ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

2 posters

Go down

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம் Empty அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

Post by ayyasamy ram Sat Nov 17, 2018 8:05 am


அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு,
தீ விபத்து தடுப்புக்கான உபகரணங்களுக்காகப் பயன்
படுத்தப்படும் மின்சாரத்துக்கு வணிக ரீதியிலான கட்டணம்
வசூலிக்கப்படுவதால், பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாக
குடியிருப்புவாசிகள் கவலை தெரிவித்தனர்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆங்காங்கே அடுக்குமாடிக்
குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

அங்கு குடியிருப்போர் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரைச்
சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர். தீ விபத்தைத் தடுக்க
விபத்துத் தடுப்பு முறையையும் செயல்படுத்தியுள்ளனர்.

இதற்கான மின்கட்டணம் குடியிருப்புகளுக்கு வசூலிக்கப்படும்
கட்டணமாக இருந்தது.

இந்நிலையில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றவும்
குடிநீர் அல்லது தண்ணீர் எடுக்கவும், சுத்திகரிக்கவும், வளாகத்தில்
தீ விபத்து தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு பயன்
படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான மின்பயன்பாட்டை வணிக
ரீதியில் கணக்கில் எடுத்துக் கொண்டு மின்வாரியம் கட்டணம்
வசூலிப்பதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிருப்தி
தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த மின்கட்டண உயர்வால் இரு மாதத்துக்கு குடியிருப்பு வளாகத்தின்
பராமரிப்புச் செலவு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை
அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் சுத்திகரிப்பு, தீ தடுப்பு உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும்
மின்சாரத்துக்கு வணிக ரீதியில் கட்டணம் வசூலிப்பது ஏற்க முடியாதது.
இதுதொடர்பாக எவ்வித தெளிவான வரையறையையும் மின்சார
ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடவில்லை.

மேலும் குடியிருப்புகளுக்குத் தேவைப்படும் குடிநீரை விநியோகிக்கவும்,
கழிவு நீரை வெளியேற்றவும் அரசு முறையான வசதியை ஏற்படுத்தாததால்
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இத்தகைய நடவடிக்கை சுயமுயற்சியாக
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு வணிக ரீதியிலான கட்டணம் முறையற்றது
என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கு மின்இணைப்பு
பெற்று வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக
கண்காணிப்பை மின்சார வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம் Empty Re: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

Post by ayyasamy ram Sat Nov 17, 2018 8:06 am


ஏற்கெனவே இக்குடியிருப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில்,
சில இடங்களில் கடைகள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்கள்,
பல்பொருள் அங்காடிகள், சமூக நலக்கூடங்களை நடத்தி வருவது
தெரியவந்ததை அடுத்து இவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை
வணிகப் பயன்பாட்டுப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் சங்க நிர்வாகிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும்.
தனி குடும்பம் இன்றி வளாகத்துக்கே தண்ணீர் சுத்திகரிப்பு போன்றவை
மேற்கொள்ளப்படும் நிலையில்தான் வணிக பயன்பாட்டுக் கணக்கில்
சேர்க்கப்படுகிறது.

ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின்தூக்கிகள், கார் பார்க்கிங்
அல்லது வளாகத்துக்கு தேவைப்படும் மின்விளக்குகள் ஆகியவற்றுக்கு
பயன்படுத்தப்படும் மின்சாரம் குடியிருப்புக்கான மின்சாரக்
கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது.

ஆனால் தண்ணீர் எடுக்க பயன்படும் மின்சாரப் பம்ப்புகள், அவற்றை
சுத்திகரிப்பதற்கான நிலையங்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்
மின்சாரம் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் மின் கட்டணமாகவே
வசூலிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காரணம் பராமரிப்புச் செலவு என்ற அடிப்படையில் ஒவ்வொரு
குடியிருப்புவாசியிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர்.

எனவே இதுதொடர்பான விழிப்புணர்வை அடுக்குமாடி குடியிருப்பு
வாசிகளுக்கு ஏற்படுத்த கடந்த செப்டம்பர் முதல் ஒவ்வொரு வட்டம்,
வார்டு வாரியாக உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மூலம் துண்டு
பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன என்றனர்.


அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் மின்கட்டணம் தொடர்பாக
சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண தங்கள் அமைப்பின்
சட்டப் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிரடாய்
அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
--
- கே.ஆனந்தபிரபு
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம் Empty Re: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 10:32 am

Code:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
காரணம் பராமரிப்புச் செலவு என்ற அடிப்படையில் ஒவ்வொரு
குடியிருப்புவாசியிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர்.

எனவே இதுதொடர்பான விழிப்புணர்வை அடுக்குமாடி குடியிருப்பு
வாசிகளுக்கு ஏற்படுத்த கடந்த செப்டம்பர் முதல் ஒவ்வொரு வட்டம்,
வார்டு வாரியாக உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மூலம் துண்டு
பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன என்றனர்.


அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் மின்கட்டணம் தொடர்பாக
சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண தங்கள் அமைப்பின்
சட்டப் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிரடாய்
அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.


இந்த மாதிரி கட்டண கொள்ளை அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு
தவிர்க்க முடியாத ஒன்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம் Empty Re: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum