ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முதலாய் அம்மாவுக்கு...

2 posters

Go down

முதன்முதலாய் அம்மாவுக்கு... Empty முதன்முதலாய் அம்மாவுக்கு...

Post by அபிராமிவேலூ Tue Dec 22, 2009 7:14 pm

தாயை இழந்த வாடும் இதயக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

கவிப்பேரரசு
வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பு "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்".
இவர் செதுக்கிய இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை
நினைக்கிறேன்.

முதன்முதலாய் அம்மாவுக்கு... MotherAndChildnb2
பெற்ற
தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற
தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும்
பெறமுடியாது.

அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ

முதன்முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
முதன்முதலாய் அம்மாவுக்கு... 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

முதன்முதலாய் அம்மாவுக்கு... Empty Re: முதன்முதலாய் அம்மாவுக்கு...

Post by சிவா Tue Dec 22, 2009 7:22 pm

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளுக்கெல்லாம் சிகரமாக திகழ்வது இந்தக் கவிததான் என்றால் மிகையாகாது!


முதன்முதலாய் அம்மாவுக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum