாரும் படிச்சுட்டு உங்களுக்கு தெரிஞ்சத நாலுபேருக்கு சொல்லி குடுங்கப்பா

நெல்லிக்காய் நன்மைகள்


அடங்கியுள்ள சத்துக்கள்
• புரதம் – 0.4 கி
• கொழுப்பு – 0.5 கி
• மாச்சத்து – 14 கி
• கல்சியம் – 15 மி.கி
• பொஸ்பரஸ் – 21 மி.கி
• இரும்பு – 1 மி.கி
• நியாசின் – 0,4 மி.கி
• வைட்டமின் ´பி1` - 28 மி.கி
• வைட்டமின் ´சி` - 720 மி.கி
• கரிச்சத்து
• சுண்ணாம்பு
• தாதுப் பொருட்கள்
• கலோரிகள் – 60

இளமை தோற்றம்
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.

இதயம்
உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். நெல்லிக்கனிகளை சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.

சிறுநீரகம்
உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்டவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.

கண்கள்
நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளது இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். பார்வை தெளிவு ஏற்படும்


எலும்புகள்
நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. எனவே அவற்றை உண்பது எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.

முடிகொட்டுதல்
தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்து உள்ளன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சனை குறைகிறது.

மஞ்சள் காமாலை
கல்லீரலில் ஏற்படும் கிருமி தோற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.

பித்தப்பை
நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் சத்துகளை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ரத்தம்
நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்களை நீக்கி, ரத்தத்தை தூய்மை செய்து உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.



வயிற்று புண்
தினந்தோறும் சிலர் கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளும் நீங்கும்.


************************************************************************************* பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம் 3

கையில் இருந்த உதிரிபூக்களை சரமாக தொடுத்து கொண்டிருந்த மாலு பாட்டி தன்னை நோக்கி நடந்து வந்த வத்சலாவை பார்த்து வாடிம்மா வத்சலா இப்போதான் உனக்கு ஆபிஸ் முடிஞ்சதா ? என வரவேற்க ஆமாம் பாட்டி இப்போதான் முடிஞ்சது நாளைக்கு அவர் டூர் முடிஞ்சு ஆத்துக்கு வரார் அதுதான் மார்கெட் போய் கறிகாயெல்லாம் வாங்கிண்டு வரேன் ஓ விச்சு(விஸ்வனாதன் ) நாளைக்குதான் வரானா ? என கேட்டமாலுபாட்டி துணைக்கேள்வியாக வயத்துக்கு ஏதாவது ஆகாரம் பண்ணியா எனவும் கேட்க இல்ல பாட்டி இனிமேதான் என பதில் சொன்னாள் வத்சலா

பேசிக்கொண்டே தன் கையில் இருந்த பூச்சரத்தில் கொஞ்சம் கிள்ளி கொடுத்த மாலுபாட்டியிடம் ஆமாம் பாட்டி எங்க தாத்தாவ காணோம் வீடே அமைதியா இருக்கே என வத்சலா கேட்க அவரா அவருக்கென்ன நடந்தா நிழல் கூட கூட வருதாம் எடை வேற கூடி போச்சு அப்படினு காரணம் சொல்லிட்டு ஊர்சுத்த போய் இருக்கார் வர நேரம் தான் எதிர் பார்த்திண்டுஇருக்கேன் நீ பொழக்கடையில (வீட்டின் பின்புறம் ) போய் சரீர சுத்தி (கை கால் அலம்புதல்)பண்ணின்டுவாடி குழந்தே நான் போய் உனக்கு காப்பி போட்டு எடுத்துண்டு வரேன் என பாட்டி கிளம்ப மால்ஸ் அப்படியே எனக்கும் ஒரு லோட்டா காபி போட்டுண்டு வா என குரல் குடுத்துண்டே அங்கே ஆஜரானார் தாத்தா ம்ம் என முனங்கியபடியே அடுப்படிக்கு சென்றார் பாட்டி

பாலு தாத்தா இந்த பையெல்லாம் சித்த உங்க பொறுப்புல பாத்துக்கோங்கோ நான் பொழக்கடைக்கு போயிட்டு வந்திடறேன் என வத்சலாவும் நகர்ந்தாள் வத்சலா வருவதற்க்குள் தன்னை ஆசுவாச படுத்தி கொண்ட தாத்தா அவளை கண்டவுடன் அம்மாடி குழந்தே உங்காத்து ஃப்ரிட்ஜ் சர்வீஸுக்கு ஆள் வந்திருந்தா நான் கதவை திறந்து கொடுத்து கூடவே நின்னு ரிப்பேர் முடிஞ்சதும் செக் பண்ணி வெச்சிருக்கேன் பில்லை அவா உனக்கு அனுப்பிடுவாடியம்மா அதோட அவா குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கேன் போறச்ச கிழவிகிட்ட நியாபகமா வாங்கிண்டு போ என சொன்னார்

அவர் சொன்னதை கேட்ட வத்சலா கண்கள் கலங்க ரொம்ப தேங்ஸ் தாத்தா ஃப்ரிட்ஜ் ரிப்பேர் ஆனதுல இருந்து கையும் ஓடல காலும் ஓடல அவர் வேற டூருக்கு போய்ட்டாரா ரொம்ப தவிச்சு போயிட்டேன் என நன்றி நவில
அதை கேட்டுக்கொண்டே சுடசுட வெங்காய பஜ்ஜியும் காப்பியுமாய் வந்த மாலுபாட்டி வத்சலா எனக்கு ஒரு சந்தேகம் நோக்கு மட்டும் கையும் காலும் தனிதனியா ஓடுமா என அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்க அதை கேட்டு கடுப்பான வத்சலாவோ யூ டூ பாட்டி ? என கத்த சும்மா ஒரு தமாஷுக்கு தாண்டி என மாலுபாட்டி சமாதான படுத்தினார் இதுவரை அங்கு நடந்த எதையும் கருத்தில் கொள்ளாது பாட்டி கொடுத்த பஜ்ஜியிலும் காப்பியிலும் கவனத்தை செலுத்தி கொண்டிருந்த பாலுதாத்தா எல்லாம்சாப்பிட்டு தீர்த்தபின் மால்ஸ் என்னதான் இருந்தாலும் எங்கம்மா கைமணம் உனக்கு வரலடி எதோ பண்டம் பாழாக பிடாதுனு நானும் பசி ருசியறியாதுனு வத்சலாவும் சாப்பிட்டோம் சரி இன்னமும் உள்ளமிச்சம் எதாவது இருந்தா கொண்டா என சொல்ல
இருங்கோனா வத்சு கிளம்பட்டும் அப்புறம் நீங்க போதும் போதும் நு சொல்ற அளவுக்கு கொடுக்கறேன் என மாலு பாட்டி டபிள் மீனிங்கில் பதில் சொன்னார்
இதை கேட்ட தாத்தா பீதியில் கண்ணு கலங்க ஐயோ வாய விட்டுட்டேனே அடி பின்னிடுவாளே பகவானே காப்பாத்து என எல்லாதெய்வங்களுக்கும் மனு போட அவரோட கெட்ட நேரம் அத்தனை பகவானும் இந்த பக்தனோட் கோரிக்கைய நிராகரிச்சுபுட்டாங்க
அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்ச வத்சலாவுக்கு அவ கேட்ட நோட்ஸ் எடுத்து கொடுத்து அனுப்புனதுக்கறம் பாட்டி வீட்டுல ஒரே வாண வேடிக்கைதான் போங்க சரி நாளைக்கு வந்து தாத்தாவையும் பாட்டியையும் பார்ப்போம் இப்போ வத்சு வோட சேந்து நாமும் ஃப்ரிட்ஜ் சர்வீஸுக்கு ஆள் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் தெரிஞ்சுபோம் நமக்கும் உபயோகமாகுமில்லயா? நாளைக்கு தாத்தாவையும் பாட்டியையும் எங்க பார்க்குறது நு கேக்குறவங்களுக்கு நல்லாஇருந்தா வீட்டுல இல்லை பாட்டி கொடுத்த கொடுவுல எதாவது ஆகிருந்தா ஹாஸ்பிட்டல்ல ? ஒகே பை

ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம்.
எந்த பொருள்களை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, நம் உடல்நலனையும் பாழாக்கிக் கொள்கிறோம்.

ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?
* ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதால் மின்சார செலவு அதிகமாகிறது. அடிக்கடி திறந்து மூடுவதை குறைத்துக்கொண்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
* ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்காமல் இருப்பது நல்லது. மற்றும் அதன்மேல் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பின்புறம் படியும் ஒட்டடையை அடிக்கடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுத்தப்படுத்தி வைத்தால் நிறைய அழுக்கு சேராமல் இருக்கும்.

* ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஸ்பான்ச் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க ேவண்டும். மற்றும் ஃப்ரிட்ஜை சுத்தமாக காலி செய்துவிட்டு கதவுகளை காற்றாடத் திறந்து வைத்துவிட்டால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.

* ஐஸ் டிரேயை பழைய குக்கர் கால்கெட் மீது வைத்தால் எளிதில் எடுக்க வசதியாக இருக்கும்.

* ஐஸ்கட்டி வைக்கும் டிரேயை முதலில் வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தாலும் டிரேயில் இருந்து எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்
.
* ஃப்ரிட்ஜ் திடீரென்று ஓசை எழுப்பினால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும். அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்காமல் இருக்கும் இடத்திற்கேற்ப பொருட்களை வைக்கலாம்.

* ஃப்ரிட்ஜுக்கு கண்டிப்பாக எர்த் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டும்.

* ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு சோப்பு நீரை உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் சோப்பு நாளடைவில் உட்சுவர்களை உடைத்துவிடும். இதற்குப்பதில் சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.

* உணவுப் பொருட்களை சூட்ேடாடு வைக்காமல் குளிர வைத்தபின்தான் வைக்க வேண்டும்.

* ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ மூடிகளையோ வைக்கலாம்.

மேலும் சில டிப்ஸ்கள்
ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும் பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

அதிக குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கப் கூடியது காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாட்கள்வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.

மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின் சத்துக்கள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும் உலர்ந்து போகாமல் இருக்கும்.

வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதிலுள்ள ஃபோலிக் ஆசிட் குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும் வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துக்களும் மாறாமல் இருக்கும்.

உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் காற்றோட்டமுள்ள இடங்களில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்துவிடும்.

தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும் ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாட்கள் மட்டுமே ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.

எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.

* தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு தயிரை கடைந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் வெண்ணெய் தானே தனியாக பிரிந்துவரும்.

* சப்பாத்தி மாவின் மேல் சிறிது ரீபைண்டு ஆயிலை தடவி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு நாட்களானாலும் பிரஷ்ஷாக இருக்கும்.

* வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்துவிட்டால் நறுக்கும்போது கண் கலங்காது.

* ஃப்ரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை சமைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே எடுத்து வைத்துவிட்டு சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.

* காய்கறிகளை நறுக்கி அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் வைட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.

* முழு தேங்காயை ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்துவிட்டு உடைத்தால் டக்கென உடைந்துவிடும்.

* வெண்ணெய், பால் கட்டி போன்ற பால் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில்தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் அதிலுள்ள சத்து குறையாமல் இருக்கும்.

* கத்தரிக்காயை எப்போதும் காகிதப் பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

* பழங்களை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள் அடுக்கி வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் உறையிலோ அல்லது டப்பாவிலோ போட்டு வைக்கலாம். பழங்கள் சுருங்கிப் போகாது.

* வெண்டை, அவரை, பட்டாணி போன்றவை நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்க வேண்டுமானால் ஃப்ரிட்ஜில் பழுப்புநிற அட்டையில் சுற்றி வைக்க வேண்டும்

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 28, 2019 8:43 am

ஆஹா பாலு தாத்தாவும் மாலு பாட்டி ஆரோக்கிய குறிப்புகள்.
எல்லார் வீட்டிலும் இவர்கள் வருகை தரட்டும்.தொடருங்கள்.
மருத்துவ கட்டுரை பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Thu Feb 28, 2019 1:44 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-4

முற்பகல் வேலை முடிந்து சற்றே ஓய்வெடுத்து கொண்டிருந்தார் கமலா பாட்டி என்ன கமலாக்கா ஆத்துல யாரும் இல்லயா? வீடே வெறிச்சோனு இருக்கே ? என கேட்டபடிக்கு ஆஜரானார் மாலுபாட்டி அதேயேன் கேக்குற மாலு இன்னைக்கு சனிக்கிழமையாச்சே நாளைக்கும் ஞாயிறு லீவு வேறயா? எல்லாரும் பக்கத்துல சின்னதா ஒரு தீம் பார்க் இருக்குல அதுல என் ஜாய் பண்ணிட்டு வரேன் நு கிளம்பி போய் இருக்கா எனக்கு உடம்புக்குமுடியல சித்த ஆயாசமா இருந்தது அதுனால நான் போகல ஆமாம் நீயெங்க இந்நேரம் இங்க வந்திருக்க ? பாலு என்ன பண்ணறான் என பதில் கேள்வி கேட்க அவராஅக்கா வேப்பமரத்தடியில கட்டில போட்டுண்டு நன்னா தூங்கறார் கேட்டா மீட்டிங் வித் நித்ராதேவினு லொள்ளுவேற ஹீம் இவர என்னத்தை பண்ணறது நு எனக்கு புரியல

பகல்ல குட்டி தூக்கம் உடம்புக்கு புத்துணர்ச்சி கொடுக்குமாம் நானும் படிச்சிருக்கேன் என கமலாபாட்டி சொல்ல தனியா இருக்கென்னு சொன்னேளே அக்கா என்னமாவது சமைச்சு சாப்பிட்டேளா? நான் எதாவது எடுத்துண்டு வந்து தரவா ? என மாலு பாட்டி கேட்க மதியானத்துக்கு சமைச்சிட்டேன் இனி சாயங்காலம் தான் எதாவது பண்ணனும் என கமலாபாட்டி சொல்ல அதெல்லாம் நீங்க எதுவும் பண்ண வேண்டாம் இன்னைக்கு ராத்திரி எங்காத்துக்கு சாப்பிட வந்துடுங்கோ என அழைத்தார் மாலு பாட்டி சற்றே யோசித்த கமலாபாட்டி மாலு பாட்டியின் தொடர் வற்புறுத்தலால் சரி என சொல்ல என்ன டிபன் பண்ணி வெக்க அக்கா என மாலு பாட்டி கேட்டார் அரிசி உப்புமா பண்ணேன் நான் இங்க சுட்ட கத்திரிக்காய் மசியல் பண்ணி எடுத்துண்டு வரேன் தொட்டுண்டு சாப்பிட கனஜோரா இருக்கும் என கமலாபாட்டி சொல்ல டன் என்றார் மாலு பாட்டி

பிறகு எதோ நினைவு வந்தவராய் அச்சோ அக்கா சொல்ல மறந்துட்டேனே நானும் தயிர் நெல்லிக்காய் போட்டுட்டேன் நன்னா வந்திருக்கு அதை காலேல இருந்து வளைச்சு கட்டி சாப்பிட்டுன்டு இருக்கார் என புகார் படித்தார் மாலு பாட்டி

இருக்கட்டும்டி அம்மா பேஷா சாப்பிடட்டும் நெல்லிக்கா உடம்புக்கு நல்லதுதானே இதை தான் வைத்தியனுக்கு குடுக்கறத வாணிகனுக்கு கொடுனு சொல்லுவா இயற்கையா சத்து இருக்க இந்தமாதிரி பண்டங்களை அதிகமா வாங்கி சாப்பிட்டா அதுல இருக்குற சத்தெல்லாம் உடம்புக்கு நல்லது பண்ணும் அப்போ வைத்தியர் கிட்ட போய் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டிவராது அது மட்டும்மில்லாம நம்மை நம்பி இருக்குற சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் பிழைப்பாங்க என கமலாபாட்டி லெக்சர் கொடுக்க லெக்சர் கேட்டு கடுப்பான மாலு பாட்டியோ அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு நு ஒரு பழமொழி இருக்கு கேள்விப்பட்ருக்கேளா அக்கா காலேல இருந்து போக வர தயிர் நெல்லிக்காய் ஊறுகாய மேஞ்சிண்டு இருக்கார் நீங்க கொடுத்த ஒரு பாட்டில் மட்டுமில்லாம நான் போட்டஒரு பாட்டிலிலும் பாதிக்கு மேல காலி என சொல்ல அடராமா என தலையில் கை வைத்து கொண்டார் கமலாபாட்டி

சரி பாலு தாத்தா அப்படி விரும்பி சாப்பிடும் தயிர் நெல்லிக்காய் ஊறுகாயை எப்படி போடுறது கமலாபாட்டி மாலு பாட்டி ரெண்டு பேர் கிட்டயும் கேட்டு ரெசிபி வாங்கிட்டு வந்திருக்கேன் வாங்க நாமளும் போட்டு பாக்கலாம்

தயிர் நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் 100g
பச்சை மிளகாய் 5
தயிர் புளிக்காதது 250 ml
தேங்காய் எண்னை -தாளித்து வதக்க
உப்பு- சுவைக்கு

தாளிக்க தேவையான பொருட்கள் - கடுகு, மஞ்சள் பொடி பெருங்காயம்

வெறும் சட்டியில் வறுத்து பொடிக்கவேண்டிய பொருட்கள்-
வெந்தியம்-கால் ஸ்பூன்
கடுகு -கால் ஸ்பூன்
மிளகாய் வத்தல் 3


செய்முறை

வாயகன்ற வாணலியில் தேங்காய் எண்னை விட்டு கடுகு மஞ்சள் பொடி பெருங்காயம் தாளித்து கொட்டியபின் பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி போட்டு நன்கு வதக்கவும் நெல்லிக்காயை நன்றாக அலம்பி அதில் போட்டு அடுப்பை சிம்மில் போட்டு வாணலியை மூடி விடவும் சிறிது நேரத்தில் நெல்லிக்காய் வெடிக்கும் ஓசை கேட்க்கும் போது உப்பை சேர்த்து நன்கு கிளறவும் நெல்லிக்காய் நன்றாக மலர்ந்த பின் அடுப்பை அணைத்து விட்டு வறுத்து பொடித்து வைத்துள்ள வெந்தியம்,கடுகு , மிளகாய் வத்தல் ஆகியவற்றை கலந்து நன்றாக ஆறியபின் தயிரில் சேர்த்து ஒருமணிநேரம் ஊறவிடவும் இப்போது தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி இதை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து 3 நாட்கள் வரை சாப்பிடலாம்

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Thu Feb 28, 2019 6:36 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா பாலு தாத்தாவும் மாலு பாட்டி ஆரோக்கிய குறிப்புகள்.
எல்லார் வீட்டிலும் இவர்கள் வருகை தரட்டும்.தொடருங்கள்.
மருத்துவ கட்டுரை பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1293992 பின்னுட்டமிட்டு உற்சாக படுத்தும் உங்களுக்கு நன்றி ஐயா
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by T.N.Balasubramanian Thu Feb 28, 2019 8:33 pm

எங்கள் ஊரில்(ஜீயபுரம்) மாலு தாத்தா என்று இருந்த ஒருவரை நினைவுபடுத்துகிறது.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Fri Mar 01, 2019 2:50 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-5
இனிய மாலை நேரம் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் மாலை தீபாராதனைக்காக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் ஆம் அன்று அவர்களுக்கு திருமணபொன் விழா ஆண்டு வருடம் 364 நாட்களும் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டாலும் கல்யாண நாளில் மட்டும் இருவரும் ஒரு வாய் முகூர்த்தமாக அவரவர் பெற்றவர்களை திட்டிவிட்டு மாமனார் மாமியாரின் புகழ் பாடுவர் அன்று காலை ஹீம் உங்கப்பாவும் அம்மாவும் நமக்கு கல்யாணம் ஆன அன்னிக்கே சொன்னார் அம்மாடி மாட்டுபொண்ணே உனக்கு இருக்கற திறமைக்கு இந்த மண்டூகத்துக்கு கழுத்தை நீட்டி இருக்கயே உன்னை ஆண்டவன் தான் காப்பாத்தணும் சொன்னார் இப்போ வரைக்கும் அவாதான் என்னை தெய்வமா இருந்து காப்பாத்திண்டு வரா என முதல் பாலைபோட்டு சண்டையை ஆரம்பித்து வைக்க ஏன் உங்கப்பாவும் அம்மாவும் கூடத்தான் மாப்பிள்ளே இந்த ராட்சசிய கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையவே தியாகம் பண்ணிட்டீங்களே உங்களுக்கு தியாகி பட்டம் தான் குடுக்கணும் நு எங்கிட்ட கண்ணைகசக்குனாங்க என சிக்ஸர் அடிக்க அதெல்லாம் இப்போ எதுக்கு என சமாதான உடன்படிக்கைக்கு வந்தார் மாலுபாட்டி
அப்போது மாமா என எதிராத்து சத்யமூர்த்தியும் சகுந்தலாவும் அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்த பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் கையில் பயண பெட்டிகளுடன் அவர்களின் 8 வயது பெண் சௌமியாவுடன் நிற்பதை பார்த்து ஒருமித்த குரலில் வாங்கோ என அழைத்தனர்

அவர்கள் முகத்தில் தெரிந்த பரபரப்பும் சிறுமியின் கலவரம் தோய்ந்த முகமும் சேர்ந்து ஏதோ அசம்பாவிதம் என தெரிவிக்க அவர்களை அமர செய்து மேற்கொண்டு விஷயத்தை கேட்டறிந்தனர் பெருசா ஒண்ணுமில்லிங்க சகுந்தலாவோடஒண்ணுவிட்ட சித்தப்பாவீட்டுல எதோ குடும்ப பஞ்சாயத்து அதை தீர்த்து வைக்க பொண்ணையும் மாப்பிள்ளையயும் கூப்பிட்டு இருக்காங்க போனில் கேட்ட தன் சித்தியின் அழுகுரல் சக்குபாயயும்(சகுந்தலாவுக்கு தாத்தா வெச்ச செல்ல பேர்) அழ வைக்க மனசு கேட்க்காமல் பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு போக பொட்டி கட்டிட்டார் நம்ம சத்துமாவு (இது சத்யமூர்த்திக்கு தாத்தா வெச்ச செல்ல பேர்) கிளம்பும் போதுதான் பிள்ளைக்கு நாளைக்கு பரிட்சை இருக்குறது நியாபகம் வர
என்ன பண்ணுறதுனு புரியாம முழிச்சபோதுதான் நம்ம பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் இருக்காங்களே அவங்க கிட்ட விட்டுட்டு போலாமே என ஐடியா தோண
அவங்க ஐடியாவை செயல் படுத்த இங்க வந்திருக்காங்க சக்குபாயும் சத்துமாவும் இதை கேட்ட பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் டபிள் டன் சொல்லிவிட சந்தோஷமாக சக்குபாயும் சத்துமாவும் ஊருக்கு இந்தபுறமும் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் சௌமியாவுடன் கோவிலுக்கு இந்தபுறமும் ஜீட் விட்டனர் சௌமியா நன்கு படிக்கும் சூட்டிக்கையான குழந்தையாகையால் அடுத்த நாள் தேர்வு பயம் இன்றி கோவிலுக்கு புறப்பட்டாள் கோவிலுக்கு சென்று வரும் வழியில் பாலுதாத்தாவும் மாலு பாட்டியும் அனைவரின் வாழ்த்துக்களை பெற்றவண்ணம் வர விஷயம் புரிந்த சௌமியாவும் வாழ்த்து சொல்லிவிட்டு மாலு பாட்டி பாலுதாத்தா டீரீட் எங்கே என அடம் பிடிக்க சரி என்று அனைவரும் ஹோட்டலுக்கு சென்று ஒரு பிடிபிடித்து விட்டு வீடு திரும்பினர்
வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துகெல்லாம் மாலு பாட்டிக்கு அஜீரணத்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட தவித்து போனார் இதை கண்டவுடனே சௌமியா சட்டென பாலுதாத்தாவிடம்சென்று ஒண்ணுமில்ல தாத்தா அஜீரணம் தான் பாட்டிக்கு ஹோட்டல்சாப்பாடு ஒத்துக்கலை போல கிச்சனுல போய் வெதுவெதுப்பாகொஞ்சம் வென்னீர் போட்டு பாட்டிக்கு குடிக்க கொண்டு வாங்கோ குடிச்ச கொஞ்ச நேரத்துல சரியாபோயிடும் என சொன்னாள் எக்கசக்க தவிப்பிலிருந்த தாத்தாவோ சேமியா (பட்ட பேர்தாங்க ) இதெல்லாம் நீ சொல்லாதடி நீ குழந்தை உனக்கு என்ன தெரியும் என் மால்ஸுக்கு என்னாமோ ஆயிடுத்துடி அவ அனாதையா என்னவிட்டுட்டு போயிடுவாளோ பயமா இருக்குடி என அழத்துவங்க தலையில் அடித்துக்கொண்டு கிச்சனுக்கு போய் வெந்நீர் போட்டு வந்து மாலு பாட்டிக்கு குடிக்க குடுத்தாள்

வென்னீர் குடித்த சிறிது நேரத்தில் மாலு பாட்டி சரியாகி எழுந்து உட்கார எழுந்து உட்கார்ந்த உடனே பொறுப்பாக பாலுதாத்தாவின் சின்ன புள்ளைதனத்தை பத்த வைத்தாள் சேமியா அப்புறம் என்ன வழக்கம் போல ஒரே இடி மின்னல் மழைனு திருமண பொன்விழா கொண்ட்டாட்டம் அமளிதுமளி பட்டது

எல்லாம் முடிஞ்சப்பறம் கடைசியா சேமியா தாத்தாக்கு வென்னீரின் மகத்துவத்தை பற்றி ஒரு லெக்ச்ர் குடுத்தா பாருங்க அதுதான் ஹைலைட்டே வென்னீருல இவ்வளவு விஷயம்மானு தோணிபோச்சுனா பாருங்களேன்
வெந்நீரின் பயன்கள் !
1. ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
2.வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
3. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும்
4.உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
5.எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

6.மூக்கு அடைப்பா? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!
7.வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
8.வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
9.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
10.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
11.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.
12.நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
13.மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.
14.கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
15.ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
16.இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
17. அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Sat Mar 02, 2019 3:21 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-6
ஷ் அப்பா என்ன வெயில் கொளுத்துடா சாமி தாங்க முடியல என்றபடியே வந்த தன் பால்ய நண்பன் சங்கரலிங்கத்தை வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் பாலுதாத்தா பேச்சுக்குரல் கேட்டு வந்த மாலுபாட்டியும் வாங்கோ என உள்ளார்ந்த சந்தோஷத்துடன் அழைக்க என்னம்மா எப்படி இருக்கே என நலம் விசாரித்தார் சங்கரலிங்கம்

நல்லா இருக்கேன் அண்ணா உங்க வீட்டுல மன்னி பசங்க எல்லாரும் சௌக்கியமா ? என நலம் விசாரித்தார் கூடவே அண்ணா இப்போதான் உங்களை நினைச்சேன் மன்னி சொல்லிகொடுத்த மோருக்கு போடற பொடி அரைச்சேன் சாயங்காலம் வெயில் தாழ எடுத்துண்டு வரணும்னு இருந்தேன் கொஞ்சமிருங்கோ இதோ உடனே எடுத்துண்டு வரேன் என சொல்ல

இருக்கட்டும்மா நான் இப்படியே வெளில போயிட்டு வெளி வேலையெல்லாம் முடிச்சுட்டு ராத்திரி தான் வீட்டுக்கு வருவேன் நீயே அவளை சாயங்காலம் ஆத்துல போய் பார்த்து கொடுத்துடு உன்னை பார்த்தும் ரொம்பநாளா உன்னை பாக்கணுமினு நச்சிண்டு இருக்கா முழங்கால்வலி இல்லனா அவளே இன்னேரம் வந்திருப்பா என பதில் சொன்னார்

அதுக்கென்ன அண்ணா கட்டாயமா செய்யறேன் -மாலு பாட்டி

சரி சரி உள்ள போய் வந்தவனுக்கு குடிக்க எதாவது எடுத்துண்டு வாடி மசமச நு நிக்காதே என பாலுதாத்தா தன் பால்ய நண்பன் முன் கெத்து காட்டி அன்றைய இன்னிங்சை துவக்கி வைக்க

முறைத்து கொண்டே உள்ளே போன மாலு பாட்டியோ மணக்கமணக்க பொடி போட்ட மோருடன் வந்தார் மோரின் வாசனையிலும் பொடியின் சுவையிலும் மயங்கிய பாலுதாத்தா இன்னமும் ஒரு சொம்பு கொண்டுவா கிழவி என வாய் விட தன் பால்ய நண்பன் முன் கிழவி என அழைத்ததால் கடும் கோபம் கொண்ட மாலுபாட்டி நாகரீகம் கருதி கோபத்தை காட்டாது உள்ளே சென்றார்

மாலு பாட்டி உள்ளே போனபிறகு சங்கரலிங்கத்தை நோக்கி பாச பறவையை பறக்கவிட்ட பாலுதாத்தா சொல்லு சங்கு என்ன விஷயம் ? விஷயம் எதுவுமில்லாம இந்த பொட்டபொடைக்கிற வெயிலில என்ன தேடி வரமாட்டியே என கேட்க

ஒண்ணுமில்லடா பாலு என் பேத்தி படிக்கிற ஸ்கூலுல கோடையை வெல்வோம் ற தலைப்புல ஒவ்வொரு தாத்தாவும் கட்டுரை எழுதி தரணும்னு சொல்லி இருக்காங்க அதுவும் இப்பொதான் தகவல் வந்தது இன்னும் 1 மணி நேரத்துல நீங்க ரெடி பண்ணுங்க தாத்தானுட்டு அவ விளையாட போயிட்டா பையனும் மருமகளும் அவங்கவங்க வேலையில பிசி

நீதான் கட்டுரை எழுதறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே அதான் உங்கிட்ட உதவி கேக்கலாமுனு வந்தேன் என சொல்லி முடிப்பறக்குள் அதை கேட்டுக்கொண்டு வந்த மாலு பாட்டி அடக்கமாட்டாமல் சிரித்து விட சிரிப்பின் அர்த்தம் புரியாமல் இருவரும் முழிக்க ஒன்றும் இல்லை அண்ணா நீங்க பேசினத கேக்குறப்ப எனக்கு சிரிப்ப அடக்க முடியல அண்ணா என சொல்ல
என்னாஆச்சுமா என்ன கூத்தடிச்சான் இவன் என ஆர்வமாக கேட்க என்னங்க சொல்லிடவா என தாத்தாவிடம் அனுமதிகேட்டார் பாட்டி நீ ஒண்ணும் சொல்லவேண்டாம் நானே சொல்லறேன் என சொல்லி விட்டு அது ஒண்ணுமில்ல டா சங்கு ஒருநாள் நானும் இவளும் சண்டை போடும்போது அவங்க அம்மா வீட்டுல சீதனமா குடுத்த தவலை உடைஞ்சு போச்சு ஒடனே இவளும் இவங்க அம்மாவுக்கு லட்டர் போடச் சொன்னா அதுல தவலை உடைஞ்சு போச்சு அதுனால உன் மாப்பிள்ளை கோவமா இருக்கார்னு எழுத சொன்னா நான் அதை எழுதும் போது உன் மாப்பிள்ளை கோவத்தினால என் தலை உடைஞ்சு போச்சுனு எழுதிட்டேன் அப்போ நானும் இவளும் வேலைக்காக இந்த ஊருக்கு தனிகுடித்தனமா வந்த புதுசு வேறயா இந்த லட்டரை பாத்த உடனே இவங்கம்மா எங்கவீட்டுல பஞ்சாயத்த வைக்க எங்க ரெண்டுபேர் குடும்பமும் சொந்த பந்ததோட படை திரண்டு வந்துட்டாங்க என்ன ஏதுனு பாக்க வந்தவங்க விஷயம் தெரிஞ்ச உடனே என்னை கேவலமா பார்த்த பார்வையில என் மானமே போச்சுடா என சொல்ல அது மட்டுமா பண்ணினார் துவரம் பருப்புனு மளிகை கடை லிஸ்டில எழுத சொன்னா துரம் பருப்பு நு எழுதினார் அண்ணா என நக்கலடிக்க இது எப்போமா என சங்கரலிங்கம் கேட்க இப்போ சமீபமாதான் இது நடந்தது என பாட்டி சொல்ல அவளோதான் பாலு தாத்தா பொங்கி எழுந்துவிட்டார்

என்னடி ஆளு கிடைச்சா நக்கலா பண்ணுறே இப்போ பார் இந்த பாலுவோட திறமைய ஒரு மணி நேரத்தில நீங்க நினைச்சத விட அருமையா ஒரு கட்டுரையோட வந்து நிக்கல என் பேர மாத்திக்கறேன் என சவால் விட்டுவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார் மிக சரியாக ஒருமணி நேரத்துக்கு பின் பாலு தாத்தா எழுதிவந்த கட்டுரைய கீழே குடுத்திருக்கேன் படிச்சு பாத்துட்டு கமண்ட்பாக்ஸ் ல உங்க கருத்த சொல்லுங்க

கோடையை வெல்வோம்!

வீட்டிலிருந்தால்கூட வெயிலின் வெம்மை வெறுப்பைத் தருகிறது. நிஜத்தில் வெயில் வெறுக்கக் கூடியதில்லை. அது வாரி வழங்கும் நன்மைகள் ஏராளம்.

மழையைப் போல வெயிலும் இயற்கையின் கொடையே. அதை புரிந்து கொள்ளாமல் நாம்தான் குடைக்குள்ளேயே குடிகொண்டிருக்கிறோம். உச்சி வெயில் உடம்புக்கு ஆகாதுதான். ஆனாலும் உச்சி வெயிலாலும் நல்ல பலன் உண்டு.

ஓடியாடி உழைத்த களைப்புக்கு ஓய்வெடுக்கலாம் என்று கீழே சாய்ந்தால், படுக்கையிலும் பாடாய்ப்படுத்தும் கொசுக்கள், வறுத்தெடுக்கும் இந்த வெயிலால் கொஞ்சம் மட்டுப்பட்டிருப்பதை நீங்கள் உணர முடியும். ஆம், என்ன செய்தும் தடுக்க முடியாத கொசுக்கடியை முற்றிலும் தடுத்துவிடுகிறது கொளுத்தும் வெயில். கொசுக்களின் குஞ்சுகள் திறந்த வெளி நீர் நிலையில் பெருகாமல் தடுக்கிறது வெயில். கொசுக்கள் மட்டுமல்ல கொட்டும் கழிவுகளில் வளரும் கிருமிகள், காடுகளில் இறந்த உயிர்களின் உடல்களில் வளரும் நுண்ணுயிர்கள், நீர்நிலைகளில் வளர்ச்சி கண்ட கேடுயிர்கள் போன்றவற்றையும் வெயில் கட்டுப்படுத்துகிறது.

பகல் பத்து மணிக்கு முந்திய வெயிலும், மாலை இளங்கதிரவனும் மக்களுக்கு நன்மையே செய்கிறது. மதிய வெயில் கூட நாம் வெளியில் உலவாமல் வீட்டிற்குள் ஒன்றாய் கூட ஒத்தாசை செய்கிறது. அந்த நேரத்திலாவது அனைவரும் ஒன்று கூடி முகம் மலர பேசி உறவை வளர்க்க வாய்ப்பு தருகிறது. சொக்கட்டான், பாம்புக்கட்டம், பல்லாங்குழி, கேரம் எல்லாம் வெயிலில் உறவு வளர்க்கும் விளையாட்டுகளாகும்.

காலை கதிரொளி பச்சிளங் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ‘வைட்டமின்-டி’யை வாரி வழங்குகிறது. இந்த வகை வைட்டமின், உணவுப் பொருட்களின் வழியே அரிதாகத்தான் கிடைக்கிறது. அதை 10 நிமிட வெயிலே உடலுக்குப் போதுமான அளவுக்குத் தந்துவிடுகிறது.

‘வைட்டமின்-டி’தான், உடல் கால்சியத்தை கிரகிக்க துணை புரிகிறது. கால்சியம் கிடைத்தால்தான் எலும்பு பலம் பெறும். மனநிலையை சீராக்கும் செரடோனின் திரவமும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரசாயனப் பொருளும் உடலில் வெயில் படுவதாலேயே சுரக்கின்றன. வெயிலால் உரம் பெற்ற தேகம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். அதனால்தான் மருத்துவர்கள் மாலை வெயிலில் நடைபயணம் செய்யச் சொல்கிறார்கள். மூளை முடக்கம் அடைந்தவர்களைக்கூட வெயிலில் பயணம் செய்ய வைப்பது ஒரு சிகிச்சை முறையே.

கொளுத்தும் கோடை வெயில்கூட நமது உடலின் வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கிறது. நமது சிறுநீரகம், இடைவிடாமல் உடலில் உள்ள கழிவுகளை சிறுகச் சிறுக வடிகட்டி வெளியேற்றுகிறது ஆனால் கொளுத்தும் வெயிலோ, சிறுநீரகத்துக்கு சற்று ஓய்வு தருவதுடன் அதிகமான உடல் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றிவிடுகிறது. இப்படி வெளியேற்றும் கழிவில் உடல் உப்புச்சத்தை கொஞ்சம் இழந்துவிடுவதால்தான் நமக்கு தாகம் எடுக்கிறது. அதற்கும் இயற்கையே கொடையாக நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை தந்துள்ளது. இவற்றைப் பருகினால் கோடை வெயில் உடலை வறுத்தாது. வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உச்சந்தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டால் சூடு உடலில் தாவாது. தொப்பி, குடையைவிட இது சூடு தணிக்கும்.

வெயில் நம்மை வாட்டி வதைப்பதைப் போலவே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் பாதிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பறவைகளுக்கு வீட்டின் கூரை மீது தண்ணீர் வைக்கலாம். விலங்குகளுக்கு வீட்டின் அருகில் நீர் அருந்த வழி செய்யலாம். பாதசாரிகளுக்கு பயண வழியில் தாகம் தணிக்கும் நீர்ப்பந்தல் அமைப்பது மனிதநேயமாகும்.

வெயிலை வெறுப்பதைவிட பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். போதுமான மழையும், வாழத் தேவையான வெயிலும் கொண்ட அருமையான வாழிடம் கிடைக்க பெற்ற நாம் மழை நீரை சேமிக்க மறந்ததைப் போலவே வெயிலையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகவில்லை.

உலக நாடுகள் பலவும் வெயிலை பெருவளமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்றவற்றில் மாதக்கணக்கில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒருநாள் வெயிலிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெயில் நேரடியாக விழாத நேரத்திலும் சூரிய கதிர்வீச்சை கிரகிக்கும் சோலார் சக்தி கருவிகளை அவர்கள் வடிவமைப்பதுடன், முழுமையான சூரிய ஆற்றலையும் மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்திய அளவில் சூரியசக்தி ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்வதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்நிலையம் தமிழகத்தில் நிறுவப்பட்டு வருகிறது என்பதும் பெருமையே. ஆனாலும் நம் தேவையெல்லாம் தீர்க்கும் அளவுக்கு நாம் சூரிய ஆற்றலை பயன்படுத்தவில்லை என்பதும் உண்மையே. சூரிய சக்தி மின்திட்டத்தை வீட்டில் செயல் படுத்த அரசு மானியம் வழங்குகிறது. அதிக மின்கட்டணம் செலுத்துவதாக எண்ணுபவர்கள். ஓராண்டு மின்கட்டண செலவில் சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்திவிடலாம். பின்னர் மின்கட்டணம் என்ற பேச்சுக்கே இடமிருக் காது. மின்விற்பனையாளர் என்ற கவுரவம் உங்களுக்கு கிடைக்கலாம்.

இதற்கு அதிகம் செலவு ஆகும் என நினைப்பவர்கள் சூரியசக்தி அடுப்பு, சூரியசக்தி வாட்டர் ஹீட்டர் போன்ற சின்னச்சின்ன சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இதனால் கியாஸ் செலவு மிச்சப்படும். தமிழகத்தில் மழைபெய்யும் சிறிது காலம் தவிர பெரும்பாலான மாதங்களுக்கு சூரியசக்தி குறைவின்றி கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இந்த மாற்றத்தை செயல்படுத்தலாம்.

வெயில் வருத்துகிறது என்றால் அது நாம் செய்த வினையின் எதிர்விளைவுதான் என்பதையும் மறக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். காடுகளை அழித்து கம்பெனிகளாக்கிக் கொள்கிறோம். விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிக் கொள்கிறோம். மரத்தையும் காசாக்க நினைக்கிறோம். மரம் இருந்த இடத்தில் கூடுதலாக இரண்டு அறைகள் எடுத்துவிட்டால் வாடகை கிடைக்கும் என ஆசைப்படுகிறோம். இவற்றின் விளைவாக வெயிலை அறுவடை செய்கிறோம்.

ஆனால் நாம் வசிக்கும் வீடான பூமியின் கூரையாக இருக்கும் ஓசோனில் ஓட்டை விழ காரணமாகிவிட்டோம் என்பதை மறக்கிறோம். வெயிலின் வெம்மை தெரியாமல் இருக்க மரங்கள் நிறைந்த மலைப்பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றால் மட்டும்போதாது. நாமிருக்கும் இடத்திலும் இயற்கை குளுமையைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுக்க வேண்டும். நீங்கள் இன்று எடுக்கும் சபதம்தான் நாளை நமது சந்ததிகளை இன்னும் கொடூரமான கோடையிலிருந்து காப்பாற்றும் என்பதை நினைவு கொள்வோம். மரம் நட்டு பராமரிப்போம்.

அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?
வியர்க்குரு
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.
இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும்.
வேனல் கட்டி
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
பூஞ்சை தொற்று
உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
தொற்றுநோய்கள்
வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய்க்கிருமிகள் அபரிமிதமாகப் பெருகும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால், வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும்; களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.
வெப்பமயக்கம்
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பார்த்திருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க'த்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை; இவற்றின் விளைவாக மயக்கம் வருகிறது.
வெப்பமயக்கத்துக்கு முதலுதவி
மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கிவைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளூக்கோஸ் மற்றும் சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
தண்ணீர்! தண்ணீர்!
சென்னை போன்ற நகரங்களில் காற்றின் ஈரப்பதம் (Humidity) மிக அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் வியர்வைச் சுரப்பு உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில், வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அளவில்லாமல் வெளியேறி, அதிக நீரிழப்பு ஏற்படுகிறது.
இதனால், உடல் தளர்ச்சி அடைகிறது; களைப்பு உண்டாகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும், கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
குளிர் பானங்கள் வேண்டாம்!
வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்குப் பதிலாக, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சைப் பழச் சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
பழங்களை அதிகப்படுத்துங்கள்
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
எண்ணெய் தவிர்!
கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கோடை உணவுகள்
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக் கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி சூப், தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர் விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும், தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.
ஆடையில் கவனம்
உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெந்நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை. சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் ‘சன் ஸ்கிரீன்' களிம்பை முகத்திலும் கைகால்களிலும் பூசிக்கொள்ளலாம்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Mon Mar 04, 2019 8:01 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-8

அம்மா அம்மா எனும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் மாலு பாட்டி வா லஷ்மி முனியம்மா எங்கே உன்னை எதுக்கு இந்த உச்சிவேளையில அனுப்பிருக்கா ? கல்யாணம் நிச்சியம் பண்ண பொண்ணை இப்படி தனியா அனுப்புவாளோ என அங்கலாய்க்க பேச்சு குரல் கேட்டு நித்ரா தேவியுடன்(தூக்கம்) டூயட்ல இருந்த நம்ம பாலு தாத்தா கண் விழித்தார்

அது ஒண்ணுமில்லமா நீங்க காஞ்ச கருவேப்பிலை புதினா பச்சை மிளகாய் இதெல்லாம் கேட்டு இருந்தீங்களாம் அதை குடுத்துட்டு உங்களை பாத்துட்டு வர சொல்லிச்சு எதோ சமையல்குறிப்பு தரேன்னு சொல்லி இருந்தீங்களாம் நியாபகமா கேட்டு வாங்கிட்டு வர சொல்லிச்சு

ஆமாம் அம்மா இந்த காஞ்ச இலைய வெச்சுக்கிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க காய் விக்கிற நாங்களே விக்காம போச்சுனா இத தூக்கிதான் போடுவோம் என சொல்ல

சித்த இருடி நல்ல உச்சி வேளையில வந்திருக்க சில்லுனு ஒரு சொம்பு மோர் கொண்டு வரேன் குடிச்சுட்டு பேசலாம் சரியா ? தாத்தா சாரே உங்களுக்கு மோர் என மாலுபாட்டி கேட்க இது என்ன கேள்வி போ போய் சீக்கிரம் கொண்டா என விரட்டினார் பாலு தாத்தா (தாத்தாவுக்கு வாயில வாஸ்து சரி இல்ல)
முறைத்துக்கொண்டே உள்ளே சென்ற மாலுபாட்டி மோருடன் வரவும் லஷ்மியின் வருங்கால கணவனான சின்னான் தர்பூஷணி பழங்களுடன் வரவும் சரியாக இருந்தது

வாடாப்பா தலை வந்து இவளோ நேரம் ஆகியும் வாலை காணோமே நு நினைச்சேன் என பாலுதாத்தா சின்னானை நோக்கி பால் போட ஏன் தாத்தா அந்த காலத்துல நீங்க செய்யாததையா நான் செஞ்சிட்டேன் என சிக்ஸர் அடித்தான் நான் என்னத்த செஞ்சேனு நீ வந்து பாத்த என தாத்தா கெத்து காட்ட எல்லாம் உங்களை பத்தி பாட்டி கதை கதையா சொல்லிருக்கு என கீளீன் போல்டாக்கினான்

அப்போது மோருடன் வந்த மாலு பாட்டியயை ஏண்டி என்னை பத்தி எல்லார்கிட்டையும் குறை சொல்லலேனா உனக்கு பொழுதே போகாதே என தாத்தா எகிற உங்களைபத்தி ஊருக்கே தெரியுமே நான் வேற தனியா சொல்லணுமாக்கும் என அசால்டாக அயரடித்தார் மாலு பாட்டி
வாடா சின்னான் என்ன சேதி என்ற மாலு பாட்டியின் கேள்விக்கு தலையை சொறிந்து கொண்டே சின்னான் அம்மா தர்பூஷணியும் தேங்காயும் கொண்டு வந்திருக்கேன் அம்மா நாளைக்கு எனக்கு அந்த கூட்டு வெச்சு குடுங்கமா என கேட்க அதுக்கென்ன டா பண்ணிட்டா போச்சு என தலையாட்டினார் மாலு பாட்டி சரி மோரக்குடி என வும் சொல்ல மறக்கவில்லை

மோரக்குடித்த பின் சின்னான் சென்றுவிட அம்மா இது என்னம்மா வித்தியாசமா மோருல பச்சைகலர்ல பொடிமாரி எதோ போட்டிருந்தீங்களே குடிக்க நல்லா இருந்திச்சிமா என்ன பொடிமா இது என கேட்க இது மோருல போடுற மசாலாபொடி மா இது அரைக்க தான் நான் காஞ்ச கருவேப்பிலை புதினா பச்சை மிளகாய் இதெல்லாம் கேட்டேன் என சொன்னார் மாலு பாட்டி

எனக்கும் இதை அரைக்க சொல்லிதரீங்களாம்மா என லட்சுமி கேக்க அதுக்கென்னடி இப்போ அரைக்கதான் போறேன் பக்கத்துலைருந்து பக்குவத்தை கத்துகோ
அட பகவானே நான் அனுபவிக்கற கொடுமை என்னோட முடியாதா ? இன்னும் ஊருல யாரையெல்லாம் இந்த கிழவி கெடுக்க போறானு தெரியலையே இவளுக்கே இன்னும் ஒழுங்கா சமைக்க வராது இதுல இந்தம்மா டியூஷன் வேற எடுக்குது எல்லாம் கலி கொடுமை என பாலுதாத்தா கமெண்ட் அடிக்க அதுக்கப்புறம் நாலு நாளைக்கு பாட்டி தாத்தா கண்ணுக்கு தெரியவேஇல்ல ஹான் நீங்க நினைக்கற மாரி ஒண்ணும்மில்ல பாட்டி தாத்தா மூஞ்சில குத்துன குத்துல மூஞ்சி எதிருல நிக்கிறவங்க கண்ணுல தெரியாத அளவுக்கு வீங்கி போச்சு அவ்வளவு தான் சமாச்சாரம்
சரி வாங்க பாட்டியோட கைவண்ணத்தை பாப்போம்

மோர் மசாலாபொடி
கருவேப்பிலை புதினா (நல்லா காஞ்சது ) தலா 100 கிராம் அளவு
பச்சை மிளகாய் -(நல்லா காஞ்சது )- சுவைக்கு
உப்பு - சுவைக்கு
பெருங்காயம் 1 சிட்டிகை
ஓமம் , சீரகம் - தலா 1 டீஸ்பூன்
சுக்கு - சுவைக்கு
எல்லாத்தையும் மிக்ஸில போட்டு நல்லா மையா அரைச்சு வெச்சுக்க வேண்டியது இது எவளோ நாள் ஆனாலும் கெட்டு போகாது ஆனா ஈரம் படக்கூடாது

நாளைக்கு தர்பூஷணி தோல் கூட்டு வைக்க சொல்லி தர போறாங்களாம் மறக்காம நோட் பண்ணிக்கங்க ஏன் சின்னானுக்கு இது ரொம்ப பிடிக்கும் அதுனால நைசா அதை கத்துக்க நம்ம லட்சுமியும் வருவா பாருங்களேன்
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by ANUBAMA KARTHIK Tue Mar 05, 2019 10:26 pm

பாலுதாத்தா மாலு பாட்டியின்
ஆரோக்கியம் காப்போம்-8


வா முனிம்மா எங்கே இவளோ தூரம் வந்திருக்க ? என கேட்டுவிட்டு அம்மாடி முனிம்மா வந்திருக்கா பாரு என உள்புறமாய் குரல்குடுத்தார் பாலுத்தாத்தா

தோ வரேன் என காற்றில் குரல் மிதந்து வர குரலின் பின்னே வந்தார் மாலுபாட்டி வந்தவர் கையில் இரண்டு டப்பாக்கள் இந்தா முனியம்மா உன் வீட்டுக்கும் உன் மருமகன் வீட்டுக்கும் தர்பூஷணி கூட்டு வெச்சிருக்கேன் ஒன்னை நீஎடுத்துக்கோ இன்னொண்ணு சின்னான் வீட்டுக்கு குடுத்து விட்டுடு சரியா ? என சொன்னார்

அதுதான் மா நானும் கேட்க வந்தேன் மவராசி நான் கேக்க வரத்துகுள்ளே நீயே எடுத்து குடுக்கறபார் இந்த குணத்துக்கு நீ ராணிமாதிரி இருப்ப தாயி ஆமாம் என்மவளுக்கு நீ இந்த கூட்டு சொல்லிதாரேனு சொல்லிருந்தயாம் அதுதான்பக்குவம் கேட்டுகிட்டு போலாமுனு நானும் துணைக்கு வந்தேன் நேத்தே தனியா வந்ததுக்கு கோபிச்சு கிட்டேனு ஒரு பாட்டம் புலம்பி தீத்துருச்சு ஆமாம் முனிம்மா கல்யாணம் நிச்சயமான பொண்ணை தனியா அனுப்பாதே என மாலுபாட்டி சொல்ல
ஆமாம் முனியம்மா மால்ஸ் சொல்றது சரிதான் என பின்பாட்டு பாடி தான் ஒரு சரியான கணவன் என்பதை நிருபித்தார் பாலுதாத்தா ( பின்னே முஞ்சி இன்னும் நாலு நாள் வீங்கறத்துக்கா? உடம்பு முக்கியமில்ல நமக்கு) அது என மாலு பாட்டி கெத்து காட்ட தாத்தாவின் முகமே மாறிவிட்டது

அது ஒண்ணும் கம்ப சூத்திரமில்ல டி தர்பூஷணியில சிவப்பா இருக்கற பகுதிய சாப்பிட்டதுக்கு அப்புறம் வெள்ளையா இருக்குற பகுதிய தோலை சீவிட்டு பொடி பொடியா நறுக்கிக்கணும் அதை தண்ணி தெளிச்சு வேக விட்டு உப்பு தேங்காய் ஜீரகம் மிளகாய் வத்தல் இதை அரைச்சு விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி கொஞ்சம் தேங்காய் எண்ணையில கடுகு உளுந்து பெருங்காயம் தாளிச்சு கருவேப்பிலை கலந்து இறக்கிகணும் சூடு கொஞ்சம் குறைஞ்ச பிறகு புளிக்காத தயிரை கலந்தா ரொம்ப நல்லா இருக்கும் என சொல்ல

அடடா இதுவரை நான் கேள்வி படாத ரெசிபியா இருக்கே மாலு பாட்டி இன்னைக்கே இதை நான் என் பேஸ்புக் சிக்கனசமையல்குரூப்ல போடபோறேன் என்றபடியே வந்தாள் வத்சலா

ஏன்டி வத்தல் (பட்ட பேர்தான்) வீட்டு சாவி கொடுக்க வந்தா அதை மட்டும் கொடுத்துட்டு போ அதை விட்டுட்டு இந்த கிழவி சமையல பேஸ்புக் ல போடறேன் வாட்ஸப்புல போடறேன்னு எதாவது ஏடாகூடம் பண்ணிவெக்காதே
சும்மா ஆடுற சாமி கொட்டு கண்டா விடுமானு சொல்லுவாங்க இப்பவே இந்த கிழவி அலப்பறை தாங்கல நீ வேற ஏத்தி விட்டேனு வை அப்புறம் அவ்வளவுதானு தாத்தா சொல்லி முடிக்கல பாட்டி கைல இருந்த ஜல்லி கரண்டி தாத்தாவை நோக்கி ஏவுகணை போல வந்தது அப்புறம் என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவும் வேணுமா ?
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள் Empty Re: தொடர்பதிவு -பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum