ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான எருமை மாடுகள்

+3
SK
SALINI
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அருமையான எருமை மாடுகள் Empty அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:28 am

அருமையான எருமை மாடுகள் Qy5ZbG8TS4i5xGn80XXC+erumaijpg


விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.


இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:29 am

வெண்மைப் புரட்சி

ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.

பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.

எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:30 am

பிற மாட்டு இனங்களைப் போல எருமை வளர்ப்புக்குத் தனிப்பட்ட கவனிப்போ செலவோ தேவையில்லை. நீண்ட கொம்புகளுடன், கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு ஆற்றல் அதிகம். எனவே, நோய் தாக்கினாலும், அவை எளிதில் மரணமடையாது. தனிப்பட்ட தீவனங்களும் தேவையில்லை. அவிழ்த்துவிட்டால் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, சாதுவாக வீடு திரும்பிவந்து, பால் கறக்கும் தன்மை கொண்டவை.

“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:31 am

மேலும், எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும் எனச் சொல்கிறார் அவர்.

ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:33 am

சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by SALINI Thu Dec 13, 2018 4:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1288292
அருமையான எருமை மாடுகள் 1f600 அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில் அருமையான எருமை மாடுகள் 1f600
SALINI
SALINI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by SK Thu Dec 13, 2018 7:10 pm

எறுமையான பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by T.N.Balasubramanian Thu Dec 13, 2018 7:58 pm

SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 8:37 pm

SALINI wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1288292
அருமையான எருமை மாடுகள் 1f600 அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில் அருமையான எருமை மாடுகள் 1f600
மேற்கோள் செய்த பதிவு: 1288342
நன்றி சாலினி.
நீங்கள் கூறுவது உண்மை கிராமங்களில்
இன்றும் பலரின் வாழ்வாதாரமே இந்த மாடு
வளர்ப்பே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 8:39 pm

SK wrote:எறுமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1288354

இந்த எருமை பலருக்கும் ஏறு-மையமாக
உள்ளது நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அருமையான எருமை மாடுகள் Empty Re: அருமையான எருமை மாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum