புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாமின் மந்திர வாசகங்கள்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Dec 18, 2009 1:25 pm

[You must be registered and logged in to see this image.]அப்துல் கலாமின் அலை அடிக்கடி வீசுகிறது. ஏன் தெரியுமா? அவர் ஒரு
சரித்திரம் மட்டுமல்ல. சமுத்திரமும் கூட!! அவர் எப்போதும் சொல்லும்
விஷயங்கள் போலவே எப்போதாவது சொல்லும் விஷயங்களும் மிகவும் முக்கியம். தன்
வாழ்க்கை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் அந்த
ரகசியங்களை


சிந்தித்தால் இந்தியா வல்லரசாகும் வரை பொறுக்காமல் நாம் வல்லவர்களாய் வளரலாம்.
இதோ… கலாமின் அந்த மந்திர வாசகங்களிலிருந்து வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரங்களை உணர்வோம்.. வாருங்கள்!!
“கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்”.
இது அப்துல்கலாமின் அறைகூவல்களில் ஒன்று.
இந்த வாசகத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து பாருங்கள்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எதனை விடவும் நாம் பெரியவர்கள் என்று எத்தனை
முறை உணர்ந்திருக்கிறோம்??
தோல்விகள் வந்தால் துவள்கிறோம். சரிவுகள் வந்தால் சரிகிறோம்.
இழப்புகள் வந்தால் இடிகிறோம். இந்த மனநிலையிலிருந்து மீள்வது எப்படி?
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
கடந்தகாலச் சறுக்கல்கள் பலவற்றின் போது பலமாகப் பதறியிருக்கிறோம்.
ஆனால் நாம் பயந்த அளவுக்கு அடி பலமாக இல்லை. அதிலிருந்து
மீண்டிருக்கிறோம். சிலரை வாழ்வில் இழந்திருக்கிறோம். அதற்குப் பிறகும்
வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாயின?
கடவுளின் குழந்தை என்பதால் நமக்கு நேர்ந்த பல விஷயங்களை விடவும் நாம் பெரியவர்கள். எனவே இந்த மீட்சிகள் நமக்கு நிகழ்ந்திருக்கின்றன.
வேலைக்குத் தொடர்ந்து பேருந்தில் போகிற ஒரு மனிதர் பேருந்தின்
இடிபாட்டில் நசுங்கி பிதுங்கி, தாங்கவே முடியாமல் தவணை முறையில் இரு சக்கர
வாகனம் வாங்குகிறார். வெய்யிலிலும் மழையிலும் பயணம் செய்யும்
சோதனையிலிருந்து மீண்டுவர நான்கு சக்கர வாகனம் வாங்குகிறார். தனக்கு
நேரும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய சவால்களின் போதும், அதைவிடத் தான் பெரியவர்
என்கிற உணர்வு தெரிந்தோ தெரியாமலோ உந்தித்தள்ள தன் வாழ்வை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்.
ஆனால் கண்ணுக்குத் தெரிந்த பெரிய சிக்கல்கள் வருகிறபோது மனிதர்கள்
அச்சத்தாலும் பீதியாலும் தங்கள் அடிப்படையான பலங்களை மறக்கிறார்கள்.
அவர்களே தோல்வி வயப் படுகிறார்கள். எந்தப் பிரச்சினையை விடவும் நாம்
பெரியவர்கள் என்று மட்டையடியாக நம்புவது தலைக்கனம். “கடவுளின் குழந்தை
என்பதால்…” என்ற விழிப்புணர்வு, நம்பிக்கையின் வெளிப்பாடு. நம் சக்தியை
உணர்ந்து, அதே நேரம் நம்மினும் பெரிய சக்தியின் வழிகாட்டுதலையும்
உணர்வதால் பணிவு கலந்த நம்பிக்கையாய் இந்த நல்லுணர்வு பரிணமிக்கிறது.
அப்படியானால், கடவுளின் குழந்தை நாம் என்கிற உணர்வுடன் சவால்களை
சந்திப்பது எப்படி? இதற்கும் கலாம் சொல்லும் ரகசியமே கைகாட்டுகிறது.
“நம்மைப் படைத்த கடவுள், நம் மனங்களிலும் ஆளுமைகளிலும் மகத்தான
சக்திகளையும் திறமைகளையும் பொதித்து வைத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து,
வெளிக்கொணர்ந்து செயல்படுத்த பிரார்த்தனை வழிவகுக்கிறது” என்கிறார்
அப்துல் கலாம்.
பிரார்த்தனை என்பதற்கு ஆங்கிலத்தில் இன்வோகேஷன் என்றொரு சொல் உண்டு.
உள்முகமாய்த் திரும்புதல் என்பதே இதன் பொருள். தனக்குள் பொதிந்திருக்கும்
தெய்வீக சக்தியையும் ஆற்றலையும் தேடிக் கண்டடைதலே பிரார்த்தனை.
ஆன்மீகத்தில் ஆழ்ந்த பலரும் ஆற்றல் பொருந்திய ஆன்ம வீரர்களாகப்
பரிமளித்திருக்கிறார்கள். “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்” என்று
முழக்கமிட்ட திருநாவுக்கரசரானாலும் சரி. அன்றாடம் பிரார்த்தனைக்
கூட்டங்கள் நிகழ்த்தி தன் ஆன்மபலத்தைப் புதுப்பித்து அந்நியர்களை அலறச்
செய்த காந்தியடிகளானாலும் சரி. பிரார்த்தனையின் பொருளுணர்ந்து செய்தவர்கள்
இவர்கள்.
நம்மில் பலருக்கு பிரார்த்தனை என்றால் கடவுளுக்குக் கோரிக்கை மனு
கொடுப்பது என்பதாகத்தான் பொருள். கோயில்களில் பலரின் பிரார்த்தனைகள்
மூன்று வாசகங்கள்தான் என்பார் சத்குரு ஜகி வாசுதேவ். “அது கொடுப்பா! இது
கொடுப்பா! காப்பாத்துப்பா!” என்ற மூன்று வாசகங்களுடன் வழிபடப் போகிறவர்கள்
அநேகம் என்பது அவரின் கருத்து.
பிரார்த்தனையை நம்மிடம் இருக்கும் பலங்களைக் கண்டுணரும் மார்க்கங்களாக
ஆக்கித் தருபவை யோகம், தியானம் ஆகியவை. நவீன உலகில் இவை செல்வாக்கு பெற்று
வருவது மிகவும் ஆக்கபூர்வமான அம்சம்.
இந்த வரிசையில் கலாம் சொல்லும் சொல்லும் இன்னொரு வாழ்க்கை ரகசியம்.
நம் குழந்தைகள் நலனை மனதில் கொண்டது. “நம் குழந்தைகளின் நாளைகளுக்காக,
நாம் நம் இன்றுகளைத் தியாகம் செய்வோம்” என்கிறார் கலாம்.
நம்மில் பலருக்கு குழந்தைகளை கவனிப்பதென்றால்.. அவர்களை மருத்துவரிடம்
அழைத்துப் போவதும் டியூசனுக்கு அழைத்துப் போவதும்தான். அவர்களின்
விருப்பங்கள், திறமைகள், தேடல்கள் ஆகியவற்றுக்காக நேரத்தையும் கவனத்தையும்
செலவு செய்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.
இந்தச் சின்ன விஷயத்தில் தொடங்கி நாளைய தலைமுறைக்காக மரம் வளர்ப்பது,
விலங்குகளை காப்பது போன்ற விழிப்புணர்வுகள் வரை அடுத்த தலைமுறைக்காக
ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை.
இன்று குழந்தைகள் நலன் கருதி தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட தியாகம்
செய்யப் பலரும் தயாராக இல்லை. கலாம் சொல்லும் இந்த ரகசியம் காலத்தின்
கட்டாயம்.
இதுபோல் பலவற்றில் ஈடுபடுகிற மனிதர்கள் கூட காலப்போக்கில்
சோர்வடைகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “என்ன செஞ்சு என்ன?
நம்ம செயல்களுக்கு யாருமே துணை கிடையாது” என்பதுதான். இந்த சலிப்பாலேயே
பலரும் தங்கள் சிறகுகளை சுருக்கிக் கொள்கிறார்கள். இதற்கு அப்துல்கலாம்
சொல்லும் சூத்திரம் மிக அற்புதமானது. “ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். நாம்
யாருமே தனியாக இல்லை. இந்த பிரபஞ்சமே நம்முடன் நட்பு கொண்டிருக்கிறது.
கனவு காணவும் செயல்படவும் தயாராய் இருப்பவர்களுக்கு மொத்தப் பிரபஞ்சமே
துணை நிற்கிறது” என்கிறார் கலாம்.
பிரபஞ்சத்தை விட பெரிய சக்தி நமக்குத் துணையாக வரமுடியுமா என்ன?
நம்முடைய சக்தியை உணர்ந்து, நம்முடைய கடமையை அறிந்து நம்முடைய இலக்குகளை
நோக்கி உழைத்தால் வாழ்க்கை வசப்படும் இதுவே கலாம் சொல்லும் வெற்றி
ரகசியம்!! பெயர் பொறாமை.



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Fri Dec 18, 2009 3:52 pm

"கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்கடவுளின் குழந்தை என்கிற முறையில் எனக்கு ஏற்படக்கூடிய எதனை விடவும் நான் பெரியவன்"

ஆம் , நாம் ஒவ்வொரு முறை பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது ,அதிலேய உழன்று,வருத்தப்பட்டு , பிரச்னைக்கான தீர்வு காண மறுக்கிறோம் . சற்றே பிரசனைகளை விட்டு வெளியே நின்று அதை எதிர் நோக்கின் , தீர்வுகள் வெகு எளிதாய் கிடைக்கும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை . கடவுள் நம்மால் தாங்க கூடிய பிரசனைகளை மட்டுமே நமக்கு தருகிறார் .நமது பலத்தை நமக்கு காட்ட எத்தனிக்கிறார் அவ்வளவே .

“நம்மைப் படைத்த கடவுள், நம் மனங்களிலும் ஆளுமைகளிலும் மகத்தான
சக்திகளையும் திறமைகளையும் பொதித்து வைத்திருக்கிறார். அவற்றை கண்டறிந்து,
வெளிக்கொணர்ந்து செயல்படுத்த பிரார்த்தனை வழிவகுக்கிறது”

பிராத்தனை என்பது நம் மனதுக்கு நாமே தரும் ஊக்க மருந்தினை போன்றது . எண்ணங்கள் வலுப்படும் பொது அவை செயல்கள் ஆகின்றன .

“நம் குழந்தைகளின் நாளைகளுக்காக,நாம் நம் இன்றுகளைத் தியாகம் செய்வோம்”

குழந்தைகள் நம்மிடம் எதிர்ப்பது ,நாம் அவர்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்பதுதான் . அதை செய்து விட்டாலே போதும் . அவர்களை மிகச்சரியான வழியில் அழைத்து செல்ல இயலும் . அதற்காக நாம் தொலைகாட்சியை தியாகம் செய்தாலே போதும் .

“ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். நாம்
யாருமே தனியாக இல்லை. இந்த பிரபஞ்சமே நம்முடன் நட்பு கொண்டிருக்கிறது.
கனவு காணவும் செயல்படவும் தயாராய் இருப்பவர்களுக்கு மொத்தப் பிரபஞ்சமே
துணை நிற்கிறது”

தனி ஒரு மனிதனில் தோன்றும் எண்ணமே பல சரித்திரங்களை புரட்டி போட்டு இருக்கிறது , இங்கே எவரும் தனிமையில் இல்லை . நீங்கள் நிகழ்த்த போகும் சாதனைக்காக நீங்கள் யோசிக்க தனித்து விட பட்டுள்ளீர்கள் . நீங்கள் சாதிக்க தொடரும் பொது ,இவ்வையகமே உங்கள் பின்னல் ,உறுதுணையாக வரும் என்பதை மறவாதீர்.


அருமையான உன்னதமான வரிகள் தோழி அபி மிக்க நன்றி .

இதில் எனக்கு தோன்றிய கருத்துகளையும் பதிவிட்டுளேன் , தவறெனில் மன்னிக்கவும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 18, 2009 5:46 pm

நல்ல தகவல்.. [You must be registered and logged in to see this image.]

நல்ல வழிக்கட்டி அப்துல் கலாம் ஜயாவை சொல்லாம்... [You must be registered and logged in to see this image.]
நன்றி அபி& செந்தில் குமார்.... [You must be registered and logged in to see this image.]

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Dec 18, 2009 10:29 pm

நல்ல தகவல்.நன்றி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Dec 22, 2009 8:28 pm

அருமையான பதிவு, நன்றி அபி!



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக