Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
2 posters
Page 1 of 1
திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
-
திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும்
நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால்
எல்லா வக்கிரங்களும் தீரும்.
திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார்,
அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள்
திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.
2. திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும்
புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு
பஸ்கள் செல்கின்றன.
3. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம்
பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.
4. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் ஏராளமான பக்தர்கள் கூடி
நின்று தீபம் ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய
பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை
மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.
5. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக
குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன்
வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான
வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில்
காணப்படுகின்றன.
6. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில்
பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில்
அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு
லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம்.
7. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா
வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.
8. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும்
நிறைந்தது.
9. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின்
வடகரையில் கோவில் அமைந்துள்ளது.
-
----------------------------------
Re: திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
10. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர்
இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய்
மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை
செய்தால் நல்ல பலன் உண்டு.
11. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத்
தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும்.
12. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம்
அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை
வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.
13. இத்திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம்
திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.
14. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின்
பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி
பெற்று விளங்குகிறார்.
15. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி
வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து
காட்சியளிக்கிறார்.
16. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன்,
சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு
திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.
17. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள்
இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம்,
வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக
கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர
கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று
வாழ்க்கையில் பயன் அடைவர்.
18. அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர
காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும்
காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
Re: திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
19. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும்,
அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும்
ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
20. மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை விழா, சித்ரா பவுர்ணமி
உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீப உற்சவம்,
தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ்
வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை
இத்தலத்து முக்கிய விழாக்கள்ஆகும்.
21. வக்கிர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து
வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள்
கருதுகின்றனர்.
22. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத்
திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது
திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர்,
இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.
23. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து
அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி,
தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற
அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின்
திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
24. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு
இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.
25. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள்
கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம்
பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.
26. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ
மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும்
கட்டி வந்திருக்கிறார்கள்.
27. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும்
பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
-
---------------------------------------
Re: திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
28. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில்
முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள்.
இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை
தலம்.
29. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய
தேவாரப் பதிகங்கள் உள்ளன.
30. புதுச்சேரியிலிருந்து பதிமூன்றாவது மைலில் புதுச்சேரி
மயிலம் சாலையில் இந்த தலம் இருக்கிறது. பிரதான
சாலையிலிருந்து இந்த தலம் சுமார் 10 கிலோ மீட்டர்
தொலைவில் வடக்கில் உள்ளது.
31. இந்த தலத்தின் பெருமையைக் குறிக்கும் பல கதைகள்
வழங்குகின்றன.
32. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ-
ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை.
கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று
ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக
முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும்
கூறுகிறார்கள்.
33. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு
முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே
லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல்
அமைந்திருப்பது புதுமை.
34. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த
காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய
இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ,
திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி
அமையவில்லை.
35. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணி
திரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை
எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே
என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்
பெருமானை வேண்டுகிறார்.
-
-----------------------------------
நன்றி- மாலைமலர்
Re: திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
மாலை மலருக்கு ஓர் அஞ்சல் அட்டை மூலம் நன்றி தெரிவிக்கலாமே>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» திருப்பட்டூர் கோவில் சிறப்புகள்
» சென்னை கந்தகோட்டம் முருகன் கோவில் சிறப்புகள்
» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
» பாப்பான்குளம் திருவெண்காடர் ஆலயம், ராமஸ்வாமி கோவில் - தல வரலாறு மற்றும் ஊர் சிறப்புகள்
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» சென்னை கந்தகோட்டம் முருகன் கோவில் சிறப்புகள்
» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
» பாப்பான்குளம் திருவெண்காடர் ஆலயம், ராமஸ்வாமி கோவில் - தல வரலாறு மற்றும் ஊர் சிறப்புகள்
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum