புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அஷ்டலட்சுமி I_vote_lcapஅஷ்டலட்சுமி I_voting_barஅஷ்டலட்சுமி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டலட்சுமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:15 pm

அஷ்டலட்சுமி 12039504_960273957347337_8473156630984514112_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa2-2
-
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டு (எல்லா)வித செல்வங்களுக்கு அதிபதியாக எட்டு தெய்வீக வடிவங்களில் வழிபடக்கூடிய அமைப்பு அஷ்டலட்சுமி என்றழைக்கப்படுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பெற வேண்டிய வளங்களாக உடல் நலம், குழந்தைகள், வேலைவாய்ப்பு, பணம், செழிப்பு, தைரியம், பொறுமை மற்றும் அறிவு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

மேற்கூறிய வளங்களுக்கு அதிபதிகளாக ஆதிலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி மற்றும் வித்யாலட்சுமி ஆகிய திருமகளின் எட்டு வடிவங்கள் அஷ்டலட்சுமி என்று போற்றப்படுகின்றன.

ஆதிலட்சுமி

இந்த அம்மையே மகாலட்சுமி என்றும் அழைக்கப்படுகின்றாள். ஆதி என்பதற்கு மூலாதாரம் மற்றும் என்றும் நிலைத்திருப்பவள் (நித்தியமானவள்) என்பது பொருளாகும்.

இவ்வம்மையே பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது.

இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கீரிடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கரத்தில் தாமரை மலரும், மற்றொரு கரத்தில் வெள்ளைக் கொடியும் மற்ற இரு கைகள் அபயவரத முத்திரைகளுடன் காணப்படுகின்றன. தாமரைப்பூவில் அமர்ந்து மலர் தோரணங்களால் சூழப்பட்டவள்.

இத்தேவியை வழிபட நோயில்லா வாழ்வும், தடை தாமதம் இல்லாத காரிய வெற்றியும், நினைத்ததை விட சிறப்பான பலனும், என்றும் வளங்களை நிலைத்திருக்கும் தன்மையையும் வழங்குவாள்.

சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர குழந்தைச் செல்வம் இன்றியமையாதது. அத்தகைய குழந்தை செல்வத்தை வழங்குபவள்.

இவ்வம்மை ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கிறாள். இத்தேவியின் இருகரங்களில் கலசமும், கத்தி மற்றும் கேடையங்களை மற்ற இரு கரங்களிலும் கொண்டு ஒரு கையால் குழந்தையை அணைத்தபடி மற்றொரு கையில் வரத முத்திரையுடன் காட்சியளிக்கிறாள்.

இவ்வம்மையை வழிபட வாழ்வின் முக்கியச் செல்வமான குழந்தைச் செல்வத்தை வழங்குகிறாள். அத்துடன் நல்ல குடும்பம், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் ஆகியோரையும் வழங்குகிறாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:16 pm

கஜலட்சுமி
இவ்வம்மையே இராஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான்.

கஜம் என்றால் யானை என்று பொருள். பெரும்பாலான
வீடுகளின் நிலைப்படிகளில் இத்தேவியைக் காணலாம்.
வெந்நிற மேனியுடைய இவ்வமையின்
இரு புறங்களிலிருந்தும் இரு யானைகள் தங்கக் கலசங்களில்
நீர் தெளித்து வழிபடுகின்றன.


இத்தேவி வெள்ளைப் பட்டு உடுத்தி நான்கு கரங்களைக் கொண்டு அருளுகிறாள். பின்னிரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி முன்னிரு கைகளால் அபயவரத முத்திரையுடன் காணப்படுகிறாள்.

இத்தேவியை வழிபட அவர்களுக்கு இராஜபோகத்தை அருளுவாள். உயர்ந்த அரச பதவி, உயர் அதிகாரப்பதவி ஆகியவை இவளை வழிபடக்கிடைக்கும்.

மேலும் நமக்கு தேவையான வாகனங்களையும், பசு, ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் நமக்கு கொடுக்கின்றாள். நம் வாழ்க்கைப் பயணம் எளிதாக இருக்க இத்தேவியின் அருள் அவசியமாகும். நம் வாழ்விற்கான சகல சௌபாக்கியங்களையும் அருளுகிறாள்.

தனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது பொன்னினைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம்; நம்மில் பலரால் விரும்பப்படுவது. இத்தேவி வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவி செல்வம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் வருமானம் ஆகியவற்றை அருளுபவள்.

இவ்வம்மை சிவப்பு பட்டு உடுத்தி எட்டு கரங்களுடன் பொன்னிறமாகக் காட்சியளிக்கிறாள். இவ்வம்மையின் திருக்கரங்கள் சங்கு, சக்கரம், வில், அம்பு, அமிர்தக்கலசம், வெற்றிலை, தாமரை ஆகியவற்றைக் கொண்டும் மற்றொரு கரம் தங்கக்காசுகள் விழுந்த வண்ணம் உள்ள அபய முத்திரையுடனும் காணப்படுகிறது.

இவ்வம்மையை வழிபட தர்ம வழியில் நமக்குத் தேவையான செல்வத்தை அளித்து பொருள் வளத்துடன் சுபிட்ச வாழ்வு கிடைக்கும். நமக்கு மகிழ்ச்சியான செல்வச் செழிப்பான வாழ்க்கையை வழங்குவாள்.

தான்யலட்சுமி

இவ்வம்மையே எங்கும் செழுமை நிறைந்திருக்கக் காரணம் ஆவாள். இவளின் அருளாலே உலகில் பசிப்பிணி நீங்குகிறது. இவள் தானியங்கள், உணவுகள், ஊட்டச்சத்துகள், வேளாண்மை ஆகியவற்றிற்கு அதிபதி.

இவ்வம்மையே அன்ன லட்சுமி என்றும் போற்றப்படுகிறாள்.

இத்தேவி பச்சை வண்ணப்பட்டுத்தி ஆறுத்திருக்கரத்துடன் காட்சியளிக்கிறாள். தமது திருக்கரங்களில் தண்டாயுதம், வாழைக்குலை, கரும்பு, நெற்கதிர் ஆகியவற்றைக் கொண்டு அபயவரத முத்திரையுடன் காட்சியளிக்கிறாள்.

பசிப்பிணி போகவும், உலகம் செழிக்கவும், உணவுகள்
மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் இவ்வம்மையை
வழிபட வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:18 pm

விஜயலட்சுமி
இவ்வம்மை ஜெயலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். நம் வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். இவ்வம்மையின் அருட்பார்வையாலே நம்மால் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். வெற்றி, தைரியம், நம்பிக்கை, பயமின்மை ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.

இவ்வன்னை சிவப்புப் பட்டு அணிந்து எட்டுத்
திருக்கரங்களுடன் சிம்மாசனத்தில் செங்கோல்
செலுத்தும் ராஜவடிவத்துடன் அருள்பாலிக்கிறாள்.


தனது கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தாமரை, பாசம் ஆகியவற்றைக் கொண்டும் மற்ற இரு கரங்களால் அபயவரத முத்திரைக் காட்டியும் காட்சியளிக்கிறாள்.

இவ்வம்மையை வழிபட ஒருவர் தன்வாழ்வில் தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை கிடைக்கப் பெற்று தோல்வி இல்லா வெற்றியைத் தொடர்ந்து பெறுவர். வாழ்க்கைப் பாதையில் வெற்றி பெற இவ்வன்னையை வழிபடுவோம்.

வீரலட்சுமி
இவ்வன்னை தைரிய லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவளுக்கு உண்டு.

பொறுமை, மூளைஉபயோகம், திட்டமிடல், காரிய நோக்கம்
ஆகியவற்றிற்கு இவளே அதிபதி.

இத்தேவி சிவப்பு பட்டு உடுத்தி எட்டு கரங்களுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள். தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், பாணம், சூலம், கபாலம் ஏந்தியுள்ளாள். மற்ற இரு கரங்களிலும் அபயவரத முத்திரை கொண்டு காட்சியளிக்கிறாள்.

இத்தேவியை வழிபட எந்த ஒரு காரியமும் அதன் நோக்கத்தோடு திட்டமிட்டு பொறுமையுடன் செயல்பட்டு நிறைவேற‌ அருள்புரிவாள்.

வித்யாலட்சுமி
இவ்வன்னையே வித்யா எனப்படும் ஞானமாகிய கல்விக்கு அதிபதி. இத்தேவி கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் ஆவாள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருளுவாள்.

இத்தேவி வெண்பட்டு உடுத்தி நான்கு கரங்களுடன் தாமரை மலரில் அமர்ந்து இருப்பாள். தனது இரு திருத்திருங்கரங்கில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கைகளால் அபயவரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறாள்.

பல்வேறு வகையான திறனைகளை வளர்த்துக் கொண்டு தடையில்லாத அறிவினையைப் பெற நினைப்பவர்கள் இவ்வன்னையை வழிபட வேண்டும்.

மும்பை மற்றும் சென்னை நகரங்கில் உள்ள அஷ்டலட்சுமி கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மேலும் பல கோவில்களில் அஷ்டலட்சுமிகள் தனிசன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

எட்டு வடிவங்களில் உள்ள அஷ்டலட்சுமிகளை வழிபட்டு வாழ்க்கையில் எல்லாவித நலங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
-

வாட்ஸ் அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக