Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
+3
T.N.Balasubramanian
ayyasamy ram
Pranav Jain
7 posters
Page 1 of 1
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
தற்போது ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பலரும் உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மன்ப்பூர்வமான நன்றிகள்...
ஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும்? அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன? என்று ஒருசில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.
மேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள்? இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா? என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....
உதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன? ஒட்டாமல் வழங்கினால் என்ன? ஆபத்து நேரங்களில் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும்? இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள்? இதில் என்ன தவறு இருக்கிறது? உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா?... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா?
அவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே? சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா? அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும்? அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்?...
எனவே அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...
எனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும், நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்!!
- எழுத்ததிகாரன்.

Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
@PRANAV JAIN
எப்போதுமே உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான்.பதிவுகள் ஜனரஞ்சகமாக இருக்கிறதோ இல்லையோ மனோரஞ்சகமாக இருக்கும். கூறவேண்டிய விஷயங்களை எடுத்துக்கூறும் விதம் போற்றத்தக்கதாகவே இருக்கும்.
ஆனால் இன்றைய தலைப்பு ( உளறிக் கொட்டா...... ) ஏன் கடுமையாக உள்ளது?
அன்றும் ஜெயலலிதா ஆட்சியில் ஸ்டிக்கர் கலாச்சாரத்தை எதிர்த்தவர்களும் இன்று அதையேதான் செய்கிறார்கள். ஒரு வேளை அன்று ஆதரித்தவர்கள் இன்று எதிர்கிறார்களோ?
ஊடகங்கள் வசதியாக உள்ளன. நினைப்பவர்கள் நினைப்பதை எழுத்தில் வடிவம் கொடுக்கிறார்கள்.
ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டால் உலக வங்கி கூட பண உதவி செய்கிறது.அது நேரிடையாக அந்தந்த இடத்திற்கு வந்து மக்களுக்கு உதவியா செய்கிறது? அரசாங்கம் மூலமாகவோ /செஞ்சிலுவை மூலமாகத்தான் செய்கிறது. Being channelised .
இதை இங்கு உதாரணமாக காட்டுவது சரியாகாது என்றே என் மனதில் படுகிறது.மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்....
அது ஒரு அங்கீகாரம் .அந்த சேனல் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம். விளம்பரம் இல்லை.
எந்த ஒரு விஷயத்தையும் சார்ந்தோ எதிர்த்தோ பகிர்வது அவரவர் விருப்பம் அல்லவா?
சினிமா என்றால் ஒரு இளகிய மனது.
மேலே கூறியவை எந்தன் கருத்துக்கள்தான்.
தொடர்ந்து எழுதுங்கள் Pranav.
இரவில் நெடுநேரம் (2.10 am ) கண் விழித்து எழுதாமல் உடல் நலம் பேணவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
மற்றவர்கள் பற்றி பிரச்னையில்லை. ஆனால், மக்களின் வரிப் பணத்தையும் மற்றவர்கள் கொடுத்த நன்கொடைகளையும் கொண்டு செய்யும் நிவாரணப் பணிகளுக்கு அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது எல்லாம் சரியல்ல... தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...
jayanila- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 22/11/2018
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
jayanila wrote: தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...
நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரியே. ஆனால் உலகம் எல்லாம் தான்தான்,
என்னால்தான் ஆகிறது என்ற பகட்டில் தான் குளிர் காய விரும்புகிறது.
ஆமாம் நீங்கள் ஈகரையில் இணைந்து 15 நாட்கள் ஆகிவிட்டனவே. வாழ்த்துகள்.
அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களை பற்றிய
மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
விளம்பர நாடாகிப்போச்சுங்க ...விளம்பரத்தை விளம்பரம் செய்து சிலர்
காலம் கழிக்கிறாங்களே. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலமேதான் ...
காலம் கழிக்கிறாங்களே. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலமேதான் ...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
மேற்கோள் செய்த பதிவு: 1287943M.Jagadeesan wrote:வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
அருமையான பதிவு கருத்துக்கள்
வாழ்த்துக்கள் ஜெகதீஸ் நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!
ஜெகதீஸ் என பதிவுசெய்தால் சிறப்பாய் இருக்குமே...ஈகரை தமிழல்லவா இது. நிறைய பேர் தெரிந்து கொள்ளாமலே>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum