ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நிழல் நீயடி

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் நிழல் நீயடி - Page 2 Empty என் நிழல் நீயடி

Post by ANUBAMA KARTHIK Tue Jan 15, 2019 10:51 pm

First topic message reminder :

என் நிழல் நீயடி
அத்தியாயம் -1
நகரின் மத்தியில் அமைந்துள்ள  தனியார் மருத்துவமனை வெள்ளை தேவதைகளாய் செவிலியர்கள் உலா வர அமைதியான மெல்லிய குளிரோடு கூடிய அறையில் உரிய மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சுவாசித்து கொண்டு கொடுக்கபட்ட மருந்துகளின் விளைவால் உறக்கத்தின் பிடியில் இருந்தார் ஸ்ரீதரன்
நேர் எதிராக துளியும் ஊனுறக்கமின்றி கண்களில் உயிரை தேக்கி கொண்டு இறைவனிடம் கணவனின் உயிரை யாசித்தபடி நின்றிருந்தார் கலாவதி . அவருக்கு அருகே தன் தாயின் கரம் பற்றியபடியே ஆறுதல் சொல்லியவாறு நின்றிருந்தான் சரத்.கொஞ்சம் தள்ளி டாக்டர்களிடம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்து விவாதித்து கொண்டிருந்தார் குமார்
இங்க பாருங்க குமார் இப்போ பேஷண்ட் இருக்குற உடல் நிலையில அவருக்கு அதிக கவலையோ இல்ல அதிக வேலயோ குடுக்க கூடாது அது மட்டுமில்லை அவருக்கு இது முதல் ஹார்ட் அட்டாக் வேற சரியான நேரத்துல கொண்டு வந்ததுனால எங்களால காப்பாத்த முடிஞ்சது அவரோட கவலை என்னனு கேட்டு அத தீர்த்து சந்தோஷமா வெச்சுக்க பாருங்க
ஒரு நாள் அப்செர்வேஷனுக்கு அப்புறம் அவரை டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம் இந்த ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் இன்ஷுரன்ஸ் ல கிளைம் ஆயிடுச்சு அதுனால பில்லை  பத்தி கவலை படவேண்டாம் நைட் யாராவது ஒருத்தர் துணைக்கு படுத்தா போதும் தயவு செஞ்சு மத்தவங்களை வீட்டுக்கு போக சொல்லுங்க என்றனர்
கலாவதியிடம் வந்த குமாரோ ஏம்மா ஷியாமுக்கு சொல்லியாச்சா? என கேட்க சொல்லியாச்சு அவன் உடனே கிளம்பி வரேனு சொல்லிருக்கான் வர வேண்டிய நேரம்தான் நாந்தான் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரசொல்லிருக்கேன் என்று சொல்லி வாய மூடவில்லை நமது ஹீரோ ஷியாம் ஓடி வந்தான்
வந்தவன் சரத்திடம் என்ன ஆச்சு சரத் இப்போ எப்படி இருக்கு என கேட்க குமார் டாக்டர் சொன்னதை எல்லாம் சொல்லி ஷியாம் உங்கப்பாவும் நானும் ரொம்ப வருஷமா  ப்ரெண்ட்ஸ் ஒரே காலனில அடுத்த அடுத்த வீட்டுல வேற குடியிருக்கோம் அவன் ரொம்ப நல்லவன்பா இனிமேலாவது உன் பிடிவாதத்த விட்டு அவனை அப்பானு பழைய மாதிரி கூப்பிடு
சரி அங்கிள் நீங்க சரத்தையும் அவங்கம்மாவயும் வீட்டுல விட்டுடுங்க அவங்க ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வரட்டும் நான் இங்க நைட் துணை இருந்துட்டு அவரை காலையில வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அங்க வெச்சு பேசிக்கலாம்
கண்ணீருடன் பேச முயன்ற கலாவதியின் முகம் கூட பார்க்கவில்லை ஷியாம் சரத்தும் குமாரும் சமாதானபடுத்தி அழைத்து செல்ல தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசி விட மாட்டானா? என திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டுக்கு சென்றார் கலாவதி
சீரான உறக்கத்தில் இருந்த ஸ்ரீதரனின் முகத்தை பார்த்தபடியே அருகே அமர்ந்திருந்தான் ஷியாம் இரவு பணியில் இருந்த நர்ஸ் வந்து தன் வழக்கமான சோதனைகளை முடித்த உடன் அவனை பார்த்து சார் எவளோ நேரம் தான் இப்படியே உக்காதிருப்பீங்க போய் நீங்க எதாவது சாப்பிட்டுட்டு வாங்க சார் ஆபிசுல இருந்து நேரா இங்க  வந்த மாதிரி தெரியுது நீங்க வரவரைக்கும் நான் பெரியவரை பத்திரமா பாத்துக்கறேன் என சொல்ல அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு கேண்டீனுக்கு கிளம்பினான்
கிளம்பிய அவனை அந்த வாசலைக்கூட தாண்ட விடாமல் தடுத்தது அந்த உருவம் மெல்லிய குரலில் உனக்குதான் மாத்து ட்ரெஸ் சாப்பாடு எல்லாம் கொண்டு வந்திருக்கேன் உனக்காக எங்க வீட்டுல செஞ்சது யார் மேலயோ இருக்குற கோவத்தயெல்லாம் சாப்பாட்டுல காட்டாம ஒழுங்கா சாப்பிடு காலேல காபி டிபனோட வந்து பாக்குறேன் மவனே சாப்பிடாம இருந்தேனு வெச்சுக்க என்ன பத்தி தெரியுமுல என சொல்லிவிட்டு பின்னல் அசைந்தாட திரும்பி சென்றாள் அந்த தேவதை
அதுவரை இருந்த சோகம் மறைந்து மெல்லிய குறுநகையுடன் அவள் குடுத்த உணவை பெற்று கொண்டு திரும்பினான் விசித்திரமாக பார்த்த நர்ஸூக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி அனுப்பி விட்டு அவள் சொல்லியபடி உடை மாற்றிக் கொண்டு உணவையும் உண்டு முடித்தான்
சேரில் உட்கார்ந்தவாரே தன் தகப்பனை பார்த்துகொண்டிருந்த ஷியாம் மெல்ல கண் அயர்ந்தான் திடுக்கிட்டு கண் விழித்து பார்க்கையில் பொழுது புலர்ந்திருந்தது ஸ்ரீதரனும்  கண்விழிக்க துவங்கினார் மெல்ல கண் திறந்து பார்க்கையில் ஷியாமை கண்டு நம்பமாட்டதவராக எழ முயற்சி செய்தார் உடனே அவரின் தோள் பற்றி படுக்க வைத்துவிட்டு நர்சை அழைத்து அவரின் உதவியுடன் காலை கடன்களை முடிக்க வைத்தான்
தம்பி எப்போ பா வந்தே ? மத்தவங்க எல்லாம் எங்கே? என ஸ்ரீதரன் கேட்க ஷியாம் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் எல்லாரும் வீட்டுல இருக்காங்க அங்கிள் என்று பதில் கொடுத்தபடி அவரிடம் வந்தாள் சந்தனா
பேருக்கு ஏற்றபடி பாலில் சந்தனமும் கலந்ததுபோல நிறத்துடன் நெற்றியில் திருநீற்றின் கீற்று துலங்க இடையை தாண்டி ஆடிய பின்னலோ கருநாகமென நீண்டிருந்தது குறுகுறுவென சதிராட்டம் ஆடும் கருவிழிகளின் குறும்பு மின்னும்  மொத்தத்தில் அழகும் புத்திசாலிதனமும் குறும்பும் மின்னும் தேவதை பெண் இவள்
மெல்லிய புன் முறுவலுடன் உள்ளே வந்தவளை வா என தலையசைத்து அழைத்தார் ஸ்ரீதரன் என்னம்மா சவுண்ட் சரோஜா வரும் போதே ஊரை கூட்டாம வரமாட்டியா? உனக்கு  சந்தனானு பேர் வெச்சதுக்கு சைரன் நு பேர் வெச்சிருக்கலாம் என வம்பிழுத்தபடியே வந்தான் ஷியாம்.
நற நற வென பல்லை கடித்தவாறே  அங்கிள் உங்க பையன எங்கிட்ட வம்பு வெச்சுக்க வேணாமுனு சொல்லுங்க இல்ல நடக்குறதே வேற என சொல்ல அவளை தாண்டி அவன் சென்ற பார்வை யாரையோ தேடியது ம்ம் என கனைத்த சந்தனாவோ ஷியாம் நீங்க தேடுற ஆள் கீழ வண்டிய பார்க் பண்ண போயிருக்கு என காதை கடிக்க மெல்ல அசடு வழிந்தவாரே வந்திருக்காளா ? என கேட்டான்
நீ வந்ததுக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் அம்மணி வீட்டுல இருக்குமா ? நல்லா கேக்குறான் பாரு கேள்விய? போதும் லிட்டர் கணக்குல வழியுது தொடை என சந்தனா ஓட்ட எல்லாரும் சிரித்தனர் .மெல்லிய புன்முறுவலுடன் அந்த அறையில் நுழைந்த சக்தியின் கண்கள் ஷியாமிடம் நிலைத்தது அவளின் பார்வைக்கு பதில் பார்வை வீசியபடியே சந்தனாவிடம் ஆமா உன் கைல என்ன அது பேக்?
எல்லாம் உனக்கு பிடிச்சதுதான் காலேலயே எந்திரிச்சு செஞ்சு எடுத்துட்டு வந்தோம் என சந்தனா சொல்ல யாரு இத  நீ செஞ்சே இத நான் நம்பனும் என ஷியாம் கேட்க நேத்து ராத்திரி மட்டும் நான் கொண்டு வந்து கொடுத்த உடனே சாப்பிட்ட அப்போ தெரியலயா யாரு செஞ்சதுனு என சந்தனா எகிற பசி ருசியறியாதுனாலும் அதை பாத்த உடனே நீ செஞ்சது இல்லனு புரிஞ்சு போச்சு அதனால தான் தைரியமா சாப்பிட்டேன் என்று வாரினான் ஷியாம் உன்னை என்ன பண்றதுனுனே தெரியல? நீ மட்டும் என்னிக்காவது எங்கிட்ட மாட்டு அன்னைக்கு உன்னை குர்பானி குடுத்துடறேன் என்றாள் சந்தனா
பேச்சின் இடையே அவர்கள் கொண்டு வந்திருந்த காலை உணவை காலி செய்தனர். பின்னர் கிளம்பிய பெண்கள் இருவரும்  ஸ்ரீதரிடம் சொல்லி கொள்ள அவர்களை வாசல் வரை வந்து வழிஅனுப்பினான் ஷியாம் .போய் ஸ்கூட்டிய எடுத்துட்டு வரேன் என சந்தனா கிளம்ப வேண்டாம் பா இத பிடி நானே எடுத்துட்டு வரேன் என சாவியை பிடுங்கி கொண்டு ஓடினாள் சக்தி
ஷியாம் என்ன ஆச்சு உங்களுக்குள ? நான் உனக்கும் அவளுக்கும் பொதுவான ப்ரண்ட் எனக்கு தெரியும் நீயும் அவளும் எவள்ளவு உயிருக்கு உயிரா காதலிச்சீங்கனு இதோ இப்பொ கூட அவங்க அப்பாகிட்ட மட்டும்  சொல்லிட்டு உன்னை பார்க்க ஓடிவந்திருக்கா ? வந்ததுலேர்ந்து பாக்கறேன் ஒரு வார்த்தை கூட ரெண்டு பேரும் பேசிக்க மாட்டேங்கறீங்க  
சந்து இத நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாமே? என ஷியாம் கேட்க
ஹீம் அவளா கல்லுல இருந்து கூட நார் உறிச்சிரலாம் அவகிட்ட இருந்து  உன்னை பத்தி ஒரு விஷயத்த கறந்துட முடியுமா ? சரியான கல்லுளி மங்கியாச்சே வெக்கம் கெட்டு போய் கேட்டும் பாத்தேன் எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் மாதிரி அதை ஏண்டி கேக்குறே? என சொல்லிட்டா என சொல்லி முடிக்கவும் வண்டியுடன் சக்தி வரவும் சரியாக இருந்தது சக்தியை கண்டவுடன் சந்தனா ஓட கண்கள் மின்ன தன்னிடம் விழியால் விடை பெற்றவளை  கண்டு சிலையாய் நின்றான் ஷியாம்

ஷியாம் மற்றும் சரத்தின் துணையுடன் வீட்டுக்கு வந்த ஸ்ரீதரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கலாவதியும் சீதாவும் (குமாரின் மனைவி) கைத்தாங்கலாக கூட்டிகொண்டு வந்த தகப்பனை அமர செய்துவிட்டு கூட வந்த குமாரிடம் அங்கிள் நான் மாடிக்கு போய் ப்ரெஷ் ஆயிட்டு வரேன் ஊருக்கு கிளம்பற ஏற்பாட்ட பாக்கணும் என் சொல்லியவாறே மாடியேற எத்தனித்த ஷியாமை நில்லுப்பா நாங்களும் இங்க இருக்கோம் நாங்க சொல்றதயும் கேட்டுட்டு மாடிக்கு போயேன் என்றார் பரதன் (சக்தியின் அப்பா)
உனக்கும் என் பொண்ணுக்கும் நிச்சயம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு  அன்னைக்கு எதோ சின்ன சண்டை நடந்துச்சுனு நீ உன்னை பெத்தவங்களோட பேசாம இருக்குறதும் என் பொண்ணு உன் கூட பேசாம இருக்குறதும் நல்லா இல்ல தவிரவும் ஊரரிய உனக்கு நிச்சயம் பண்ண பொண்ண இன்னொருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதும் கஷ்டம் உன்னை பெத்தவங்கள கேட்டா அவன் சரினா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்க ரெடிங்கறாங்க என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு ஊருக்கு நீ கிளம்பிக்கோ இது வரைக்கும் நான் பொறுமையா இருந்ததே உன் அப்பா என் நெருங்கிய ப்ரெண்ட்கறதுனாலதான் என பொரிய
அடிபட்ட விழிகளுடன் அவரை பார்த்தான் ஷியாம் அங்கிள் உங்க பொண்ணுக்கு சம்மதம் நா நான் நாளைக்கே தாலி கட்ட ரெடி ஆனா நான் இப்போ ஊருக்கு போறது என் வேலைய பெங்களூர் ப்ரஞ்ச் ல இருந்து சென்னைக்கு மாத்திக்கிட்டு வரத்துக்குதான்
என்னைக்கு உங்க பொண்ணு என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு வராளோ அன்னைக்கு  தான் என்னை பெத்தவங்களோட நான் பேசுவேன் அதிகபட்சமா இந்த மாச கடைசியில இந்த ஊருக்கு வந்திருவேன் நீங்களும் பாரதி ஆண்டியும் பேசி முடிவெடுத்துட்டு எங்க வீட்டுல சொல்லுங்க என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்
பரிதாபமாக ஸ்ரீதரனை பார்த்த பரதனோ கிளம்பறேன் பா என சொல்லிவிட்டு கிளம்ப நில்லுங்கண்ணா என ஒலித்தது கலாவதியின் குரல் அண்ணா இன்னைக்கு ஜனவரி 1 வர 26ம் தேதி நல்ல முகூர்த்த நாள் அன்னைக்கு கல்யாணத்துக்கு ரெடியாயிக்கங்க என் மருமக கேட்டுகிட்ட படி நான் பாரதிகிட்ட வந்து பேசி சரி பண்ணறேன் என்றாள்
எப்படி பாத்தாலும் நான் பாரதிய பேசுன விதம் தப்புதான் தப்பு பண்ண நான் அதை சரி பண்ணறதுதான் நியாயம் என்று சொல்லியபடியே வாசலை பார்த்தாள் அந்நேரம் கணவனை காண அங்கு வந்த பாரதியோ கலா பேசியதை கேட்டு வேண்டாம் கலா இப்படியெல்லாம் பேசாதே அப்படியென்ன நடந்திருச்சு நீ வருத்தபட நமக்குள்ளே ஆயிரம் இருக்கும் அதை கேள்விகேட்க நம்மை கட்டுனவங்களுக்கே உரிமை இல்ல இதுல நாம பெத்ததுங்க தலையிட்டதே மகா தப்பு இத காரணம் காட்டி சண்டை  வேற போடுதுங்க பாரு இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது நீ வருத்த படாதே நீ சொன்ன மாதிரி வர ஜனவரி 26 கல்யாணம் நடக்கும் அந்த சக்தி கழுதைகிட்ட நான் பேசிக்கறேன் என சமாதான படுத்தினாள் அப்படியென்ன இவங்களுக்குளே சண்டைனு கேக்குறீங்களா நட்பூஸ் அத அடுத்த எபிசோடுல சொல்றேனே


Last edited by ANUBAMA KARTHIK on Tue Jan 15, 2019 10:59 pm; edited 1 time in total
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down


என் நிழல் நீயடி - Page 2 Empty Re: என் நிழல் நீயடி

Post by ANUBAMA KARTHIK Mon Feb 18, 2019 10:34 am

அத்தியாயம் -4
ஜோடி ஜோடியாக தம்பதிகள் பக்தியுடன் வலம் வரும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் முதலிரண்டு நாட்கள் ஊர் சுற்றமனமின்றி அறையிலேயே ஹனிமூன் கொண்டாடிய ஷியாமும் சக்தியும் கடைசி நாளான இன்று ஊர் சுற்றி பார்க்க வந்தனர்
கடவுளிடம் மனமுருகி வேண்டியபடியே தம்பதிகள் பிரகாரம் சுற்றி வர உச்சி கால பூஜை முடிந்து கோவில் நடைசார்த்தும் நேரமும் நெருங்கியது அப்போது அவசர அவசரமாக வந்த ஒரு மத்திய வயது பெண்ணுக்கு ஏம்மா இன்னைக்கு இவளோ நேரம் ஆயிடுத்து என விசாரித்தபடியே அர்ச்சனையை முடித்து பிரசாதம் கொடுத்தார் அர்ச்சகர்
அதற்க்கு அவரோ நியாபகம் இல்லாம தூங்கிட்டேன் சாமி என்னதான் இருந்தாலும் எனக்கும் வயசு ஆகுது இல்லயா ? முதலாளியை கவனிச்சுட்டு வரத்துக்குள்ளா இன்னைக்குகொஞ்சம் லேட் ஆயிரிச்சு என சொல்ல சரிமா போய் பிரகாரம் சுத்திட்டு வாங்க மா பிரசாதம் ரெடி பண்ணி வைக்கிறேன் என சொன்னார்
பிராகாரம் சுற்றி முடித்து ஷியாம் தம்பதி அமரவும் சுற்ற ஆரம்பித்த அந்த அம்மாள் அவ்விடம் வந்ததும் மயங்கி விழவும் சரியாக இருந்தது அவர் மயங்கி விழுந்ததை கவனித்த சக்தி ஒடி சென்று தாங்கி பிடித்தாள் பின்னாடியே ஒடி வந்த ஷியாமிடம் தண்ணி எடு ஷியாம் என கேட்டு வாங்கி அவரின் முகத்தில் தெளித்தாள்
அவளை போலவே அவர் மயங்கி விழுந்ததை பார்த்து ஒடி வந்தவர்களின் உதவியுடன் மயக்கம் தெளிவிக்க சற்றே தன்னை நிதானபடுத்திக் கொண்டு மெல்ல கண் திறந்த அவர் சக்தியை கண்டு அதிர்ச்சியானார்
மெல்ல கண் விழித்த உடன் எப்படியம்மா இருக்கேங்க என கேட்க என சக்தி கேட்க ஷியாமின் கண்களுக்கு அவரின் அதிர்ச்சி தப்பாது தெரிந்தது
இப்பொ பரவா இல்லமா என அவர் பதில் கொடுக்க
உங்களால தனியா வீட்டுக்கு போக முடியுமா ? கூட யாராவது வந்து இருக்காங்களா? இல்ல நாங்க கொண்டு வந்து விடவாமா? என கேட்ட படியே அவர் எழ உதவி செய்தனர் சக்தியும் ஷியாமும்
இங்க பக்கத்துல தான் அம்மா எனக்கு வீடு என் கூட யாரும் வரல. என் முதலாளி தான் இருக்கார் உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பல மா நானே போய்க்கிறேன்
இதுல என்ன இருக்கு வாங்க மா என அழைத்து கொண்டு நடக்க துவங்கினர் சக்தியும் ஷியாமும்
அங்கே வீட்டை அடைந்த போதோ சாதரண வீட்டை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அவர்களை வரவேற்றது பிரம்மாண்ட மாளிகை
வீட்டின் வாசலியே அம்மா பத்திரமா உள்ள போயிக்குங்கமா நாங்க கிளம்பறோம் என்று கூறிய படியே கிளம்பிய சக்தியையும் ஷியாமையும் இருங்க பா வீட்டுக்குள்ளே வந்து ஒரு வாய் தண்ணியாவது குடிச்சிட்டு போங்கப்பா என அவர் கெஞ்ச சரியென உள்ளே சென்றனர் தம்பதிகள்
வந்தவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு உள்ளே சென்றவர் ஒரு வயதான பெண்மணியை கூட்டி கொண்டு வந்தார் அவர் கூடவே கையில் காபி டம்ளர்களுடனும் ஒரு சமையல்காரரும் வர மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர் ஷியாமும் சக்தியும் தள்ளாடியபடி வந்து நின்ற அந்த பெண்மணி கூர்ந்து கவனித்தது சக்தியைத்தான் அவளை பார்த்த மாத்திரத்தில் நீ பாரதி -பரதன் பொண்ணுதானே என கேட்க ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினாள் சக்தி உனக்கு கல்யாணம் எப்போ ஆச்சு? உன் புருஷன் பேர் என்னமா? என கேட்க
மேடம் உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமா ? என சக்தி கேட்க மேடம் நு எல்லாம் கூப்பிட வேண்டாம் பா எனக்கு உங்க பாட்டி வயசு தான் இருக்கும் என்ன பாட்டினே கூப்பிடலாம் அப்புறம் என்ன கேட்டே? உங்களுக்கு எங்க அப்பா அம்மாவ தெரியுமானு தானே? உங்கம்மாவ நல்லா தெரியும் அத விட உன் அத்தை கலாவையும் தெரியும் என சொல்ல
என்ன உங்களுக்கு எங்க அம்மாவயும் தெரியுமா ? என ஷியாம் கேட்க ஓ கலாவதி பையனா நீ? என கேட்டார் ஆமாம் பாட்டி என கோரசாக இருவரும் பதில் சொல்ல அங்கே ஒரு மௌனம் நிலவியது
மெல்ல மௌனத்தினை கலைத்த அந்த பெரியவர் முதலில் இவர்களை கூட்டி வந்த பெண்ணை பார்த்து வசுந்தரா என்னால ரொம்ப உக்கார முடியல என சொல்ல நீங்க போங்க பெரியம்மா நான் அவங்களை கவனிச்சு அனுப்பறேன் சொல்லி பெரியவரை ஓய்வுக்கு அனுப்பினார்
பின்னர் ஷியாமிடம் தம்பி நீங்க இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பீங்க ? உங்ககிட்ட பேசனுமே என கேட்க நாங்க இன்னைக்கு கிளம்பறோம் அம்மா நான் SS குரூப்ஸ் ல ஜென்ரல் மனேஜரா இருக்கேன் என் தம்பியும் அங்கதான் வேல பாக்குறான் லீவு இன்னையோட முடியுதுமா? அதுனால நாங்க கிளம்பிதான் ஆகணும்
ஆமாம் அவங்க யாரு அம்மா? என கேட்டான்
தம்பி எந்த SS குரூப்ஸ் ல நீங்க ஜென்ரல் மனேஜரா இருக்கீங்களோ? அந்த SSகுரூப்ஸ் முதலாளி சுமித்ரா தேவியோட அம்மா நந்தினி தேவிதான் பா இவங்க
சரிம்மா நாங்க கிளம்பறோம் என எழ இருப்பா மேல வந்து பெரியம்மா கிட்ட இரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு என்றார் வசுந்தரா
தலையை ஆட்டியபடியே சக்தியும் ஷியாமும் அவரை பின் தொடர்ந்து பெரியவரின் அறைக்குள் அவரிடம் சொல்லி கொண்டு கிளம்பினர் அப்போது அந்த அறையில் இருந்த ஆளுயர படத்தை பார்த்த ஷியாம் இது யார் என கேட்க இது எங்க சின்னையா தம்பி அவர் இப்போ இல்லப்பா என சொன்னார் வசுந்தரா ஆனா அவர நான் எங்கயோ பாத்திருக்கேன் மா என சொல்ல
வசுந்தராவோ தம்பி அவர் இறந்து கிட்டதட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சுபா இது பத்தி மேல எதுவும் இங்க வெச்சு பேச வேண்டாம் இன்னமும் கொஞ்ச நாளுல நானும் பெரியவரும் சென்னைக்கு வந்திருவோம் அதுக்கப்புறம் ஒருநாள் சவகாசமா பேசலாமே என அவர் பேச்சை முடித்துவிட தோளை குலுக்கியவாறே விடைபெற்றான் ஷியாம்
தங்கி இருந்த அறையை அடைந்த பின்னும் ஷியாம் மௌனமாகவும் யோசனையுடனும் இருந்ததை பார்த்த சக்தி ஹேய் என்ன ஆச்சுப்பா என கேட்க
சக்தி அந்த பாட்டிமா ரூமுல இருந்த படத்துல இருந்தவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி தோணுது அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன்
ஆமாம் ஷியாம் எனக்கும் அது தோணிச்சு சரி விடு எப்பயாச்சும் நினைப்பு வரும் இப்போ வந்த வேலைய பாப்போம்
என்ன வேல மா பாக்கணும் என கேட்ட ஷியாமின் முகத்தில் குறும்பு கூத்தாட கேள்வியின் அர்த்தம் புரிந்த சக்தியோ அவன் முகத்தினை பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்தபடி போதும்டா மாமு நாளைக்கு கிளம்பனும் பிளீஸ் என முணங்க
ஹே ஆங்ரி பேர்ட் என்னனு கூப்பிட்ட மாமுவா? கேக்கும்போதே கிக்கா இருக்குடி இன்னொரு தடவை கூப்பிடேன் ம்ஹீம் மாட்டேன் போ என சொல்லி விட்டாள் சக்தி
இப்போ நீ கூப்பிடலே நா பாரேன் என அவளை நோக்கி ஷியாம் நடக்க தொடங்க அவன் கைகளில் சிக்காமல் இருக்க மங்கையவள் பின்னோக்கி நகர துவங்கினாள்அந்த அறையின் சுவர் மேலும் அவளை பின்னோக்கி நகர விடாது தடுக்க முன்புறம் அவனின் வலிய கரங்களின் சிறையில் தன் இதயதுடிப்பின் ஓசையை கேட்டபடி நெற்றியில் வியர்வை பூக்கள்பூக்க உதடு கடித்து நின்றாள்
அவனோ தாபத்தில் ஹேய் ஒரு தடவை மட்டுமாவது கூப்பிடுடீ என கெஞ்ச துவங்க அவளின் இதழ்கள் மெல்ல அசைந்து மாமூ என்றது தன் ஆசையை நிறைவேற்றிய அவ்விதழ்களுக்கு பரிசளிக்க நினைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்
அந்நேரம் அவனின் செல்பேசி சிணுங்க துவங்க அதன் ஓசையில் கவனம் கலைந்தான் யாரென எடுத்து பார்த்த போது சரத் அழைப்பதாய் அது அறிவிக்க சக்தியிடம் இருந்து பேசும்படி சைகை வர எடுத்து பேசதுவங்கினான் ஆனால் அதில் பேசியவர் சுமித்ரா தேவி அவரின் குரல் உச்ச பட்ச பதட்டதில் இருக்க அது தம்பதிகளை நடப்புக்கு கொண்டு வந்தது
ஹேய் ஷியாம் சாரிமேன் உன்னோட பர்சனல் டைம்ல தொந்தரவு பண்ணிட்டேன் நீ கொடைக்கானல் ல இருக்கறதா சரத் சொன்னான் அங்கதான் எங்கம்மா இருக்காங்க அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்னு போன் வந்தது நான் அங்க வரவரைக்கும் நீ அங்க போய் ஹெல்ப் பண்ண முடியுமா? என கேட்க
ஷுயூர் மேடம் என பதில் சொன்னான்
தென் நான் உனக்கு இப்பொ டீடைல்ஸ் மெசெஜ் பண்றேன் கொஞ்சம் அங்க போய் எனக்கு அவங்க ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு பா
ஓகே மேடம் என சொல்லி விட்டு சக்தியை பார்த்து நீ தனியா இருந்துப்பியா சக்தி பாட்டிமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் பாஸ் போன் பண்ணி ஹெல்ப் கேக்குறாங்க என கேட்டான் நானும் உங்களோட வரேன் ஷியாம் என அவள் சொல்ல இருவருமாக கிளம்பினர்
அங்கே ஹாஸ்பிட்டலில் ஐசியூ வாசலில் வசுந்தரா கவலையுடன் நிற்க வேகமாக அவரிடம் சென்று என்னாச்சுமா என கேட்டாள் சக்தி அவரின் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு பெண்ணோ சக்தியை கண்டவுடன் உறைந்து நின்றார்
தொடரும்
அத்தியாயம் -5
திகைத்த தோற்றத்திலிருந்த அவர் வசுந்தராக்கா அங்க வரது யாரு ? என கேட்க திரும்பி பார்த்த வசுந்தராவோ அழுகையை கட்டுபடுத்தி கொண்டே ஆமாம் சின்னாம்மா அது பாரதி பொண்ணுதான் கூட வரது நம்ம கலாவோட பையன் ரெண்டுபேருக்கும் இப்பொதான் கல்யாணம் ஆயிருக்கு தம்பி நம்ம சுமித்ரா அம்மா கிட்டதான் வேலை பாக்குது
அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே பக்கத்தில் வந்து விட்ட ஷியாமையும் சக்தியையும் வசுந்தரா அறிமுகபடுத்த இவங்க யாருமா? என கேட்டாள் சக்தி
இவங்க எங்க சின்னம்மா ரத்னா தேவிமா பெரியம்மாவுக்கு துணையா இங்க இருக்காங்க என சொன்னார் அவரை கை கூப்பி வணங்கிய ஷியாமும் சக்தியும் மேற்கொண்டு பேச துவங்கும் முன் அங்கு வந்த மருத்துவர் பெரியவரின் உடல்நலம் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்ல அந்த செய்தியை சுமித்திரா தேவியிடம் தெரிவித்தான் ஷியாம் அவரோ தான் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார்
மெல்ல பெரியவருக்கு சுயநினைவு திரும்பி கண் விழித்த உடன் அவர் வசுந்தராவை பார்க்க விரும்புவதாக சொல்ல உள்ளே சென்ற வசுந்தரவிடம் அவ வந்திருக்காளா என கேட்டார்
ஆமாம் அம்மா சுமிக்கா வந்துகிட்டு இருக்காங்க அப்போ சரி அவ வந்த உடனே என்ன வந்து பாக்க சொல்லு என சொல்லிவிட்டு கண்களை மூடி உறங்கத் துவங்கினார்
அந்த நேரம் அரக்க பரக்க உள்ளே நுழைந்த சுமித்திராதேவியோ ரத்னா அம்மா எப்படி இருக்காங்க கேட்டபடியே வந்தார் இப்போ பரவாஇல்லை மேடம் அபாய கட்டம் தாண்டிட்டாங்க என பதில் சொன்னது ஷியாம் தேங்யூ ஷியாம் உன் பெர்சனல் டைம்ல கூட நான் கேட்டுகிட்டதுக்காக வந்து ஹெல்ப் பண்ணிருக்க பா ரொம்ப தேங்ஸ் எங்க பா உன் மிஸஸ் அவங்களும் வந்திருக்காங்களாமே கூப்பிடு அன்னைக்கே சரியா நான் பாக்கல அவளுக்கும் தேங்ஸ் சொல்லணும்
இட்ஸ் ஒகே மேடம் அதுனால என்ன எதோ எங்களால முடிஞ்ச உதவி என சொல்லியபடியே அங்கே சக்தி வர
அவளை குழப்பத்துடன் பார்த்த சுமித்ராவோ ஷியாம் உங்க அம்மா அப்பாவ நான் ரிசப்ஷனுக்கு வந்த போதே பாக்கல அவங்களை நான் பாக்கணுமே போட்டோ எதாவது இருக்கா என கேட்க திருமணதினத்தில் எடுத்த குடும்ப போட்டோவை அவரிடம் காட்டியபடியே எதுக்கு மேடம் என கேட்டான் ஷியாம்
அவன் காட்டிய போட்டோவில் இருந்தவர்களை பார்த்த சுமித்ராதேவி ஒரு பெருமூச்சுடன் சரத்துக்கு போன் போடு ஷியாம் உன் குடும்பம் எல்லாரும் உடனே இங்க வரணும் என கட்டளை இடும் குரலில் சொல்லிவிட மேடம் எனக்கு புரியலயே என ஷியாம் கேட்க உன் பேரண்ட்ஸ் வந்த உடனே உனக்கே புரியும் இப்போதைக்கு நான் சொல்றத மட்டும் செய் என சொன்னார்
ஷியாம் போன் செய்தவுடன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு வந்த சரத்தை வாயிலிலே நின்று வரவேற்றார் சுமித்ரா அங்கே வந்த கலாவை பார்த்த ரத்னாவோ கலாக்கா என்ற கூவலுடன் அணைத்துகொள்ள அதை பார்த்த மற்றவர்களின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது
கலாக்கா என் கண்ணப்பூ எங்க ? என கேவலுடன் ரத்னா கேட்க சரத்தை இழுத்து அவள் முன் நிறுத்தினார் ஸ்ரீதரன் அண்ணா அப்போ இது என கேள்வியாய் நோக்க ஆமாம் மா நான் குப்பையிலிருந்து எடுத்த உன் குழந்தைதான் மா இவன்
எல்லாம் வாசலியே நின்னு பேசவேணாம் ரத்னா இனிமேதான் நிறைய வேலை இருக்கு தயவு செஞ்சு எல்லாரும் உள்ளே வாங்க என எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றார் சுமித்ராமேடம் இங்க என்ன நடக்குது தயவு செஞ்சு யாராச்சும் சொல்லுங்க பிளீஸ் என சக்தி கேட்க சொல்றேன் பா என பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் சுமித்ரா
எங்க அப்பா அம்மாவுக்கு நான் நா ரொம்ப செல்லம் சக்தி செல்வமும் செல்வாக்குமா இருந்த எங்கப்பாவுக்கு நானும் என் தம்பியும் தான் வாரிசுகள் எனக்கும் என் தம்பினா உசிரு அவனும் எங்கிட்ட ஒரு நண்பனாத்தான் பழகினான் என் நேரம்னுதான் சொல்லுவேன் நான் என் கூட படிச்ச தனசேகர விரும்பினேன் அவரையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு வீட்டுல அடம் பிடிச்சேன்
ஆரம்பத்தில எல்லாம் நல்லபடியாதான் போச்சு நாளடைவில என் வீட்டுக்காரர் குணத்துல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது அவரை நம்பி பிஸினெஸ் குடுத்து வெச்சிருந்தோம்
பணம் புழங்க ஆரம்பிச்சதும் அவருக்கு பேராசை வந்திருச்சு எல்லாம் தனதா ஆகனும் நு நினைச்சாரு இதுக்கிடையில என் தம்பி ரத்னாவ காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிக்கிட்டு வந்தான் இதுனால எங்கப்பாவுக்கும் என் தம்பிக்கும் ஒத்து போகல்ல எனக்கு தெரியாம என் வீட்டுக்காரர் இந்த பகைய பெருசாக்க முயற்ச்சி பண்ணார்
உங்க அத்தை பாரதியும் ரத்னாவும் பிரெண்ட்ஸ் அதுனால அவங்க வீட்டு பக்கத்துல என் தம்பிய தனி குடித்தனம் வெச்சோம் அப்பதான் உங்கப்பா தவறி போய் இருந்ததுனால ஒரு ஆறுதலுக்காக பாரதிய பாக்க ரத்னா போனா அவ கூட நானும் அவரும் போனோம் அங்கதான் உங்கம்மா பழக்கம் ஆனாங்க உங்கம்மாவுக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணமும் ஆச்சு அந்த சமயத்துல ரத்னா கர்பவதியானா
கல்யாணம் ஆகியும் ரொம்ப நாள் எனக்கு குழந்தை இல்லாததால எங்கே சொத்தெல்லாம் கையவிட்டு போயிடுமோனு என் வீட்டுக்காரருக்கு பயம் வந்திடுச்சு அதுகேத்தமாதிரி உன் தாத்தாவும் என் தம்பிய வீட்டுக்குள்ள சேத்துக்க முடிவுப் பண்ணார்
அவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தோம் ஆரம்பத்துல இருந்த மாதிரியே என்கிட்ட நல்ல பழகறமாதிரி நடிச்சார் நானும் அவர்மேல இருந்த அவநம்பிக்கைய விட்டுட்டு சந்தோஷமா இருந்தேன் என் தம்பிக்கு கொஞ்சம் சந்தேகம் அவர் மேல இருந்தாலும் அவன் எனக்காக அவர்கிட்ட நல்ல படியா நடந்துகிட்டான்
இதுக்கு இடையில என் அப்பாவுக்கு என்ன தோணிச்சோ தெரியல்ல எல்லா சொத்தையும் என் தம்பிகுழந்தைக்கு எழுதிட்டார் அதுக்கு கார்டியனா என்னையும் ரத்னாவையும் போட்டார் எங்க ரெண்டு பேர் உயிருக்கு எதாவது ஆச்சுனா அந்த சொத்து முழுதும் தர்மத்துக்கு போகணும்னு எழுதிட்டார்
இந்த விபரம் எங்க யாருக்கும் தெரியாது இந்த சமயத்துல நாங்க எல்லாருமா குடும்பத்தோட சந்தோஷமா கொண்டாட இந்த கொடைக்கானல் வீட்டுக்கு வந்தோம் ஜாலியா சந்தோஷமா இருந்தோம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நு வீடு களைகட்டிச்சு எல்லாம் முடிஞ்சு கிளம்பற நாளும் நெருங்கிச்சு
வீட்டுக்கு கிளம்பற நேரத்துல அவர் வயத்தகலக்குதுனு பாத்ரூம் ல போய் உக்காந்துகிட்டார் அப்போ எங்கப்பாவும் எந்தம்பியும் எங்கம்மா அப்புறம் ரத்னாவோட ஒரு கார் ல போறதுனும் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியானதும் நாங்க வரதுனும் முடிவாச்சு அவங்க கிளம்பினதும் கொஞ்ச நேரத்துல உடம்பு சரியாகிட்டதா சொல்லி இவரும் கிளம்பிட்டாரு
நாங்க வீட்டுக்கு போற வழியில ஒரு இடத்துல எதோ ஆக்ஸிடென்ட் ஆயிட்டதா சொல்லி ஒரே கூட்டமா இருந்துச்சு இறங்கி பாத்துட்டு வரேன் நு இவர் போனார் பொழுது போகாம கார் விட்டு நான் கீழ இறங்கி வந்தேன் அங்க இருந்தவங்க கார் ஆக்ஸிடென்ட்ல செத்தது முன்னால இருந்தவங்கனும் பின்னால இருந்த ரெண்டு லேடிஸ்ல ஒருத்தர் கர்பம் நு பேசிக்கிட்டு போனது என் மனச உறுத்த ஆரம்பிச்சது
நான் பின்னாடியே இறங்கி போய் பாத்தேன் அங்கே ரத்த சகதியா எங்க குடும்பம் இருந்தது ஐயோனு இருந்தது அப்பானு கத்திகிட்டே அவங்க கிட்டே போய் பார்த்தேன் அவர் எங்கிட்ட எதோ சொல்ல வந்தார் அதுக்குள்ளே சுத்தி நின்னுகிட்டு இருந்தவங்க என்ன கிட்ட போக விடாம பிடிச்சுகிட்டாங்க நான் இவர தேடி பாத்த போது அங்க இருந்த போலிஸ் கிட்ட இவர் பேசிக்கிட்டு இருந்தார் கிட்ட போய் பார்த்தபோது அவர் முகம் கல் மாதிரி இருந்தது ஆனா கண்ணுல சந்தோஷம் தெரிஞ்சிச்சு
நான் பக்கத்துல வரத உணர்ந்த அவர் கண்ணுல நீர் கோத்துகிச்சு ஒரு நிமிஷம் நான் பார்த்தது பொய்யோனு தோணிச்சு என்னை அணைப்புல வெச்சுகிட்டு யாரையோ பார்த்து கை கட்டை விரலை உயர்த்தி காட்டினத நான் பின்னாடி இருந்த கார் கண்ணாடில பார்த்தேன் அந்த உருவம் என் மனசுல பதிஞ்சு போச்சு அப்போ இருந்த மன நிலைல அதை பத்தி அவர் கிட்ட கேக்கணும்னு தோணல
எங்க வீட்டுல இறுதி காரியங்கள் முடிஞ்ச உடனே வக்கீல் உயில பத்தி சொன்னபோது அவர் ஆடின ஆட்டத்துலதான் அவரோட சுயரூபம் புரிஞ்சது ஆனாலும் அம்மாவும் ரத்னாவும் ஹாஸ்பிட்டல்ல இருந்ததுனாலயும் பிஸ்னஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியாததாலயும் என்னால அவரை ஒண்ணும் பண்ண முடியல
அப்புறம் வக்கீல் சமாதானம் பேசுனார் அதன்படி அவர் பிஸ்னெஸ நிர்வாகம் பண்ணுறதுனும் நான் அம்மாவயும் ரத்னாவயும் பாத்துக்கறதுனும் முடிவுபண்ணினோம் ரத்னாவோட குழந்தைதான் சொத்தை பத்தி முடிவு எடுக்க முடியும்னும் அதுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா சொத்து தர்மத்துக்கு போயிடும்னும் வக்கீல் சொல்ல வேற வழி இல்லாம அதுக்கு அவர் ஒத்துக்கிட்டார்
அம்மா ரத்னா அப்புறம் நான் மூணு பேரும் மன நிம்மதிக்காக தம்பியும் ரத்னாவும் இருந்த பழைய வீட்டுக்கு போய்ட்டோம் இங்க எங்களை பத்தின கவலை இல்லாம அவர் அங்க ஆட்டம் போட ஆரம்பிச்சார் எங்க என் வாழ்க்கை வீணா போயிடுமோனு பயந்து எங்க அம்மா என்னை வற்புறுத்தி அவர் கூட அனுப்பி வெச்சாங்க அதுக்கு நானும் மாசமா இருந்ததும் ஒரு காரணம்
சரின்னு எங்க வீட்டுல ரொம்பநாளா வேலை பார்த்த இந்த வசுந்தராவை துணைக்கு வெச்சுட்டு நான் அவர் கூட போனேன் எனக்கு ஒருவேளை குழந்தை பிறந்தா அவர் திருந்திடுவாறுனு ஆசை இருந்ததும் அதுக்கு ஒரு காரணம் ஆனா நான் இங்க இருந்து கிளம்பினதுமே எனக்கு தெரியாம அவர் வசுந்தராவை வேலைய விட்டு துரத்திட்டு அவருக்கு சாதகமா இருக்குற ஆட்களை வேலைக்கு வெச்சிருக்கார் அது எனக்கு தெரியாமையும் பாத்துகிட்டார்
ரத்னாவுக்கும் பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிட்டல சேத்த தகவல் கேட்டு நான் ரத்னாவ பாக்க அவருக்கு தெரியாம அங்க போனேன் போறவழில எனக்கு பிரசவ வலி எடுத்துச்சு எங்க நல்ல காலம் அவர் வேலைய விட்டு துரத்தினதும் வசுந்தரா வேற வழி இல்லாம அந்த ஹாஸ்பிட்டல வேலைக்கு சேர்ந்திருந்தா அவரோட ஆட்கள் மூலமா அவருக்கு ரத்னாவுக்கு வலி எடுத்த விஷயம் தெரியறத்துக்குள்ள சரத் பிறந்துட்டான்
ஆனா அவர் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்த ஏற்கனவே நாங்க போட்ட திட்டபடி அவரோட ஆட்களை தாக்கிட்டு எங்க ஆட்கள் சரத்தை தூக்கிகிட்டு போய்ட்டாங்க அப்படியும் அவர் ஆட்கள் சரத்தை கைபத்த முயற்சி பண்ணாங்க இந்த சண்டையில அந்த ஆட்கள் அவனை குப்பை தொட்டில போட்டதும் அந்த வழியா வந்த ஸ்ரீதர் அண்ணன் காப்பாத்தி உன்னை எடுத்துகிட்டு போனதும் அந்த ஆட்களை பின் தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருந்த வசுந்தரா மூலமா எங்களுக்கு தெரிஞ்சது
அந்த ஆட்கள் அவரோட கோபத்துக்கு பயந்து குழந்தை செத்துட்டதா அவர் கிட்ட சொல்லிவிட அதே நேரத்துல பிறந்த எங்க குழந்தைய ரத்னாவோட பையன் நு சொல்லி ஏமாத்த அவர் திட்டம் போட்டார் தட்டி கேட்ட என்ன இதுக்கு சம்மதிக்கலனா அம்மாவையும் ரத்னாவையும் குழந்தையும் கொன்னுடுவேன் நு சொல்லி மிரட்டினார்
வேற வழி இல்லாம நானும் இதுக்கு சம்மதிச்சேன் கொஞ்சநாள் கழிச்சு உங்கம்மாகிட்டயும் பாட்டிகிட்டயும் உண்மைய சொல்லி நீ கலாகிட்ட வளர்ரதையும் சொல்லி சமாதானபடுத்தினேன் பாரதியோட கலா அண்ணிகறதுனால எங்களுக்கு உன்னை பத்தி எந்த கவலையும் வரல
எப்படியோ அடியாட்கள் மூலமா சரத் உயிரோட இருக்குறதை தெரிஞ்சுகிட்ட அவர் என்னை பின் தொடர்ந்து சரத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணார் அதுக்கு இடம் கொடுக்காம நான் கவனமா இருந்தேன் வசுந்தரா மூலம் கலாண்ணிக்கும் ஸ்ரீதர் அண்ணாவுக்கும் சரத் யாருங்கறத தெரியபடுத்தினேன் அவங்களும் கவனமா சரத்தை தன் மகனாகவே வளத்துனாங்க கொஞ்ச நாளில் அவர் கவனம் வேறபக்கம் திரும்பிடுச்சு இங்க சுரண்டுன காசுல வெளிநாட்டுல தொழில் பண்ண ஆரம்பிச்சார்
யாரையும் நம்பாம எனக்கு தொழில பழக்கி விட்டார் என் மகன எந்தம்பி மகனா அடையாளம் காட்டி முழுக்க அவர் கட்டுபாட்டுல வளத்தார் எங்களுக்கு பிறந்த குழந்தை இறந்துட்டதா நம்ப வெச்சார் தொழில நான் நல்லா கத்துகிட்டதும் என் மகனை எங்கிட்ட இருந்து பிரிச்சு வெளிநாட்டுல படிக்க வெச்சு வளத்தார் அவரும் அவனோட தங்கி கிட்டு இருக்கார் இதை பத்தி நான் வெளில சொன்னா என் மகனை சொத்து போனாலும் பரவால்லனு கொன்னுடுவேனு மிரட்டரார்
ஷியாமை வேலைக்கு எடுத்தபோது ஷியாமோட பயோடட்டால இருந்த விபரங்களை வெச்சு அவனை தெரிஞ்சுகிட்டேன் என் தம்பி சாயல் சரத்கிட்ட இருக்கறத வெச்சு அவனையும் நான் தெரிஞ்சுகிட்டேன் அதனாலதான் அவனை என்கூட வெச்சுக்கறத்துகாக வேலை குடுத்தேன் சக்திக்கும் பாரதிக்கும் இருந்த ஜாடை ஒத்துமைனால ரொம்ப நாள் ஆனாலும் என்னால உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது
இன்னமும் கொஞ்ச நாளுல என் புருஷன் இங்க வந்திடுவார் அப்புறம் என்ன நடக்க போகுதுனு தெரியல என கவலைபட்டார்
தொடரும்
அத்தியாயம் -6

கவலைகளை பகிர்ந்து கொண்ட பின் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த சுமித்ரா தேவியின் தோள்களை பரிவாக வருடியபடி அமர்ந்திருந்தார் வசுந்தரா பிறகு மெல்ல சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்த சுமித்ராவோ அனைவரிடமும் பொதுவாக இதுவரைக்கும் உங்க யாருக்கும் சொல்லம சமாளிச்சுடலாம் நு நினைச்சேன்
எதோ ஒரு வகையில என் புருஷன் பண்ண தப்பை சரி பண்ணிடமுடியும் நு தோணிக்கிட்டு இருந்துச்சு அதுனாலதான் என் தம்பி பையன் நு தெரிஞ்சும் சரத்தை இது வரைக்கும் என் ஸ்டாப்சுல ஒருத்தரா வெச்சிருந்தேன்
எங்கப்பா உயில் படி என் தம்பி மகனுக்கு என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அன்னையோட எங்க கார்டியன்ஷிப் முடிவுக்கு வந்திடும் என் மகனுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சாச்சு அதுனால கல்யாணத்துக்கு பிறகு அவனுக்கு வர சொத்தை வெச்சு என்ன பண்ணனும் நு திட்டம் போட்டு இருக்காருனு தெரியல என சொன்னார்
அதோட இனி எங்கம்மாவையும் ரொம்பநாள் இங்க வெச்சிருக்க முடியாது வசுந்தரா திரும்ப எங்க கிட்ட வேலைக்கு வந்தது அவருக்கு தெரியாது அவர் வரத்துகுள்ளே வசுந்தராவுக்கும் ஒரு நல்ல வழி காட்டணும் என்ன பண்ணுறதுனு ஒண்ணும் புரியலை என்றபடி பெருமூச்சு விட்டு கொண்டார்
பிறகு கலாவின் கைகளை பிடித்து கொண்டு என் நன்றிய வார்த்தைல சொல்ல முடியாத அளவுக்கு உங்களுக்கு நான் கடமை பட்டிருக்கேன் நீங்க மட்டும் சரியான நேரத்துல சரத்தை காப்பாத்தி உங்க பிள்ளையா வளர்க்கலேனா அவன் எப்படி எங்க இருந்திருப்பானோ? என சொல்ல
தொண்டையை கனைத்து கொண்டு பேச துவங்கினார் கலா ஆரம்பத்துல என்னவோ குழந்தையை காப்பாத்துறதுக்காகதான் நான் வளர்க்க ஆரம்பிச்சேன் நாளாகநாளாக சரத்தையும் நானும் அவரும் எங்க சொந்த பிள்ளையாதான் பாத்தோம் அன்னைக்கு உங்களை சக்தி ஷியாம் கல்யாண மண்டபத்துல உங்களை பாத்த உடனே எங்கே உங்க கணவரும் வந்திருப்பாரோனு பயந்துதான் போனோம் அவருக்கு எங்களை தெரியாதுனாலும் சரத்தை பார்த்தா சந்தேகம் வரவும் வாய்ப்பிருக்கு என சொல்ல
ஓ அதுனாலதான் முன்னால வராம இருந்தீங்களா? என வினவினாள் சக்தி
நான் உங்ககிட்ட இது பத்தி கேட்டப்போ ஏன் கோபப்பட்டீங்க நு இப்போ புரியுது சாரி அத்தை உங்களை நான் தப்பா நினைச்சுட்டேன் – சக்தி
பரவாஇல்லை சக்தி அதை அன்னைக்கே நான் மறந்துட்டேன் -கலா
பிறகு ஸ்ரீதர் சரத்தை பார்த்து தம்பி எங்களை தப்பா நினைக்காதே உன் கிட்ட உண்மைய சொல்லணும்னு நினைக்கும் போதெல்லாம் எங்க நீ அதுக்கு அப்புறம் எங்க கூட இருக்க மாட்டியோனு தோணும் அதனாலதான் நாங்க சொல்லலியே தவிர உங்கிட்ட மறைக்கனும்னு நினைச்சதில்லை இப்போவரைக்கும் உன்னை என் சொந்தமகனாதான் பாக்குறேன்
இப்போ வரைக்கும் உங்களை தான் என் சொந்த அப்பாம்மானு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆன அது பொய்னு தெரியவரும் போது எனக்கு சங்கடமா இருக்கு
இதுக்கப்புறம் எப்படி நான் நம்ம வீட்டுல இருப்பேன் உங்கள எந்த உரிமைல நான் அம்மானும் அப்பானும் கூப்புடுறது என சொல்ல துவங்க அங்கே வேகமாக வந்து அவன் வாயை தன் கையால் பொத்திய ஷியாமோ போதும் பிதற்றாதே சரத் என்ன நடந்திருந்தாலும் எப்பவும் நீ என் தம்பிதான் உனக்காக நாங்க இருக்கோம் என சொல்ல ஆமாம் சரத் ஷியாம் சொல்றது சரிதான் என வழி மொழிந்தனர் கலாவும் ஸ்ரீதரும் அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஆமோதிக்கவே செய்தனர்
சுமிம்மா என மெல்ல குரல் கொடுத்த வசுந்தரா ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சுமா எல்லாரும் சாப்பிடவாங்க என கூப்பிட வீட்டாளாய் அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றார் ரத்னா

அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் வீட்டிற்க்கு பெரியவராக எல்லாரும் இப்போ ரெஸ்ட் எடுங்க எதுவாய் இருந்தாலும் நாளைக்கு காலையில பேசிக்கலாம் என சொல்லிவிட்டு சென்றார் ரத்னா
மறுநாள் பொழுது விடிந்த நேரம் அனைவருக்கும் முன்னே வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர் ஸ்ரீதரும் கலாவும் பின்னர் அங்கே காலை பானம் குடுக்க வந்த வசுந்தரா மூலம் அனைவரையும் வரவழைத்தனர்
அனைவரும் வந்தபின் பேச்சை துவங்கிய ஸ்ரீதர் அம்மா நீங்க வர சொன்னீங்க நு சொன்னவுடனே போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம் இன்னைக்கு நாங்க ஊருக்கு கிளம்பறோம் மேற்கொண்டு என்ன பண்ணனும்னு சொல்லி அனுப்புங்கமா அதுபடியே நடக்க ரெடியா இருக்கோம் என சொல்ல அங்கே கையில் பெட்டிகளுடன் வந்த ஷியாமும் சக்தியும் கிளம்பதயாரானார்கள்
நில்லுங்க என குரல் கொடுத்து கொண்டே வந்த சரத் என்ன விட்டுட்டு எல்லாரும் கிளம்பதயாராகிட்டேங்க இல்ல என சொல்ல அவன் முன்னே வந்த கலா அது அப்படி இல்ல சரத் இது வரைக்கும் உன்னை பெத்தவங்க கிட்ட இருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் உன்னை பிரிச்சு வெக்கவேண்டிய நிர்பந்தம் இனிமேலாவது நீ அவங்களோட சந்தோஷமா இருக்கணும் அதுனாலதான்
அப்போது அங்கே நிலவிய அமைதியை உடைத்தது ரத்னாவின் குரல் கலாக்கா நான் வளத்திருந்தா கூட இப்படி வளத்தமுடியாது அவ்வளவு நல்லபடியா அவனை நீங்க வளத்துருக்கீங்க என்னதான் பெத்தது நானா இருந்தாலும் என் முகத்தை பார்க்கமுன்னே அவனை நான் அவனை தொலைச்சிட்டேன் இப்பொ அவனை பாக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு
ஆனா அவன் சந்தோஷம் உங்க கூட இருக்குறதுதான் அதுனால இதுவரைக்கும் இருந்த எதையுமே மாத்த வேண்டாம் அவன் உங்க கூடவே இருக்கட்டும் இதோ இன்னமும் கொஞ்ச நாளுல நாங்களும் சென்னைக்குதான் வரப்போறோம் எனக்கு அவனை பார்க்கணும்னு தோணிச்சுனா நான் அங்க வந்து பார்த்துக்கறேன் என முடிக்க அனைவரின் முகத்திலும் நிம்மதி நிலவியது
சுமித்ரா மேடம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நீங்க இல்லாட்டி என்னை பெத்த அம்மாவும் பாட்டியும் என்னவாகி இருப்பாங்களோ தெரியாது அதே மாதிரி ரத்னா அம்மா சொன்னமாதிரி கலாம்மாவையும் விட்டுட்டு வர முடியாது எனக்கு இந்த சொத்து மேல எல்லாம் ஆசையே கிடையாது
அதுனால நீங்க பயப்படாதீங்க என் அப்பா உயிரோட இருந்தப்போ உங்க மேல பாசமா இருந்ததாகவும் உங்களுக்கா உங்க கணவரை பொறுத்துக்கிட்டதாகவும் சொன்னீங்க அவர் மகன் நான் மட்டும் விதி விலக்காக முடியுமா ? என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் அது உங்க மகன் கிட்டயே இருக்கட்டும்
உங்க மனசை போட்டு குழப்பிக்காம தயவு செஞ்சு எப்பவும் போல இருங்க இங்க நடந்த இந்த விஷயம் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் எப்பவும் போல எல்லாம் நடக்குறபடியே நடக்கட்டும்என சொல்ல அனைவரும் அமைதி பெற்றனர்

இது என்னடா சோதனை எல்லாம் அவன் நினைத்தபடி நடந்து விட்டால் மேல் கொண்டு எப்படிங்க கதைய தொடர்வது அவன் பாட்டுக்கு அவன் சொல்லட்டும் நம்ம வேலைய நாம பாப்போம் என்ன நான் சொல்றது சரியா? மக்களே
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

என் நிழல் நீயடி - Page 2 Empty Re: என் நிழல் நீயடி

Post by ANUBAMA KARTHIK Sun Feb 24, 2019 11:52 pm

அத்தியாயம் -7
சென்னை பன்னாட்டு விமான நிலையம் பலமொழி பேசும் பலநாட்டு மக்களும் வந்துபோகுமிடம் மனிதனை சுமந்து கொண்டு பறவையை போல பறக்கும் இயந்திர பறவைகளின் வேடந்தாங்கல் சரத்தும் சந்தனாவும் இருபுறமும் நிற்க இருவரிடமும் சிரித்து பேசி கொண்டிருந்தாலும் சுமித்ரா தேவியின் காதுகள் ஒலிபெருக்கியின் குரலில்தான் கவனமாய் இருந்தது

இதோ அவர் எதிர்பார்த்த அறிவிப்பை கேட்டவுடன் பரபரப்புடன் அவரின் கண்கள் சென்றது வருகை வாயிலை நோக்கிதான் அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் வெளியே வந்த அவனுக்கும் சரத்தின் வயதுதான் ஒரு கையில் மடித்து போடப்பட்ட கோட்டும் மறுகையில் பயணசுமைதாங்கிய தள்ளுவண்டியுமாய் கண்ணில் போடவேண்டிய குளிர்கண்ணாடி தலையில் இருக்க யாரையும் மயக்கும் கம்பீர அழகுடன் அவர்களை நோக்கி வந்தான் சந்தோஷ் இவந்தாங்க நம்ம கதையில குட்டி வில்லன்
ஹலோ ஹலோ மேடம் ஒரு நிமிஷம் கொஞ்சம் நிறுத்தரீங்களா? சந்தனா எங்கிருந்து இங்க வந்தா அதுவும் சுமித்ரா தேவியோட?அப்படினு நீங்க கேக்குறது புரியுது
இதுவும் நம்ம ஷியாம் வேலைதாங்க கொடைக்கானலுல இருந்த பாட்டிய சென்னைக்கு கூட்டி வந்ததுக்கு அப்புறமா வசுந்தரா அவங்க கிராமத்துக்கே திரும்பி போய்ட்டாங்க அவங்க இடத்துக்கு பாட்டிக்கு காம்பேனியனா சக்திய சேத்து விட்டுட்டான் அதுமட்டுமா செஞ்சான்
சந்தனா சரத்தை காதலிக்கறதையும் அதை சரத் புரிஞ்சுக்காம இருக்கறதையும் பக்குவமா சுமித்ரா தேவிகிட்ட போட்டும் குடுத்துட்டான் இதை கேள்விப்பட்ட உடனே சுமித்ரா தேவி செஞ்ச முதல் வேலை சந்தனாவ தன்னோட P A வா அப்பாய்ண்ட் பண்ணதுதான்
சுமித்ரா தேவி நினைச்சதென்னவோ புத்திசாலியான சந்தனா தன்னோட காதலை சரத்துக்கு புரிய வெச்சிருவானுதான் அவங்க என்னமோ ரெண்டுபேருக்கும் நல்லது பண்ணறதுக்குதான் அப்படி ஒருமுடிவு எடுத்தாங்க ஆனா அதுகுள்ள அவங்க எல்லாரும் எவ்வளவு சோதனைய சந்திக்கணுமோ? அப்புறம் சரத் பையன் மனசுல என்ன எண்ணம் இருக்கோ? இது ரெண்டும் என்ன பண்ண போகுதுகளோ எல்லாம் ஆண்டவனுக்குதாம்பா வெளிச்சம்
சரி இப்பொ நம்ம நடப்புக்கு வருவோம் கண்ணுல தன்னைமீறி வழியற கண்ணீரகூட தொடைக்கணும் நு தோணலை சுமித்ராதேவிக்கு எங்கே கண் சிமிட்டினா எதிரே தெரியர தன் மகனோட உருவம் மறைஞ்சிடுமோனு பயந்தாங்க ஆனா பாருங்க சந்தோஷ் அந்த அளவுக்கு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறவனா தெரியல
பக்கத்தில் வந்த அவன் உதடுகள் புன்னகைத்தாலும் கண்களிலும் குரலிலும் கடுப்பை காட்டியபடியே ஆண்ட்டி போதும் இது ஏர்போர்ட் என கடுகடுத்தான் தான் பெற்ற மகன் தன்னை ஆண்ட்டி என அழைத்ததை கேட்ட சுமித்ராதேவியின் முகம் கன்றியது
பின்னர் எதோ நினைத்தபடி சந்தோஷின் தோள்களுக்கு பின்னே யாரயோ சுமித்ரா தேவியின் கண்கள் தேடின கேள்வியாக அவரை பார்த்த சந்தோஷிடம் அவர் வரலையாப்பா என கேட்க யாரை கேட்க்கின்றார் என புரிந்துகொண்ட சந்தோஷின் முகம் கனிவுடன் மலர்ந்தது
இல்லை ஆண்ட்டி பாஸ் வரல கிளம்பும் போது கொஞ்சம் தொழில்ல இருந்த விவகாரங்கள் பத்திதெரியவந்தது அதை சரி பண்ணிட்டு வருவார் இது பத்தி நேரம் கிடைக்கும் போது உங்க கிட்ட அவரே பேசுறதா சொல்லி இருக்கார் என பதில் சொன்னான்
ஏனோ இதை கேட்ட சுமித்ராதேவியின் முகம் வாடிவிட மெல்ல யாருமறியாது தன்னை சுரண்டிய சந்தனாவின் செயலில் சுய உணர்வு பெற்ற அவர் சரத்தை ஏறிட்டு பார்க்க அவரின் பார்வயின் அர்த்தம் புரிந்த சரத்தோ ஹாய் சார் ஐயாம் சரத் நான் உங்க கம்பெனி மேனேஜர்கள்ல ஒருத்தன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டான்
பதிலுக்கு அலட்சியமான தலையசைப்புடன் அவனை பார்த்த சந்தோஷின் தோரணையில் என்ன தோன்றியதோ சரத்துக்கு சுமித்ராதேவியிடம் திரும்பி மேம் நீங்க எல்லாரும் பின்னாடி வாங்க நான் முன்னாடி போய் காரை எடுத்துட்டு வரேன் என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான் இதை பார்த்து கொண்டிருந்த இருபெண்களின் மனநிலையோ இருவேறுவிதமாக இருந்தது
சரத்தின் கண்களில் தெரிந்த வலியும் சந்தோஷின் அலட்சியமும் சுமித்ரா தேவிக்கு அதிர்ச்சியை தந்தது என்றால் சந்தனாவிற்குள்ளே மினி எரிமலையையே வெடிக்க செய்தது தன்னை கட்டுபடுத்தி கொண்ட சுமித்ராதேவி சந்தனாவை அறிமுகம் செய்யத்துவங்கினார்
அழகும் குறும்பும் மின்னும் தேவதைப்பெண்ணாய் இருப்பவளை யாருக்குதான் பிடிக்காது சந்தோஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?

முதல் அறிமுகத்திலேயே ஆர்வம் மின்னும் பார்வையை அவள் மீது செலுத்தியவாரே கை குலுக்க கைகளை நீட்டினான் சந்தோஷ் ஆனால் சரத்திடம் அவன் காட்டிய அலட்சியத்தில் மனம் கொதிக்க நின்றிருந்த சந்தனா நாசூக்காக பதிலுக்கு கரம் குவித்து வணக்கம் வைத்தாள்
ஆராய்ச்சியாக அவளை பார்த்த சந்தோஷுக்கோ உதட்டளவே எட்டிய புன்னகையும் கண்களில் கண்ட எரிமலையும் சரியாக புரியாமல் போனது அவன் துரதிர்ஷ்டமே
அவளின் கைகூப்பலையும் கன்னத்தில் கண்ட கோபசிகப்பையும் வெட்கம் என தவறாக எண்ணிக்கொண்ட அவன் தன் தோற்றமும் செல்வநிலையும் அவளை கவர்ந்ததால் தன்னை கண்டு வெட்கப்படுவதாக எண்ணி கர்வம் கொண்டான்
ஹாய் மிஸ் சந்தனா டோண்ட் பீ ஷை யா பீல் ப்ரீ டொ ஸ்பீக் வித் மீ என சொல்லி அவளின் கவனத்தை பெற முயன்றான் அதற்க்குள் காரை வாயிலில் கொண்டுவந்து நிறுத்திவிட்ட சரத் சுமித்திராவுக்கு போன் செய்ய போலாமாப்பா என கேட்டவாறே நகரதுவங்கிய அவருடன் சந்தனாவும் இணைந்து கொண்டாள்
தனக்கு பதில் எதுவும் சொல்லாததையும் சுமித்திராவுடன் இணைந்து நடந்ததையும் புதிரான பார்வையுடனும் யோசனையுடனும் கடந்தான் சந்தோஷ்
காரின் அருகில் வந்தவுடன் சுமித்திரா பின்புறம் ஏற அவருடன் வந்த சந்தனாவோ டக்கென முன்புறம் டிரைவிங் சேட்டில் அமர்ந்திருந்த சரத்தின் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் அவர்களின் பின்னால் போன் பேசியபடி வந்த சந்தோஷுக்கோ சுமித்ராவின் அருகில் அமரவதை தவிர வேறுவழி இல்லை
சந்தனாவின் அருகே அமர ஆசைப்பட்டவன் அதை செயல் படுத்த விடாக்கண்டனாக சரத்தை அப்புறபடுத்தும் முயற்சியாக சரத்தை பார்த்து ஹேய் சரத் நீ இறங்கி வேற டேக்சி பிடிச்சு கிளம்பு நானும் ஆண்ட்டியும் கொஞ்சம் பெர்சனலா பேசணும் ஸோ நானே டிரைவ் பண்ணிக்கறேன் என சொல்ல கன்றிய முகத்துடன் காரில் இருந்து இறங்கினான் சரத்
அவன் இறங்கும் முன்னே இந்தபக்கம் அமர்ந்திருந்த சந்தனாவும் இறங்கி விட அதை எதிர்பாராத சந்தோஷோ நோ சந்து யூ ஸ்டே தேர் ஐ வில் டிராப் யூ என சொல்ல
இல்லை சார் நீங்களும் மேமும் எதோ பெர்சனலா பேசனும்மு சொன்னீங்களே என ஸோ இட்ஸ் ஓக்கே சார் நான் சரதோட போய்க்கிறேன் ஹீ வில்ல் டிராப் மீ டோண்ட் ஒரி
ஒன் மினிட் சரத் நானும் வரேன் என சொல்லி விட்டு கிளம்பிவிட்டாள்
அவள் கூறியதை கேட்ட சந்தோஷ் சரத்தை பார்த்த பார்வையில் அவளை அழைத்து செல்ல மறுக்கும்படியான கட்டளை இருந்தது அதை கவனிக்காத சரத்தோ பை சார் பை மேம் வா சந்தனா என கூறியவாறே விடைபெற்றான் இப்போது சந்தோஷின் பார்வையில் இருந்த அனலோ ஆயிரம் சூரியனின் வெப்பத்துக்கு இணையாக இருந்தது அதன் விளைவு சரத்தை பொசுக்கும் போது பீனிக்ஸ் பறவையாய் அதிலிருந்து அவனால் மீளமுடியுமா? காலம் மட்டுமே அறியும்

இனி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

Back to top Go down

என் நிழல் நீயடி - Page 2 Empty Re: என் நிழல் நீயடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum