ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற துளிகள்.

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Thu Feb 14, 2019 7:25 pm

First topic message reminder :

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 7:56 pm

புதுடில்லி: வெளிநாடு செல்வதற்காக, பிணைத் தொகையாக செலுத்த வேண்டிய, 10 கோடி ரூபாயை, நாடு திரும்பியதும், வட்டியுடன் திரும்ப அளிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில், முறைகேடுகள் நடந்ததாகவும், இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.'ஏர்செல்' நிறுவனத்தில், மலேஷியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்த விவகாரத்தில், விதிகள் மீறப்பட்டதாகவும், இதற்கு அனுமதி பெற்று கொடுக்க, கார்த்தியின் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.முந்தைய, காங்கிரஸ், தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, இந்த முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. கார்த்திக்கு எதிராக, இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்பான விவகாரத்துக்காக, வெளிநாடு செல்ல அனுமதி கோரி, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 10கோடி ரூபாயை பிணை தொகையாக செலுத்தி, வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர்.இந்நிலையில், 'பிணைத் தொகையான, 10 கோடி ரூபாயை, குறுகிய கால, 'டிபாசிட்'டாக வைத்து, நாடு திரும்பியதும், வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும்' எனக்கோரி, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கார்த்தியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 7:57 pm

புதுடில்லி: தமிழகத்தின் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின், 'கஜா' புயலை காரணம் காட்டி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தேர்தல் நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 7:58 pm

புதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ம.பி.,யில் கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிய நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, மஹேந்திர சிங் கோண்ட், 28, என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.வழக்கை விசாரித்த சத்னா மாவட்ட நீதிமன்றம், மஹேந்திர சிங்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தண்டனையை, ம.பி., உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.மரண தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மஹேந்திர சிங் மேல் முறையீடு செய்தான். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மரண தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:02 pm

புதுடில்லி: இணையதளத்தில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிட்டால், சம்பந்தப்பட்டோரை சிறையில் அடைக்க, தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, 66ஏ வகை செய்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2015, மார்ச், 24ல் பிறப்பித்த உத்தரவில், இணையதள பதிவுகளுக்காக சிறையில் அடைக்கும் ஷரத்தை ரத்து செய்தது.இது தொடர்பாக, அரசு சாரா அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அதில், 'இணையதளத்தில் ஆட்சேபகரமாக பதிவிடுவோரை கைது செய்யும் நடைமுறை தற்போதும் தொடர்கிறது' என, குற்றஞ்சாட்டப்பட்டது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பானஉச்சநீதிமன்றஉத்தரவு,அனைத்துஉயர்நீதிமன்றங்கள்,மாவட்டநீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.அப்போது தான், இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2015ல், தகவல் தொடர்பு சட்ட பிரிவு, 66ஏ, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறித்து, மாநில அரசுகள், தங்கள் போலீசாருக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனால், யாரும்கைதுசெய்யப்படுவதைதவிர்க்கலாம்.உத்தரவின் நகல்களை, மாவட்ட மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு, அனைத்து உயர் நீதிமன்றங்களும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:09 pm

சென்னை : வறுமை கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டசபையில் 110வது விதியின் கீழ் 'வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்' என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இம்மாத இறுதிக்குள் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் அறங்காவலர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் பேசுகையில் 'தமிழக மக்கள் தொகையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் 11.28 சதவீதம்' என குறிப்பிட்டிருந்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகை 7.20 கோடி. அமைச்சர் குறிப்பிட்டபடி 11.28 சதவீதம் என்றால் 84.96 லட்சம் பேர்.ஒரு குடும்பத்துக்கு மூன்று பேர் என கணக்கிட்டாலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் 28.32 லட்சம் தான். இந்த எண்ணிக்கையை அதிகரித்து 60 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. எந்த ஆதாரமும் இன்றி 60 லட்சம் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக அரசு முடிவுக்கு வந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வரும் குடும்பங்கள் எவை என்பதை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். அதுவரை திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன்நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான செந்தில் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகினர். அரசியல் ஆதாயத்துக்காக இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருப்பதாக செந்தில் ஆறுமுகம் தெரிவித்தார். அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆட்சேபனை தெரிவித்தார்.அவர் வாதாடியதாவது: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை சேகரிக்கவும், கணக்கெடுக்கவும் 55 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பணமாக கையில் வழங்காமல் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.மனுதாரர் 2011ம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தை குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2006 முதல் 2015 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் 32.13 லட்சம்; நகர்ப்புறங்களில் 23.54 லட்சம் என 55.67 லட்சம் ஏழை குடும்பங்கள் உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு நிதி உதவி வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இவ்வாறு அவர் வாதாடினார்.அரசு தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பரிசீலித்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதி உதவி திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. ஏழை மக்களுக்கும் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கும் சிறப்பு நிதி உதவி வழங்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இதில் குறுக்கிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 16, 2019 8:11 pm

மதுரை:மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் நடைபாதை, பெண்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். பயணிகள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு: ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மனமகிழ் மன்றத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பஸ் ஸ்டாண்டில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பிப்.,22 பதில் மனு செய்ய வேண்டும் என்றனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 4:52 pm

சென்னை: ரேஷன் கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகள்மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ரேஷன் கடை ஊழியர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி, டி.கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது.முறைகேட்டில் ஊழியர்கள் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து ரேஷன் கடைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.ரூ.97 கோடி
நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின், இணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை:நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கீழ், ௩௫ ஆயிரத்து, ௨௩௨ ரேஷன் கடைகள் இயங்குகின்றன.ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள்அமைக்கும் பணியை, இந்த இரண்டு துறைகள்தான் மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில், ௨௬ மாவட்டங்களில், ௧,௪௫௫ கடைகளை, நுகர்பொருள் வாணிப கழகம் நடத்துகிறது. இங்கு, கேமராக்கள் பொருத்த, ௨௦.௮௦ கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை, அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ௩௫ ஆயிரத்து, ௨௩௨ கடைகளிலும், கேமராக்கள் பொருத்த, ௯௭ கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை, பரிசீலிக்கப்பட்டது.'ஸ்மார்ட் கார்டு, பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மற்றும், 'பயோமெட்ரிக்' கருவி பயன்படுத்துவதன் வழியாக, பெரிய அளவில் முறைகேடுகள் தடுக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, ௧,௫௦௦ குடும்ப அட்டைகள் உள்ள, ௩௧௪ ரேஷன் கடைகளிலும், ௧௦௨ சிறிய பல்பொருள் அங்காடிகளிலும், கேமராக்கள் பொருத்த, அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிந்துரை அனுப்பி உள்ளார்.
உத்தரவு அனைத்து ரேஷன் கடைகளிலும், பயோ மெட்ரிக் விரல் ரேகை பதிவு கருவி பொருத்த, 'டெண்டர்' அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.அரசுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக, சிறப்பு பிளீடர், எல்.பி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.எனவே, அரசுக்கு அனுப்பிய பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும்.விசாரணை, மார்ச், ௧௧க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 4:54 pm

சென்னை, தனியார் மருத்துவமனைகளுக்கு, மின் கட்டணத்தை குறைத்து, சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவமனைகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணமே, தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. தரமான மருத்துவ சேவைக்காக, நவீன வகையிலான உபகரணங்களை பயன்படுத்துகிறோம். அதற்கு, அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது.தியேட்டர்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் வர்த்தக கட்டணம் போல, மருத்துவமனைகளுக்கும் விதிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகளின் சிகிச்சை கட்டணம் அதிகரிக்கிறது.வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணம் போல அல்லாமல், மருத்துவமனைகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளுக்கு, வர்த்தக கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறப்பு கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 4:56 pm

மதுரை, 'பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை, வரவேற்கும் வகையில் உள்ளது' என, கருத்து வெளியிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த, ரமேஷ் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:தெளிவு இல்லைஒருமுறை பயன்படுத்தி, துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி, 2019 ஜன.,1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது.பிளக்ஸ், பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை.எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது, தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது. பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து, பிளாஸ்டிக்கினால், பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.நிபுணர் குழுகேரளாவில் பிளாஸ்டிக் தடையை, முறையாக அமல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்ய, அம்மாநில அரசு, நிபுணர் குழு அமைத்துள்ளது. அதுபோல், அரசாரணையில் உள்ள குறைபாடுகளை களைய, தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில், ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க , அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆஜராகி வாதிடுகையில்,'பிளாஸ்டிக் தடை, வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.'தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு, புதிய சட்டப்படி மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். 'நான்காவது முறை மீறினால், உரிமம் ரத்து செய்யப்படும்' என்றார்.நீதிபதிகள் கூறியதாவது:பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது.அனைத்து வகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனுதாரர் இதற்கு முன், பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.சந்தேகம்இவ்வழக்கை தாக்கல் செய்ததில், சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால், அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும்.இவ்வாறு கூறினர்.பின், தமிழக சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்கள் ஒத்திவைத்தனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sun Feb 17, 2019 4:59 pm

கோவை:- ''பொருளாதார குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்கு சாட்சியங்களை ஆராய, பொருளாதார குற்றங்களின் பரிமாணங்களை நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.கோவை, ரேஸ்கோர்ஸ், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், பொருளாதார குற்றங்களின் பரிமாணங்கள் மற்றும் இயக்கம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பொருளாதார குற்றங்கள் தடையாக உள்ளன. இதை, 29வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது, அரசு இட ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவையும் பொருளாதார குற்றங்கள் தான்.பண மோசடி குற்றங்கள் நிதி திட்டத்துக்கு மட்டுமில்லாமல், நாட்டின் நேர்மை, இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கிறது. பங்குசந்தை மோசடி, கள்ளச்சந்தை, கடத்தல், கலப்படம், கொள்ளை, நில அபகரிப்பு, போதை பொருள் கடத்தல், காப்பீடு மோசடி, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது சமூக பொருளாதார குற்றங்களாகும்.அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் பொருளாதார குற்றங்கள், 'ஒயிட் காலர்' குற்றங்களாகும். பொருளாதார குற்றங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. இருந்தும், 2014ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்லிய, 24 வகையான பொருளாதார குற்றங்களில் வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது. பொருளாதார வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்கு சாட்சியங்களை ஆராய பொருளாதார குற்றங்களை நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி பேசுகையில், ''நீதித்துறையில் உள்ளவர்கள் நாளுக்கு நாள் தங்கள் தகவல்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். ''பொருளாதார குற்றங்கள், தனி நபரை மட்டுமின்றி, சமுதாயம், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. நுட்பமான தொழில்நுட்பம், வழிமுறைகளை புதிது புதிதாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் நபர்களால் கையாளப்படுகிறது,'' என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 2 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum