புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
9 Posts - 6%
prajai
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
21 Posts - 5%
prajai
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_m10ஏழு நல்ல பழக்கங்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு நல்ல பழக்கங்கள்.


   
   
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Dec 20, 2009 1:16 pm

ஏழு நல்ல பழக்கங்கள்.

1. நம் வாழ்க்கை நம் கையில். ( Proactive ).
நல்ல பழக்கங்களில் முதலாவதாக ஆசிரியர் சொல்வது Proactive. Proactive என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்க்க ஒரு நாள் முழுக்க முயற்சி செய்தேன். சரியான வார்த்தை கிடைக்கவில்லை / தெரியவில்லை. ஆசிரியர் கோவெ சொல்வதை அப்படியே நான் மொழி பெயர்க்காததால், பழக்கங்களுக்கு நான் வேறு பெயர்கள் கொடுத்துள்ளேன்.
Proactive என்றதுமே, ‘இதுதான் எனக்கு தெரியுமே’ என்ற எண்ணதுடன் தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஆசிரியர் விவரித்திருந்தார். அவற்றுள் சில.
அ. உயர் உள்ளல். ( A Positive Attitude ).
என் அன்பிற்கு உறியவர்களிடமே இதை கவனித்திருக்கிறேன். ‘எனக்கு ராசியே இல்லை’. ‘நான் எது பண்ணாலும் எதாவது ஒரு தடை வராமல் இருக்காது’ ‘ராகுகாலத்தில் செய்தால் சரியாக வராது’ போன்ற எதிர் மறை வாக்கியங்களுடன் தம் தினசரி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
‘நான் TV பார்த்தால் இந்தியா ஜெயிக்காது’ என்று cricket பார்க்காமல் இருந்த நண்பர்களும், ‘மச்சி, அந்த கும்பல் நம்மலயே பாத்து ஏதோ சொல்லி கிண்டலடிக்குதுடா!!’ என்று இருநூறு அடிக்கு அப்பால் நின்று வேறு எதற்காகவோ சிரித்துகொண்ருக்கும் சிலரை பார்த்து சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள்.
நல்ல பழக்கத்தின் அங்கமாக ஆசிரியர் சொல்வது இதுதான். நம்மிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளை போன்றுதான் நமது எண்ணங்கள் அமைகின்றன. நமது எண்ணங்களை பொருத்துதான் நமது உயர்வு அமைகிறது. உயர்வை அடைய, நம்மிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகளை / வாக்கியங்களை முதலில் கவனிக்கவேண்டும். சரிசெய்யவேண்டும்.
ஆ. அடுத்த அடி என்ன எடுப்பது நான்.(Stimulus and Response)
நாம் எடுக்கும் எந்த முடிவும் (Decision) அத்துடன் முடிந்துவிடுவதில்லை. ஒரு முடிவின் தொடர்ச்சியாக சில நிகழ்வுகளும்( events ) அதன் தொடர்ச்சியாக வேறு சில முடிவுகளுமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு நிகழ்வுக்கும் அதன் தொடர்ச்சியாக நாம் எடுக்கவேண்டிய முடிவுக்கும் (அல்லது தீர்மானத்திற்கும்) இடையில், அந்த தீர்மானத்தை தேர்ந்தெடுக்கும் ‘சுதந்திரம்’ நம்மிடம் உள்ளது.
இது படிப்பதற்கு மிகவும் சரியானதுபோல தோன்றுகிறது. நடைமுறையில் சாத்தியமா??
சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன். நாம் தினசரி எடுக்கும் முடிவுகளுக்கு முன் ஓரிரு வினாடி யோசித்தால் போதும்.
சில உதாரணங்களை எனக்கு வந்த ‘forward it to 10 people’ வகை ஈமெயிலில் படித்திருக்கிறேன்.
உங்கள் குழந்தை, உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை உடைத்துவிடுகிறது. அடுத்து என்ன செய்வதென்பதை தேர்வு செய்யும் உரிமை உங்களுடையது. “ஏன் பொருளை உடைத்தாய்” என்று கண்டிக்கலாம் (நீங்கள் அமெரிக்காவில் இல்லை என்றால் குழந்தையை அடிக்கவும் செய்யலாம் : ) ) அல்லது பொருட்களின் முக்கியத்துவத்தை குழந்தைக்கு சொல்லிகொடுக்கலாம். அல்லது.. குழந்தையின் கையில் கிடைக்கும் விதத்தில் நமக்கு பிடித்த பொருட்களை வைக்காமல் இருக்கலாம்.
முடிவெடுக்கும் முன், குழந்தையை எப்படி கண்டித்தாலும் உடைந்த பொருள் திரும்ப வரப்போவதில்லை என்று தெரிந்துகொண்டால், தேர்வு
செய்வது சுலபம். இதேபோல பல உதாரணங்கள் உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் உங்கள் முடிவுகளை தேர்வு செய்கிறீர்களா??

இ. வினை நலம் (Act or Acted upon)
நமது இயற்கையான குணம் செயல்களை/கடமைகளை செய்வது. செயல் படுத்தப்படுவது அல்ல. செயல்களை நாமே முன் வந்து செய்வது, ஆக்கப்பூர்வமாக செயல் படுத்துவது போன்றவை நம் இயற்கையான குணங்கள். Proactive பழக்கத்தின் அங்கமாக ஆசிரியர் சொல்வது இதைத்தான். நம் கடமைகள் என்ன என்பதை நாமே உணர்ந்து, அதற்கான முன் முயற்சிகளை நாமே எடுத்து, அதில் வெற்றி காண்பதற்கான வழிகளைத்தேடி, அதன் வழி நடத்திச்செல்லுதல் வேண்டும். நம்முடைய கடமைகள் என்ன என்பது தெரிந்திருந்தால் இன்னொருவரின் கட்டளைக்காக காத்திருக்க மாட்டோம்.
என்னுடன் வேலை பார்த்தவர்கள் சிலரிடம் கவனித்திருக்கிறேன். “என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டால் “இந்த வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்பார்கள். “இந்த வேலையால் பயன் பெறப்போகிறவர்கள் யார் யார்” “இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த வேலை என்ன?” பொன்ற கேள்விகளுக்கு “என் (மேனேஜர்) மேலாளர் மட்டுமே அறிவார்” என்பதுதான் பதிலாக வரும். கொடுத்த வேலையை ( கொடுத்த வேலையை மட்டும் )
செய்பவர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
ஈ. குறுகிய வட்டம் (Circle of concern and influence)
இந்த பகுதியில் ஆசிரியர் சொல்லும் கருத்துகளை நான் இதற்குமுன் வேறெங்கும் படித்ததில்லை.
நம் மனது சாதாரணமாக எப்பொழுதும் எதையாவது நினைத்துக்கொண்டுதான் இருக்கிறது. வெவ்வேறு விதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்த சிந்தனையில் நமது கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறோம் என்பதை ஆராயச் சொல்கிறார். முதலில் நாம் சிந்திக்கும் விஷயங்களை அட்டவணை செய்யச் சொல்கிறார். உதாரணமாக..
1. அலுவலக வேலைகளில் உள்ள சவால்கள்.
2. குடும்பத்தாரின் உடல் நிலை.
3. சிம்ரனுக்கு திருமணமாகிவிட்ட கதை.
4. க்ரிக்கெட்டில் இந்தியா வெல்ல வேண்டும் என்ற கவலை.
5. தலைவர் படம் நூறு நாட்கள் ஓடவேண்டுமே என்ற கவலை.
6. ‘மெட்டிஒலி’ நிர்மலாவின் நிலை.
7. படிக்க வேண்டிய பாடங்கள்.
8. எழுதப்போகிற தேர்வுகள்.
9. வரப்போகிற பட்ஜெட்.
10. அடுத்து போகவேண்டிய பயண திட்டங்கள்.. என அட்டவணை நீண்டு கொண்டே போகிறது.
இப்பொழுது, ஒரு தாளில் (பேப்பரில்) ஒரு மாவட்டம் (பெரிய வட்டம்) போடச் சொல்கிறார்.



நமது அட்டவணையில் இருந்து, நாம் “கவனத்தில் கொள்ள வேண்டிய” சிந்தனைகளின் எண்களை மட்டும் வட்டத்திற்குள் எழுதச் சொல்கிறார். உதாரணமாக,



பின், வட்டதிற்குள் ஒரு சிறிய வட்டம் போடச் சொல்கிறார். பெரிய வட்டத்திற்குள் இருக்கும் சிந்தனைகளில், எந்த சிந்தனைகளில் நாம் கவனம் செலுத்தினால் செயல்படுத்த முடியுமோ அந்த சிந்தனைகளின் எண்களை மட்டும் சிறிய வட்டத்தில் எழுதச் சொல்கிறார். ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.



நம்மால் செயல்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டும் நமது கவனத்தை செலுத்துவதன் மூலம் காரியங்களில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. இதனால் காரியங்களை துரிதமாக முடிக்கவும் முடிகிறது. சிறிய வட்டத்தில் மேலும் எண்களை சேர்க்க முடிகிறது. சிறிய வட்டம் பெரிதாக்கிக்கொண்டே போகிறது.
மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷங்களில் செலவிடும் நேரம் குறைகிறது. முழு கவனமும் செலுத்த முடிவதில்லை. சிறிய வட்டத்திலிருந்து எண்கள் சிதறுகின்றன. வட்டம் சுறுங்குகிறது.
ஆசிரியர் கூறியபடி சிறிய வட்டத்திற்குள் வரும் சிந்தனைகளை அடையாளம் காணும்முன் வட்டத்திற்குள் வராத சிந்தனைகளை அடையாளம் கண்டு விரட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். புதிதாக ஒரு விஷயத்தை சிந்திக்கும்முன், அது வட்டத்திற்குள் இடம் பெறுகிறதா? என்பதையும் அடையாளம் காண முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Dec 20, 2009 1:31 pm

2.எல்லையை தொடும்வரை எனது விழி தூங்காது’ ( Begin with the End in Mind )

Proactive பழக்கம் முடிந்து அடுத்த பழக்கத்துக்கு வரும்போது பக்கங்கள் தொண்ணூறை கடந்திருந்தன.
Begin with the End in Mind. பெயரிலேயே ஆசிரியர் சொல்லவருவது கொஞ்சம் புரிவதுபோல் இருந்தது. இந்த பழக்கத்தையும் ஆசிரியர் சில பிரிவுகளாகப் பிரித்து விளக்கியிருக்கிறார்.
அ. எண்ணித் துணிக கருமம் (செயல்).
“இந்த உலகத்தில் மனிதனால் படைக்கப்படும் யாவும் இரண்டு முறை படைக்கப்படுகின்றன” என்றார் ஆசிரியர். இதைப் படித்தவுடன், கடவுள், முன் ஜென்மம், பின் ஜென்மம் என மர்மக் கதை சொல்லப்போகிறாரோ, என்று நினைத்தேன். அப்படி எதுவும் இல்லை. ஆசிரியர் சொல்லும் முதல் முறை நம் மனதில் படைக்கும் படைப்பு. உண்மைதான். ஒரு வீடு கட்டும் முன், வாசல் இப்படி இருக்கவேண்டும், அறைகள் இப்படி இருக்கவேண்டும் என்று முதலில் நம் மனதில் ஒரு வீடு கட்டுகிறோமே, அதைச் சொல்கிறார்.
ஒவ்வொன்றையும் இரண்டு முறை படைத்தாலும், கவனக்குறைவாலும், கவனச்சிதறல்களாலும் முதல் முறை முழுமையாகப் படைப்பதில்லை. அப்படி இல்லாமல் முதல் படைப்பை முழுமையாகச் செய்யும்போது இரண்டாவது படைப்பு முழுமையாக அமைகிறது.

ஆ. யார் தலைவர்? (Leader v/s Manager).

இந்த விளக்கத்தையும் நான் இதற்குமுன் படித்ததில்லை.
ஒரு மென்பொருள் பொறியாளரை, (software engineer) அவர் பணி மேலாளர்(project manager) ஆக விரும்புகிறாரா? அல்லது பணித்தலைவர் (project leader) ஆக விரும்புகிறாரா? என்று கேட்டால் என்ன சொல்வார்? என்னை நேற்று கேட்டிருந்தால் பணி மேலாளர் என்று சொல்லியிருப்பேன். கணிப்பொறித் துறையில், பணித்தலைவர் என்பவர் பணி மேலாளருக்குக் கீழ் இயங்கிக்கொண்டிருக்கிறார். சிறிய குழுவை நடத்திச்செல்பவர் பணித்தலைவராகவும், பெரிய குழுவை நடத்திச்செல்பவர் பணி மேலாளராகவும் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் அளிக்கும் விளக்கம் வேறு விதமாக உள்ளது.
மேலாளர்(Manager) என்பவர் ஒரு செயலை சரியாக செய்பவர். தலைவர்(Leader) சரியான வேலையை செய்பவர்.
ஒரு செயல் செய்யும் விதத்தை ஆராய்ந்து, சிறப்பாக அமைத்து அதை நன்றாக செய்து முடிப்பவர்தான் மேலாளர். எந்த செயலைச் செய்யவேண்டும் என்று ஆராய்ச்சி செய்து தேர்வு செய்பவர்தான் தலைவர்.
உதாரணமாக.
காட்டுக்குள் வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட ஒரு குழுவின் பாதையை செப்பணிட்டு முன்னின்று நடத்துச் செல்பவர் மேலாளர். இந்த வழியில் சென்றால் வெளியில் செல்ல முடியாது, மாற்று வழியில் செல்லவேண்டும் என்று சரியான வழியை தேர்வு செய்பவர் தலைவர். இப்போது சொல்லுங்கள், நீங்கள் மேலாளராக இருக்க விரும்புகிறீர்களா? தலைவராக விரும்புகிறீர்களா?
தலைவர்கள் படைப்பது முதல் படைப்பு. அவர்களின் எண்ணத்தில் உருவாகி பார்வையில்(vision) படைக்கப்படுகிறது. அந்த படைப்பு மேலாளர்களின் மேற்பார்வையில் இரண்டாவது படைப்பாகிறது.

இ. நாமே நம் தலைவர். (We are our leader)

நமக்கான காரியங்களில், நாமே நமக்கு தலைவராக இருந்து முதல் படைப்பை முழுமையாக படைக்கவேண்டும். நமது காரியத்தின் முழு விபரங்களையும் அறிய வேண்டும். அப்படி செய்யும்பொழுது நமது இலக்கு என்ன என்பது தெளிவாகிறது. இலக்கு தெரியும்பொழுது அதை நோக்கி செல்லும் பாதைகள் தெளிவாகின்றன.
இதை செயல்படுத்துவதற்காக தற்போது ஈடுபட்டுள்ள காரியங்களையும் அவற்றின் இலக்குகளையும் அட்டவணையிடச் சொல்கிறார்.
உதாரணமாக
படிக்க வேண்டிய பாடங்கள். மாத இறுதிக்குள் இத்தனை பாடங்கள் படிக்க வேண்டும்.
எழுதப்போகிற தேர்வுகள். 80 % மதிப்பெண்கள் வாங்க வேண்டும்.
நிருவன மேளாண்மை வருட இறுதிக்குள் இத்தனை சதவீத விற்பனை/லாபம்.
இப்படி முழுமையாக படைக்கப்பட்ட இலக்கை நோக்கி செயல்படும்பொழுது / எல்லையை நோக்கி பயணப்படும்பொழுது, நமது விழிகள் உறங்காது செயல்பட்டாலும், அயர்வு தெரிவதில்லை என்கிறார் ஆசிரியர்.
மேலும், ஆசிரியர் இப்பகுதியில், இடது மற்றும் வலது மூளையின் (Left and right Brain) செயல்பாடுகள் குறித்து விளக்கமாக கூறி ‘ஆராரோ ஆரிரரோ பாடுகிறார் : ). நானும் ‘எசப்பாட்டு’ பாடாமல், அடுத்த பழக்கத்துக்கு செல்கிறேன்

செய்வதை திருந்தச் செய் (Put First things First)

முதல் படைப்பின்(மனதில் கட்டும் வீடு) முக்கியத்துவத்தை முந்தய பழக்கத்தில் சொன்ன ஆசிரியர், இரண்டாவது படைப்பை(நிலத்தில் கட்டும் வீடு) திறம்பட செய்யும் முறைகள் பற்றி இந்த பகுதியில் விளக்குகிறார்.
எங்கே நிம்மதி? (Where are we?)
ஆசிரியர், நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்ட ஒரு சதுரம் வரைகிறார்.


உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்கள் இந்த நான்கில் எந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன???
பகுதி I. இவை முக்கியமான மற்றும் அவசரமான வேலைகள். அலுவலக அவசரங்கள், உடனடியாக சமாளிக்கப்பட வேண்டிய ப்ரச்சனைகள் போன்றவைகள். இதுபோன்ற சில வேலைகள், நமக்கு எப்போழுதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு தெரிந்த சிலர், இந்தப் பகுதியிலேயே இருக்க விரும்புகிறார்கள். அவசரமான வேலை இல்லையென்றால் இவர்களுக்கு ஒரு கை உடைந்தது போலாகிவிடும். வேறு சிலர் பகுதி I-ல் இருப்பதாக எண்ணிக்கொண்டு பகுதி III-ல் இருக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நமது கவனம் எப்பொழுதும் பகுதி I-ல், ப்ரச்சனைகளை சமாளிப்பதில் இருந்தால், அவை வளர்ந்துகொண்டேதான் போகின்றன. ஒரு சமயம் சுனாமி போல் வந்து நம்மையே அடித்துக்கொண்டு போய்விடுகின்றன.
பகுதிகள் மூன்றிலும் நான்கிலும், அதிகமான நேரத்தை செலவிடுபவர்கள் கவனத்தையும் உழைப்பையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நமது கவனமும், உழைப்பும் அதிகமாக பகுதி II-ல் இருக்கவேண்டும். பகுதி I-ல் வரும் அவசரங்களை சமாளிக்க நேர்ந்தாலும் கவனம் பகுதி II-ற்கு திரும்பிவிட வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
அவர் கூறுவது சரியானதுபோல்தான் தோன்றுகிறது. நான் உட்பட, நம்முள் பலர், பகுதி II-ன் செயல்களை / காரியங்களை, அவசரமின்மை காரணமாக பகுதி II-டிலேயே செய்வதில்லை. அவை பகுதி I-ற்கு வரும்வரை காத்திருந்துவிட்டு, வந்தவுடன் அவசரம் அவசரமாகச் செய்கிறோம். அலுவலக வேலைகளில், இரண்டு வாரத்திற்கு பின் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தால், நேரம் இருந்தாலும் கூட இப்பொழுது செய்வதில்லை. முடிக்க வேண்டிய நாளுக்கு சில நாட்களுக்கு முன் தொடங்கி அவசரமாகச் செய்கிறோம். கல்லூரி நாட்களில் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன் தொடங்கி பாடங்களை அவசரமாகப் படிக்கிறோம். காரியங்களை அவசரமாகச் செய்யும்பொழுது முதல் படைப்பை சரியாக படைக்க முடிவதில்லை. அதனால் பெரும்பாலான நேரங்களில் இரண்டாவது படைப்பு முழுமையாக வெற்றியடைவதில்லை.
உதாரணமாக..
எனது பற்களில் ஒன்று, ஓட்டை (cavity) விழுவதற்கான ஆரம்ப நிலையில் உள்ளது. தீபாவளி-க்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளதால் வீட்டில் எங்கு திரும்பினாலும் இனிப்புகள். இனிப்பு சாப்பிடும் போதெல்லாம் பல் மிக மிக அதிகமாக வலிக்க ஆரம்பிக்கிறது. பகுதி I(முக்கியம் & அவசரம்)-ஆக கருதி ஒரு அனாசின் சாப்பிடுகிறேன். வலி போய்விடுகிறது. மறுநாள் மீண்டும் வலிக்கிறது. அவசரமாக மீண்டும் அனாசின் சாப்பிடுகிறேன். சரியாகிவிடுகிறது. இதயே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தால் அவ்வப்போது வலி நின்றாலும், ஒரு நேரத்தில் பல் முழுவதும் பழுதாகி, விழுந்து விடுகிறது.
இதையே முதல் முறை வலி நின்றவுடன்,(மீண்டும் வலி வருமுன்,) பகுதி II(முக்கியம் & அவசரமில்லை)-ஆக கருதி மருத்துவரிடம் சென்று பல்லை சரிசெய்தால் பல்லை காப்பாற்ற முடிகிறது. மீண்டும் மீண்டும் வலியைத் தாங்க வேண்டியதுமில்லை. அனாசின் வாங்கும் நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது.
இதனுடன் தொடர்பாக, பகுதி III-ற்கும் IV-ற்கும் உதாரணம் சொல்ல முயற்சிக்கிறேன்!! : ) உதாரணம் சரியாக இல்லாவிட்டால் நீங்களே ஒரு உதாரணம் யோசித்துச் சொல்லுங்கள்.
பகுதி III (அவசரம் & முக்கியமில்லை) : தீபாவளிக்கு வெளிவரும் ‘தலைவர்’ படத்திற்கு ஆளுயர கட்-ஔட் வைத்து பாலபிஷேகம் செய்யவேண்டும். இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன. அவசரம். ஆனால் பல்வலி மிக அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் பாலபிஷேகம் முக்கியமாகப் படவில்லை.
நானில்லாவிட்டாலும் படம் வெளிவரும். ஆளுயர கட்-ஔட்கள் இருக்கும். பாலபிஷேகம் செய்ய, தலைவர் பெயரை தன் பெயருடன் ஒட்ட வைத்துக்கொண்ட கணேசன்களும், குமரேசன்களும் இருந்துகொண்டுதானிருப்பார்கள்.
பகுதி IV (அவசரமில்லை & முக்கியமில்லை): தலைவர் படம் அல்லாத பிற படங்களை காண எனக்கு அவசரமுமில்லை அவை முக்கியமுமில்லை. : )
உதாரணம் சரியில்லையென்றாலும் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்குமென நினைக்கிறேன்.
நமது வெவ்வேறு இலக்குகளையும் அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களையும் அட்டவணையிடுதல் மூலம் சரியாக செய்யமுடியும். ஒவ்வொரு
இலக்கையும் அதற்கான காரியங்களையும் அட்டவணையிட்டு, அவைகளை, இந்த வாரம் செய்ய வேண்டியவை, அடுத்தவாரம் செய்ய வேண்டியவையென வாராந்திர அடிப்படையில் அட்டவணையிட்டுக்கொண்டு செயலாற்றினால் சிறப்பாக செயலாற்றமுடியும் என்கிறார் ஆசிரியர்.

இப்படி அட்டவணையிட்டு காரியங்கள் செய்தால் இலக்குகளை எளிதாக அடையலாம் என்கிறார் ஆசிரியர்.
‘முடியாது’-வின் முக்கியத்துவம் (What it takes to say “NO”)
முடியாது / இயலாது என்ற வார்த்தையை சொல்ல இயலாததால் பல முறை தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்திருக்கிறது. பகுதி II-ல் உள்ள ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்பொழுது, பகுதி III மூன்றின் வேலைகள் வந்து நம் கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொள்ள முயற்சிக்கும். அவற்றை அடையாளம் கண்டு அவற்றிற்கு மறுப்பு சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி மறுப்பு சொல்லும்பொழுது அந்த வேலையுடன் தொடர்புள்ள சிலரின் மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். அந்த சமயங்களில், நீங்கள் செய்துகொண்டிருக்கும் பகுதி II-ன் வேலையின் முக்கியத்துவத்தை
அந்த நபருக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.
பகுதி மூன்றின் வேலை, வரும்பொழுது மிகச் சிறிய வேலை போல் தோற்றமளிக்கும். விரைவாக முடித்துவிட்டு மீண்டும் பகுதி II-ன் வேலைக்கு திடும்பிவிடலாம் என்பதுபோல் தோன்றும். ஆனால் பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. விரைவாக முடித்துவிடவேண்டும் என்ற அவசரத்தில் செய்யும்பொழுது செய்யவேண்டிய செயல்களைப் பற்றி முழுமையாக யோசிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் வேலைகளை சரியாக முடிக்க முடிவதில்லை. பகுதி II-ன் காரியத்தில் செலுத்த வேண்டிய கவனமும் சிதறிவிடுகிறது.
முடியாது என்று பகுதி III-ன் காரியத்திற்கு நீங்கள் சொல்வது, வேறோரு முக்கியமான பகுதி II-ன் காரியத்தை சரியாகச் செய்வதற்கு என்பதால், அப்படிச் சொல்ல அஞ்ச வேண்டாம். கேட்பவரின் மனம் வருந்தாதவாறு சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் மேற்கொண்டுள்ள காரியத்தின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லுங்கள் என்கிறார் ஆசிரியர்.
அடுத்து வருவது..
உணர்ச்சி வங்கி(Emotional Bank Account). நாலாவது பழக்கத்துக்கு செல்லும்முன், உணர்ச்சி வங்கிக் கணக்கு என்றால் என்ன என்று விளக்குகிறார்.

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Dec 20, 2009 1:35 pm

3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!! (Paradigms of Interdependence)

நாம் யாவரும் நமக்கு நாமே வாழ்ந்துவிடுவதில்லை. தினசரி வாழ்க்கையில் பலரைச் சார்ந்துதான் இருக்கிறோம். காலையில் பால்காரர் அல்லது காய்கறிக்காரர் சரியான நேரத்திற்கு வராவிட்டால் என் அம்மா படும் பாட்டை பார்த்திருக்கிறேன். இவர்கள் மட்டுமல்ல, நான் தினசரி செல்லும் ரயிலின் ஓட்டுனரை நான் பார்த்ததுகூட இல்லை. ஒருநாள் அவர் வர சிறிது தாமதமானாலும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அந்த நாள் இனிய நாளாக அமைவதில்லை. அலுவலகத்தில், உடன் வேலைபார்ப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என எத்தனையோ பேரை நாம் சார்ந்திருக்கிறோம். ஆனால், இவர்களை நாம் பொருட்படுத்துகிறோமா?? அவர்களின் முக்கியத்துவத்தை உணர்கிறோமா? நம் வாழ்க்கையில் அவர்களது பங்கு பற்றி யோசிக்கிறோமா?? பால்காரரின் உடல் நலத்தையும் அவரது குழந்தைகள் நலத்தையும் என் அம்மா கேட்டறிந்து பார்த்திருக்கிறேன். நான் யாரிடமும் கேட்டதுபோல் எனக்கு ஞாபகம் இல்லை. நாம் உபயோகப்படுத்தும் வாகனங்களை, பொருட்களையெல்லாம் சரியாக பராமரிக்கும் நாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்குள்ள உறவுகளை (Relationship) பராமரிக்க என்ன செய்கிறோம்??
நாம் பேசும் வார்த்தைகளால் மட்டுமே நம் உறவுகள்(Relationship) வளர்ந்து விடுவதில்லை. நம் உள்ளத்தால் பேசும் வார்த்தைகளால், அன்பு செலுத்துவதால் மட்டுமே வளர்கிறது. அதுவே நிலைக்கிறது.

உணர்வு வங்கிக் கணக்கு.

நமக்கு மற்றவர்களுடன் உள்ள தொடர்புகளை/உறவுகளை (Relationship), நம் உறவுகள் மீதுள்ள பரஸ்பர நம்பிக்கையை வங்கிக் கணக்கு போல விவரிக்கிறார் ஆசிரியர். இதை உணர்வு வங்கிக் கணக்கு (Emotional Bank Account) என்று அழைக்கிறார். உறவுகளை பலப்படுத்தும் அல்லது வளப்படுத்தும் விதமாக நாம் செய்யும் காரியங்களை இந்தக் கணக்கின் வரவுகளாகவும், உறவுகளை பலவீனப்படுத்தும் விதமாக நாம் செய்யும் காரியங்களை செலவுகளாகவும் விவரிக்கின்றார்.
கணவன் மனைவிக்கிடையேயும், குடும்பத்தினரிடையேயும், நண்பர்களிடத்தேயும் மற்றும் வேறு யாரிடமெல்லாம் நம் உறவுகளை பலப்படுத்திக்கொள்ள விரும்புகிறோமோ, அவர்களிடத்திலேயும் இந்த உணர்வு வங்கி வழியை கடைபிடிக்கலாம், என்கிறார் ஆசிரியர். உறவுகளை பலப்படுத்த ஆறு வழிகளையும் கூறுகிறார்.

1. புரிந்துகொள்ளுதல். ஒவ்வொருவரையும் முழுமையாக புரிந்துகொள்ளுதல். அவர்களின் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொள்ளுதல். அவர்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்ளுதல். இப்படியாக நீண்டுகொண்டே போகிறது.

2. சிறிய விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல். இதை நான் கவனித்திருக்கிறேன். எனக்கு வந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைவிட, தேவையான நேரங்களில் என் நண்பர்கள் செய்த சிறிய விஷயங்களும், சொன்ன சில வார்த்தைகளும் மன மகிழ்ச்சியை, நிறைவை தந்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையில் நடந்த உதாரணங்களை ‘comment’-ஆக எழுதுங்கள்.

3. வாக்கு தவறாதிருத்தல். நாம் கொடுக்கும் வாக்குகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நம் மீது நம்பிக்கை பிறக்கிறது/வளர்கிறது. முக்கியமான விஷயங்களில் நாம் கொடுக்கும் வாக்குகளும் அவைகளை நிறைவேற்றுவதும் நம் உணர்வு வங்கிக் கணக்கில் வரும் மிகப்பெரிய வரவுகள்

4. எதிர்பார்ப்புகளை விளக்கமாக கூறுதல். இதுவும் முக்கியமானதுதான். நாம் பல நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம். ஆனால் அவர்களுக்கு நமது எதிர்பார்ப்புகள் தெரியாததால் வேறுவிதமாகச் செயல்படுகிறார்கள். இதனால் வரும் பிரச்சனைகளை, எதிர்பார்ப்புகளை விளக்கமாக கூறுவதன் மூலம் தவிர்க்க முடிகிறது.

5. உண்மையுடன் இருத்தல். சொல்லும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும், கொடுத்த வாக்குகளிலும், கடைபிடிக்கும் பழக்கங்களிலும், உண்மையுடன் இருத்தல்.

6.மனம் வருந்துதல்/மன்னிப்பு கோருதல்

முக்கியமாக, உணர்வு வங்கிக் கணக்கிலிருந்து செலவு செய்யும்பொழுதுமனம் வருந்துதல்/மன்னிப்பு கோருதல். இது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் நினைக்கிறேன். மனிதர்களாகிய நாம் தவறு செய்வது இயற்கை. செய்துவிட்ட தவறினால் வரும் பழிக்கு அஞ்சி அந்த தவறை மறுப்பது/மறைப்பதால், அந்தத் தவறை நாமே உணர்வதில்லை. அதனால் மீண்டும் அந்த தவறை செய்ய நேரலாம். எந்த காரியம் செய்தாலும், அதன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தவறு செய்யும்பொழுது அதை மறைப்பதால், அந்த நேரத்தில் தப்பித்துவிட முடிகிறது. ஆனால், அது அப்படியே முடிந்து விடுவதில்லை. ஒரு தவறை மறைக்க வேறு சில தவறுகள் செய்ய நேரலாம். அந்தத் தவறு மீண்டும் உங்களிடம் வரும்பொழுது இன்னும் பெரிதாக வருகிறது. உணர்வு வங்கிக் கணக்கிலிருந்து சிரிய செலவுக்கு பதிலாக, பெரிய செலவோ அல்லது கணக்கே மூடப்படும் நிலையோ ஏற்படுகிறது.
நாம், நம் உணர்வு வங்கிக் கணக்கிலிருந்து செலவு செய்ய நேரிடும்பொழுது, அதை உணர்தலும், மனப்பூர்வமாக வருந்துதலும், மன்னிப்பு கொருதலும் செலவை குறைவாக்கவும், அல்லது அதையே கணக்கிற்கு வரவாக்கவும் வழிவகுக்கிறது.
மேலும், இந்தப் பகுதியில் ஆசிரியர், அன்பிற்கான விதிமுறைகள், வாழ்க்கைக்கான விதிமுறைகள் என சில விதிமுறைகளை கூறுகிறார். அன்பும் வாழ்க்கையும் (அவர் சொல்லும்) விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பதால்,
நேராக அடுத்தப் பழக்கத்திற்கு செல்கிறேன்.

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 21, 2009 6:31 pm

4. வெற்றிப்படிகள். (Win / Win).

நாம் அனைவருமே, வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறோம். ஒவ்வொரு முறை நாம் நமது இலக்கை அடையும்பொழுதும் வெற்றி அடைகிறோம். புதிய இலக்கைநோக்கி மீண்டும் பயணிக்கிறோம். “இலக்கு என்ன என்பதைப் பொறுத்து நாம் அடைந்த வெற்றி, மகிழ்ச்சியைத் தருகிறது”. வெற்றி, என்றாவது மகிழ்ச்சியை தராமல் இருக்குமா?? சோகத்தைத் தருமா??
நான் ஒரு கிரிக்கெட் அணியின் தலைவன். ஒரு இறுதிப்போட்டியில் இன்று காலையில் எங்கள் அணி விளையாடியது. சென்ற ஆண்டு நடந்த போட்டிகளில் எங்கள் அணி வெற்றிக் கோப்பையை பெற்றிருந்தது. நான் தொன்னூற்றொன்பது ஓட்டங்கள் (99 runs)எடுத்து ஆட்டமிழந்திருந்தேன். இறுதிப்போட்டிகளில் அதுவரை நான் சதம் அடித்ததே இல்லை. சதம் அடிக்கவேண்டும் என்ற இலக்கை ஒரே ஒரு ஓட்டத்தில் இழந்திருந்தேன். ஆனாலும் எங்கள் அணி எளிதாக வெற்றி இலக்கை அடைய, நான் எடுத்த ஓட்டங்கள் உதவின.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்தேன். நூற்றுப் பதினான்கு ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன். எனது நீண்ட நாளைய இலக்கை இன்று அடைந்தேன். ஆனாலும் கடினமான போராட்டத்திற்கு பிறகு, எங்கள் அணி தோல்வியடைந்தது. நான் நீண்ட காலமாக அடைய நினைத்த இலக்கான, சதம் அடித்தும், அது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. ஏன்??
இப்பொழுது மீண்டும் கேட்கிறேன். இலக்கை அடைந்த வெற்றி, என்றாவது மகிழ்ச்சியை தராமல் இருக்குமா??
அதனால்தான் இலக்கு என்ன என்பதைப் பொறுத்து நாம் அடைந்த வெற்றி, மகிழ்ச்சியைத் தருகிறது, என்று கூறினேன்.
ஆசிரியர் வெற்றி, தோல்விகளை ஆழமாகவே ஆராய்கிறார். மனிதர்கள் வெற்றியை நோக்கிச் செல்லும் பாதையில் அவர்களின் மன நிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்து (வழக்கம்போல) விவரிக்கிறார்.

வெற்றி / வெற்றி (Win/Win) : அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற மனநிலையுடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வது. தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும், எதிரணியில் இருப்பவர்களுக்கும் என அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற மனநிலை.இந்த மனநிலையில் உள்ளவர்கள், யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. அனைவரையும் ஒரே சக்தியாகத் திரட்டி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்பவர்கள். ஒவ்வொருவருக்கும் உள்ள பலவீனங்களை ஆராயாமல், அனைவரின் ஒட்டு மொத்த பலத்தையும், சக்தியையும் கொண்டு வெற்றிபெறுவார்கள்.

வெற்றி / தோல்வி (Win/Lose) : நாம் வெற்றிபெற வேண்டும், அடுத்தவர்கள் தோல்வியடைய வேண்டுமென்ற மனநிலை. தாம் வெற்றியடையும்போது அது திறமையால் என்றும், மற்றவர்கள் வெற்றியடையும்போது அது அதிஷ்ட்டத்தால் என்றும் நம்பும் குணமுடையவர்கள். சில நேரங்களில், நாமே வெற்றி பெறவேண்டும், மற்றவர்கள் வெற்றிபெறக் கூடாது, அதற்கு அவர்கள் தகுதியே இல்லாதவர்கள் என்றும் கூட நினைப்பவர்கள். ஒரு குழுவாக செயல்படும்போது கூட, குழுவின் இலக்கைவிட, தன் சொந்த இலக்கை அடைய அதிகம் முயற்சிப்பவர்கள்.

தோல்வி / வெற்றி (Lose/Win) : நாம் தோல்வியடைந்து விடுவேன் நீங்களே வெற்றி பெறுவீர்கள் என்ற மனநிலை. போட்டியிட மனதில் ‘தில்’ இல்லாத மனநிலை. தோல்வியடைந்து விடுவோம் என்று எண்ணிக்கொண்டே போட்டியிடும் மனநிலை.

தோல்வி / தோல்வி (Lose/Lose) : நமக்கு இரண்டு கண்களும் போனாலும் போகட்டும், அடுத்தவற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்ற மனநிலை. தான் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தைவிட அடுத்தவர் தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம்தான், இவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது.

வெற்றி (Win) : இந்த மனநிலையுள்ளவர்கள், தாங்கள் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்காக அடுத்தவர் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பதில்லை.

அனைவருக்கும் வெற்றி / யாருக்கும் வெற்றியில்லை (Win Win or No Deal ) : இதை விளக்க ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஒரு வீடு வாங்குகிறீர்கள். விற்பவர் ஒரு விலை சொல்கிறார். நீங்கள் ஒரு விலை சொல்கிறீர்கள். இருவரும் (பேரம்) பேசி, இருவருக்கும் லாபமான ஒரு விலையை முடிவு செய்கிறீர்கள். இது, அனைவருக்கும் வெற்றி (Win Win). அப்படி ஒரு விலையை முடிவு செய்யாத நிலையில், நீங்கள் வேறு வீடு பார்க்க போய்விடுகிறீர்கள். விற்பவர் வேறொருவரிடத்தில் வீட்டை விற்க சென்றுவிடுகிறார்.
இந்த ஆறில் எந்த முறை சிறந்தது? ஏன்??

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 21, 2009 6:49 pm

5. வெற்றியின் ரகசியம்.


நாம் ஈடுபட்டிருக்கும் செயல்களைப்பொருத்து வெற்றியை நோக்கி செல்வதற்கான அணுகுமுறை மாறுகிறது என்கிறார், ஆசிரியர். உதாரணமாக, நாம் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு போட்டியிடும்போது, அனைவருக்கும் வெற்றி என்ற அணுகுமுறை பயன் தருவதில்லை. நமக்கு வெற்றி, எதிரணிக்கு தோல்வி என்ற அணுகுமுறை, வெற்றிகாண உதவுகிறது. அதுவே ஒரு சேவை நிறுவனத்தில் இருந்துகொண்டு, நமக்கு வெற்றி, மக்களுக்கு தோல்வி என்று செயல்படுவது சரியல்ல. இங்கு அனைவருக்கும் வெற்றி என்ற அணுகுமுறை உதவுகிறது.
அதேபோல் ஒரு குழுவாக(Team) செயல்படும்போது, ஓவ்வொருவரின் தனித்த இலக்கைவிட குழுவின் இலக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இதில், ‘எனக்கு வெற்றி-குழுவினருக்கு தோல்வி’ என்ற அணுகுமுறை பயனற்றதாகிறது. உதாரணமாக, எனது அலுவலகத்தில் நாங்கள் பத்துபேர் கொண்ட குழு ஒரு செயலைத்(Project) தொடங்குகின்றோம். பத்துபேரும் சிறந்த வல்லுனர்கள். இந்த செயலை வெற்றிகரமாக முடித்தால் பத்துபேருக்கும் சிறந்த வெகுமானம் கிடைக்கும்.
ஆனால், எங்களுக்குள் இருக்கும் ‘எனக்கு வெற்றி/மற்றவர்களுக்கு தோல்வி’ அணுகுமுறையால், ஒவ்வொரு முக்கியமான முடிவெடுக்கும்பொழுதும், பத்து பேரும் அவரவர் முடிவை முக்கியத்துவப்படுத்துகின்றோம். இதனால் முடிவுகள் எடுக்க தாமதமாகின்றது. செயலை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. அனைவருமே தோல்வியடையும் நிலை ஏற்படுகிறது. இந்த சரியான அணுகுமுறையா??
பத்து குதிரைகள் பூட்டிய தேரில், ஒவ்வொரு குதிரையும் மற்ற குதிரைகளைவிட வேகமாக செல்வதில் கவனமாக இருந்தால் தேர் ஊர் போய் சேருமா??
தங்கள் திறமைமீது முழு நம்பிக்கை கொண்டவர்கள், மற்றவர்கள் திறமைமீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு குழுவாக செயல்படும்பொழுது, அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து, அனைவருக்கும் வெற்றியென்ற அணுகுமுறையுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறார்கள்.
தமக்கு வெற்றி-மற்றவர்களுக்கு தோல்வி என்ற அணுகுமுறையுடன், விளையாட்டுப் போட்டிகள் அல்லாத பிற செயல்களில் செயல்படுபவர்கள், தமக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைக்கு வரும்பொழுது, ‘தமக்கு தோல்வி- மற்றவர்களுக்கும் தோல்வி’ என்ற அணுகுமுறையை கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள். எப்படியாவது மற்றவர் தோல்வியடைய வேண்டும் என்பதில் தன் நேரத்தையும், கவனத்தையும் வீணடிக்கின்றர்.
தமக்கு தோல்வி-அடுத்தவற்கு வெற்றி என்ற அணுகுமுறையை ஆசிரியர் ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கிறார். அது, மனதில் ‘தில்’ இல்லாதவர்கள்தான் இந்த அணுகுமுறையை கொள்வார்கள் என்கிற கோணம். இந்த அணுகுமுறைக்கு இன்னொரு கோணம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வெற்றிக்காக, நமது வெற்றியை விட்டுக்கொடுத்தலும் இந்த வகைதானே(நமக்கு தோல்வி-அடுத்தவற்கு வெற்றி என்கிற வகைதானே ). தமிழ்க் குடும்பங்களில் இது மிகவும் சாதாரணமானது என்றுதான் நினைக்கிறேன். தங்கையின் வெற்றிக்காக அண்ணனும், நண்பனின் வெற்றிக்காக இன்னொரு நண்பனும் என வெற்றியை விட்டுக்கொடுத்தல் இந்த அணுகுமுறையென்றுதான் நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துகளை comment-ஆக எழுதுங்கள்.
மனதில் உறுதியில்லாமல் ஒரு செயலைச் செய்வது, முதற் படைப்பை முழுமையாக செய்யாமையால் இரண்டாம் படைப்பை தொடங்குவது, போன்ற காரணங்களால், நமக்கு தோல்வியென்ற மனநிலை ஏற்படுகிறது. முதற் படைப்பை முழுமையாக செய்வதன் மூலம் இதை தவிர்க்க முடிகிறது என்கிறார் ஆசிரியர்.

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 21, 2009 6:50 pm

6. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம். (Seek first to understand. Then to be understood).

உங்கள் ஊருக்கு ஒரு கண் மருத்துவர் வந்துள்ளார். உங்கள் கண் பார்வையை சரிசெய்துகொள்ள அவரிடம் செல்கிறீர்கள். கண் மருத்துவர் பல்வேறு சோதனைகள் செய்தபிறகு, தான் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியை உங்களிடம் தருகிறார்.
“இந்தக் கண்ணாடியை நான் பதினைந்து வருடங்களாக உபயோகிக்கிறேன். இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்.
“டாக்டர் !?!?”.. என்று நீங்கள் மறுக்கும் முன்,
“கவலைப்படாதீர்கள், என்னிடம் வேறொன்று இருக்கிறது, இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.
நீங்கள் மீண்டும் மறுக்கும் முன், “அணிந்து பாருங்கள்” என்று வற்புறுத்துகிறார்.
நீங்களும் மறுக்க முடியாமல், அணிந்து பார்க்கிறீர்கள்.
பிறகு, “டாக்டர், என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை” என்கிறீர்கள்.
அதற்கு டாக்டர், “பதினைந்து வருடங்களாக எனக்கு சரியாகக் காட்டியிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள்” என்கிறார்.
“எப்படி முயற்சித்தாலும், சரியாகத் தெரியவில்லை டாக்டர்” என்கிறீர்கள்.
“தன்நம்பிக்கையுடன் முயன்று பாருங்கள், முயன்றால் முடியாதது இல்லை!! இத்தனை வருடங்கள் உழைத்தாலும், இன்னும் புதிதுபோல் உள்ளது, என் கண்பார்வை இந்த கண்ணாடியை போட்டால், தெள்ளத்தெளிவாகிறது. முயன்று பாருங்கள்” என்கிறார்.
“எவ்வளவு தன்நம்பிக்கையுடன் முயன்றாலும் முடியவில்லை, டாக்டர்” என்கிறீர்கள்.
டாக்டர் கோபமடைகிறார். “நீங்கள் என்ன மூடரா?? இத்தனை வருடங்கள் இந்தக் கண்ணாடியை பயன்படுத்துகிறேன். எனக்கு சரியாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு சரியாதத் தெரியவில்லை என்கிறீர்களே. நீங்கள் மூடராகத்தான் இருக்க வேண்டும்.” என்கிறார்.
இந்த மருத்துவரிடம் நீங்கள் மீண்டும் செல்வீர்களா? அல்லது உங்கள் நண்பர்கள் யாரையாவது போகச் சொல்வீர்களா??
உங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக தெரிந்துகொண்டு உங்களுக்கு ஒரு (மருத்துவ) ஆலோசனை கொடுத்தவரிடம் மறுமுறை செல்வதில்லை.
இப்பொழுது சொல்லுங்கள், உங்களிடம் ஆலோசனை கேட்பவர்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?? ஆலோசனை சொல்லும் முன், கேட்பவரின் நிலைமையை அவரின் நிலையில் இருந்து புரிந்துகொள்கிறீர்களா??
ஆசிரியர், நல்ல பழக்கமாக சொல்வது இதைத்தான். “மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் முன், நீங்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்”
பள்ளிகளில், கல்லூரிகளில் எப்படி படிப்பது, எப்படி எழுதுவது, (மேடைகளில்) எப்படி பேசுவது என்றெல்லாம் கற்பிக்கிறார்கள். எப்படி கேட்பது, எப்படி புரிந்துகொள்வது என்றெல்லாம் சொல்லித்தருகிறார்களா??
ஆசிரியர், கேட்பதின் புரிந்துகொள்ளுதலின் அவசியத்தை இங்கு விவரிக்கிறார்.

நன்றிகள் :சரவ்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 6:57 pm

செந்தில்குமார் wrote:வெற்றி / வெற்றி (Win/Win) : அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற மனநிலையுடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வது. தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும், எதிரணியில் இருப்பவர்களுக்கும் என அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற மனநிலை.இந்த மனநிலையில் உள்ளவர்கள், யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. அனைவரையும் ஒரே சக்தியாகத் திரட்டி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்பவர்கள். ஒவ்வொருவருக்கும் உள்ள பலவீனங்களை ஆராயாமல், அனைவரின் ஒட்டு மொத்த பலத்தையும், சக்தியையும் கொண்டு வெற்றிபெறுவார்கள்.


நான் என்பதன் அர்த்தம்; நாம் என்பதும்!

பிறரை அடக்க நினைக்கையில் நாமெங்கோ அடங்கிப் போகிறோம். பிறருக்கென கருதுபவர் வெற்றி பிறராலேயும் தீர்மானிக்கப் படுகிறது!

மிக மிக நல்ல தகவல்கள். நேரம் கிடைக்கையில் பொருத்து படியுங்கள் தோழர்களே..

மிக்க நன்றிபா செந்தில்!


avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 21, 2009 7:01 pm

இவை சரவ் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது அண்ணா,இதில் நான் ஒன்றும் செய்திட வில்லை .
நானும் "magic of thinking BIG" எனும் புத்தகத்தின் சாராம்சத்தை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு உள்ளேன் முடிந்ததும் பதிவிடுவேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக