ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

3 posters

Go down

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு Empty சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 6:09 am


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு 201901110015454365_The-Supreme-Court-recharged-the-CBI-on-the-Supreme-Court_SECVPF
புதுடெல்லி,

நாட்டின் தலைமை விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா.

இவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற் படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அலோக் வர்மாவின் அதிகாரங்களையும் பறித்த மத்திய அரசு, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இது ஒருபுறம் இருக்க, தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் கடந்த 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லது என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கிய நீதிபதிகள், அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதேநேரம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை எந்த கொள்கை முடிவையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தான் எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

இந்த குழு ஒரு வாரத்துக்குள் கூடி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். அத்துடன் இடைக்கால இயக்குனரான நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அலோக் வர்மா நேற்றுமுன்தினம் தனது பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

இந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று மீண்டும் இந்த கூட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. ஊழல் மற்றும் பணியில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 2 உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் பிரதிநிதி ஏ.கே.சிக்ரி) முடிவின்படி அலோக் வர்மாவின் நீக்கம் உறுதி செய்யப்பட்டது.

அலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் பொறுப்பேற்ற மறு நாளிலேயே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலோக் வர்மா வருகிற 31-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த கூட்டத்தை அவசரமாக கூட்டுவது தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். ரபேல் விவகாரம் காரணமாக சி.பி.ஐ. தலைவரை பதவி நீக்குவதற்காகவே இந்த அவசரம் காட்டப்படுவதாக ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
--
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

Post by anikuttan Sat Jan 12, 2019 7:43 am

இவ்வளவு குற்றச்சாட்டுகளை கூறும் அரசு இப்போது ஏன் அவரை நீக்கம் செய்யவேப்ண்டும்.இதை நேரமே செய்ய வேண்டியது தானே. அதாவது ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கினால் என்றும் பொறுப்பில் துடரலாம். இனி அரசு தனக்கு வேண்டியவர்களை அந்த பதவி குடுத்து யாரை எல்லாம் பழிவாங்கவேண்டுமோ அப்படியே செய்யலாம்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

Post by சிவனாசான் Sun Jan 13, 2019 5:36 pm

எவன் எப்படிபட்டவனாக இருந்தாலும் கடவுள் தண்டனை பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. என்னங்க வேலியே பயிரை மேய்ந்தால்
என்ன செய்வது.ர எப்படி ஒப்பு சாயாத ராணுவ வீரர்களை வாக்கு சாவடி பூத்துக்கு நியமிக்கிரார்களோ அதுபோல அல்லாமல் இராணுவ வீரர்கள் போல் செயல்பட அந்தந்த ஊரில் உள்ள நற்பணி ஆற்றக்கூடிய
இளைஞர்களை நியமித்து செயல்பட்டு ,அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து உதவுவதுபோல் இருக்கும். ஊழல்செய்பவன் லஞ்சம் வாங்கும் எவனையும் அதிகாரத்தில் விட்டு வைக்கவே கூடாதுங்க. விரட்டிடனும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum