ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !

Post by krishnaamma Thu Nov 15, 2018 9:09 am

First topic message reminder :

கூட்டு வகைகள் !

நம் தென்னிந்திய  சமையலில் கூட்டும்  ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை  


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:39 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty சங்கராந்திக்கூட்டு!

Post by krishnaamma Thu Nov 15, 2018 10:30 am

சங்கராந்திக்கூட்டு!

இந்த கூட்டுக்கும்  அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smileஇந்த கூட்டு செய்வதற்கு நிறைய காய்கறிகள் போடணும். 


சங்கராந்திக்கூட்டு என்பது, பொங்கலுக்கு செய்வது. அப்போ எல்லா கறிகாய்கள் கிழங்குகள் வரும் இல்லையா எல்லாம் போட்டு செய்யனும் மேலும் 7 , 9 என்று எண்ணி செய்யனும் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smileபெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய்,  மஞ்சள் பூசணிக்காய்  அதாவது பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, சேப்பங் கிழங்கு, கேரட், பீன்ஸ், ஊறவைத்த கொத்த்துக்கடலை, பச்சை வேர்கடலை, டபுள் பீன்ஸ்.  

தேவையானவை :

துவரம் பருப்பு 200 கிராம் 
மேலே சொன்ன காய் ஏதாவது 7 அல்லது 9 எடுத்துக்கொள்ளவும்
துருவின தேங்காய் 1/2 கப் 
APP 5 -6  டீ ஸ்பூன் 
புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன் 
எண்ணை 
உப்பு
கறிவேப்பிலை 
தாளிக்க கடுகு 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம் 
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் 

செய்முறை: 

மேலே சொன்ன ஏதாவது 7 அல்லது 9  எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'சங்கராந்திக்கூட்டு' ரெடி கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile
சர்க்கரை மற்றும் வெண்பொங்கலுடன் பரிமாறவும் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:09 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty பிட்லை / பாகற்காய் பிட்லை !

Post by krishnaamma Thu Nov 15, 2018 10:30 am

பிட்லை / பாகற்காய் பிட்லை !



பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன் புன்னகை 


தேவையானவை :

துவரம் பருப்பு 200 கிராம் 
பாகற்காய் 250 கிராம் 
துருவின தேங்காய் 1/2 கப் ( சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் )
APP 5 -6  டீ ஸ்பூன் 
புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன் 
கடலை பருப்பு அல்லது பச்சை வேர்கடலை 1 கை பிடி அளவு 
எண்ணை 
உப்பு
கறிவேப்பிலை 
தாளிக்க கடுகு 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம் 
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் பாகற்காய் யை அலம்பி நறுக்கவும்.
கொட்டைகளை நீக்கவும்.
உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
10- 15 நிமிடம் கழித்து நன்கு பிழிந்து அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும், வறுத்து வைத்த தேங்காயை தூவி ,கிளறி இறக்கவும்.
சுவையான 'பாகற்காய் பிட்லை' ரெடி

குறிப்பு: பாகற்காய்ல் உப்பு போட்டுள்ளதால் 'பிட்லைக்கு' போடும்போது பார்த்து போடவும்.



Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:09 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' !

Post by krishnaamma Thu Nov 15, 2018 10:38 am

'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' !


பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile 


தேவையானவை :

துவரம் பருப்பு 100 கிராம் 
பிஞ்சு கத்தரிக்காய்  1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் 
APP 3 - 4 டீ ஸ்பூன் 
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணை 
உப்பு
கறிவேப்பிலை 
தாளிக்க கடுகு 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம் 
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் 

செய்முறை: 
கத்தரிக்காயை அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும்..
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கத்தரிக்காய் ரசவாங்கி ' ரெடி கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:09 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty மிளகாய் அவியல் !

Post by krishnaamma Thu Nov 15, 2018 10:49 am

மிளகாய் அவியல் ! 

கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile

தேவையானவை:

துவரம் பருப்பு – 1/2 கப் 
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது 

செய்முறை:

பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:10 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty எரிசேரி !

Post by krishnaamma Thu Nov 15, 2018 10:50 am

எரிசேரி !

 இதுவும் எங்க வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணுவதுகூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile

தேவையானவை:

வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )

அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
உப்பு 

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம் 

செய்முறை:

சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும். 
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். 
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும். 
வெந்த காயுடன் சேர்க்கவும்.
வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார். 
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:10 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty கீரை கூட்டு !

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:01 am

கீரை கூட்டு ! 

கீரை கூட்டுசெய்ய  எந்த கீரையும் உபயோகப்படுத்தலாம்.

அதாவது பருப்பு கீரை, வெந்தயக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காலிக் கீரை, பசலை  என எதை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

இவைகளை கொண்டு பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல், மூன்றும் செய்யலாம். 

கீரைகளை உபயோகப்படுத்தும் பொழுது வேறு எந்த காயும் இத்துடன் போட முடியாது.

இவற்றுக்கு துவரம் பருப்பு மட்டுமே நன்றாக இருக்கும் .

குறிப்பு: பொரிச்ச கூட்டு, புளி கூட்டு, அவியல் இவை மூன்றின் செய்முறைகளை மேலே கொடுத்துள்ளேன் புன்னகை 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:03 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது :)

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:24 am

பொரித்த கூட்டுப்பொடி - பிரசவித்த தாய்மார்களுக்கானது இது புன்னகை 

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு 
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரைக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.

கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் மேலே சொன்ன கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 

ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு:இது பிள்ளை பெற்றவர்களுக்கான குறிப்பு...இதில் தேங்காய் பால் சேர்க்கலாம், அது  வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம் 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty மிளகு கூட்டு !

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:30 am

அடுத்தது மிளகு  கூட்டு !


இதற்கு பீன்ஸ் மற்றும் புடலங்காய் ஏற்றது. 

தேவையானவை :

250 கிராம்  பீன்ஸ் 
2 sp புளி பேஸ்ட் 
1 கப் பயத்தம் பருப்பு ( வேகவைத்துக் கொள்ளவும்)
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க கொஞ்சம் கடுகு + உளுத்தம் பருப்பு.
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி

மசாலாவுக்கு:
1 -2 ஸ்பூன் மிளகு
வாசனைக்கு 1 மிளகாய் வற்றல்
1 ஸ்பூன் தேங்காய் எண்ணை
2 ஸ்பூன் தனியா
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கொஞ்சம் கறிவேப்பிலை 


செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை அலம்பி நறுக்கி குக்கரில் வேக வைக்கவும்.
வாணலி இல் துளி எண்ணை விட்டு மசாலக்கு கொடுத்துள்ளதை போட்டு வறுக்கவும்.
பிறகு புளி பேஸ்ட் போட்டு அரைத்து  வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த காய் மற்றும் பருப்பை அதில் கொட்டவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
அது கொஞ்ச நேரம் கொதிக்கட்டும்.
நன்கு கிளறி, அது கொஞ்சம் கெட்டியானதும், தேங்காய் எண்ணை விட்டு கலக்கி இறக்கிவிடவும்.
கறிவேப்பிலை போடவும்.
அவ்வளவு தான் சுவையான மிளகு கூட்டு தயார்.
நிறைய நெய் விட்டு ,  சாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான்

குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள தயிர், அல்லது ஏதாவது தயிர் பச்சடி செய்யலாம். இல்லாவிட்டால் 'தளிர் வடாம்' கூட போறும். கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile


Last edited by krishnaamma on Tue Aug 10, 2021 8:57 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:43 am

கச்சல் வாழைக்காய் கூட்டு !

தேவையானவை:

கச்சல் வாழைக்காய் நான்கு 
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் மூன்று அல்லது நான்கு 
பெருங்காய பொடி கால் டீஸ்பூன் 
மஞ்சள் பொடி  கால் டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 


செய்முறை :


வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, பிஞ்சு வாழைக்காய் துண்டுகளை போடவும்.

அதில் மஞ்சள் பொடி போடவும்.

கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

மற்றும் ஒரு வாணலி இல், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் எண்ணெய் இல் வறுத்து , மட்டாக தண்ணீர் விட்டு அரைக்கவும்.

அரைத்த விழுதை, வாழைக்காய் இல் கொட்டவும்.

உப்பு போட்டு நன்கு கிளறவும்.

எல்லாமாக நன்கு சேர்ந்து வந்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கவும். 

அருமையாக இருக்கும், வாழைக்காய்  கச்சல் , அதாவது பிஞ்சு என்பதால் வாயு தொல்லை இருக்காது...இதையும் பிரசவித்த தாய்மார்களுக்கு செய்து தரலாம் புன்னகை 


Last edited by krishnaamma on Thu Nov 15, 2018 12:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty மலபார் அவியல் ! - தயிர் இல்லாத அவியல் !

Post by krishnaamma Thu Nov 15, 2018 12:03 pm

மலபார் அவியல் !  - தயிர் இல்லாத அவியல் புன்னகை

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2 
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்தது ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'அவியல்' ரெடி.


குறிப்பு: பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Icon_smile  சிலர்  கொத்தவரை கூட போடுவார்கள் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! - Page 2 Empty Re: கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum