ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 pm

» கருத்துப்படம் 09/10/2024
by mohamed nizamudeen Today at 8:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:32 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Today at 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Today at 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Today at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Today at 3:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:29 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Today at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Today at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Today at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Today at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Today at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Today at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Today at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Today at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Today at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Today at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Yesterday at 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

2 posters

Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 10:18 pm


 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Maari2_88
ஒரு வெகுஜனத் திரைப்படம் வெற்றியடைந்து புகழ்
பெற்று விட்டால் அதையொரு பிராண்ட் ஆக்கி
விற்பனைச் சரக்காக்கும் ஹாலிவுட் வழக்கம் தமிழ்
சினிமாவிலும் இப்போது பெருகி வருகிறது.

முந்தைய சினிமா ஈட்டிய வெற்றியின் கதகதப்பில்
குளிர்காய்ந்து வணிகத்தை ஈட்டுவதே இவற்றின்
நோக்கம். இந்த வரிசையில் அரிதாகச் சில
திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் பல முயற்சிகள்
அபத்தமான கனவுகளாக முடிந்து விடுகின்றன.

மாரி2 –ம் அப்படியொரு துர்கனவுதான்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty Re: தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 10:19 pm

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் TvU4z980Sua1jJQABnbw+pic

எதிரிகளின் கொலைமுயற்சிகளிலிருந்து நூறாவது
முறையாக தப்பிக்கும் சாதனையை மாரி (தனுஷ்)
கொண்டாடுவதோடு படம் துவங்குகிறது.

‘நான் லூஸூப் பொண்ணு இல்ல.. மாஸூப் பொண்ணு’
என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும்
‘அராத்து ஆனந்தி” (சாய் பல்லவி) மாரியை
ஒருதலையாகக் காதலித்து வழக்கமான நாயகிகளைப்
போலவே அலைகிறார்.

மாரிக்கும் உள்ளூற விருப்பம் என்றாலும் தமிழ்
சினிமாவின் ரெளடிகளுக்கேயுரிய தார்மீகச் சிந்தனை
தடுக்கிறது. தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக்
கொண்டிருக்கும் வாழ்க்கையில் காதல் எதற்கு என்கிற
உயர்ந்த நோக்கத்தில் காதலில் விருப்பமில்லாதது
போல நடிக்கிறார்.

இன்னொரு பக்கம், மாரியைக் கொல்வதையே
தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும்
‘பீஜா’ என்கிற ஆசாமி (டொவினோ தாமஸ்)
அலைந்து கொண்டிருக்கிறார்

. ‘மரணத்தின் கடவுள்’ என்கிற பயங்கரமான
அறிமுகத்துடன் வரும் இவர் படம் முழுவதும் எதுவுமே
செய்யாமல் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்க
பரிதாபமாக இருக்கிறது.

தேவராஜ், சூர்யா பாணியில் மாரிக்கு கலை என்கிற
(கிருஷ்ணா) நண்பனும் இருக்கிறான்.
-
---------------------------------


Last edited by ayyasamy ram on Fri Dec 21, 2018 10:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty Re: தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 10:21 pm

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Maari-2-.............

தமிழ் சினிமாவின் வழக்கமான பாணியில், தவறான
புரி்தல் காரணமாக நண்பர்கள் பிரிகிறார்கள்.
இந்தச் சதியின் பின்னணியில் இருப்பவன் பிரதான
வில்லன். ஒருபுறம் நண்பனின் தவறான கோபம்,
இன்னொரு புறம் எதிரியின் காத்திருப்பு, மறுபக்கம்
அரசு அதிகாரியின் (வரலட்சுமி சரத்குமார்)
கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இடையில் தனக்கும்
தன் குடும்பத்திற்கும் நேரும் சிக்கல்களை மாரி
எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை.

எண்பதுகளில் வரும் இந்த அரதப்பழசான கதையை
முந்தைய திரைப்படத்தின் வெற்றி மசாலாவில்
முக்கி புதிய தின்பண்டமாகத் தர முயன்றிருக்கிறார்
இயக்குநர்.

சிரிப்பு போலீஸ் மாதிரி ‘சிரிப்பு ரெளடியாக’
இருக்கிறார் தனுஷ். ஆனால் இன்னொரு பக்கம்
ஆக்ரோஷமாகச் சண்டையும் போடுகிற விநோதமும்
நிகழ்கிறது.

ரோபோ ஷங்கர், வினோத் ஆகிய இரண்டு
நகைச்சுவையாளர்களை மட்டும் பக்கத்தில்
வைத்துக்கொண்டு இவர் எப்படி பெரிய ரெளடியாக
இருக்கிறார் என்கிற மர்மம் கடைசி வரை
விளங்கவில்லை.

படத்தின் பிற்பகுதியில் ரஜினிகாந்த்தின் ‘பாட்ஷா’
திரைப்படத்தின் சாயலும் சற்று ஊடுருவுகிறது
(பழைய ‘டான்கள்” எல்லாம் ஏன் ஆட்டோ
ஓட்டுநர்களாக மாறுகிறார்கள்?).

ப்ரூஸ் லீ-யின் ‘எண்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸை
நினைவுப்படுத்துவது போல் இறுதிக்காட்சியில்
கண்ணாடி பிம்பங்களுக்கிடையில் சிக்ஸ் பேக்
உடம்பைக் காட்டி சண்டை போடுகிறார் தனுஷ்.
(பாவம், ப்ரூஸ் லீ-யின் ஆன்மா அமைதி பெறட்டும்!)

சில அரிதான காட்சிகளில் மட்டும் நன்றாக
நடிக்கக்கூடிய ‘தனுஷை’ பார்க்க முடிகிறது.
அழுகையுடன் தன் காதலைச் சொல்லும் காட்சியில்
சாய்பல்லவி கவர்கிறார்.

டொவினோ தாமஸின் பாத்திரம் இன்னமும் சிறப்பாக
பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ரசிகர்களை
உற்சாகப்படுத்தும் நோக்கில் முதல் பாகத்தின்
சில பிரபலமான தருணங்கள் இதில் மீண்டும்
நினைவுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில்
சில வெற்றியும் பெறுகின்றன.


Last edited by ayyasamy ram on Fri Dec 21, 2018 10:30 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty Re: தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by ayyasamy ram Fri Dec 21, 2018 10:25 pm

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் NTLRG_20170125091511425704
-


*


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ரெளடி பேபி’ என்கிற
பாடல் மட்டும் கவர்கிறது. முந்தைய வடிவத்தில் அனிருத்
உருவாக்கிய அதே பின்னணி இசையை உபயோகப்படுத்த
வேண்டிய கட்டாயம்.

ஒரு வெகுஜனத் திரைப்படத்திற்குரிய உழைப்பை
தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.

‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்கிற ரொமாண்டிக்
காமெடியில் கவர்ந்த இயக்குநர் பாலாஜி மோகன்,
மசாலா சினிமாவில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்
கொள்ள முடியாமல் இரண்டாம் பாகத்தில்
தடுமாறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்னொரு தேய்வழக்கு மசாலா சினிமா. அவ்வளவே.
-
--------------------------------
-சுரேஷ் கண்ணன்
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84238
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty Re: தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by krishnaamma Fri Dec 21, 2018 10:57 pm

ம்ம்.. இன்றே தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டதாமே..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம் Empty Re: தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum