புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_vote_lcapஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_voting_barஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_vote_rcap 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_vote_lcapஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_voting_barஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' I_vote_rcap 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:19 am

1) சுட்டுப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அது காண், இது காண், அது செய், இது செய், அது தா, இது தா, அது பார், இது பார், இவை சிறந்தவை, அவை கடினமானவை,

இவை பார்க்கத் தகுந்தன.

2) வினாப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எது கண்டார்? ஏது கண்டாய்? யாது காண்பாய்?

எது செய்தாய்? ஏது செய்தாய்? யாது செய்வாய்?

எது தந்தாய்? ஏது தருவாய்? யாது தருவாய்?

எது படித்தாய்? ஏது பெற்றாய்? யாது பெற்றாய்?

எவை தவறு? யாவை போயின?

3) முதல் வேற்றுமையில் புணர்ந்து நிற்கும் வல்லின எழுத்துகள் மிகா. (முதல் வேற்றுமை - எழுவாய்; உருபு இல்லை)

எ-டு.

புலி கண்டது, எலி செய்தது,

குதிரை தாண்டியது, கழுதை பார்த்தது,

மாடு பாய்ந்தது, கிளி பேசும்,

அரிசி கொதிக்கிறது, உலகு போற்றும்,

மலர் பூத்தது, கிளி கொஞ்சியது,

வண்டி சென்றது, பேய் திரிந்தது,

பாம்பு சீறிற்று.

4) மூன்றாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

என்னொடு + கற்ற = என்னொடு கற்ற

என்னொடு + சிரித்த = என்னொடு சிரித்த

பொன்னொடு + தந்த = பொன்னொடு தந்த

என்னொடு + போந்த = என்னொடு போந்த

சேரனொடு + கண்ணன் வந்தார் = சேரனொடு கண்ணன் வந்தார்.

5) ஆறாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எனது கை, எனது சடை

எனது தலை, எனது பல்

6) விளித் தொடர்களில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அண்ணா கேள், மகளே போ

தந்தையே தா, மகனே பார்

பெண்ணே பார், கனவே கலையாதே

கண்ணா தா.

7) பெயரெச்சத்துடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

ஓடிய குதிரை, ஓடுகின்ற குதிரை, திரிந்த காலம்

வந்த சிரிப்பு, வருகின்ற சிரிப்பு, பெற்ற செல்வம்

தந்த தெய்வம், தருகிற தெய்வம், படித்த பையன்

பார்த்த பெண், பார்க்கிற பெண், வென்ற தமிழன்.

8) ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணிய கண்டான்

காணிய சென்றான்

உண்ணிய தந்தான்.

9) ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணுபு கேட்டாள்

காணுபு சென்றான்

உண்ணுபு தந்தான்

காணுபு போனான்.

10) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

நாடு கண்டான், தண்ணீர் குடித்தான், மோர் குடித்தான்,

காடு சேர்ந்தான், புத்தகம் படித்தான்,

புளி கரைத்தான், வீடு இடித்தான், காது கடித்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:20 am

11) ‘படி’ என்று முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

தரும்படி கேட்டான், பேசும்படி சொன்னார்,

வரும்படி சொன்னான், உண்ணும்படி வேண்டினார்,

எழுதும்படி தந்தான், சொல்லும்படி பேசினான்.

12) அகரவீற்று வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சென்றன பசுக்கள்

பறந்தன பறவைகள்

விழுந்தன கதிர்கள்

பொழிந்தன கார்மேகங்கள்

வந்தன கழுதைகள்

நடந்தன கால்கள்

13) வியங்கோள் வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

வாழ்க தலைவர், வாழ்க கலை,

வீழ்க கயவர், வாழ்க தலைவி,

வாழ்க தமிழ், வாழ்க பாரதம்,

வாழ்க தமிழகம், வீழ்க பகைவர்,

ஒழிக துரோகம்.

14) வினைத்தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

குடி தண்ணீர், பாய் புனல், வளர்பிறை, குடிநீர்,

பழமுதிர் சோலை, இடு பொருள், சொறி சிரங்கு,

வடி தேன், செய் கடன், சுடு சோறு,

உயர் குணம், சுடு காடு, உறை பொருள்,

நிமிர் தலை, அடு களிறு, சுடு சொல்,

ஊறு காய், எறி திரை, குளிர் காலம், தாழ் குழல்,

திருவளர் செல்வி, திருவளர் செல்வன்,

திருநிறை செல்வன், திருநிறை செல்வி.

15) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவ்வளவு கண்டேன்

எவ்வளவு கொடுத்தாய்

இவ்வளவு பேசினாய்

எவ்வளவு செய்தாய்.

16) ஆ, ஏ, ஓ என்னும் ஈறுகளையுடைய வினாப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவனா கண்டான், அவனே கண்டான், அவனோ கண்டான்

இவனா செய்தான், இவனே செய்தான், இவனோ செய்தான்

அவனா தந்தான், அவனே தந்தான், அவனோ தந்தான்

இளங்கோவா பார்த்தான், இளங்கோவே பார்த்தான்,

இளங்கோவோ பார்த்தான்.

17) எட்டு, பத்து தவிர எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஒரு புத்தகம், ஒன்று சாப்பிடு, ஒன்று கூடுவோம், ஒன்று செய்,

ஒரு செயல், ஒரு பாடம், ஒரு கோடி

இரண்டு பசுக்கள், இரண்டு கண்கள், இரண்டு காளைகள், இரு கண்கள்

மூன்று காளைகள், மூன்று தமிழ், மூன்று கனிகள்

நான்கு திசைகள், நான்கு பிள்ளைகள், நான்கு படைகள்

ஐந்து கால்கள், ஐந்து பழங்கள், ஐந்து பொறிகள்

அறு தொழில், ஆறுபடை, ஆறு காடுகள், அறுசீர், அறுபதம்

ஏழு கடல்கள், ஏழு பிறப்பு, ஏழு சிறப்பு, ஏழு தினம்

ஒன்பது தானியம், ஒன்பது பறவைகள்.

18) அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயருடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சில கழுதைகள், சில பன்றிகள், சில பொருள்கள், சில பதர்கள்,

பல பெயர்கள், பல காட்சிகள், பல கேள்விகள், பல சொற்கள், பல தடைகள்

19) வன்தொடர் ஒழிந்த ஏனைய குற்றியலுகரங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஆறு தலை, எஃகு சிறிது

விறகு பெரிது, பந்து தந்தான்

செய்து போனான்.

20) நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின்வரும் வலி மிகா.

எ-டு.

வள்ளுவர் கோட்டம்

ஆசிரியர் சம்பளம்

தேன்மொழி கணவன்

கண்ணகி கோயில்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:21 am

21) உம்மைத் தொகையில் வலி மிகா.

எ-டு.

தாய் தந்தை

இரவு பகல்

செடி கொடி

பொரி கடலை

வெற்றிலை பாக்கு

அக்கா தங்கை

இட்டலி தோசை

பூரி கிழங்கு

(இராப் பகல், ஏற்றத் தாழ்வு - இவற்றில் மட்டும் விதிவிலக்காக வலி மிகும்.)

22) விளித் தொடரில் வலி மிகா.

எ-டு.

அழகா கொடு

செல்வி சொல்

மணி தா

செல்வா பார்

23) நிறுத்தக் குறிகளின் பயன்பாட்டால் கீழ்க்காணும் இடங்களில் வலி மிகாது.

(அ)ஒற்று இட வேண்டிய சொல்லின்பின் கால்புள்ளியைப் பயன்படுத்துவதால் ஒற்று மிகுவது தவிர்க்கப்படுகிறது.

எ-டு.

கேட்பதற்கு, காது கூர்மையாக இருக்கவேண்டும்.

அதைச் செய்வதற்கு, பணம் தேவைப்படும்.

அதற்கு மாற்றாக, பட்டாடை எடுத்தாள்.

(ஆ)வருமொழி மேற்கோள் குறிக்குள் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

இரு சொற்கள் இணைவதை ‘புணர்ச்சி’ என்கிறோம்.

அதனை ‘தினமணி’யில் காணலாம்.

நகரின் பெயரை ‘சென்னை’ என அரசு மாற்றியது.

(இ) வருமொழி அடைப்புக் குறியின் உள்ளேயும் வெளியேயும் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

எனக்கு அவரை (பாடலாசிரியராக) தெரியாது.

எனக்கு அவரை (ஆசிரியராக) தெரியாது.

உடற்கூறியலை (யயேவடிஅல) பற்றிய நூல்.

(ஈ) வருமொழி சுருக்கக் குறியீடாக இருந்தால் வலி மிகாது.

எ-டு.

மின்னிணைப்பை தமிவா (தமிழ்நாடு மின்சார வாரியம்) துண்டித்தது.

24) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர இதர பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வலி மிகா.

எ-டு.

செய்கின்ற பணி பெரிய தந்தை வந்த பையன்

காணாத கண் பெரிய புராணம் ஓடாத குதிரை

பேசாத படம் இனிய பாடல் பறந்த புறா

வாடாத பூ

25) அன்று, இன்று, என்று, ஆவது, போன்று, அடா, அடி என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அன்று கேட்டார்

இன்று சொன்னார்

என்று தருவார்?

அவரைப் போன்று கற்றவர் யாருளர்?

அவராவது கொடுப்பதாவது?

யாரடா செல்வதங்கு?

ஏனடி செல்கிறாய்?

26) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வளவு பெரிய வீடா?

இவ்வளவு சிறிய வீடா?

எவ்வளவு கொடுத்தார்?

27) அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வாறு சொன்னார்.

அவ்வாறு செய்திருப்பானோ?

இவ்வாறு போர் நடந்துவிடுமா?

இவ்வாறு கூறினார்.

எவ்வாறு செய்தல் வேண்டும்?

எவ்வாறு கேட்டார்?

28) அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தனை கேள்விகளா? அத்தனை குரங்குகளா?

இத்தனை பாடல்களா? இத்தனை கோயில்களா?

எத்தனை சிரமங்கள் உள்ளன? எத்தனை பசுக்கள் உள்ளன?

29) அத்தகைய, இத்தகைய, எத்தகைய; அன்றைய, இன்றைய, என்றைய; அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட; அப்போதைய, இப்போதைய, எப்போதைய; பின்னைய, நேற்றைய, நாளைய - - என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தகைய திறமை உள்ளது.

அத்தகைய பேச்சைக் கேட்டதுண்டா?

இத்தகைய செயலை முடிக்க முடியாது.

இத்தகைய தன்மை கொண்டவர்.

எத்தகைய மனிதர்கள் அவர்கள்?

எத்தகைய சால்பு உடையவர்?

அன்றைய செய்தி விரும்பத்தக்கதன்று.

அன்றைய கோட்பாடுகள்

இன்றைய தகவல் என்ன?

இன்றைய கடமைகள்

என்றைய செய்தி இது?

என்றைய பழக்கவழக்கம்?

அப்படிப்பட்ட பெரியவர் இவர்தாமா?

அப்படிப்பட்ட கோவில் இதுவா?

இப்படிப்பட்ட செயலைச் செய்யாதீர்.

இப்படிப்பட்ட காப்பியம் இது.

எப்படிப்பட்ட குடும்பம் அது?

எப்படிப்பட்ட கற்பனை இது?

அப்போதைய பழக்க வழக்கங்கள்

இப்போதைய பண்பாட்டுச் சிறப்புகள்

எப்போதைய கோட்பாடுகள்?

முன்னைய தூற்றுதல்

பின்னைய பாராட்டுகள்

நேற்றைய தடைகள்

நாளைய காட்சிகள்.

30) இரண்டாம் வேற்றுமை உருபாகிய ‘ஐ’, நான்காம் வேற்றுமை உருபாகிய‘கு’ ஆகிய இவ்விரண்டைத் தவிர, ஏனைய வேற்றுமை உருபுகளின் பின் வலி மிகா.

எ-டு.

என்னோடு சேர்ந்துவிடு. (இங்கு மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பதன் பின் வலி மிகவில்லை)

எங்களது பூமி - ‘அது’ ஆறன் உருபு. வலி மிகவில்லை.

பாலொடு தேன் கலந்தற்றே - ஒடு

மரத்திலிருந்து பறித்தான் - இல்

குரங்கது குட்டி - அது

என்னுடைய புத்தகம் - உடைய

மலையினின்று பாய்ந்தான் - இன்

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:22 am

31) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

பறவை பிடித்தான்.

தமிழ் படித்தான்.

32) மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

கை தட்டினான் - (கையால் தட்டினான்)

33) நான்காம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

சிறை சென்றான் - (சிறைக்குச் சென்றான்)

34) ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

வரை பாய்ந்தான் - (வரையிலிருந்து பாய்ந்தான்)

35) ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

ஊர் தங்கினான் - (ஊரின்கண் தங்கினான்)

36) நிலைமொழி உயர்திணையாய் அமையும் எந்தப் பெயர்த்தொகையிலும் வலி மிகா.

எ-டு.

தோழி கூற்று

திருத்தொண்டர் திருக்கோயில்

ஆசிரியர் சம்பளம்

பெரியார் பேரன்

மேற்கண்ட தொடர்களெல்லாம், ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும், நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் அமைந்தபோதிலும், நிலைமொழி உயர்திணை ஆதலால், வலி மிகவில்லை.

37) அன்று, பிறகு, முன்பு, உடைய, உள்ள, உரிய, ஆன, வரை, கொண்டு, தக்க, தகுந்த, ஏற்ற - ஆகியன வலி மிகாமல் புணரும் சொல்லுருபுகளாகும்.

எ-டு.

அன்று - திங்களன்று தேர்வு நடைபெறும்.

பிறகு - அடுத்த தலைவர் யாரென்று பிறகு பார்ப்போம்.

முன்பு - வீட்டின் முன்பு செடிகள் வளர்ந்துள்ளன.

உடைய - யாருடைய காசும் தேவையில்லை.

உள்ள - அவருக்குள்ள செல்வாக்கு அளப்பரியது.

உரிய - ஒவ்வொருவர்க்கும் உரிய பங்கு கிடைக்கும்.

ஆன - சிறந்த இயக்குநருக்கான பரிசு ஒரு தமிழருக்குக் கிடைத்தது.

வரை - காடு வரை பிள்ளை

கொண்டு - மனிதன் இறக்கும்போது கொண்டு செல்வது யாதுமில.

தக்க - படிப்புக்குத் தக்க பதவி இன்னும் கிடைக்கவில்லை.

தகுந்த - வேலைக்குத் தகுந்த சம்பளம் தரவில்லை.

ஏற்ற - மனநிலைக்கு ஏற்ற சோகப் பாட்டு காதில் விழுகிறது.

இந்தச் சொல்லுருபுகள் வலி மிகாமல் புணரும்.

38) முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

நட கோவலா

வா சாத்தா

கொடு தேவா

எறி பூதா

39) எதிர்மறைப் பெயரெச்சங்களில் வலி மிகா.

எ-டு.

செல்லாத பணம்

கறவாத பசு

கேளாத செய்தி

முற்றாத தேங்காய்

40) சிறிய, பெரிய - என்னும் குறிப்புப் பெயரெச்சங்களின் பின் வலி மிகா.

எ-டு.

சிறிய + கண்ணாடி = சிறிய கண்ணாடி

சிறிய + பெண் = சிறிய பெண்

பெரிய + கொட்டாய் = பெரிய கொட்டாய்

பெரிய + பாட்டி = பெரிய பாட்டி

பெரிய + புத்தகம் = பெரிய புத்தகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:26 am

41) மென்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

கண்டு களித்தான்

வந்து சேர்ந்தான்

சென்று திரும்பினான்

வந்து போனான்

உண்டு படுத்தான்

வென்று பிடித்தான்

42) இடைத்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

பெய்து கெடுத்தது

நெய்து சேர்த்தான்

கொய்து தின்றான்

செய்து பார்த்தான்

43) உயிர்த்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

அழுது கலங்கினான்

உழுது களைத்தான்

ஆராயாது செய்தான்

அழுது தீர்த்தான்

(குறிப்பு :
வன்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சங்கள் தவிர,
ஏனைய குற்றுகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலி மிகா.)

44) ஆவது, அம்ம, மன்ற, வாளா, சும்மா - என்னும் இடைச்சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

ஆவது : நானாவது போய்ப் பார்த்திருக்க வேண்டும்.

அவனாவது சென்றானா?

அம்ம : அம்ம கொடிது

மன்ற : மன்ற தெளிந்தார்

வாளா + சென்றான் = வாளா சென்றான்

சும்மா + போனான் = சும்மா போனான்

45) சால, தவ, தட, குழ - என்னும் உரிச்சொற்களின் பின் வலி மிகும்.

ஏனைய உரிச்சொற்களின் பின் (உறு, நனி, கடி, கூர், மா, கழி, மழ - என்னும் உரிச்சொற்களின் பின்) வலி மிகா.

எ-டு.

உறு: உறு பொருள் கொடுத்தும் உதவினான்.

நனி : நனி தின்றான் சோற்றை.

கடி : கடி காவல் நிறைந்த வீடு.

கூர் : கொடுமை கூர் சித்தியின் செயல்களைப்

பொறுக்க முடியவில்லை.

மா : மா பெரும் கூட்டம் நடந்தது இங்கு.

கழி : கழி பேருவகை கொண்டான் காதலன்.

மழ : மழ களிறு இங்கே உள்ளது.

46) அடுக்குத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

பார் பார்

பாம்பு பாம்பு

போ போ

தா தா

47) இரட்டைக் கிளவிகளில் வலி மிகா.

எ-டு.

சிலு சிலு, கல கல, பள பள, சல சல, தள தள, குவா குவா, தக தக, பட பட,கிடு கிடு, குடு குடு

சிலுசிலு - சிலுசிலுவெனக் குளிர் அடிக்கிறது.

கலகல - காற்று கலகலவென வீசுகிறது.

பளபள - பளிங்குத் தரை பளபளவெனக் காட்சியளிக்கிறது.

சலசல - தென்னங்கீற்று சலசலவென ஓசையிட்டுக்

காற்றில் அசைகிறது.

தகதக - தங்க நகை தகதகவென மிளிர்ந்தது.

குவா குவா - குழந்தை குவா குவாவென ஓசையிடுகிறது.

தளதள - அப்பெண் தளதளவென அழகுடன் இருந்தாள்.

கிடுகிடு - கிடுகிடு பள்ளம்

படபட - படபடவென்று பேசினான்.

48) ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதியில் வலி மிகாது.

எ-டு.

எழுத்து + கள் = எழுத்துகள்

தோப்பு + கள் = தோப்புகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்

பொருள் + கள் = பொருள்கள்

நாள் + கள் = நாள்கள்

49) வடமொழி, ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள்
வருமொழியாக வரும் தொடர்களில் வலி மிகுவதில்லை.

எ-டு.

பாத + காணிக்கை = பாத காணிக்கை

பதி + பக்தி = பதிபக்தி

பாச + தீபம் = பாச தீபம்

பந்த + பாசம் = பந்த பாசம்

தாலி + பாக்கியம் = தாலி பாக்கியம்

தெய்வ + தரிசனம் = தெய்வ தரிசனம்

தேச + பக்தி = தேச பக்தி

50) ஐகார வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஓரெழுத்துச்
சொற்களாய் வந்து, அவற்றொடு ‘கள்’ விகுதி சேரும்போது
வலி மிகா.

எ-டு.

கை + கள் = கைகள்

பை + கள் = பைகள்

Postayyasamy ram Wed Nov 07, 2018 11:29 am

51) ‘நல்ல’, ‘தீய’, ‘அரிய’ எனும் பண்புச் சொற்களை அடுத்து வரும்
வல்லினம் மிகா.

எ-டு.

நல்ல + பாம்பு = நல்ல பாம்பு

நல்ல + கிணறு = நல்ல கிணறு

தீய + பழக்கம் = தீய பழக்கம்

தீய + குணங்கள் = தீய குணங்கள்

அரிய + செயற்பாடுகள் = அரிய செயற்பாடுகள்

அரிய + காட்சி = அரிய காட்சி

52) ‘சார்பாக’, ‘தொடர்பாக’ உயர்திணைப் பெயர்ச்சொல்லுடன்
‘சார்பாக’, ‘தொடர்பாக’ என்னும் ஒட்டுகள் வந்து சேரும்பொழுது
வல்லினம் மிகா.

எ-டு.

மாணவர் + சார்பாக = மாணவர் சார்பாக

உறுப்பினர் + தொடர்பாக = உறுப்பினர் தொடர்பாக

53) ‘போது’, ‘படி’, ‘படியால்’பெயரெச்சத் தொடரின் ஒட்டுகள்
‘போது’, ‘படி’, ‘படியால்’ ஆகியன வரும்போது வல்லினம் மிகா.

எ-டு.

அவன் சென்ற + போது = அவன் சென்றபோது

அவன் செய்த + படி = அவன் செய்தபடி

அவன் சொன்ன + படியால் = அவன் சொன்னபடியால்

54) ‘தொறும்’ - ‘தோறும்’பெயர்ச்சொல்லொடு ‘தொறும்’,
‘தோறும்’ என்னும் பின்னொட்டுகள் வந்து புணரும்பொழுது
வல்லினம் மிகா.

எ-டு.

நகர் + தோறும் = நகர்தோறும்

மனை + தோறும் = மனைதோறும்

கல்லூரி தோறும் = கல்லூரிதோறும்

நாடு + தொறும் = நாடு தொறும்

பள்ளி + தொறும் = பள்ளி தொறும்

காடு + தொறும் = காடு தொறும்

55) ‘கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’, ‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’எழுவாயாக நிற்கும்
பெயர்ச் சொற்களுடன் ‘கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’,‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’
ஆகிய ஒட்டுகள் சேரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

தலைவர் + கூட = தலைவர்கூட

நாடு + பற்றி = நாடு பற்றி

ஆசிரியர் + பொருட்டு = ஆசிரியர் பொருட்டு

பசு + குறித்து = பசு குறித்து

ஆடு + தவிர = ஆடு தவிர

56) அம்மை, அப்பர், மாமி, அண்ணி, தந்தை, தம்பி, தங்கை உள்ளிட்ட
முறைப் பெயர்களையும், அம்மா, அப்பா, மாமா, மாமி, அண்ணா,
அண்ணி, தம்பி, அக்கா உள்ளிட்ட முறைவிளிப் பெயர்களையும்
அடுத்துவரும் வல்லினம் மிகா.

எ-டு.

முறைப் பெயர்கள்

அம்மை கோயிலுக்குச் சென்றுள்ளார்

அப்பர் சோறு சாப்பிட்டார்

மாமி சென்றாள்

அண்ணி கூப்பிட்டார்

தந்தை தாங்கினார்

தம்பி பார்த்தான்

தங்கை பூச்சூடினாள்

முறைவிளிப் பெயர்கள்

அம்மா பசிக்கிறது

அப்பா செல்லலாம்

மாமா கொடுப்பீர்

மாமி சாப்பிடுவீர்

அண்ணா செல்வீர்

அண்ணி கேட்பீர்

தம்பி படிப்பாய்

தங்கை பாடுவாய்

அக்கா தருவீர்

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய
‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’
நூலிலிருந்து...)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 1:12 pm

வல்லினன எழுத்துக்கள்
மிகும் மற்றும் மிகா இடங்கள்
பற்றிய அருமையான இலக்கண
விளக்கம்.
ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 3838410834 ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 3838410834 ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 3838410834
ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 103459460 ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 103459460 ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' 103459460
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக