ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_m10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10 
VENKUSADAS
பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_m10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_m10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10 
VENKUSADAS
பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_m10பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்

2 posters

Go down

பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Empty பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:00 am

இஸ்லாமியப் பெண்களின் ஆடை

1. இஸ்லாமிய ஆடையைப் பொறுத்தவரை திருமணம் செய்வது தடையில்லாத அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் மறைக்கும் விதத்தில் உடம்பு முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரு பெண் தனக்கு திருமணம் செய்யத்தடை செய்யப் பட்டவர்கள் முன் இரண்டு கைகள், முகம், கால் (பாதம் வரை) ஆகியவற்றைத்தவிர மற்ற உறுப்புக் களை திறந்துவைப்பது கூடாது.

2. ஆடை உடம்பை நன்றாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உடலின் நிறம் வெளிப்படும் விதத்தில் மெல்லிய ஆடையாக இருக்கக்கூடாது.

3. உடலின் அங்க அவயங்கள் வெளிப்படும் விதத்தில் இறுக்கமான ஆடையாகவும் இருக்கக்கூடாது.

''என்னுடைய சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் நரகத்திற்கு செல்வர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒருசாரார் தங்களின் கைகளில் (அதிகாரம் எனும்) மாட்டுவால் போன்ற சாட்டையை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் அரைகுறை ஆடை அணிந்த நிர்வாணமான பெண்கள். அவர்கள் ஆடிஆடி நடப்பார்கள். பிறரையும் அவர்களின்பால் சாய வைப்பார்கள். அவர்களின் தலை ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்றிருக்கும். இவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் இவ்வளவு தூரத்திற்கு வீசும்'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஹதீஸில் வந்துள்ள நிர்வாண ஆடை என்பது பெண் தன் உடம்பு முழுவதும் மறைக்காத ஆடையை அணியும்போது அவள் நிர்வாணமானவளாகவே கருதப்படுவாள். உடம்பு தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையை அணிவது அல்லது உடற்கட்டு தெரியும் விதத்தில் இறுக்கமான ஆடையை அணிவது, இடுப்பு, கை தோள்புஜம் போன்றவற்றின் உடற்கட்டு வெளியில் காணப்படும் விதத்தில் ஆடைகள் அமைவதைத்தான் இந்தஹதீஸ் குறிப்பிடுகிறது.

பெண்களின் ஆடை என்பது அவளுடைய மேனி முழுவதும் மறைக்கக் கூடியதாகவும், உடலின் உட்பகுதி யையும், உடலின் கனமான பகுதியை வெளிப்படுத்தாதது மாகவும், விசாலமான ஆடையாக இருக்கவேண்டும். (ஃபத்வா தொ.22ழூ ழூ146)

4. ஆண்களோடு ஒப்பிடக்கூடிய ஆடைகளை பெண்கள் அணிவதும் கூடாது. ''ஆண்களுக்கு ஒப்பாக தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடிய பெண்களையும், ஆண்களைப் போன்று தன் தலைமுடியை சீவிக்கொள்ளும் பெண்களையும் நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்களுக்கு ஒப்பாகுவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்ப ஆடையின் வகையிலும் அதை அணியும் விதத்திலும் ஆண்களுக்கென சொந்தமான ஆடையைப் பெண்கள் அணிவதாகும்.

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 22ழூ ழூ148ல் கூறுகிறார்: ஆண்களுக்குத் தகுதியான ஆடையையும், பெண்களுக்கத் தகுதியான ஆடையையும் வைத்துத்தான் ஆண், பெண் ஆடை களைப் பிரித்துக் காட்டமுடியும். ஆண்களும் பெண் களும் அவரவருக்குக் கட்டளையிடப்பட்ட ஆடையை அணிவதுதான் அவர்களுக்குப் பொருத்தமானதாகும். பெண்கள் தங்கள் மேனியை வெளியே காட்டாமல் மறைத்து பர்தா அணிந்து வெளியில் செல்வதுதான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளையாகும். எனவே தான் பெண்கள் சப்தத்தை உயர்த்தி பாங்கு, தல்பியா சொல்வது அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஹஜ்ஜின் போது ஸஃபா, மர்வா மலைக்குன்றுகளில் ஏறுவதும், ஆண் களைப்போன்று இரண்டு துண்டு துணிகளை மட்டும் அணிந்திருப்பதும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை. ஹஜ்ஜின்போது ஆண்கள் தலையை திறந்திருப்ப தும், வழக்கமான ஆடையை அணியாமலிருப்பதும் அவர்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது. சட்டை, பேண்ட், பைஜாமா, தொப்பி, காலுறை போன்றவற்றை அணிவது கூடாது. அதே நேரத்தில் பெண்கள் அவர் களின் வழக்கமான ஆடையில் எதையும் அணிவது தடை செய்யப்படவில்லை. காரணம் அவள் தன் உடல் முழுவ தையும் மறைத்து பர்தா அணியுமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள். அதற்கு மாற்றம் செய்வது அவளுக்கு அனுமதிக்கப்படாது.

ஆனால், அவள் தன் முகத்தை திரையால் மறைப் பதும் உறுப்புகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள காலுறைகளை அணிவதும் அவளுக்கு அவசியமில்லை. என்று கூறிவிட்டு அவள் அன்னிய ஆண்களை விட்டும் தன் முகத்தை முகமூடி அல்லாததைக் கொண்டு மறைத்துக் கொள்ளலாம். ஆண்களிலிருந்து பெண்களும், பெண் களிலிருந்து ஆண்களும் பிரித்தறியக்கூடிய விதத்தில் ஆடை இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டால் பெண்கள் தங்கள் உடம்பை முழுவதுமாக மறைத்து பர்தா அணியவேண்டும் என்ற உண்மை புரிந்துவிடும்.

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமா கவும் ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந் தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5. பெண்கள் வெளியில் செல்லும்போது அணிகின்ற ஆடைகள் பார்வையைக் கவரக்கூடிய அலங்காரங் களைக் கொண்டதாக இருக்கக்கூடாது. ஏனெனில் அதன் மூலம் அவள் தன் அலங்காரத்தை வெளிப் படுத்திச்செல்லும் பெண்களின் பட்டியலில் இடம் பெற நேரிடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Empty பர்தாவின் பலன்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 1:01 am

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்: 24:31)

''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

''அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'' (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ''நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!'' (அல்குர்ஆன்: 33:59)

ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் 'ஜில்பாப்' என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்¥த்(ரழி) போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.

அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அப+உபைதா போன்றோர் கூறுகின்றனர்.

ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.

''நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அப+தா¥த்)

பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரங்கள் உள்ளன.

இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்த கங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!

1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)

2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)

3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் துவைஜிரி)

4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)

இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.

பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்துவிட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்துவிட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.

எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலம்க்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்ததில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும்போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொது வான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனை களுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கை களைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.

இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ளவர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற்றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களிலிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக் கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப் பார்த்து விடாதே!

''தங்களின் கீழ்த்தரமான இச்செய்கைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.'' (அல்குர்ஆன்: 4:27)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Empty Re: பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்

Post by சபீர் Sat May 08, 2010 7:44 pm

ரொம்ப அருமையான விளக்கம் நன்றி சகோதரா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள் Empty Re: பெண்களின் ஆடை பற்றிய சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum