புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_m10அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:51 am

First topic message reminder :


அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 7bCn06HzQhfdaKIxwluI+_104460755_gettttt
இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து தமிழ்நாடு தொடர்ச்சியாக சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி எனப் பேரிடர்களைச் சந்தித்துவருகிறது. இனி பேரிடர்களை எதிர்கொள்வதிலும் தவிர்ப்பதிலும் மாநில அரசின் பார்வை மாற வேண்டும் என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். அந்தத் திசையில் செயல்பட ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது மாநில அரசு.

தமிழ்நாட்டின் உள்ள கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இது இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பதினைந்து சதவீதம். 2004ல் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பெரும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது.

2000வது ஆண்டு புயல், 2005ல் ஃபானூஸ் புயல், 2008ல் நிஷா புயல், 2010ல் ஜல் புயல், 2011ல் தானே, 2012ல் நிலம் புயல், 2016ல் வர்தா, 2017ல் ஒக்கி, 2018ல் கஜ என இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இப்போது வரை 9 புயல்கள் தமிழகத்தைத் தாக்கியிருக்கின்றன.

‘கஜ’ புயல் பாதிப்பு: "மீண்டும் தென்னை மரங்கள் உருவாக ஒரு தலைமுறையாகும்"
‘கஜ’ புயல்: பூப்பெய்திய மகளின் மரணத்தை தடுக்க முடியாமல் தவித்த தாய்
செல்லமாக வளர்த்த கால்நடைகளை கொன்ற கஜ: பெண்கள் கண்ணீர் #GroundReport

இது தவிர, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் சுமார் 650 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் இழப்பையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு புயலின் போதும் மாநிலத்தின் எட்டு சதவீத மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

நன்றி
பிபிசி தமிழ்



avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Nov 26, 2018 2:49 am

H.A.A.R.P.
[size=16]H.A.A.R.P. may refer to:
[/size]






ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Nov 26, 2018 2:57 am

அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு? - Page 3 XavvtGc7Q0yYnKacEr4g+IMG_20181125_212616



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Nov 26, 2018 3:01 am

பருவநிலை பயங்கரவாதம் உண்மையா?


Published :  11 Mar 2015  09:09 IST

பருவநிலை ஓர் ஆயுதமா?

- பேட்ரிக் பர்காம்
உலகைப் பணியவைக்க பருவநிலையையே ஆயுதமாக்க முயல்வது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வில்லன்களின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க அரசின் வலதுகரமான மத்தியப் புலனாய்வு முகமையே (சி.ஐ.ஏ.) அந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வது? ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்று இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பெயர். இதில்தான் சி.ஏ.ஐ. இப்போது ஆர்வம் காட்டுகிறது.
கரிப்புகை வெளியீடு அதிகமிருப்பதால் புவி வெப்பமடைவதைக் குறைக்க கரியுமிலவாயுவை அகற்றும் தொழில்நுட்பம்தான் ‘ஜியோஇன்ஜினீயரிங்’. மற்றொரு தொழில்நுட்பம், மேகங்கள் அல்லது விண்தூசு உதவியுடன் புவியின் பிரதிபலிப்புத் திறனைக் கூட்டுவதாகும். புவி வெப்பமடைவதை இவ்விதச் செயல்களின் மூலம் தடுத்துவிடலாம் என்று நினைப்பதை நவோமி கிளெய்ன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கண்டித்துள்ளார்கள். இந்த ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்ற திட்டத்தின் உள்நோக்கம் சூது நிறைந்ததாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
அணுகுண்டு வீசப்பட்ட பிறகு தோன்றும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து 1980-களில் ஆராய்ந்த ஆலன் ரொபாக், பருவநிலை மாறுதல்களைச் சமாளிக்கும் பல்வேறு உத்திகளுக்காக தேசிய அறிவியல் அகாடமிக்கு நிதியுதவி அளித்து ஆய்வுகளை நடத்த சி.ஐ.ஏ. ஆர்வம் காட்டுவது குறித்து எச்சரிக்கிறார். அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய துறை குறித்துத் தனக்கென்ன அக்கறை என்று சி.ஐ.ஏ. வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.



































பிரிட்டன்தான் முன்னோடி
பருவநிலையை ஆயுதமாகப் பயன்படுத்த முற்படுவது புதிதல்ல. 99 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசு அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. முதல் உலகப் போரின்போது ஜெர்மானியப் போர் விமானங்களை ஏமாற்றுவதற்காகச் செயற்கையாக மழைமேகங்களை உருவாக்க முயன்றிருக்கிறது. அதற்காக சஃபோல்க் என்ற பகுதியின் ஆர்ஃபோர்டு ராணுவத் தளத்தில் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ராணுவம் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளைப் போலவே இதுவும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால், மழை மேகங்கள் திரண்டால் அவற்றின் மீது ‘சில்வர் அயோடைடு’ பொடியைத் தூவி செயற்கையாக மழைப் பொழிவை உண்டாக்க முடியும் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
1967–68-ம் ஆண்டுகளில் வியட்நாமில் அமெரிக்க ராணுவம் ‘ஆபரேஷன் பொபாய்’ என்ற பெயரில் செயற்கை மழை முயற்சியை மேற்கொண்டது. வடக்கு வியட்நாமிலிருந்து வியட்காங் துருப்புகளும் ராணுவத் தளவாடங்களும் தெற்கு வியட்நாமுக்குச் செல்வதைத் தடுக்க இப்படிச் செயற்கையாக மழையை வரவழைத்தனர். வியட்நாமின் 30% பகுதிகளில் அந்த மழை பெய்தது. ஆனால், வியட்நாம் துருப்புகள் அதைப் பொருட்படுத்தாமல் தெற்கு வியட்நாமுக்குச் சென்று போரிட்டார்கள்.
சமீப ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் ஹார்ப் (HAARP - High Frequency Active Auroral Research Program) என்ற ஆய்வை இதே அடிப்படையில் மேற்கொண்டது. அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் அலாஸ்கா பல்கலைக்கழகம் இணைந்து அயனி மண்டல ஆராய்ச்சியை மேற்கொள்வதைக் குறிப்பதே இந்தப் பெயர்ச் சுருக்கமாகும். அயனி மண்டலத்தைக் கவனித்துப் பருவநிலையில் மாறுதல் செய்ய முடியுமா என்பதே இந்த ஆராய்ச்சி. இது வெற்றிகரமாக அமைந்தால், ஆராய்ச்சி மேலும் தொடரும்.
பருவநிலையை இப்படி அறிவியல் ஆய்வுகள் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றால் அது தீயவர்களுக்கும் தெரிந்து, அவர்களும் பருவநிலையைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் என்னாவது என்ற கேள்வி எழுகிறது. இப்போது மட்டும் என்ன, பல்வேறு ரசாயனங்களைத் தூவியும் கரைத்தும் சோதனைகள் நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள் என்ற பதில் வருகிறது. அமெரிக்காவின் கிழக்கில் கடும் குளிர் நிலவவும் கலிஃபோர்னியா வறட்சியில் ஆழ்ந்திருக்கவும்கூட இந்தச் சோதனைகள்தான் காரணம்; விமானத்தில் மழை மேகங்கள் படிந்து குளிர்ந்து உறையும் பகுதியில் நச்சு ரசாயனங்களை இதற்காகவே தடவி அனுப்புகிறார்கள் என்றுகூடப் பேசுகிறார்கள். இந்த சந்தேகங்கள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று அறிவியல் அறிஞர்கள் நிராகரிக்கின்றனர். மனிதர்களின் கற்பனையில் வேண்டுமானால் இவை சாத்தியமாக இருக்கலாம்; இதைச் செயல்படுத்தும் தொழில்நுட்பம் இன்னமும் கைவரப்பெறவில்லை என்கின்றனர்.
இந்தத் தொழில்நுட்பங்களைக் கையாள்பவர்களை யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்று ரொபாக் கவலைப்படுவது நியாயமே. ஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட சகுனம் நல்லதே நடக்கும் என்று உணர்த்துகிறது. பனிபடர்ந்த ஆஸ்திரியாவில் கடந்த மாதத் தொடக்கத்தில் இதே போன்ற காட்சியைப் படமாக்க படப்பிடிப்புக் குழுவினர் முயற்சி செய்தபோது பலத்த காற்று வீசி அதைத் தடுத்துவிட்டது. பருவநிலைகளுக்கென்று ஒரு கடவுள் உண்டென்றால் அது நாமில்லை!

சி.ஐ.ஏ. என்னை அணுகியது

- ஆலன் ரொபாக்
‘ஜியோஇன்ஜினீயரிங்’ மிகவும் ஆபத்தானது, சி.ஐ.ஏ-வின் உள்நோக்கம் என்ன என்று நமக்குத் தெரியாது. இதைத் தடுக்கவோ கண்டிக்கவோ அரசியல் உறுதிப்பாடு இல்லையென்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. “2011 ஜனவரி 19-ம் தேதி எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் சி.ஐ.ஏ-வின் ஆலோசகர்கள் என்று அழைத்தவர்கள் அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.
ரோஜர் லூகேன், மைக்கேல் கேன்ஸ் என்பது அவர்களுடைய பெயர்கள். ‘நம்முடைய பருவநிலையைக் கட்டுப்படுத்த வேறொரு நாடு முயற்சி செய்தால், அதை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். புவி அடுக்குமண்டலத்தில் தடிமனான, பெரிதான மேகம் ஒன்று தோன்றி நம்முடைய பிரதேசத்துக்கு வரக்கூடிய ஆற்றலை மாற்றும் அளவுக்கு இருந்தால் நிலத்தில் வைத்துள்ள ஆய்வுக் கருவிகளின் உதவியாலும் செயற்கைக் கோள்கள் மூலமாகவும் அதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று பதில் அளித்தேன்.
கடலுக்கு மேலே அந்த மேகமானது பளபளவென்று ஒளிர்ந்தால் அதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது, வேறு யாராலோ அனுப்பப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றேன். விமானம் அல்லது கப்பல் மூலமாக வாயுக்களையோ துகள்களையோ வளிமண்டலத்தில் செலுத்தினாலும் இதே போல கண்டுபிடித்துவிடலாம் என்றேன். ஒருவேளை தாங்கள் அப்படிப் பருவநிலையைக் கட்டுப்படுத்தினால் அதை மற்ற நாடுகளும் கண்டுபிடித்து விடுமோ என்று தெரிந்துகொள்ளவே அப்படிக் கேட்டார்களோ என்றுகூட திகைத்தேன்.
‘ஜியோஇன்ஜினீயரிங்’கில் சி.ஐ.ஏ-வுக்கு இருக்கும் ஆர்வமும் அதற்காக அது பெருந்தொகையை ஒதுக்கியிருப்பதாக வரும் தகவல்களும் இந்த எண்ணத்தை ஏற்படுத்தின. தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வு முடிவுகளை நான் ஏற்கிறேன். புவி வெப்பமடைகிறது என்பது உண்மை. அதற்குக் காரணம் மனிதர்கள் மற்றும் நிலக்கரி, எண்ணெய், பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை வரம்பின்றி எரிப்பது அதன் மூலம் கரியமிலவாயுவைக் காற்றில் கலக்கவிடுவது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதைக் குறைக்கவோ, தடுக்கவோ முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் மனிதகுலத்துக்கே ஆபத்தாகிவிடும் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
இதற்கு ஒரே வழி படிம எரிபொருள் களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதும் சூரிய ஒளி, காற்று போன்றவற்றிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதும்தான். அத்துடன் மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப வாழக் கற்றுக்கொள்வதும் முக்கியம்.
சூரிய ஒளியே பூமிக்கு வராமல் செயற்கையான மேகங்களைக் கொண்டு அதைத் தடுக்கும் முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளக் கூடாது. அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன, நன்மைகள் என்னவென்று தெரியாத நிலையிலேயே இப்போது இருக்கிறோம். காற்றிலிருந்து கரியமில வாயுவை அகற்றும் முயற்சி நல்லது; ஆனால், அது மிகவும் செலவு பிடிக்கக்கூடிய தொழில்நுட்பம். அதிலும்கூட ஆராய்ச்சிகள் மேலும் அவசியம். யு.எஸ். ராணுவம் எச்சரிக்கை
“பருவநிலை மாறுதல்களால் அமெரிக்காவுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. பருவநிலை மாறுதலால் மழைப்பொழிவு மாறுபடும். வெப்பம் அதிகரிக்கும். பயிர் விளைச்சல் அடியோடு குறைந்துவிடும். சமூகத்தில் பஞ்சம், பசி, பட்டினி காரணமாக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். ஏழை நாடுகளும் பணக்கார நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்படும். அரசியலில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும். பயங்கரவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் நல்ல வாய்ப்பாகிவிடும்” என்று அமெரிக்க ராணுவம் வெளியிடும் காலாண்டு பருவ இதழ் எச்சரிக்கிறது.
இதனால்தான் அமெரிக்க ராணுவமும் சி.ஐ.ஏ-வும் பருவநிலை மாறுதல்கள் குறித்து ஆர்வம் செலுத்துகின்றன. பருவநிலை மாறுதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக 2009-லேயே சி.ஐ.ஏ. தனி மையமொன்றை ஏற்படுத்தியது. அதை மூடுமாறு அமெரிக்க நாடாளுமன்றம் 2012-ல் உத்தரவிட்டது. மையத்தை மூடினாலும் இந்த ஆராய்ச்சியைத் தொடர்வோம் என்று சி.ஐ.ஏ. அறிவித்தது.
‘ஜியோஇன்ஜினீயரிங்’கில் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. ஆனால், பருவநிலை மாறுதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனஉறுதி உலக அரசியல் தலைவர்களிடம் இல்லை. எனவே, இந்த ஆய்வு தொடர்ந்தால் இதில் உள்ள ஆபத்துகளையும் நன்மைகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். திடீரென நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வதென்று கைகளைப் பிசைந்துகொண்டிருக்காமல் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். இந்த ஆராய்ச்சியால் 5 நன்மைகள் ஏற்படக்கூடும் என்றால் 26 ஆபத்துகள் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சி கைகூடினால் வெப்பம் குறைந்து புவி குளிர்ச்சி அடையக்கூடும். ஆனால், இதில் பல்வேறு தார்மிக, நிர்வாகப் பிரச்சினைகள் எழும். இதற்கிடையே கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கவும் நாம் தீவிர நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
- தி கார்டியன்
தமிழில்: சாரி
நன்றி இந்து நாளிதழ்



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Nov 26, 2018 3:13 am

அதிர்ச்சி : இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்..!



By Muthuraj
Updated: Friday, November 23, 2018, 15:20 [IST]


பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வு அதாவது இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும், அது தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு தான் புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது..!
புவி சூடாகுதலுக்கு ஆயுத உற்பத்தி மற்றும் பயன்பாடும் ஒரு காரணமாக திகழ்கிறது. அது சார்ந்த ஆய்வில் இந்தியாவில் விளையும் பயிர்களின் விளைச்சலை அமெரிக்க ஆயுதங்கள் பாதிப்படைய செய்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது..!

மின்காந்த போர் :



ஹார்ப் (HAARP- High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும். இது வானிலை மாற்றம் நிகழ்த்த மற்றும் ஒரு மின்காந்த போர் நிகழ்த்தும் வல்லமை கொண்டது.

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் :


பருவமழை தொடக்க நாளின் போது மாநிலங்களவையில் விளைச்சலில் குறைவு காணப்படுகிறது என்ற ஹார்ப் மீதான குற்றசாட்டை பதிவு செய்துள்ளார் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அணில் மாதவ் தேவ்.

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் :


இந்த காலநிலை மாற்றம் சார்ந்த ஆய்வானது இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agriculture Research) மூலம் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்காந்த கற்றை :


இதுசார்ந்த விளக்கத்தில் 'உயர் அதிர்வெண் செயல் சூரிய உதய ஆராய்ச்சி திட்டம் என்று அழைக்கப்படும் ஆயுத வகை ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, ஹார்ப் ஆனது கவனமான மற்றும் ஓட்டத்தக்க மின்காந்த கற்றை மூலம் மேல் வளிமண்டலத்தை தாக்குகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

அழிவு :


இதன் அழிவுகரமான தாக்கமானது இந்திய பயிர்கள் மீது மட்டுமில்லை பூமியின் காலநிலை மீதும் உள்ளது என்கிறாரக்ள் ஆய்வாளர்கள்.

சதியாலோசனை கோட்பாடு :


வானிலை மாற்றும் திறன், செயற்கைக்கோள்கள் முடக்கம் மற்றும் மக்களின் மூளை கட்டுப்படுத்துதல் போன்ற பல வகையான சதியாலோசனை கோட்பாடுகளும் ஹார்ப் மீது உண்டு..!

பங்கு :


பூகம்பங்கள், வறட்சி, வெள்ளம், 1996-ல் நிகழ்ந்த டி.டிபிள்யூ.ஏ800 விமான விபத்து, 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த விண்வெளி ஓடமான கொலம்பியா வெடிப்பு மற்றும் சாண்டி சூறாவளி ஆகிய அனைத்திலுமே ஹார்ப்பின் பங்கு உள்ளது என்கிறரர்கள் சதியாலோசனை கோட்டபாட்டாளர்கள்.

8 விடயங்கள் :


2008-ஆம் ஆண்டிலிருந்து சூரிய ஆற்றல் மேம்பட்ட ஆற்றல் திறன், வாழ்விடம், நீர் , நிலைத்திருக்க கூடிய இமாலய சுற்றுச்சூழல், காடுகள், விவசாயம் மற்றும் காலநிலை மூலோபாய அறிவு ஆகிய 8 விடயங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை இந்திய காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டம் கண்காணிக்கிறது.

ஆய்வு :


உடன் காடுகளின் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், நீர் வளங்கள், விவசாயம், மற்றும் வாழ்விடம் எதிர்மறை தாக்கங்களை ஏற்ப்படுத்தும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மட்டுப்படுத்தல் மற்றும் தழுவல் போன்ற ஆய்வுகளும் சேர்த்தே நிகழ்த்தப்பட்டன.

ஹார்ப் பாதிப்பு :


ஆய்வுகளில் இருந்து இந்திய பயிர் விளைச்சலுக்கு அமெரிக்க ஆயுதமான ஹார்ப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக திகழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது..!
நன்றி 
தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!




ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 10:58 am

இது இருப்பதால் தீமைதான் என்றால்
இதை இல்லாமல் இருக்க செய்ய
இதை அழிக்கவேண்டியது தானே.
முன்னேறிய நாடுகளின் மௌனமேன்?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Nov 26, 2018 11:25 am

ரொம்ப முக்கியமான,சாக்கான விஷயம் ஒன்னு இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் பெரியது இருந்தாலும் படியுங்கள்
______________________________

எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில், வயது 68 பழுத்த பழம் பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார், பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்ற வேலை, மனுஷன் லொக்கேசனை பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை, சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் சுமார் மாதம் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்.

இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது அப்படியே சொன்னேன் எங்க ஊரு திருச்சில புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு எப்பவுமே நடக்காத விசயமாக ,கடலே இல்லாத திண்டுகள் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை சொல்லி ஆச்சரிய படுத்தினார்.

ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன ராகம் எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல் என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வழியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார். அட என்னங்கசார் புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு அதெப்படின்னு கேட்டேன்.

புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார் நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன் ஆமாம் கரெக்ட் புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார்..அங்கே எல்லாம் விவசாயம் தான் இப்ப தான் ஒரு ரெண்டு மூணு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்..ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாசின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும் குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும் நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்

வெப்பமான இடத்தை நோக்கி செல்லலும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரித்து இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு. நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீன்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற சாக் நியுசையும் சொன்னார். சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு சொன்னேன் சவூதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு பூலோக படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகா போவது இல்லை இது பாலை வனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.

அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் - நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லிள் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை ஒன்று கூட்டி பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.

எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சியம் கிடையாது, இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை .அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஸ் காரர் கூறியது சரியா என்று விளக்கவும்.

பதிவு எழுதி 10 மணி நேரம் கழித்து இடை செருகள்: இந்த பதிவை படித்த ஒரு மீடிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார் நாகபட்டினம் புயல், தனுஷ் கோடி புயல், தானே, நிஷா புயல் எல்லாம் எப்படி அதெல்லாம் இந்த மீத்தேன் வரதுக்கு முன்னாடியே வந்துடுச்சேன்னு உடனே அவருக்கு போனை போட்டு கேட்டேன்

அந்த புயலுக்கும் இந்த புயலுக்கும் உள்ள வித்தியாசத்தயும் பாதிபப்பையும் கவனிக்க சொன்னார் நாகபட்டினம் புயல் வந்த பொழுது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் சேதாரம், தனுஸ்கோடி ராமேஸ்வரம் தீவு மட்டுமே சேதாரம். கரையை கடந்த உடனே வலுவிழந்து நீர்த்து போய் விட்டது, ஆனால் இந்த கஜா புயல் கரைக்கு ஏறிய உடன் தான் முன்பு இருந்த வலுவை விட மேலும் மேலும் ஆக்ரோஷமாக கிட்ட தட்ட நான்கு ஐந்து மாவட்டங்களை துவம்சம் செய்து முக்கியமாக மீத்தேன் எடுக்கும் நில பரப்புகளான டெல்ட்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தமிழகத்தின் மைய பகுதியில் (திண்டுக்கல்) நிலை கொண்டு கொடைக்கானல் மலை பகுதியில் மோதி நீர்த்து போய் விட்டது. அங்கே கொடைக்கானல் மலை இல்லாவிட்டால் இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்து என்றுமே புயலுக்கு வாய்போ இல்லாத கோவையையும் பதம் பார்து இருக்கும் என்று அடித்து கூறுகிறார்.

22 Nov 2018 Update :

இங்கே ஒரு சில நண்பர்கள் இது ஒரு பொய்யான கற்பனையான கதை என்று கூறுகின்றனர்...இந்த ஆர்டிகளை நான் எழுதியனால் இது உண்மை தான் என்று நான் வாதிட வரவில்லை.இது 100% பொய்யாக தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். அரசியல் வாதிகள் இவ்வளவு நாள் நம் பொருளா தாரத்தை தான் சுரண்டி வந்தார்கள் பணம் போனால் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் இன்று நாம் வாழ்க்கையே கேள்வி குறி ஆக்குவது என்பது ஒத்து கொள்ள முடியாமல் தான் இந்த போஸ்டை நான் போட்டேன்.

இதன் நோக்கம் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப்ப நாட்டின் உள் கட்டமைப்புகளை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமை அதன் வழியில் மக்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களை வளங்களை கண்டறிந்து எடுப்பதும் ஒரு அரசின் கடமையே அந்த வகையில் இது போன்ற இயற்கை பேரழிவுகள் நடைபெறாத வாறு முன்னெச்சரிக்கை நடவடிகையை மேற்கொண்டு இயற்கை வளங்களை உபயோக படுத்துவதில் எடுப்பதில் எந்த வித தவறு இல்லை என்பதை மறுபதற்கில்லை.

ஆனால் கடலில் கொட்டிய ஆயிலை இன்னும் பாத்ரும் பக்கெட்டில் அள்ளும் நிலைமையில் நாம் இருக்கும் பொழுது பெரும் இயற்கையுடன் சண்டை இடுவது முட்டாள் தனமான ஒன்று என்பது தான் என் கருத்து.

ஒரு 15-20 வருடத்துக்கு முன்னாடி வரை புயல் என்றால் நாலு நாளைக்கு செம்மையா மழை பெய்யும் அப்புறம் ஒரு நாள் டிவில ரேடியோ வில் சொல்லுவாங்க விசாகபட்டினத்தில் கரையை கடந்து கொல்கத்தாவில் கரையை கடந்ததுன்னு ஏன் என்றால் அப்போ எல்லாம் தமிழ்நாடு விவாசயா பூமியாக இருந்தது மிகவும் குளிர்ச்சியான பகுதியாக இருந்துச்சு அதனால் தமிழ்நாடு பக்கம் புயல் வருவது ரொம்ப ரேர், எதோ அங்க ஒன்னு இங்க ஒண்ணுனு இயற்கையின் சமநிதிக்காக வரும் இது போல வருடத்துக்கு நான்கு ஐந்து என்று வந்தது இல்லை. இதை கொஞ்சம் சிந்திச்சாலே நிறைய விஷயங்கள் நமக்கு விளங்கும்.

மீண்டும் மீண்டும் நான் கூறுவது இந்த புயல் பூலோக விசயத்தில் நான் ஒரு ஜீரோ தான் ஒருவர் சொன்ன சொல்லை தான் நான் இங்கே போஸ்டஅக போட்டு இருக்கிறேன் இந்த விஷயம் நூறு சதவிகதம் பொய்யாக இருக்க வேண்டும் என்பதும் தான் என் நிலைப்பாடு. யாரவது ஒருவர் அறிவியல் பூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தை நிறுவினார் என்றால் அடுத்த கணமே நான் இந்த போஸ்டை டெலிட் செய்ய தாயார்.
.

முகநூலில் சுட்டது



avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Sat Dec 01, 2018 9:21 pm

HAARP'க்கும் கஜா புயலுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு புயலை செயற்கையாக உருவாக்குவது சாத்தியமா? கஜா புயல் செயற்கை என்றால் அதன் அறிகுறிகள் என்ன? காணொளியை பாருங்கள்.

https://www.youtube.com/user/saragct1



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:26 pm



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:27 pm

ஞானமுருகன் wrote:HAARP'க்கும் கஜா புயலுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு புயலை செயற்கையாக உருவாக்குவது சாத்தியமா? கஜா புயல் செயற்கை என்றால் அதன் அறிகுறிகள் என்ன? காணொளியை பாருங்கள்.

https://www.youtube.com/user/saragct1
மேற்கோள் செய்த பதிவு: 1287660
அருமை ஞானமுருகன். நல்லதொரு தகவல்
பரிமாற்றம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக