புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
100 Posts - 48%
heezulia
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
7 Posts - 3%
prajai
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
227 Posts - 51%
heezulia
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:13 pm

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

கும்பகோணம்.  வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். 

கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்.

முன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா?

                         கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு 'வெங்கடா லாட்ஜ்' அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் 'பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை' காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். 'மங்களாம்பிகா' இட்லி... அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு!

                         எல்லா உணவகங்களிலுமே கலைஞர்களுக்குத் தனி மரியாதை; குறிப்பாக இசைக் கலைஞர்களுக்கு. அவர்கள் பாராட்டினால்தான் சமையல் கலைஞர்களின் மனது நிறையும். இசைக் கலைஞர்களும் அவர்கள் பாஷையிலேயே மனதாரப் பாராட்டுவார்கள்: "ஓய், ஒரு ததிங்கினத்தோமே போட்டுட்ட ஓய்..!'' - கும்பகோணத்துக்கே உரிய பண்பு இது. நல்ல விஷயங்களை மனதாரப் பாராட்டுவது! இன்று கும்பகோணத்தில் அத்தகைய அற்புதமான கலைஞர்களும் இல்லை; அந்த நாளைய கடைகளும் இல்லை. சரி... பூரி கதைக்கு வருவோம்.

                         நம்மூரில் பூரி வந்த புதிதில் மைதா பூரி கிடையாது. நயமான  கோதுமையிலேயே பூரி செய்தார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள தொட்டுக்கை என்ன தெரியுமா? சுவையான பாஸந்தி. ஆமாம். ரொம்ப தாமதமாகவே உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடம் வந்தது. கடைக்காரரிடம் உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். 

இல்லாவிடில், பூரியோடு பாஸந்தியே வரும். இப்போது மாதிரி அல்ல. பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி! சுடச்சுட பூரியைப் பிய்த்து பாஸந்தி பாலேட்டைத் தொட்டுச் சாப்பிடும் ருசி இருக்கிறதே... அதெல்லாம் ஒரு காலம்... இப்போது மாறிவிட்டது எல்லாமும். பூரியைவிட அதிகமாகிவிட்டது பாஸந்தி விலை. தவிர, பூரிக்குக் காரசாரமாக தொட்டுக்கொள்ளும் பழக்கமும் வந்துவிட்டது. 

பாஸந்தி போயேபோய்விட்டது. ஆனால், கும்பகோணம் 'முராரி ஸ்வீட்'ஸில் இன்றும் பூரி, பாஸந்தி கிடைக்கிறது. தனித்தனியாக. பூரிக்குத் தொட்டுக்கொள்ள எல்லாக் கடைகளையும்போல உருளைக்கிழங்கு மசாலா, குருமா, வெங்காயப் பச்சடி தருகிறார்கள். கேட்டால் தனியாக பாஸந்தியும் தருகிறார்கள்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:14 pm

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரி லால் சேட் 1915-ல், ஒரு சின்ன இடத்தில் தொடங்கிய கடை இது. காலையில் அவரே பலகாரம் செய்வார். மாலையில் அவரே வியாபாரம் செய்வார். அன்றைய காலகட்டத்தில் அவருடைய நெய் சோன்பப்டிக்கும் மிளகு காராபூந்திக்கும் பெரிய கூட்டம் இங்கு வரும். 

பின்னாளில், அவருடைய சகோதரர் ஆனந்தராம் சேட் காலத்தில் பால் இனிப்புகள் பிரபலமாயின. அவருடைய மகன் ஐ. தேவிதாஸ் சேட் காலத்தில் டிரை குலோப்ஜாமூனும் இஞ்சி பக்கோடாவும் பிரபலமாயின. இப்போது 
பூரி-பாஸந்தி! பக்குவம் கேட்டோம். "பத்துப் பங்கு பால், அரைப் பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப் பங்கு பாலடையாக சுண்ட வேண்டும். இறக்கும்போது கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்தால் பாஸந்தி. நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர் விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷங்கள் ஈரத்துணி போர்த்தி புளிக்க விட்டு போட்டு எடுத்தால் பூரி தயார்'' என்றார்கள் .

                         சுவைத்துப் பார்க்க பூரி-பாஸந்தி வருகிறது. பூரியை பாஸந்தியில் நனைத்து வாயில் வைக்கிறோம். "சொய்ங்' என்று கரைந்துபோகிறது வயிற்றுக்குள்... அவ்வளவு அருமையாக இருக்கும்.

நன்றி - whatsup !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 01, 2018 3:05 pm

krishnaamma wrote:உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரி லால் சேட் 1915-ல், ஒரு சின்ன இடத்தில் தொடங்கிய கடை இது. காலையில் அவரே பலகாரம் செய்வார். மாலையில் அவரே வியாபாரம் செய்வார். அன்றைய காலகட்டத்தில் அவருடைய நெய் சோன்பப்டிக்கும் மிளகு காராபூந்திக்கும் பெரிய கூட்டம் இங்கு வரும். 

பின்னாளில், அவருடைய சகோதரர் ஆனந்தராம் சேட் காலத்தில் பால் இனிப்புகள் பிரபலமாயின. அவருடைய மகன் ஐ. தேவிதாஸ் சேட் காலத்தில் டிரை குலோப்ஜாமூனும் இஞ்சி பக்கோடாவும் பிரபலமாயின. இப்போது 
பூரி-பாஸந்தி! பக்குவம் கேட்டோம். "பத்துப் பங்கு பால், அரைப் பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப் பங்கு பாலடையாக சுண்ட வேண்டும். இறக்கும்போது கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்தால் பாஸந்தி. நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர் விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷங்கள் ஈரத்துணி போர்த்தி புளிக்க விட்டு போட்டு எடுத்தால் பூரி தயார்'' என்றார்கள் .

                         சுவைத்துப் பார்க்க பூரி-பாஸந்தி வருகிறது. பூரியை பாஸந்தியில் நனைத்து வாயில் வைக்கிறோம். "சொய்ங்' என்று கரைந்துபோகிறது வயிற்றுக்குள்... அவ்வளவு அருமையாக இருக்கும்.

நன்றி - whatsup !
பாஸந்தி எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 01, 2018 6:18 pm

பாஸந்தி பண்ணுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று .தேவையானவை
சுத்தமான பால்/சர்க்கரை  /அகலமான வாணலி 2 /3 தென்னங்குச்சிகள் /குங்குமப்பூ --அதிகமான பொறுமை  ( சிலர் பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள் --நான் சேர்ப்பதில்லை)

எனக்கு பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று.
இதே குடும்பத்தை சேர்ந்தது ரபடி.
.ரபடி +ஜிலேபி நல்ல இணைப்பு .ஜிலேபியை ரபடியில் முக்கி முக்கி மூக்கு பிடிக்க......
ம்ம்ம்ம்ம் ( ஆக்டொபர் மாதம் 2 நாட்கள் டில்லியில் ரபடி /ஜிலேபி சுவைத்தேன்)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 01, 2018 6:54 pm

[code]சுவைத்துப் பார்க்க பூரி-பாஸந்தி வருகிறது. பூரியை பாஸந்தியில் நனைத்து வாயில் வைக்கிறோம். "சொய்ங்' என்று கரைந்துபோகிறது வயிற்றுக்குள்... அவ்வளவு அருமையாக இருக்கும்./code]
படிக்கும் போதே வாயில் எச்சில் ஊறுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Nov 02, 2018 4:14 pm

T.N.Balasubramanian wrote:பாஸந்தி பண்ணுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று .தேவையானவை
சுத்தமான பால்/சர்க்கரை  /அகலமான வாணலி 2 /3 தென்னங்குச்சிகள் /குங்குமப்பூ --அதிகமான பொறுமை  ( சிலர் பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள் --நான் சேர்ப்பதில்லை)

எனக்கு பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று.
இதே குடும்பத்தை சேர்ந்தது ரபடி.
.ரபடி +ஜிலேபி நல்ல இணைப்பு .ஜிலேபியை ரபடியில் முக்கி முக்கி மூக்கு பிடிக்க......
ம்ம்ம்ம்ம் ( ஆக்டொபர் மாதம் 2 நாட்கள் டில்லியில் ரபடி /ஜிலேபி சுவைத்தேன்)

ரமணியன்
ஐயா , அப்படியே உங்கள் கைவண்ணத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க , நானும் செய்து பார்க்கிறேன் , இப்பவே நா ஊறுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 03, 2018 3:16 pm

நேற்றிலிருந்து மடிக்கணினி ப்ராப்லம்.
திறக்கவே முடியவில்லை .
திறந்தாலும் நகராமல் ஸ்ட்ரைக் .
கொஞ்சம் காத்திருக்கவும் .வெளியில் சில வேலைகள் .
இப்பிடியே சிஸ்டம் இருந்தால் இன்றிரவுக்குள் தருகிறேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2018 4:35 pm

நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 03, 2018 4:42 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:பாஸந்தி பண்ணுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று .தேவையானவை
சுத்தமான பால்/சர்க்கரை  /அகலமான வாணலி 2 /3 தென்னங்குச்சிகள் /குங்குமப்பூ --அதிகமான பொறுமை  ( சிலர் பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள் --நான் சேர்ப்பதில்லை)

எனக்கு பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று.
இதே குடும்பத்தை சேர்ந்தது ரபடி.
.ரபடி +ஜிலேபி நல்ல இணைப்பு .ஜிலேபியை ரபடியில் முக்கி முக்கி மூக்கு பிடிக்க......
ம்ம்ம்ம்ம் ( ஆக்டொபர் மாதம் 2 நாட்கள் டில்லியில் ரபடி /ஜிலேபி சுவைத்தேன்)

ரமணியன்
ஐயா , அப்படியே உங்கள் கைவண்ணத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க , நானும் செய்து பார்க்கிறேன் , இப்பவே நா ஊறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1284034

பாஸந்தி செய்யும் முறை.
தேவை
இரு லிட்டர் -திக்கான க்ரீம் பால்,
200 கிராம் சர்க்கரை (இனிப்பு தேவைக்கேற்ப மாற்றுவது நம் கையில்)
குங்குமப்பூ 15/20 திரிகள்.(strands )
சிலர் ஏலக்காய் +பச்சை கற்பூரத்தையும் சேர்ப்பார்கள்.(எனக்கு அது பிடிப்பதில்லை)
வாய் அகன்ற அடிப்பக்கம் தடிமனான பித்தளை பாணலி அல்லது கைய்ய உருளி .
இவை இல்லையா கவலை வேண்டாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாணலி/உருளி
5/6 தென்னங்குச்சிகள் . (அதற்கு எங்கே போவது? இருக்கவே இருக்கிறது ஸ்டெயின்லெஸ் கரண்டிகள் flat பின்பாகம்.)
மிதமான சூட்டில் எரியும் அடுப்பு அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு sim மில் வைக்கவைக்கும் வசதி.
செய்முறை.
சுத்தமான பாணலியை அடுப்பில் வைத்து பாலை அதில் விட்டு காய்ச்சவும் பாணலியின் முக்கால் பாகத்திற்கு கீழாக பால் அளவு இருக்கட்டும்.
ஆரம்ப நிலையில் hi flame இல் இருந்தாலும் பரவாயில்லை. பால் கொதித்து பொங்கும் சமயத்தில் sim இல் வைத்து காய்ச்சுங்கள்.சிறிது நேரத்தில் பால் ஏடு மெலிதாக படியும். அதை அந்த தென்னகுச்சியால் பாணலியின் பக்கங்களில் ஒதுக்கவும். முதலில் மெலிதாக இருந்த பால் ஏடு நேரம் ஆக ஆக சிறிது கெட்டிப்படும் அந்த ஏடையும் பாணலியின்
பக்கங்களில் ஒதுக்கவும்.இந்த ஆடையை நாலாபுர பக்கங்களிலும் ஒதுக்கவும் .(இந்த நேரத்தில் நம்மை நாம் கவிஞர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும்.அந்த கால கவிஞர்கள் ஏடு படித்தார்கள். நாம் ஏடு பிடிப்போம்)
பொறுமை மிக அவசியம் , இரு லிட்டர் பால் காய்ச்ச காய்ச்ச வற்றி 1/5 ஆகும் 400ml லிட்டர் ஆகும் சமயத்தில் (பாலின் தரத்திற்கேற்ப 1 1/2 மணிமுதல் 2 மணி வரை ஆகலாம்
கண்ணை பாணலியில் ஓடவிடுங்கள்.பக்கங்களில் கெட்டியான ஏடு ஒட்டிக்கொண்டு இருக்கும்.பாலும் லேசாக கொதித்துக்கொண்டு இருக்கும்.இனிமேல் ஏடு இல்லை அய்யா, என்னை விடுங்கள் என்று கெஞ்சுவது போலிருக்கும்.
அப்போது அந்த சர்க்கரை அதில் போட்டு கிளறுங்கள்.அதற்கு முன் சிறிய கரண்டியில் கொஞ்சம் சூடு பாலை எடுத்து அதில் 10/12 குங்குமப்பூவை போட்டு ஊறவையுங்கள்.பாணலியின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஏடுகளை சுரண்டி கொதித்துக் கொண்டு இருக்கும் மீதமுள்ள பாலுடன் சேர்க்கவும் குங்குமப்பூ பாலையும் சேர்க்கவும்.
நல்ல வாசமிகு பாஸந்தி ரெடி. சூடு குறைந்தவுடன் சாப்பிடவும் . fridge இல் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம். ( சூடாக இருக்கும்போதே வேண்டுமெனில் மேலும் சுகரை சேர்க்கவும்.சிறிது நீர்த்துவிடும்)
நல்ல பாஸந்தி என்றால் இனிப்பான திக்கான ஏடுடன் கூடிய பால் .ஒரு ஸ்பூன் எடுத்தால் அடியில் பால் மேலே குங்குமப்பூ வாசமிகு பாலேடு .
சிலர் பொடி பண்ணிய ஏலக்காய் / வறுத்த சாரை/பிஸ்தா இவைகளை ஒன்று ரெண்டாக பொடி பண்ணி சேர்ப்பார்கள்.
இதையே வடநாடுகளில் ரபடி என்பார்கள்.

ராஜா, தீபாவளிக்கு இதை செய்தால் அதுதான் ராயல் சுவீட் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 03, 2018 4:48 pm

தென்னங்குச்சிகளை கரண்டியாக மாற்றுவது :
ஆறேழு குச்சிகளை ஒரு அடி நீளத்திற்கு வெட்டி
அதன் தலையில் ஒரு முடிச்சுப்போட்டால் பரந்த
விரிந்த fork கிடைக்கும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக