ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:01 pm

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் EidEf7VKRVe11YUIEYe5+141568_thumb
தேன் கெட்டுப்போகாது, ஆனால் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது லாபம் தரும். இதனால்தான் தேனீ வளர்ப்பு அதிகமான லாபம் தரும் என்று சொல்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன். உலகில் தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை நிரப்பியிருந்தன. பில்லியன் டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:03 pm

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் மரியாதையும் அதிகம் இருக்கும். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம்  பேசினோம்
"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் NPDiBjOwSp2yW0ZDfiXd+Dhandayuthapani_(10)_18470

தேனில் அடைத்தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவர்த்தி எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டல் செய்து வருகிறேன். தேனை மட்டும் மக்களுக்குக் கொடுத்தால் லாபம் குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் மதிப்புக் கூட்டல் முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சுத்தமான ஒரு கிலோ தேன் 550 ரூபாய்க்கு விற்பனையானால், தேன் நெல்லி கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:09 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:08 pm

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் IkLj8DTIQ5eMq4zbjDvk+38p3_1520419971_18401

தேனீ வளர்ப்புஒரு பொருளை மதிப்புக் கூட்டினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். அதிலும் தேனை மதிப்புக் கூட்டினால் இன்னும் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் சந்தையில் கிடைக்கும் தேன்கள் அதிகமாகப் போலியானதாகத்தான் இருக்கிறது. எங்களிடம் விசாரிக்கும் வாடிக்கையாளர்களும் மற்றவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நீங்கள் தேன் கொடுக்கக் கூடாது என்று கேட்பார்கள். அவர்கள் கேட்பதுபோலவே தேன் கொடுத்தால் அது தரமான தேனாக இருக்காது. இத்தாலிய தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேன் ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஆனால், நாட்டுத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்க முடியாது. தேன் விலை அதிகமாக இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்றுதான். குறைந்த விலையில் தேனை எதிர்பார்க்க வேண்டாம். இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ தேன் எடுப்பதுமுதல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது வரை அதிகமாகச் செலவாகிறது. மக்கள் குறைந்த விலைக்குக் கேட்கும்போதுதான் கலப்படமும் சந்தையில் அதிகமாகிறது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:10 pm

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் WNuvwnzpQhK7tD7WYTXg+38p2_1520419960_18194


எதிர்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். உண்மையான தேன் பண்ணைகள் என சொல்லிக் கொண்டு அதிகமான தேன் பண்ணைகள் போலியாக இயங்கி வருகின்றன. நாங்கள் கொடுக்கும் தரமான தேனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளி மார்கெட்டில் தேன் 350 ரூபாய்க்கு விலை போனாலும், மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள். மேல் நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் வருடம் முழுவதும் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாட்டுத் தேனீக்கள் மூலம் தேன் வருடம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கும். சீசனில் கிடைக்கும் தேனின் அளவு குறையுமே தவிர, முழுமையாக நின்று விடாது. இதுதவிர, நாட்டுத் தேனில்தான் சத்துகளும் அதிகமாக இருக்கும். சுத்தமான தேன் அதிக கெட்டித் தன்மையுடன் இருக்காது. எப்போதுமே நீர்மத் தன்மையுடன்தான் காணப்படும்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 5:12 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:11 pm

இந்தத் தொழிலை ஆரம்பிக்கும்போது வெறும் ஆயிரம் ரூபாயில்தான் ஆரம்பித்தேன். இன்று என்னிடம் இருப்பதுபோல பண்ணை அமைக்கக் 5 கோடி ரூபாய் தேவைப்படும். ஒரு தொழிலை துவங்கிவிட்டால் அதனை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர, இதுபோதும் என்று எப்போதுமே நின்றுவிடக்கூடாது. அதேபோல தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 10 இந்திய தேன் பெட்டிகளை வைத்தால் ஒரு விவசாயி வருடத்திற்குக் குறைந்தபட்சம் இண்டு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். 10 பெட்டியில் இருந்து வருடத்திற்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் விலை 550 ரூபாய். இதன் மூலமாக 55 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருடத்திற்கு 10 கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தின் விலை 2,000 ரூபாய். அது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலே சொன்ன அனைத்துமே பொதுவாக தேனீ வளர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் வருமானம்தான். எனக்கு இந்தத் தொழிலில் செலவுபோக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அடைத்தேன் கிலோ 1200 ரூபாய்க்கும், சர்க்கரை நெல்லி கிலோ 350 ரூபாய்க்கும், மெழுகுவத்தி 500 ரூபாய்க்கும், தேன் நெல்லி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், இத்தாலி தேன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வருமானம் சீசனைப் பொறுத்து மாறுபடும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian Wed Nov 07, 2018 5:48 pm

நல்ல செய்தி. இன்ப தேன் வந்து பாய்கிறது மனதினிலே!
இவரிடம் தேன் வாங்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்.?
வியாபார நுணுக்கத்தை பற்றி பேசுகின்ற இவர் இவருடைய முகவரியோ அல்லது பிராண்ட்
பெயரையோ தந்து இருக்கலாம். ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு--யாராவது இருக்கிறீர்களா உறவுகளே??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:37 pm

T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி. இன்ப தேன் வந்து பாய்கிறது மனதினிலே!
இவரிடம் தேன் வாங்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்.?
வியாபார நுணுக்கத்தை பற்றி பேசுகின்ற இவர் இவருடைய முகவரியோ அல்லது பிராண்ட்
பெயரையோ தந்து இருக்கலாம். ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு--யாராவது இருக்கிறீர்களா உறவுகளே??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284760
சீக்கிரம் விலாசம் மற்றும் போன் நம்பர்
பெற்று விடுவோம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian Thu Nov 08, 2018 9:26 am

உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 12:32 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by ayyasamy ram Thu Nov 08, 2018 1:42 pm

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் 8POvWxLRkOTbmZEGZ1qN+IMG_2074
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum