ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

4 posters

Go down

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? Empty டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

Post by ayyasamy ram Sat Nov 03, 2018 6:47 am


டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? India-team-practice1
-
india-team-practice1
----------------
டி20 ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆன வலிமை மிக்க மே.இ.தீவுகளை வெற்றிகொள்ளுமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மே.இ.தீவுகள்-இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மே.இ.தீவுகள் அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும், ஒரு நாள் தொடரை 3-1 எனவும் இழந்தது.

தற்போது இறுதிக் கட்டமாக 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. டி20 நடப்பு உலக சாம்பியனாக மே.இ.தீவுகள் உள்ள நிலையில் அந்த அணி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது.

இரண்டு தொடர்களை இழந்த நிலையில் டி20 தொடரையாவது கைப்பற்றி ஆறுதல் வெற்றியுடன் திரும்பும் முனைப்பில் உள்ளது மே.இ.தீவுகள்.
ஒரு நாள் ஆட்டத் தொடரில் அந்த அணி இரண்டு ஆட்டங்களில் தனது திறனை நிரூபித்தாலும், ஏனைய ஆட்டங்களில் சோபிக்கவில்லை.

நான்காவது மற்றும் இறுதி ஆட்டத்துக்கு மூத்த பெளலர்கள் புவனேஸ்வர், பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இது தொடரின் போக்கை மாற்றியது. இந்திய பந்துவீச்சை அந்த அணியால் சமாளிக்க முடியாமல் தோல்வியுற்றது.
தோனி நீக்கம்

அதே நேரத்தில் இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்நடைபெற்ற போதே, டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் சேர்க்கப்படவில்லை. இது நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு வழிவிடும் வகையில் தோனியே டி20 ஆட்டங்களில் இருந்து விலகுவதாக முடிவு செய்தார் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

கோலிக்கு ஓய்வு


கேப்டன் கோலிக்கு ஏற்கெனவே தீவிர ஆட்டச்சுமை காரணமாக
இங்கிலாந்து தொடருக்கு பின் ஆசியக் கோப்பையில் ஓய்வு தரப்பட்டது.
பின்னர் மே.இ.தீவுகளுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில்
விளையாடினார்.

தற்போது டி20 தொடரில் ஓய்வு தரப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பு வகிப்பார்.

வலுவான மே.இ.தீவுகள் அணி

டி20 ஆட்டத்தில் சிறப்பான அணியாக உள்ள மே.இ.தீவுகள் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பொல்லார்ட், பிரவோ, ஹோல்டர், பிராத்வொயிட், ரஸ்ஸல், ராம்தின், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரால் இந்த அணி வலிமையானதாக உள்ளது. மேலும் அந்த அணி வீரர்கள் ஏராளமானோர் ஐபிஎல் போட்டியில் அதிகளவில் ஆடிய அனுபவம் உடையவர்கள்.

முந்தைய உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 சிக்ஸர் அடித்து தனது அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தவர் கேப்டன் காரல் பிராத்வொயிட்.
முன்பு 4 முறை இரு அணிகளும் மோதியதில் மே.இ.தீவுகள் 3 முறை வென்றது.

இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா, தோனி இல்லாமை போன்றவை சிக்கலை உண்டாகும். இந்த ஆட்ட முறையில் மே.இ.தீவுகளே வலிமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம்.
டெஸ்ட், ஒரு நாள் தொடரை வென்ற நிலையில், டி20 தொடரையும் கைப்பற்ற இந்தியா தீவிரமாக முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான பார்மில் உள்ளார். ஷிகர் தவன் தடுமாற்றத்துடன் ஆடி வருகிறார். லோகேஷ் ராகுல், ஐபிஎல் போட்டிகளில் ஆடிய மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் அணிக்கு பலம் சேர்ப்பர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? Empty Re: டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 03, 2018 7:26 am

இளைஞர் பட்டாளம் புகுந்து
தெறிக்க விடக்கூடும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? Empty Re: டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

Post by ராஜா Sat Nov 03, 2018 11:47 pm

20 / 20 ஆட்டத்தை பொறுத்தவரை முரட்டு இண்டீசை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

சிறிதும் மூளை இல்லாத முரட்டு ஆட்டக்காரர்கள் அதனால் ஆளுக்கு இரண்டு மூன்று ஓவர் நின்றாலே போதும் ஆட்டத்தை மாற்றிவிடுவார்கள். இவர்களை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் இவர்களை விட காட்டடி அடிக்கும் நம்ம இளம் சிங்கங்களை இறக்கிவிடவேண்டும் , அதற்காக தான் தல தோனி சிறிய ஒய்வு எடுக்கிறார் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? Empty Re: டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

Post by ரா.ரமேஷ்குமார் Sun Nov 04, 2018 11:47 am

ஒருநாள் தொடர் போல நமக்கு சாதகமான முடிவை எதிர்பார்த்து இருக்க முடியாது .... நிச்சயம் வாணவேடிக்கைளை மேற்கு இந்திய தீவுகள் அணி ஆட்டக்கார்கள் நிகழ்த்துவார்கள் ...
இருபக்கமும் வலுவான அணி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? Empty Re: டி20 தொடர் நாளை தொடக்கம்: வலிமையான மே.இ.தீவுகளை சமாளிக்குமா இந்தியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முத்தரப்பு மகளிர் டி20 இந்தியா வெற்றி தொடக்கம்
» 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: இந்தியா தொடரை வெல்லுமா?
» இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
» இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்
» இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum