புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:07 am

First topic message reminder :

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 IORc6RePRg1rjlZhJcqA+WhatsAppImage2018-06-25at25310PMjpeg

மஞ்சள் நிறக் கதிரவன் அதிகாலை ஒளிக்கீற்றுகளை வீசும்வரை தோழியுடன் அந்தப் பூங்காவில் பல நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

வடசென்னையின் அனைத்து தரப்பு மக்களையும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அங்கு கடந்துவிடலாம். அருகம்புல் சாறு தம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு கூட்டம் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க (காலை வேளைகளில் நடைப்பயிற்சிக்கு வருபவர்களைவிட அங்கு விற்கும் ஆரோக்கிய உணவுகளை வாங்குபவர்கள்தான் அதிகம்) மறுபக்கம் காதுகளில் ஹெட்செட் அணிந்துகொண்டு ஒரு கூட்டம் முன்னே ஓடிக் கொண்டிருக்கும்.,

நன்றி
இந்து தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:22 am

அதில் வேலை செய்த தொழிலாளர்களோ மின்னி மில் பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட 14 ஏக்கர் நிலத்தை கேட்டு ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அருந்ததியர் காலனி

பின்னி மில்லுக்குப் பின்னால், நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது அருந்ததியர் காலனி. பின்னி மில்லுடன் தொடர்புடைய பல மக்கள் இங்குதான் வாழ்கிறார்கள்.

அருந்தியர் காலனியில் மொத்தம் 6 தெருக்கள். கோவிந்தபுரம், செங்கன்தெரு, கந்தன்தெரு, வீரராகவன்தெரு, போலேரியம்மன் கோயில் தெரு, தாசரிதெரு, பங்காருதெரு, ரங்கப்பன்தெரு என்ற பெயர்களை தாங்கி முற்றிலும் குறுகலான சாலைகளாக நிறைந்திருக்கிறது அருந்ததியர் காலனி.

தெருவின் இறுதியில் அமைந்திருக்கும் அந்த அரசுப் பள்ளியை நோக்கி வண்ணத்து பூச்சிகளாக வாண்டுகள் ஓடிக் கொண்டிருக்க…எந்த தெருவுக்குள் நுழைவது என்ற குழப்பத்தில் நின்று கொண்டிருந்தேன்…

ஒரு பெண் அருகில் வந்தார்.. யார் விலாசமாவது தெரியணுமா? இந்த ஏரியாவா நீங்க? என அடுத்தடுத்த அவரது கேள்விகளுக்கு பதில் கூறாமல் நான் வந்த விஷயத்தைச் சொன்னேன். கொஞ்ச நேரம் பேச முடியுமா என்றேன்… சிரித்துக் கொண்டே அங்கிருந்து பச்சை வண்ணம் அடித்த வீட்டின் சந்தில் ஓடி மறைந்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:23 am

யார் இது என்ற தொனியில் அந்த தெருவிலிருந்த அனைவரும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். மரப்பலகை அடித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எனக்கு எதிர் திசையில் இருக்கும் அந்தக் கடையின் பக்கம் திரும்பினேன். கடும் வெயில் என்பதால் கடையின் முன்னர் பெரிய பேனர் ஒன்றை ஸ்கிரீன் போல தொங்கவிட்டிருந்தார் கடைக்காரர். அந்த பேனரை நகர்த்தினேன்.

என்னைக் கண்டதும் செய்த வேலையை நிறுத்தினார். என்னம்மா வேண்டும் என்றார். சில தகவல்களுக்காக இங்கு வந்தேன் என்றேன். ஏதாவது உதவி பண்ணப் போறீங்களா பேப்பரா?….டிவியா? என்று கேட்டார் சிரித்துக் கொண்டே..
அங்கிருந்த மர நாற்காலியின் தூசைத் தட்டிவிட்டு அமரச் சொன்னார். முதலில் சற்று நெருடலுடன் தான் அந்த நாற்காலியின் முனையில் மட்டும் அமர்ந்தேன்..... சாப்பிட்டியா என்றார் அவரது கனிந்த குரல் நாற்காலியில் அமரச் செய்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:23 am

அவரது பெயர் குப்புசாமி. லெதர் குப்புசாமி! அப்படி அழைத்தால்தான் இங்கிருப்பவர்களுக்கு அவரைத் தெரியும்.

எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதிய ’பேட்டை’ என்ற நாவலில் வடசென்னையின் வாழ்வியலையும் அந்த மக்களின் மொழியையும் வாசகர்களிடம் மெல்ல..மெல்ல கடத்தியிருப்பார். அந்த நாவல் தொடங்குவதற்கு முன்னர் சென்னையில் பேட்டைகள் எப்படி பிறந்தன என்று முன்னுரை கொடுத்திருப்பார்.

அதில் குறிப்பாக சிறு தொழில் செய்யும் மக்கள், எவ்வாறு கூட்டமாக பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள், பின்னர் அங்கிருந்து அவர்களது வாழ்வியல் பயணம் எப்படித் தொடங்கிறது என்று கூறியிருப்பார்.. குப்புசாமியின் பேச்சும் அவரது அருந்ததியர் காலனியும் எனக்கு அதைத்தான் நினைவுபடுத்தின…

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:24 am

அந்தப்பகுதி முழுவதும் காலனிகள் சார்ந்த கடைகள்தான் ஏராளம்..அப்பகுதியில் உள்ள மக்களும் அந்த தொழில் சார்ந்து இயங்கும் மக்கள்தான்.

தனது சிறிய கடையில் அனைத்து மதக் கடவுள் படங்களுக்கு இடம் கொடுத்திருக்கும் குப்புசாமி கதை இதோ “ பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த அருந்ததியர் காலனிதான்…என் தாத்தா… என் அப்பா… எல்லோரும் இந்தத் தொழில்தான். ஆனா இப்போ என் பசங்க இந்த வேலையப் பாக்குறது இல்ல… முதல்ல இந்தத் தொழில இங்க இருக்குற 90% பேர் செஞ்சாங்க…இப்போ 25% பேர் செய்றது கூட இல்ல. குறைஞ்சுபோச்சு. என்று உற்சாகமாக ஆரம்பித்தவரின் குரல் சற்று நடுங்கியது.

தொடர்ந்து பேசினார் குப்புசாமி..

இப்பலாம் இங்க நிறைய பிராண்டட் கம்பெனிங்க வந்திடுச்சு…சுமார் பத்து பேர் வேலை செஞ்ச கடைமா இது. பொருளாதார சூழல்... இப்போ இரண்டு பேர்தான் இருக்கோம். சரி கடையை எப்படியாவது பெரிசுபடுத்த பேங்க்ல லோன் கேட்டா, தர முடியாதுன்னு சொன்னாக் கூட பரவாயில்ல. ஆனா லோனும் தராம அலையவிடுறாங்க. இதன் காரணமா இங்கிருக்கும் பலர் இந்தத் தொழிலையே கைவிட்டுட்டாங்க.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:26 am

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 KOK6pPoyRI219I8XLxoy+kuppupng


அருந்ததியர் காலனி (இடது படம்), குப்புசாமி



நமது பிரதமர் மோடி சொல்லிக்கிட்டுதான் இருக்காரு. ஆனா ஒண்ணும் செஞ்சபாட்டைக் காணோம். சொல்லப் போனால் இங்க இருக்கிற கம்பெனிகளைத் தூக்கி அம்பத்தூர்ல கொண்டு போயிட்டாங்க. இதுல பாதி பேர் வேலையவே இழந்துட்டாங்க.

இருந்தாலும் எங்களத் தேடி வரவங்க வந்துட்டுத்தான் இருங்காங்க என்று அவர் கூறி முடிப்பதற்கு முன்னதாக, பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில்,” என்ன அண்ணா ரெடியா என்றார். குப்புசாமியோ, ’பாய் தங்கச்சி ஒரு மணி நேரம் டைம் கொடு’ என்று கூற, அவரும் அங்கிருந்து தலையை ஆட்டியபடி சென்றுவிட்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:28 am

பாத்தீங்களா...இந்த மாதிரி தேடி வந்து ஆர்டர் கொடுக்குற ஜனங்க இன்னும் இருக்காங்க. அவங்கள நம்பித்தான் ஓட்டிட்டு இருக்கோம். 12 , 13 சைஸ்ல பெரிய பெரிய ஷூக்கள் ஆர்டர் கொடுப்பாங்க. விபத்துல கால் இழந்தவங்களுக்குத் தேவையான ஷூக்களையும் செஞ்சு தருகிறேன்… என்னிடம் இந்த பிராண்டட் கம்பெனிகளைவிட தரமாத் தர முடியும். ஆனால் அதை நம்பறதுக்கு ஜனங்க தயாரா இல்ல. அவங்களா கண்ணாடிப் பெட்டிக்குள்ள வைச்சு வித்தக் காட்டுறதுல பழகிட்டாங்க. அதனால எங்கள நம்பமாட்டாங்க. இருந்தாலும் நான் இருக்கிற வரை இந்தத் தொழில விடமாட்டேன் இது எங்களோட அடையாளம்” என்று மீண்டு அந்த நீண்ட ஊசியை எடுத்து தைக்க ஆரம்பித்தார். நான் அங்கிருந்து விடைபெற்றேன்…
ஆடுகளம்’ திரைப்படத்தில் மதுரையில் ஆங்கிலோ இந்தியர்கள் மட்டும் வசிக்கும் பகுதியை காட்டியிருப்பார்கள் அதேபோன்று பெரம்பூரில் ஆங்கிலோ இந்தியர்கள் வசிக்கும் திருவள்ளுர் சாலை உள்ளது.

பட்டாளம், புளியந்தோப்பு என்று பெரம்பூர் பகுதிகளை குட்டி குட்டி தொழில் நிறுவனங்களை நாம் பார்க்கலாம். இம்மக்கள் நிறுவனங்களில் வேலை செய்வதைக் காட்டிலும் சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் என்றே அதிகம் விரும்புகிறார்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:28 am

குறைந்த ஊதியம் பெற்றாலும் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்று விரும்பும் கூட்டம் அங்கு இன்று காணப்படுகிறது.. அந்தக் கூட்டம் கம்ப்யூட்டருக்கு முன்னும், இணையத்துக்கும் முன்பு அடிமையாகாத கூட்டம்.

எனினும் அவர்களுள் சிலர் யதார்த்தங்களை சந்தித்து தானே ஆக வேண்டும். அருந்ததியர் நகரில் அறிமுமான குப்புசாமியின் மூன்று குழந்தைகளுக்கும் அவரது தொழிலைச் செய்வதற்கு விருப்பமும் இல்லை. குப்புசாமியும் அதனை விரும்பவும் இல்லை. இவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த தலைமுறைகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்!

வடசென்னையிலிருந்து சற்று வெளியேறி பிற பகுதி மக்களுக்கு அறிமுகமாகும்போது ஏதோவித சிறு வேறுபாட்டை உணர்ந்திருக்கிறேன் என்கிறார் சுரேஷ் ,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:31 am

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் - Page 2 ZAzkDy9hRQuBagXzXMf5+hjpg

சென்னை பல்கலைழக ஆய்வு மாணவர் சுரேஷ்

சென்னை... என்னுடைய சிறுவயதில் எல்லோரும் பொது என்ற எண்ணம் நான் வளர்ந்த சூழ் நிலையாலோ அல்லது என்னைச் சுற்றியிருந்த மக்களாலோ எனக்குள்ளே புகுந்திருந்தது. ஆனால் நான் எனது பள்ளிப்படிப்பை முடித்து , கல்லூரிக்காக வடசென்னையிலிருந்து வெளியே செல்லும்போதும் ஒவ்வொரு மனிதரைச் சந்திக்கும்போதும் ஒரு சிறிய வேறுபாட்டை உணர்ந்தேன். எனது கல்லூரியின் இறுதி ஆண்டில்தான் வகுப்பு நண்பர்கள் சிலர் என்னிடம் பழகுவதற்கும், அவர்களே பிறரிடம் பழகுவதற்கும் உள்ள வேறுபாட்டை என்னால் அறிய முடிந்தது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:31 am

எனது பொருளாதாரத்தைத் தாண்டி எனது உடை, மொழி அனைத்திலும் என்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தார்கள். நிஜம் வேறு என்பதை உணர்ந்தேன். நம்மைப் பற்றி இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொய் பிம்பத்தை உணர்ந்தேன்.. இங்கு அனைவரும் பொது அல்ல. இங்கு வேறுபாடுகள் உள்ளன. எனது மொழிசார்ந்து அவர்களிடமிருந்து வேறுபடுவதாக அவர்கள் கூறினார்கள். நானும் பல தருணங்களில் எனது மொழி நடையை மாற்ற முயற்சிப்பேன். .ஆனால் அதை மீறி என் மொழி வந்துவிடும். அது இயல்பு தானே. ஒருமுறை ரேடியோவில் நாடகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அதன் இயக்குனர் என்னை சாதாரணமான தமிழில் பேசும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்கள் எனது மொழி நடையை ஏற்க விரும்பவில்லை. அவர் என்னுடய மொழி நடை நேயர்களிடம் தொடர்புப்படுத்திக் கொள்ளாமல் போய்விடும் என்று திரும்பத் திரும்பக் கூறினார். அவரது பேச்சு எனக்கு சிறிய நெருடலை ஏற்படுத்தியது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:33 am

இதில் என்ன வேடிக்கை என்றால் வடசென்னையிலுள்ள குட்டி குட்டி பெட்டிக்கடைகளில்தான் இவர்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக நான் எனது மொழி நடையை மாற்றி அந்த நாடகத்துக்கான டப்பிங்கை முடித்தேன். ஆனால் தற்போது நான் பக்குவப்பட்டிருக்கிறேன். இடத்திற்கேற்றப்படி பேச கற்றுக் கொண்டேன். என் தலைமுறை சற்றே மாறி இருக்கிறது . நாங்கள் இடத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள கற்றுக் கொண்டுவிட்டோம். எங்கள் நகரத்தின் மீதான பொய் பிம்பத்தை உடைத்திருக்கிறோம். ஏனெனில் நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஆனால் தற்போது பல இடங்களில் வட்டார மொழிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பதை நான் மறுக்கவில்லை. நமது அடிப்படைக் கல்வி உள்ள குறையினால் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாமல் உள்ளது.

பண்பாட்டு ரீதியிலான கல்விதான் தேவையானது என்று என் துறைத் தலைவர் கூறுவார். நாம் என்ன பண்பாடோ அதைச் சார்ந்துதான் இயங்க வேண்டும். ஆனால் நாம் அதை அடைவதற்கான காலம் இன்னும் தூரம் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக