புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
10 Posts - 71%
heezulia
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
1 Post - 7%
viyasan
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
202 Posts - 41%
heezulia
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
199 Posts - 40%
mohamed nizamudeen
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பணம் காய்க்கும் மரம்! I_vote_lcapபணம் காய்க்கும் மரம்! I_voting_barபணம் காய்க்கும் மரம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் காய்க்கும் மரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Dec 2009 - 18:43

முன்னொரு காலத்தில் அப்சலோம் என்ற பையன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்ப, மிகவும் நல்ல குணங்கள் கொண்டவன். ஒரு முறை, நாட்டில் காலரா நோய் தாக்கியது. அதில் இவனது பெற் றோர் இறந்தனர். ஆதரவற்ற அப்சலோம் சிறிது தொலைவில் இருந்த கிராமத்தை அடைந்தான். அங்கிருந்த மக்கள், அவனை அன்போடு வரவேற்றனர். பசிக்குச் சோறு கொடுத்தனர்.

மிகவும் அக்கறையோடு அவனைப் பார்த்துக் கொண்டனர். மாடுகளை மேய்த்தும், கிடைத்த வேலைகளை செய்தும், அவன், சிறிது கூலி பெற்றான். அதைக்கொண்டு, பசியில்லாமல் இரண்டு வேளை உணவு உண்டு வந்தான். இந்த நிலையில், அவன் மனதில் இதுநாள் வரை இருந்த ஆசை ஒன்று, இப்போது தலை தூக்கியது. அது என்ன என்றால்... ஓவியம் வரையும் ஆசைதான். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆசை.

சூழ்நிலையின் காரணமாகவும், பெற்றோரின் இறப்பினாலும், அதை செய்ய முடியாமல் தடை ஏற்பட்டது. இப்போது, வேலையும், வேளாவேளைக்கு உணவும், போதுமான ஓய்வும் கிடைத்ததும், அந்த ஆசை முளைவிட்டது. எனவே, அந்தக் கிராமத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை அடைந்தான். அங்கு ஓர் ஆசிரியர், மாணவர்களுக்கு, ஓவியத்தில் பயிற்சி அளித்து வந்தார்.

""ஐயா, எனக்கு ஓவியம் தீட்டச் சொல்லித் தருவீர்களா?'' என்று பணிவோடு கேட்டான்.

""மாடு மேய்க்கும் சிறுவனுக்கு, ஓவியம் ஒரு கேடா... போ... போ...'' என்று கேலி செய்தார் அவர்.

""சரி ஐயா... நீங்கள், ஓவியம் வரையக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு, ஏதேனும் ஒரு பழைய தூரிகை இருந்தால் கொடுங்கள்... அதை வைத்து நானே கற்றுக் கொள்கிறேன்,'' என்றான்.

இதைக் கேட்ட ஆசிரியர், மிகுந்த ஆத்திரம் அடைந்தார். ""அட பிச்சைக்கார நாயே! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால், என்னிடம் ஒரு தூரிகை கேட்பாய்?'' என்று வாயில் வந்தபடி திட்டி, அவனை அங்கிருந்து விரட்டினார். இதனால், மனம் உடைந்துபோன அப்சலோம், யாருமில்லாத இடத்தில் மாடுகளை மேய அனுப்பிவிட்டு, மர நிழலில், மணல் பரப்பில் உட்கார்ந்து, ஓவியம் வரைய ஆரம்பித்தான். நாளடைவில் அவன், ஓவியம் வரையக் கற்றுக் கொண்டான். இது நாள் வரை, ஒரு மரக்குச்சியை அவன், தூரிகையாகப் பயன்படுத்தி வந்தான். எப்பாடுபட்டாவது, ஒரு தூரிகையை வாங்கிவிட அவன் ஆசைப்பட் டான். ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவனாகி விட்டான்.

ஒரு நாள் மணல் பரப்பில், கோழிக் குஞ்சு ஒன்றை வரைந்தான். என்ன ஆச்சர்யம்! பருந்து ஒன்று, அந்தக் கோழிக் குஞ்சை உயிருள்ளது என்று நினைத்து, அதைத் தூக்கிச் செல்ல வட்டமிட்டது.

ஒருநாள் பவுர்ணமி இரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் அப்சலோம். அவன் கனவில் அழகிய தேவதை ஒன்று வந்தது. "அப்சலோம்... இந்தா நீ கேட்ட தூரிகை' என்று சொல்லி, ஒரு அழகான தூரிகையைக் கொடுத்தாள். அது, சாதாரணத் தூரிகை அல்ல... மந்திரத் தூரிகை.

அப்சலோமால் இதை நம்பவே முடியவில்லை. "தேவதையே... மிக்க நன்றி' என்றான். சிரித்துக்கொண்டே மறைந்தாள் தேவதை. காலையில் கண் விழித்தபோது, அவன் கையில், நிஜமாகவே ஒரு தூரிகை இருந்தது. காலையில் அவன் மணல் பரப்புக்குச் சென்று, ஒரு அழகான பறவையை வரைந்தான். எழுதி முடித்ததுமே, சிறகுகளை அசைத்த வண்ணம் அது பறந்தோடிச் சென்றது. பின்னர், அவன் ஒரு மீனை வரைந்தான். அது துள்ளிச் சென்று, குளத்தில் விழுந்து நீந்தியது. அப்சலோம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மந்திரத் தூரிகை கொண்டு, கிராம மக்களுக்கு, எருமை, கலப்பை முதலிய உழவுப் பொருட்களை வரைந்து, உதவி செய்தான். இதனால், ஏழை, எளிய மக்கள், அவனைத் தெய்வமாகவே எண்ணி வழிபட்டனர்.


இது, அந்த ஊரில் இருந்த ஜமீன்தாருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர், அவனைப் பிடித்து வந்து, தன் வீட்டில் சிறை வைத்தார். அவன் அங்கிருந்து தப்பி, அடுத்த ஊருக்குச் சென்றான். அங்கு, குறையுடைய ஓவியங்களைத் தீட்டினான். குறையுடைய ஓவியங்கள் உயிர் பெறவில்லை என்பதாலேயே அவன் அப்படிச் செய்தான். அவைகளை சொற்ப விலைக்கு விற்று வாழ்க்கை நடத்தினான். சிறிது காலம் சென்றது.

ஒருநாள், ஒரு கண் மட்டுமே உடைய ஒரு சிட்டுக் குருவியைத் தீட்டினான். ஆனால், மையை உதறும்போது, அது இன்னொரு கண் இருக்க வேண்டிய இடத்தில் சரியாகப் பட்டு விட்டது. அவ்வளவு தான், அந்த சிட்டுக் குருவி, உயிர் பெற்றுப் பறந்தோடியது. இதைப் பார்த்த ஊர் மக்கள், உடனே சென்று, இந்த அதிசயத்தை அரசனிடம் தெரிவித்தனர்.

அந்த அரசன் பேராசைக்காரன். மைதாசுக்கு அடுத்தபடியாக, பொன்னின் மீது ஆசை கொண்டவன். எந்தக் கொலைபாதகத்துக்கும் அஞ்சாமல், மக்களிடம் வரி வசூலிக்கும் கொடியவன். எனவே அவன், அப்சலோமை உடனே கைது செய்து, சிறையில் அடைத்து விட்டான். மந்திரத் தூரிகையையும் பறித்துக் கொண்டான்.



பணம் காய்க்கும் மரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Dec 2009 - 18:44

ஓவியர்களை வைத்து, கோட்டை, கொத்தளங்களையும், யானை, குதிரை போன்ற சதுரங்க சேனைகளையும் வரையச் செய்தான். அவை எல்லாம் உயிருடன் வந்துவிட்டால், யாராலும் தன்னை ஜெயிக்க முடியாது என்று நம்பியே, அவன் அந்த திட்டத்தில் ஈடுபட்டான். ஆனால் பாவம், அவன் எண் ணம் ஈடேறவில்லை. ஓவியங்கள் உயிர் பெறவில்லை. அரசன் மிகுந்த சினம் கொண்டான். அப்சலோம், தன்னை நன்றாக ஏமாற்றி விட்டான் என்று ஆத்திரம் அடைந்தான். அவன் தலையை வெட்டும்படி உத்தரவு இட்டான். மந்திரிகள், அவன் செயலைத் தடுத்தனர். சற்றுப் பொறுமையாக இருக்கும்படி வேண்டினர்.

""அரசே! இது மந்திரத் தூரிகை என்பதில் சந்தேகமே இல்லை... ஆனால், இது அந்த சிறுவனிடம் மட்டுமே, மந்திர சக்தியோடு செயல்படும் என்று நினைக்கிறோம். எனவே, அவனை அழைத்து, நகைகளும், பொன்னும், மணியும் தருவதாகக் கூறி ஆசை காட்டுங்கள். அவனையே இந்த ஓவியங்களை வரையச் சொல்லுங்கள். அப்போது இவை உயிர் பெறுவது உறுதி!'' என்று நம்பிக்கையூட்டினர். இதனால் மகிழ்ந்த மன்னன், அப்சலோமை சிறையில் இருந்து விடுவித்து, நல்ல ஆடை அணிமணிகள் தந்து உப சரித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

மந்திரத் தூரிகையை, மீண்டும் எப்படியாவது திரும்பப் பெற விரும்பிய சிறுவன், மன்னன் ஆசைக்கு இணங்குவதைப் போல நடித்தான். மன்னன், மனம் மகிழ்ந்து, மந்திரத் தூரிகையை அவனிடம் கொடுத்தான்.

தனக்காக, பணம் காய்க்கும் மரம் ஒன்றை வரைந்து தருமாறு கேட்டான். சிறுவன் உடனே, நீல வண்ணக் கடலை வரைந்தான்.

""யார் உன்னைக் கடலை வரையும்படிக் கேட்டது? முட்டாளே நான் கேட்ட பணம் காய்க்கும் மரம் எங்கே?'' என்று கத்தினான் மன்னன்.

""சற்றுப் பொறுங்கள் அரசே!'' என்று சொல்லிவிட்டு, கடலின் நடுவே தீவையும், அதன் நடுவே பணம் காய்க்கும் மரத்தையும் வரைந்தான். பிறகு, மன்னனிடம், ""அதோ நீங்கள் கேட்ட மரம்!'' என்று கூறினான்.

""அங்கே எப்படி செல்வது? எனவே, ஒரு படகை வரைந்து கொடு!'' என்றான் மன்னன். உடனே அப்சலோம், மந்திரத் தூரிகையால், மிகப் பெரிய படகை வரைந்தான். அதில், மன்னனும், மந்திரிகளும், ராணியும் ஏறிக் கொண்டனர். உடனே, காற்றை வரைந்தான் அப்சலோம். படகு அசைந்து, அசைந்து மெதுவாகக் கடலில் செல்ல ஆரம்பித்தது.
மன்னன், பெரு மகிழ்ச்சி அடைந்தான். ""படகு வேகமாக செல்லட்டும்!'' என்று ஆணையிட்டான்.

""காற்று வேகமாக வீசட்டும்!'' என்று கத்தினான். இதைக் கேட்டதும், தன் மந்திரத் தூரிகையால், சூறாவளியை வரைந்து தள்ளினான்.

புயல் வீசியது... படகு, திசை மாறி, எங்கோ செல்ல ஆரம்பித்தது. மழையின் வேகம் அதிகரித்தது. படகுக்குள் நீர் புகுந்தது. ""போதும், போதும் நிறுத்து!'' என்று கத்தினான் மன்னன்.

""இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது!'' என்று சொல்லிவிட்டான். புயலின் கடுங்கோபத்திற்கு ஆளான படகு கவிழ்ந்து, படகில் இருந்த அனைவரும், கடலில் மூழ்கி இறந்தனர். கொடுங்கோல் மன்னன் இறந்தான். மக்கள் அப்சலோமையே அரசனாக்கி மகிழ்ந்தனர். மந்திரத் தூரிகையின் உதவியால், ஊர் மக்களுக்குத் தேவையான பொருட்களை வரைந்து கொடுத்துக்கொண்டு நீண்ட காலம் இன்பமாக வாழ்ந்தான்.

***



பணம் காய்க்கும் மரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 21 Dec 2009 - 21:29

நல்ல கதை சிவா, நீண்ட நாட்கள் ஈகரையில் கதைகள் வரவே இல்லை



பணம் காய்க்கும் மரம்! Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 21:32

kirupairajah wrote:நல்ல கதை சிவா, நீண்ட நாட்கள் ஈகரையில் கதைகள் வரவே இல்லை

இந்த சின்னப்பிள்ளைங்க தொல்லை தாங்க முடியலப்பா பணம் காய்க்கும் மரம்! Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 21 Dec 2009 - 21:35

அது சரி, எப்ப நீங்க பெரிய ஆளாக மாறினீங்க ரூபன்?பணம் காய்க்கும் மரம்! Icon_smile



பணம் காய்க்கும் மரம்! Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 21:38

நான் வயசுக்கு வந்திட்டேன் உங்களுக்கு தெரியாதா கிருபை விரைவில் தண்ணி வார்ப்பு வீடியோ அனுப்பிவைக்கிறேன் பணம் காய்க்கும் மரம்! 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 21 Dec 2009 - 21:41

யாருக்கு ரூபன் தண்ணி வார்க்க போறீங்க?பணம் காய்க்கும் மரம்! 502589



பணம் காய்க்கும் மரம்! Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 21:42

kirupairajah wrote:யாருக்கு ரூபன் தண்ணி வார்க்க போறீங்க?பணம் காய்க்கும் மரம்! 502589

பணம் காய்க்கும் மரம்! 56667 பணம் காய்க்கும் மரம்! 56667 பணம் காய்க்கும் மரம்! 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 21 Dec 2009 - 21:47

பணம் காய்க்கும் மரம்! 705463



பணம் காய்க்கும் மரம்! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக