ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

2 posters

Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:04 pm

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு 19d8CrqbT42acergnptk+Screenshot_20190119-180251

கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி பிரசாதமாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், பக்தர்கள் பிரியாணிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி நடக்கிறது. மதுரையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் வடக்கம்பட்டி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக வரும் 25-ம் தேதி வழங்கப்படும்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty Re: 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:04 pm




வடக்கம்பட்டி கிராமத்தில் 3 நாட்கள் முனியாண்டி சாமி கோயிலில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆட்டிறைச்சி பிரியாணியாக இரவு பகலாகச் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பரிமாறப்படும்.

இதுகுறித்து கோயிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் என். முனீஸ்வரன் கூறுகையில், ''திருவிழா அன்று 50க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் இரவு முழுவதும் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்கு படைக்கப்படும். அதன்பின் காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காலை உணவாகப் பிரியாணி வழங்கப்படும்.

பிரியாணியை காலை உணவாகச் சாப்பிடுவதே தனிச்சிறப்புதான். எந்த விதமான வேறுபாடும் இன்றி இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம். பாத்திரங்களில் வாங்கிச் செல்லலாம். அன்றைய தினம் அனைத்து வயதினரும் அமர்ந்து இங்கு சாப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமல்ல, முனியாண்டி சாமியே பிரியாணிப் பிரியர். கடந்த ஆண்டு நாங்கள் 200 ஆடுகள், 250 சேவல்கள், 1,800 கிலோ அரிசி ஆகியவை சேர்த்து பிரியாணி செய்தோம். இந்த ஆண்டு இதைக் காட்டிலும் அதிகரிக்கும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 19, 2019 6:07 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty Re: 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:05 pm

வடக்கம்பட்டியில் உள்ள அனைத்து மக்களும் பிரியாணிப் பிரியர்கள். மதுரையில் உள்ள ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடந்த 70களில் தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் பெயரில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. முதன் முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவர் தொடங்கினார். அவரின் முயற்சியால் இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

அதன்பின் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் முனியாண்டி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். மதுரை என்ற அடைமொழியோடு தொடங்கி நடத்திவருவதால், அனைவரும் சேர்ந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறோம்''.

இவ்வாறு முனீஸ்வரன் தெரிவித்தார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty Re: 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by ayyasamy ram Sun Jan 20, 2019 6:15 pm

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு 103459460 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு 3838410834
-
83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Vadkkampatti-1_01166
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty Re: 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 20, 2019 8:36 pm

ayyasamy ram wrote:83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு 103459460 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு 3838410834
-
83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Vadkkampatti-1_01166
மேற்கோள் செய்த பதிவு: 1291809
நன்றி ஐயா இந்த பிரியாணி ஒரு முறை
சாப்பிட அனுபவம் உண்டு , அப்போது நான்
விருதுநகர் பக்கம் படித்து கொண்டிருந்தேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு Empty Re: 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum