Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
+4
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
ஞானமுருகன்
ANUBAMA KARTHIK
8 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
First topic message reminder :
யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-7
எனக்கு பிடித்த கவிதை கோபம் இருந்தால் திட்டிவிடு
ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு
மௌனத்தை விட்டு விடு
என்னிடம் நீ பேசிவிடு
மாதாந்திர மருத்துவ பரிசோதனை நாளும் வந்தது மாலதியை பரிசோதித்த மருத்துவரின் முகம் சற்றே ஒர் நொடி தயங்கி பின் சீரானது
அன்றைக்கு எல்லாம் சரியாக இருப்பதாக சொல்லி அனுப்பிய மருத்துவர்
பின்னர் நாராயணனை சந்தித்து மாலதியின் உடல்மிகவும் பலவீனமானது என்றும் குழந்தை பிறக்கும் வரை மிகுந்த கவனத்துடன் பராமரிக்குமாறும் சொன்னார்
மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்தது முதலே மைத்துனரின் முகம் சரியில்லாது இருந்ததை கவனித்து வந்த பார்வதி நாராயணனை தனியே அழைத்து விபரம் கேட்டார்
தன் மனைவியின் உடல் நிலையை மருத்துவர் சொன்னதிலிருந்தே மனைவியின் உடல் நலம் குறித்து கவலை கொண்டிருந்த நாராயணன் அண்ணியிடம் தன் கவலை குறித்து பகிர்ந்து கொண்டார்
பின்னர் இது மாலதிக்கு தெரிய வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் இவர்கள் பேசிக்கொண்டதை மாலதியும் கேட்டு கொண்டிருந்ததை பாவம் இருவரும் அறியவில்லை
அன்றிரவு தன் கவலையை கணவரிடம் பகிர்ந்து கொண்ட பார்வதி அப்போது முதல் மாலதியை பிடித்த சத்தான உணவு முறையான கவனிப்பு என்று ஒரு அன்னையெனவே மடிதாங்கினார்
மறு மாதம் பரிசோதனை முடிவுகள் ஓரளவு முன்னேற்றம் காட்டினாலும் மருத்துவரின் எச்சரிக்கையால் வீட்டில் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்ளப்பட்டாள் மாலதி
நாராயணன் ஆசை பட்டவற்றையெல்லாம் வாங்கி தர பாஸ்கரோ மாலதியை விட்டு நகர்வதே இல்லை
ஒரு படிமேல் போய் ஈஸ்வரனோ வளைகாப்பு செய்ய தன் தம்பியின் மாமியாருக்கு தகவல் சொல்ல நினைத்தார்
மாலதி பிடிவாதமாக மறுத்து விட தம்பி மனைவியின் மனம் கோணக்கூடாது என்று தற்காலிகமாக தன் யோசனையை தள்ளி வைத்தார்
பின் மாலதிக்கு தாங்களே தந்தையும் தாயுமாய் நின்று வளைகாப்பு செய்தனர் ஈஸ்வரன் தம்பதி
தன்னை தாங்கும் புகுந்த வீட்டு உறவுகளின் பிரியத்தால் மகிழ்ச்சியில் திளைத்தாள் மாலதி
இந்த மகிழ்ச்சி நீடிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்-(தொடரும்)
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
அட பாவமே!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-8
எனக்கு பிடித்த கவிதை
தெய்வத்தை தேடி சென்றேன்
தாயிடம் கண்டு நின்றேன்
தாயை இழந்த போதோ
தனிமை துயர் கொண்டேன்
தெய்வம் தந்த வரமென
நீ கிடைத்த நேரத்தில்
என் தாயெனவே உன்னை கண்டேன்
மகளே நீ வாழியவே
நள்ளிரவு நேரம் எதிர் பாராது கொட்டித்தீர்க்கும் மழையால் ஊரே மயான அமைதியில் இருந்தது மழையின் தாக்கத்தால் பாஸ்கர் காய்ச்சலில் அழுது தீர்த்தார் அவனை சமாதான படுத்தி உறங்க வைத்து விட்டு குழந்தை பிறக்க இன்னமும் கொஞ்ச நாட்கள் ஆகுமென மருத்துவர்கள் சொன்னதால் உறவில் நேர்ந்த ஒரு துக்க நிகழ்வுக்காக வெளியூர் சென்றிந்த தங்கள் கணவர்கள் ஒழுங்காய் ஊர் திரும்பவேண்டியது குறித்த கவலையோடு உறங்க சென்றார் பார்வதி
மழை பெய்வதும் மகவு பிறப்பதும் மகேசன் செயல் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கேற்ப்ப நடுநிசி நேரத்தில் பிரசவ வலி கண்டு துடிதுடித்தார் மாலதி
செய்வதறியாது பார்வதி திகைத்தது ஒரு சில கணங்களே பின்னர் இயல்பான தைரியத்துடன் வீட்டு வேலை ஆட்களின் உதவியுடன் மாலதியை மருத்துவ மனையில் அனுமதித்து விட்டார் பாஸ்கரையும் தன்னுடன் வைத்து கொண்டார்
கணவருக்கும் மைத்துனர்க்கும் தகவல் சொல்லிவிட்டு அவர்களின் வருகைக்காகவும் மாலதிக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டியும் இறைவனை பிரார்த்தித்தபடி மருத்துவமனை வராண்டாவிலேயே இருந்தார் அந்த மாதரசிபொழுது விடியும் வேளை பூக்குவியலென பிறப்பெடுத்தாள் லக்ஷ்மி செய்தி கேட்டு பதறி அலையகுலைய ஓடி வந்த ஈஸ்வரனுக்கும் நாரயணனுக்கும் மகள் பிறந்த செய்தி மகிழ்ச்சியை தந்தது
மனைவி அபாய கட்டத்தை தாண்டும் வரை உயிரை விழியில் தேக்கி மருத்துவமனையிலேயே காத்திருந்தார் நாரயணன்
ஈஸ்வரனுக்கோ தங்கள் மகளின் உருவில் தங்களை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை
அபாயக்கட்டம் தாண்டி கண் விழித்த மாலதி கண்டது கலைந்த தலையுடன் கவலைதோய்ந்த முகத்துடனும் கண்களில் தவிப்போடும் கண்ணீரோடும் இருந்த கணவனைதாங்க
அக்கணம் தன்மீது கணவர்கொண்ட காதலை அறிந்த மாலதிக்கு உலகையே வென்ற பெருமிதம் ஏற்ப்பட்டது
தன் குழந்தையை பார்க்கவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த அந்த மோன நிலையை கலைத்தது சிசுவின் அழுகுரல்
ஆம் அங்கே வந்த செவிலித்தாயின் கைகளில் பசிக்கு அழுது கொண்டிருந்தாள் லக்ஷ்மி .
-(தொடரும்)

அத்தியாயம்-9
எனக்கு பிடித்த கவிதை
காத்திருந்த வேளையிலே கண்ணிமைக்கும் நொடியினிலே
மின்னலென தோன்றியவளே உனைத்தேடி நான் திரிகையிலே
என் இதயம் கண்டுகொண்டேன் பூ மயிலே
அஞ்சுகமே ஒருமுறை உனைக் காணஎன் நெஞ்சம் விரும்புதடி
தென்றலென தீண்டுவாயா? தீயெனவே எரிப்பாயா?
என் நேசம் அறிகையிலே
எதிர்பாராது பெய்த மழை விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியது தண்ணீர் இன்றி வாடிய பயிர் எல்லாம் தளதளவென வளர்ந்து நிற்க அதை விட ஒரு விவசாயி வாழ்வில் மகிழ்வான தருணம் இருக்க முடியுமா சொல்லுங்க
மகள் பிறந்த மகிழ்ச்சியோடு மழை கொடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள கூலி ஆட்களுக்கு பணம் புதுத்துணிகள் அப்படினு பரிசு கொடுத்து கொண்டடினார் நாராயணன்
அட அவர் தான் அப்படினா நம்ம ஈஸ்வரன் போய் நின்ன இடம் மதுரையின் பிரபலமான நகைக்கடைங்க அன்னைக்கு அவங்க நகை கடையில போட்ட பெரிய பில் நம்ம ஈஸ்வரன் வாங்கினதுதான்
தன் சேமிப்புல பெரும் பகுதிய பொண்ணுக்கு நகையா வாங்குனாரு கூட போன நாராயணனே கைலகால பிடிச்சு தடுக்கற அளவுக்கு போயிடுச்சு நா பாத்துக்கங்களேன்
அப்படி அவங்களுக்குள்ள நடந்த வாக்குவாதம் வேண்டாத ஒருத்தன் கவனத்துலேயும் பட்டுச்சு நகைய விக்க வந்த அவன் கவனிச்சது நம்ம நாராயணனத்தான்
பொதுவுல நம்ம பெரியவங்க பகல் ல பக்கம் பாத்து பேசு இரவுல அதயும் பேசதேயினு சொல்லுவாங்க ஏன் தெரியுமா நம்ம உணர்ச்சி வேகத்துல பேசுறது ஏதாவது வேண்டாதவங்க காதுல விழுந்து அதனால சிக்கல் வந்துட கூடாது அப்படிங்கற முன்னெச்சரிக்கை தாங்க
நகைகளுடன் ஊர் திரும்பிய ஈஸ்வரன் சகோதரனை உரம் வாங்க மதுரையிலேயே நிறுத்தி வைத்தது அவர் நேரம்னு தாங்க சொல்லணும்
யாரும் அறியாமல் ஈஸ்வரனை நகைக்கடையிலிருந்து பின் தொடர்ந்த அவ்வுருவம் அவரது ஊரையும் அவருடைய செல்வாக்கையும் பணவசதியயும் நோட்டமிட்டது
பாலுக்காக அழுத லக்ஷ்மிக்கு பசியாற்றி விட்டு யதேச்சையாக ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்த மாலதி மறைந்திருந்து வீட்டை நோட்டம் பார்த்து கொண்டிருந்த அவ்வுருவத்தை கண்டு அதிர்ந்து போனார்
மாலதி பார்த்ததை கண்ட அவனும் அவ்விடத்தை விட்டு உடனே சென்று விட்டான் முதலில் தான் கண்டது கனவா?நிஜமா? என்று குழம்பிய மாலதி லக்ஷ்மியின் சிணுங்கலில் தன்னை மறந்து குழந்தையை கவனிக்க போனாள்பிறகோ ஈஸ்வரனின் உற்சாக குரலிலும் கணவர் வர நேரமாகும் என்ற தகவலிலும் அவனைப் பற்றி மறந்தே போனார்
ஊர் பஸ் நிறுத்ததுக்கு இருள் கவியும் நேரத்தில் வந்த அவன் பஸ் ஏறும் முன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன் மாலதியின் சகோதரன் சுந்தரம் சிற்றன்னையின் மகன் கெட்ட சகவாசத்தினால் தங்கள் தகப்பன் சேர்த்து வைத்து இருந்த பணத்தை அழித்தான் தாயின் நகைகளையும் விற்று சூதாட முனைந்தான்
மாலதியின் சிற்றன்னைக்கோ மகனை குற்றம் சொல்வது பிடிக்காது அதை விட மூத்தாள் மகளை தகப்பன் படிக்க வைப்பது அதற்க்காக செலவு செய்தது துளியும் பிடிக்கவில்லை மாலதியின் பிடிவாதமாய் அவர் தந்தையிடம் அடம் பிடித்து படிக்க வந்தாள் மாலதியின் திருமணத்துக்கு கொஞ்சமாதங்களுக்கு முன்னரே அவர் தந்தை இறைவனடி சேர்ந்திருந்தார்
அதன் பின் மாலதி பகுதி நேர வேலை செய்தே படித்து வந்தாள் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை வீட்டில் கொடுத்து விடுவதால் பெரும்பாலும் பண பிரச்சனை எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்
திடீரென மாலதியின் திருமணம் நடந்த போது அவளது புகுந்த வீட்டாரின் செல்வ வளம் பற்றி தெரியாததால் மாலதிக்கு எதுவும் செய்யாமலே கட்டிய புடவையுடன் வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்
இப்பொது தமக்கையுடன் எப்படி ஒட்டி கொள்ளாலாம் என் யோசித்த சுந்தரத்துக்கு குழந்தையின் பேர் சூட்டு விழா ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது நன்கு யோசித்து ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தினான் அதன் விளைவோ நினைத்து பார்க்க முடியாத படி இருந்தது
மிக சிறப்பாக பேர் சூட்டும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் ஈஸ்வரன் சகோதரர்கள் விழாவின் முந்தய நாள் இரவில் சொந்த பந்தங்களை கவனித்து கொண்டிருந்த பார்வதி வேலை மிகுதியாலும் மாலதி பச்சை உடம்பு என்பதாலும் சற்றே கவன குறைவாக இருந்த மாலை நேரம் பிள்ளைகளுடன் ஊர் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பாஸ்கர் காணாமல் போனான்
(இனி)

அத்தியாயம்-10
எனக்கு பிடித்த கவிதை
கூந்தல் பற்றி இழுக்கின்றாய்
நெற்றி திலகம் அழிக்கிறாய்
சற்றும் பயமின்றி என்னுடனே சபையினிலே
கன்னம் வைத்து இழைகின்றாய்
என்னவளே என் வாழ்வின் விடி வெள்ளியென
வந்தவளே என் மகளே இனி என்
வாழ்வில் எந்நாளும் திருநாளே
பாஸ்கர் காணாமல் போனது தெரிய வந்த நிமிடத்திலிருந்து அனைவரும் ஊர் முழுக்க சல்லடை போட்டு தேடினார்கள் சுந்தரம் தன் தோழர்களின் உதவியோடு பாஸ்கரை கடத்தினான் மறைவிடத்தில் மயக்கமடைய செய்து பின் அவன் போட்டிருந்த நகைகளை கழற்றிகொண்டு நகைக்காக நடந்த கடத்தல் போல சித்தரித்தான்
பின் பொழுது புலரும் நேரத்திலே மயக்கத்தில் இருந்த பாஸ்கரை தூக்கிக்கொண்டு அவர்கள் வீட்டை அடைந்தான் பாஸ்கரை கண்டு பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அனைவரும் ஒருமித்து போலிஸில் சொல்ல கிளம்பும் நேரம்
பாஸ்கருடன் வீட்டை அடந்தான் சுந்தரம் அங்கு பதறிய நெஞ்சுடன் வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரை அடைந்து பாஸ்கரை ஒப்படைத்து விட்டு அவர்களிடம் தான் மதுரையிலிருந்து வந்ததாகவும் காணாமல் போன தனது தமக்கை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு இங்கு வாழ்ந்து வருவதாகவும் அவளை கண்டு சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து செல்ல நினைத்து இங்கு வந்த போது பஸ் நிறுத்தம் அருகில் சிலர் நின்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் அவனை கண்டவுடன் குழந்தையை போட்டு விட்டு ஒடி விட்டதாகவும் குழந்தை மயக்கதில் இருந்ததால் விசாரித்து வந்ததாகவும் கதை புனைந்தான்
இதற்க்குள்ளே குழந்தை கிடைத்து விட்ட செய்தி கேட்டு வாசலுக்கு வந்த பார்வதி பாஸ்கரை அணைத்து உச்சி முகர்ந்தார் கூட வந்த மாலதியும் நாராயணனும் சுந்தரத்தை பார்த்து அதிர்ந்து நின்றனர் கிடைத்த வாய்ப்பில் அக்கா என்று அலறி பொய்யாக மயங்கி விழுந்தான் சுந்தரம்
சுந்தரம் மயக்கம் நீங்கி எழுந்து அழத் துவங்க மாலதியும் நாராயணனும் கூட அவன் திருந்தி விட்டதாகவே நம்பினர் வீடும் விழா கோலம் பூண்டது லக்ஷ்மியை பார்த்த சுந்தரத்தின் மனதிலும் பாசம் ஒரு கணம் வெளி வந்தது.
பின்னர் மாதங்கள் உருண்டோட குல தெய்வம் கோவில் திருவிழாவும் வர அங்கு வைத்து லக்ஷ்மிக்கு காதுகுத்தி முடி இறக்கவும் ஏற்பாடு செய்தனர்
தாய் மாமன் மடியில் அமர்த்தி முடி இறக்க ஏற்பாடும் செய்யப்பட்டது தன் சக்தியை மீறி கடன் வாங்கினான் சுந்தரம் அதை வைத்தே தனக்கு கடத்த உதவி செய்த நண்பர்களுக்கு பணம் கொடுத்து சமாளித்தான் இந்நிலையில் பணம் குடுத்தவர்கள் வீட்டையும் பொருட்களையும் ஜப்தி செய்து வெளியில் துரத்தினார் அப்போது அங்கே திருவிழாவுக்கு அழைக்க வந்த ஈஸ்வரன் தம்பதி அவர்களுக்கு ஆதரவு கொடுத்து தங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தனர்
குழந்தையின் காது குத்து நல்லபடி முடிந்தது சுந்தரத்தையும் அவனது தாயாரையும் தங்களுடன் ஒரே வீட்டில் வைத்துக் கொள்ள மாலதி ஓரேடியாக மறுத்துவிடவே அவர்களுக்கு தனிவீடு பார்த்து குடி வைக்க ஒரு நாள் முன்னதாக கிளம்பினர் நாராயணன் , மாலதி சுந்தரம் மற்றும் அவரது அன்னை கிளம்பும் போது லக்ஷ்மி காய்ச்சலால் மிகவும் அழவே தங்கள் வரும் போது அவளை அழைத்து வருவதாக கூறினார் பார்வதி
அதற்கு மாலதியோ அக்கா இனி அவ உங்க பொறுப்பு என கூறிவிட்டு கணவருடனும் சிற்றன்னை, தம்பியுடனும் , மகிழ்வுடன் கை ஆட்டி விட்டு சென்றார்
தொடரும்

அத்தியாயம்-11
எனக்கு பிடித்த கவிதை
சின்ன சின்ன அரும்பெடுத்து சிதறாமல் நான் தொடுத்தேன்
வண்ணமலர் மாலையென வடிவெடுத்த நேரத்தில்
வாசல் தேடி வந்தவனே என்னுயிரின் வாசமென நிலைத்தவனே
நீயின்றி ஒருநாளும் நிலைக்காது என்னுயிர் இனிதானே
உள்ளுணர்வு இறைவன் மனிதனுக்கு குடுத்திருக்கும் வரங்களில் இதுவும் ஒன்று நாம் பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து பேச சொல்லி பெரியவர்கள் சொல்வது அவை நம் எண்ணங்களின் வெளிப்பாடு என்பதால்தான்
மகிழ்வுடன் புறப்பட்ட மாலதியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் பார்வதியை துணுக்குற வைத்தன
இருந்தாலும் அவரும் மாலதியிடம் அதுகென்னமா இனி அவளை நாங்க பத்திரமா பாத்துக்கறோம் நீங்க முன்னாடி போங்க நாங்க ஒரளவு வேலைய முடிச்சிட்டு பின்னாடியே வரோம் என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்
கார் சென்று சிறிது நேரத்துக்கு பின் எதிர்காலம் குறித்த வண்ண கனவுகளுடன் ஆவலே வடிவாய் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நாராயணன்
நீ பாட்டுக்கு பால்குடி மாறாத பாப்பாவ அண்ணிக்கிட்ட விட்டுட்டு என்கூட வந்துட்டியே அவ்வளவு காதலா என்மேல? என்று கேட்டார்
அதற்கு மாலதியோ காதல் இல்லைங்க அதுக்கும் மேல
ஒரு உதாரணத்துக்கு சொல்லட்டுமா இப்போ மரணம் வந்தா கூட உங்களை விட்டு என்னால பிரிய முடியாதுங்க என்றாள்
அவளின் உணர்வு பூர்வமான பதிலில் காரில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்
ஆம் அங்கு அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த காலனும் கூட அவர்களின் காதலை கண்டு வியந்து போனான்
காரை ஓட்டிக் கொண்டிருந்த நாராயணன் இந்த பதிலால் கவனம் சிதறிய ஒரு நிமிடத்தில் காலன் அவன் கடமையையும் முடித்துவிட்டான்
கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி காலனுக்கு உதவி செய்தது விபத்து நடந்த இடத்திலேயே நாராயணன் உயிரிழக்க அவருக்கு முன் தன் உயிரை துறந்து மேலுலகம் சென்று அவருக்காக காத்திருந்தாள் மாலதி
பின்னிருக்கையில் அமர்ந்திருந்தால் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட சுந்தரமும் அவன் அன்னையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்
விஷயத்தை கேள்விப்பட்ட ஈஸ்வரனோ ஒருகணம் இறந்து பிழைத்தார். பொய்யாக இருக்க கூடாதா? என்ற வேண்டுதலுடன் மருத்துவமனைக்கு வந்த ஈஸ்வரன் தம்பதியை காவல் அதிகாரிகளும் மருத்துவரும் அழைத்து சென்று காட்டியபோது தன் தம்பியயும் அவன் மனைவியயும் சடலங்களாக கண்டதிலேயே பாதிஉயிராகி போனார்
நிலை குலைந்த அவரிடம் மெல்ல சுற்றி இருந்தவர்கள் தேற்றி ஆபத்தான கட்டத்தில் இருக்கும் இருவரை பற்றியும் கூறினார்கள்
அங்கு அவரை பார்க்கவென்றே இருந்தது போல் ஊசலாடிக் கொண்டிருந்த சுந்தரத்தின் அன்னை உயிர் தன் மகனை ஈஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றது
சொந்த பந்தங்களின் உதவியோடு இறுதி சடங்கை முறைப்படி நிறைவேற்றிய ஈஸ்வரன்
ஊசலாடும் சுந்தரத்தை காக்கவேண்டி இறையிடம் முறையிட்டார் காலன் அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பானா? சுந்தரம் பிழைப்பானா? வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்
(தொடரும்)

அத்தியாயம்-12
எனக்கு பிடித்த கவிதை
மௌனத்தால் பேசிவிடும் மணிவிழிகள்
வெளிவிடும் நீர்துளிகள் உன் மொழியோ
கண்ணே கண்ணீர் நீ சிந்துகையில்
கங்கையும் வற்றிபோகும் இப்புவியில்
பெண்ணே பேரழகே பிள்ளை கனியமுதே
உன் சிரிப்பை காண்கயிலே உலகமே மறக்குதடி
இறுதி காரியங்கள் நிறைவேறியது சுந்தரம் சுயநினைவின்றி இருந்ததால் அவர் அன்னைக்கு செய்ய வேண்டிய மரியாதையையும் ஈஸ்வரனே முன்னின்று முடித்து வைத்தார்
நாட்கள் உருண்டோடிய நிலையில் ஆபத்து கட்டம் தாண்டி உயிர் பிழைத்தான் சுந்தரம் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கை துவங்கியது
மனம் திருந்திய சுந்தரம் ஈஸ்வரன் குடும்பத்தில் ஒரு அங்கமானார் விபத்தில் உயிர் நிலையில் பட்ட அடியால் இல்வாழ்வையும் துறந்தார் ஒரே நாளில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பால் தொய்ந்து போன ஈஸ்வரனுக்கு உதவியாய் தொழிலிலும் கை கொடுத்தான்
மாதங்கள் ஓடின சுந்தரத்தின் பழைய நண்பர்கள் அவனுடைய இந்த திடீர் மாற்றத்தை விரும்பவில்லை அவனுடைய பழைய வாழ்க்கைமுறை சிக்கலை கொடுத்தது
சிக்கலை சமாளிக்க வேறுவழியின்றி பணத்தை கையாடல் செய்ய ஆரம்பித்தான்
சுந்தரத்தின் நண்பர்கள் அவனை பணம் காய்க்கும் மரமாகவே பயன்படுத்தினர் காலமாற்றத்தினால் கிராமம் டவுன் ஆக மாற்றம் பெற்றது பாஸ்கரும் லக்ஷ்மியும் பள்ளி சென்று வரத்துவங்கினார் அவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் வேலை சுந்தரத்துடையது ஆயிற்று
இன்னிலையில் சுந்தரத்தின் நண்பர்கள் மொத்தமாக பணம் கேட்டு கொண்டிருந்தனர் கொடுக்காவிட்டால் பாஸ்கர் லக்ஷ்மி இருவரையும் கொன்று விடுவதாக சுந்தரத்தை மிரட்டினர்
ஒரு கட்டத்தில் அவர்கள் தொந்தரவு அளவுக்கு அதிகமாக போகவே சுந்தரம் பயந்து நடுங்க ஆரம்பித்தான் பணம் கையாடவும் வழி இன்றி ஈஸ்வரன் சுந்தரத்தை கட்டுபடுத்த ஆரம்பித்தார்
இதற்க்கு ஒரே தீர்வாக நினைத்து சுந்தரம் தனது நண்பர்களை கொன்று விட்டு போலிஸில் சரணடைந்தான் சிறைக்கு பார்க்க வந்த பார்வதியிடமும் ஈஸ்வரனிடமும் உண்மையை சொல்லி மன்னிப்பு வேண்டினான் நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கபட்டது அவனுக்கு
தன் சகோதரனை இழந்த துக்கத்திலும் சுந்தரத்தின் கையாடல்களாலும் பருவ மழை பொய்த்ததாலும் எற்பட்ட சரிவிலும் மனம் ஒடிந்து போன ஈஸ்வரன் சிலவருடங்களில் காலமாகிவிட அவர் காலமான அந்நாளிலேயே பார்வதியும் துக்கம் தாங்காது உயிர்விட்டார்
ஒரளவு வளர்ந்து வாலிப வயதில் இருந்த பாஸ்கருக்கு பதின்ம வயதில் இருந்த தங்கையை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்தது
உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் தன் தூரத்து உறவுக்கார பெண்ணான சாரதாவை திருமணம் செய்ய நிச்சயித்தார் இளம் வயது அயராத உழைப்பு கூரிய அறிவு என சகலவித தகுதிகளும் இருந்ததால் வேறு ஒருவனை காதலித்து கொண்டிருந்த சாரதாவை அவளது பெற்றோர் திருமணத்திற்க்கு மிரட்டி சம்மதிக்க வைத்தனர் சாரதாவோ மணமேடை வரவேண்டிய நேரத்தில் தன் காதலனுடன் கம்பி நீட்டி விட்டாள்

அத்தியாயம்-13
எனக்கு பிடித்த கவிதைகரங்கள் நீட்டி வரங்கள் கேட்டேன்
கடவுள் கண் முன்னே வந்த போது
கேட்க்கும் வரம் யாதென வினவினான்
இறவா வரம் கொடு இறைவா என்றேன்
இயலாத வரம் கேட்கும் மனிதா
உபாயம் ஒன்று கூறுகிறேன் கேளடா
ஆங்கோர் எழைக்கு எழுத்தறிவித்தல் என்ற
ஆன்றோர் வாக்கை அடியொற்றி நடத்தலே
அருமையான வழியென காட்டி சென்றான்
மணமேடையில் மாப்பிள்ளை கோலத்தில் செய்வதறியாது திகைத்து நின்றார் பாஸ்கர் .
சாரதாவை பெற்றவர்கள் அவமானத்தில் கூனி குறுகி நின்றனர் சிறிது நேரத்தில் நிதானித்த அவள் பெற்றோர் சாரதாவின் தங்கை ப்ரபாவை மணம் முடித்து கொடுக்க முடிவெடுத்தனர்
ஆனால் பாஸ்கரோ தான் ப்ரபாவிடம் பேசிய பிறகே முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டார் ப்ரபா பேச போகும் முன்னர் அவள் அம்மாவிடம் அக்கா மாதிரி எனக்கு காதல் அப்படினு எதுவும் இல்ல ஆனா கொஞ்சம் மேல படிக்க ஆசை இருக்குது பீளீஸ் அதனால கொஞ்ச நாள் கழித்து என் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் என்றாள்
அதற்கு அவளிடம் இந்த பாரு ப்ரபா உங்க அக்கா செஞ்ச வேலையால எங்களால வெளில தலை காட்ட முடியல மேற்கொண்டு மாப்பிள்ளைக்கு அவமானம் வேற இதுல அவர் கேக்குறாரேனு தான் உன்னை தனியா பேச அனுப்புறோம் நீ எதாவது ஏடாகூடம் பேசி கல்யாணம் நின்னதுனு வெச்சிக்க அப்புறம் எங்கள நீ உயிரோடவே பாக்கமுடியாது என்று சொல்லி அனுப்பினர் அவள் பெற்றோர்
ப்ரபாவும் பாஸ்கரும் சத்திரத்தின் ஒரு அறையில் தனித்து பேச அனுப்பபட்டனர்
தனித்து அறையில் விடப்பட்ட இருவரும் யார் முதலில் பேசுவது என்று தயங்கியபடியே நின்றனர் வெகு நேரம் சென்ற பின்னர் பேச ஆரம்பித்த பாஸ்கர் முதலில் ப்ரபாவின் சம்மதத்தை கேட்டான்
அவளோ தன் பெற்றோரை நினைத்து பயந்தபடி இருக்க அவளும் யாரையாவது காதலிக்கிறாளா? எனக் கேட்டான் இல்லை என்று தலை ஆட்டிய ப்ரபா மேலே பேசத்துவங்கும் முன் வெளியே சளசளவென பேச்சு குரல்கள் கேட்க பொறுமை இழந்த பாஸ்கர் மறுபடியும் சற்றே குரலை தூக்கி ப்ரபாவின் சம்மதத்தை கேட்டான்
இயற்கையிலே பயந்த சுபாவம் உள்ளவளாகையால் தன் பெற்றோரின் மிரட்டலை நினைத்து திருமணத்துக்கு சம்மதித்தாள். கல்யாண வீடு களைகட்டியது திருமணமும் இனிதே நிறைந்தது தன் மானத்தை காப்பாற்றிய மகளின் செயலால் மகிழ்ந்தனர் ப்ரபாவின் பெற்றோர்
ஆனால் மணமக்களோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மததித்தாலும் அதற்க்கு முன் ப்ரபாவின் முகத்தில் தெரிந்த பயம் பாஸ்கரை யோசிக்க வைத்தது
திடீர் திருமணத்தால் தன் ஆசைகள் நிறைவேறாது போனதால் எழுந்த கலக்கம் ப்ரபாவை குழப்பத்தில் ஆழ்த்தியது
சத்திரத்தை அன்றே காலி செய்யவேண்டி இருந்ததாலும் எதிர் பாராது ஏற்ப்பட்ட மாறுதலாலும் ப்ரபாவின் வீட்டில் அன்று ஏற்பாடு செய்திருந்த முதலிரவை கொண்டாட பாஸ்கர் மறுத்து அந்த சடங்கை நாங்க எங்க வீட்டுல வெச்சுக்குறோம் நு சொல்லிட்டான்
சாரதாவின் செயலால் காயப்பட்டிருந்த அவனிடம் யாராலும் பேசமுடியவில்லை திருமணம் முடிந்த உடன் ஊருக்கு திரும்பினான் மணமக்களுடன் கிளம்பிய சுற்றத்தினரும் ஊர் வந்து சேர்ந்தனர்
அனைத்து சடங்குகளும் நல்லமுறையில் நடந்தேற தன் புகுந்த வீட்டிற்க்கு வந்தாள் ப்ரபா ஒரு வாரம் கழித்தே முதலிரவுக்கு நல்ல நாள் குறிக்கப் பட அதுவரை லஷ்மியுடன் தங்கவைக்க பட்டாள் ப்ரபா
இயல்பில் கலகலவெனபேசும் சுபாவமுடைய லக்ஷ்மி சீக்கிரமாகவே ப்ரபாவை ஈர்த்துவிட இருவரும் தோழிகள் ஆனார்கள் கொஞ்சம் பயமும் தெளிந்தது ப்ரபாவுக்கு புகுந்த வீட்டின் அன்றாட செயல்களும் பிடிபட்டன.இந்நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய புறப்பட்டு வந்தனர் ப்ரபாவின் பெற்றோர் . தன் பெற்றோரை கண்ட மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் குடும்ப வாழ்வை நினைத்து பயந்தாள் ப்ரபா
தாய் அறியாத சூல் இல்லை அல்லவா? தன் மகளின் முகத்தில் கலக்கத்தை கண்ட ப்ரபாவின் தாய் இந்த பாரும்மா உன்னை நாங்க அவசரப்பட்டு படிப்ப கெடுத்து கல்யாணம் பண்ணி கொடுத்துடோமுனு நினைக்காதே உன் அக்கா செஞ்ச காரியத்தால் ஊருக்குள்ளே நம்ம குடும்பத்துக்கு கெட்டபேர் வந்திருமேனு கூட நாங்க யோசிக்கல
இது வரைக்கும் நாங்க விசாரிச்சப்ப மாப்பிள்ளை குடும்பத்தை பத்தி நல்லவிதமா தான் சொன்னங்க அப்படி ஒரு உறவு கை நழுவ விட கூடாதுனு நாங்க நினைச்சோம் அப்புறமும் கூட மாப்பிள்ளை உன் சம்மதத்தை தெரிஞ்சுகிட்டு தான் தாலி கட்டுவேனு சொல்லிட்டார் வேற வழி இல்லாமதான் உன்னை மிரட்ட வேண்டியதா போச்சு
உன் படிக்கற ஆசைய கெடுக்கறேனு நினைக்காதே நல்ல யோசிச்சு பார்மா அடிப்படை அறிவு உங்கிட்ட இருக்கு அத வெச்சு ஓய்வு நேரத்துல தபாலுல படிச்சுகூட தகுதிய வளத்துக்கலாம்
இங்க மாப்பிள்ளைக்கு அவரோட தொழிலிலும் உதவியா இருக்கலாம் செய்யனும்னு நினைச்சா கிடைக்குற சூழ்நிலைய சாதகமாக்கி ஜெயிக்கனும் அது தான்மா பொண்ணுங்களோட திறமையும் புத்திசாலித்தனமும் என அறிவுரை கூறினார்
சிந்திக்க துவங்கினாள் ப்ரபா முதலிரவுக்கு அலங்காரமும் நடந்தது இனி அவர்கள் வாழ்வு மலருமா? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-14
எனக்கு பிடித்த கவிதைஇடம் மாறிய இதயங்கள்
இணைகின்ற நேரத்திலே
விடை காண துடிக்குத்தே
விடையில்லா கேள்விக்கு
விடையாக வந்தவளே
விலகாதே என்னவளே
நீ விலக நினைத்தாலே
என்னுயிர் நீங்கும் என்னவளே
நிர்மலமான இரவு இரு அறிமுகமில்லா இருவர் தனிமையில் சந்திக்கும் வேளை இயற்கையின் ரசவாதத்தால் இருயிர் ஒருயிர் ஆகும் தருணம் தோழியர் புடை சூழ மங்கை நல்லாள் இல்லறமாம் நல்லறம் கற்க முதலடி எடுத்து வைக்க துவங்கினாள்
குழப்பம் மேவிய முகங்களுடன் அமர்ந்திருந்த தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச தயங்கினர்
மெல்ல பேசத் துவங்கிய பாஸ்கர் தன் மனைவியின் குழப்பம் கல்விக்கானது என்று அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான் பின்னர் தன் மனைவிக்கு படிக்க எந்தவிதமான தடையும் இல்லை என உணர்த்தினான்
கல்விக்கான தடை நீங்கியதில் மகிழ்ச்சி கொண்ட ப்ரபாவோ தான் குடும்பத்தை கவனித்து கொள்வதாயும் தேவை ஏற்படின் தொழிலுக்கும் உதவ முடியும் எனக்கூற தான் கேட்காமலே தன் தேவையை நிறைவேற்ற முனைந்த மனைவியிடம் பாசம் பெருகியது பாஸ்கருக்கு அங்கே ஒரு இல்லறம் நல்லறமானது
ப்ரபாவின் ஆலோசனையின் பேரில் அந்த ஊரில் ஒரு பள்ளியும் நூலகமும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் பாஸ்கர் அந்த நூலகத்துக்கு நூலகராக பகுதி நேர வேலைக்கு வந்தவர்தான் ஷேஷகிரி
எழ்மையான குடும்பத்தில் பிறந்தவராகையால் தனது தாய் கஷ்டப்பட்டு மெஸ் நடத்தி தன்னையும் தனது தம்பி தங்கையையும் படித்து ஆளாக்கி வருவதை உணர்ந்தே இருந்தார்
இன்னமும் சில வருடங்களில் தன் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய கடமை இருப்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்தார்
வேலைக்கு வந்த இடத்தில் விவசாய பூமி ஆகையால் இங்கு குறைந்த விலையில் கிடைத்த தரமான பொருட்களை நகரத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் வாங்கி விற்க துவங்கினார் அவ்வகையில் பாஸ்கரின் வீட்டுக்கும் வந்து போக நேர்ந்தது
நூலகத்தில் இருக்கும் நல்ல புத்தகங்களை பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார் தொழிலில் அவரின் நாணயம் பிடித்து போகவே அவரின் மூலமாகவே பாஸ்கரின் பரிவர்த்தனைகள் நடந்தன இந்நிலையில் ப்ரபா கருவுற்றாள்
மாதாந்திர பரிசோதனைக்கு ப்ரபாவுக்கு துணையாக லக்ஷ்மியும் பாஸ்கரும் போய் இருந்தனர்
அங்கு வந்த நர்ஸ் ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ளஒரு நோயாளி அவர்களை பார்க்க விரும்புவதாக தெரிவிக்க பார்க்க சென்ற பாஸ்கர் ப்ரபாவுக்கோ அதிர்ச்சி தாங்க முடியாது மயங்கி விழுந்தாள் காரணம் அங்கு படுக்கையில் நோயாளியாக கண்டது சாரதாவை அல்லவா?
சாரதாவின் வாழ்வில் என்ன நடந்தது? அவள் இப்படியாக காரணம் என்ன? அவள் காதலன் என்ன ஆனான் ? அவளின் பெற்றோரை சாரதா சந்தித்தாளா? விடைகள் அடுத்த அத்தியாயத்தில்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-15
எனக்கு பிடித்த கவிதைகனவில் காதல் செய்கிறேன் வேலை களைப்பில் தோள் சாய்கிறேன்
அந்தரங்க நேரத்தில் ஆழ்மனதின் ஆசைகள் அறிவாயோ
அன்று உனக்கு பிடித்த என்னை
இன்று பிடிக்காமல் போன மாயம் என்ன ?
சாயம் போன என் இளமை தானோ
காதலனே என் கணவனே கண்ணீருடன் கேட்கின்றேன்
கலக்கம் நீங்கிட மறுமொழி கூறிடுவாயே
சற்றே மயக்கம் நீங்கி ஆசுவாசபடுதி கொண்டபின் மனதை தைரிய படுத்திகொண்ட ப்ரபா சாரதாவிடம் அக்கா என்னௌனக்கு ஆச்சு ? அப்பா அம்மாவ பாத்தியா? உன் புருஷன் என்ன ஆனார் என கேட்டாள் அவர்கள் இருவரும் பேச தனிமை கொடுத்து வெளியே நின்று கொண்டான் பாஸ்கர்
ப்ரபா உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு அது எனக்கு சந்தோஷம் முதல்ல கல்யாண நாளில் வீட்ட விட்டு போய் உன் வீட்டுகாரருக்கு அவமானம் உண்டாக காரணம் ஆயிட்டேன் அவர்கிட்டே மன்னிப்பு கேட்டேன்நு சொல்லுமா
நான் இனிமே ரொம்ப நாள் இருக்க மாட்டேன் எனக்கு இருக்குறது இரத்த புற்றுநோய் மா என்னை காதலிச்சவன் கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு போயி ஒரு வீட்டெடுத்து தங்கவெச்சான் முக்கிய செலவுகளுக்கு வேணுமுனு என் நகைகளை வாங்கி விக்க எடுத்துகிட்டு போயிருந்த போது அவனை தேடி ஒரு பொண்ணு கைல குழந்தையோட வந்தா அவகிட்ட பேசுனத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவதான் அவனோட முதல் மனைவினு நாங்க பேசிக்கிட்டு இருந்த போதே அவன் பணத்தோட வந்துட்டான்
நான் கோபப்பட்டு கேட்டப்ப உன் சொத்துக்காகதான் உன்னை கல்யாணம் பண்ண நினைச்சேன் எப்போ நீ வீட்ட விட்டு வந்தியோ அப்பவே உன்னை விட்டுட்டு போய் இருப்பேன்
கைல இவளோ நகை வெச்சு இருக்கேனு தெரிஞ்சதோ அதையாவது அனுபவிக்கலாமேனு தான் இது வரைக்கும் கூட வெச்சு இருந்தேன் என சொன்னான்
அதிர்ச்சில எனக்கு ஒண்ணுமே தோணல இந்த உனக்கும் கொஞ்சம் காசு தரேன் ஊரப் பாக்க போய் சேருனு சொன்னான் பேசிக்கிட்டு இருக்கும் போதே நான் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துட்டேன்
எற்கனவே 2 தடவை இந்தமாதிரி ஆனபோது நான் பெருசா எடுத்துக்கலை மயக்கம் போட்ட உடனே பயந்து போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் பாத்தபோது எனக்கு இருக்குறது இரத்த புற்றுநோய் அதுவும் முத்தின நிலமைனு தெரிஞ்சது
ஆஸ்பத்திரில இருந்த போதே அவன் வீட்ட காலி பண்ணிக்கிட்டு போய்ட்டான் நான் சில பேர் உதவியோட அப்பா அம்மா வ பாக்கப்போனேன் என்ன பாத்தவுடனே அப்பாவும் அம்மாவும் அடிச்சு விரட்டிடாங்க அவங்களுக்கு எனக்கு இப்படி ஒரு நோய் இருக்குறது தெரியாது
ப்ரபா எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கு நம்ம அப்பா அம்மாவ ஒருதரம் பாத்தா போதும் பிறகு நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன் தயவு செஞ்சு உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி அதுக்கு மட்டுமாவது ஏற்பாடு பண்ண சொல்லேன்
விஷயத்தை கேள்வி பட்டு பாஸ்கர் நேரே சென்று மாமனார் மாமியாரை சமாதானப்படுத்தி கூட்டி வந்தான் தன்னை பெற்றவர்களை கண்டவுடன் முகம் மலர்ந்த சாரதா அவர்களுக்காவே காத்திருந்தது போல விடை பெற்றாள்
(தொடரும்)
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தோல்வி நிலையென நினைத்தால்...........
» கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2
» வலி--தொடர்கதை
» கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3
» இணைய கலாட்டா
» கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2
» வலி--தொடர்கதை
» கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3
» இணைய கலாட்டா
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|