ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu Oct 25, 2018 2:55 am

First topic message reminder :

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f4ab



ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள்,  பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

புதுமணத் தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Thu Oct 25, 2018 2:31 pm


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f4ab


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1540446129-7156

குஜராத் வைர வியாபாரி ஒருவர் ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி போனஸாக வழங்க இருக்கிறார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வரும் சாவ்ஜி டோலாகியா வருடா வருடம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வீடு, கார், பைக் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து வருகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்தவே இந்த செயல்களை செய்துவருவதாக சாவ்ஜி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த வருடமும் சாவ்ஜி தன் ஊழியர்களை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார். வரும் தீபாவளிக்கு 600 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Tue Oct 30, 2018 12:47 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f4ab

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனால் நவம்பர் 5ஆம் தேதி திங்கட்கிழமை வேலை பார்த்தே ஆக வேண்டும் அன்றைய தினம் விடுமுறை எடுக்கக்கூடாது என்று பல தனியார் நிறுவனங்கள் கூறி வந்ததாக கூறப்பட்டது. இதனால் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் நிலை திண்டாட்டமாக இருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Tue Oct 30, 2018 12:49 am

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f4ab

நரகாசுரன் அழிந்த நாள் ஐப்பசி மாத தேய்பிறைகாலம், அதாவது அபரபட்சத்து திரயோதசி என்னும் பதின்மூன்றாம் திதிநாள் பின்னிரவாகும். பதினான்காம் திதி நாளான சதர்த்தசி தீபாவளி திருநாளாக அமைகிறது.

அன்றைய தினம் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்து நீராடுவதன் மூலம் தீபாவளி செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. இந்த நாளிலே செய்யப்படும் பூசைகளும் புண்ணிய கருமங்களும் ஆன்மாக்களை நரகத்தினின்றும் காத்தலால். இது நரக சதுர்த்தகி எனப்படுகிறது. ஸ்நானத்துக்குரிய எண்ணெய் லட்சுமியாகவும், தண்ணீர் கங்காதேவியாகவும் கருதப்படுவதாக சமய அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தன்று நீராடுவதை “கங்கா ஸ்தானம்” என்று சொல்வார்கள். பெரும்பாலும் இந்நாளிலே ஒருவரையொருவர் சந்திக்கும்போது “கங்கா ஸ்நானம் செய்தாகவிட்டதா?” என்று விசாரித்துக்கொள்வது வழக்கம் ஏனெனில் தீபாவளியன்று சகல நீர்நிலைகளிலும் கங்கை வருவதாக ஐதீகம். அன்றைய தினம் எந்தவொரு இடத்தில் நீராடினாலும், கங்கை நதியில் நீராடிய பலனும் லட்சுமிதேவி கடாட்சமும் அனைவருக்கும் கிடைக்கும் என சமய நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்பது (தீபம்+ஆவளி) தீபங்களின் வரிசை என்று பொருள்படும் இதனை தீபாவளி (தீபம்+ஆவலி) என்றும் நூல்களிலே சொல்லப்பட்டுள்ளது. ஆவளி, ஆவலி என்ற இரு பதங்களும் ஒரே கருத்தையே குறிக்கின்றன. வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by ayyasamy ram Tue Oct 30, 2018 7:19 am

தலை தீபாவளி....தீபாவளி கவிதை....
--
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Animated-candle-gif-6
----
வந்தது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் மணமகனும்...,
தேவதையின் வரவாய் புது பெண்ணும்...,
தாய் வீட்டு அழைப்பிற்கேற்ப,
தாய் வீடு செல்லும் வைபவம்...,

சிறகில்லா சிட்டாய் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு செல்ல!!
தாயின் அன்பும்..., தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!

இப்போதும் கிடைக்கிறது..., ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!! வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.

ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!
மாப்பிளையும் , புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.

பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!

இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை கொடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!
மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!

அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.
பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!

அவளும், அவரின் காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!

பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!

அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.
இருவரும், எழுந்து கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!

பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,

தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,

காலை உணவுக்கு தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும், கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,

தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.
காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள் அவளிடம்.
இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,

தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,
”பட பட பட்டாசு” வைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!

விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,
ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,, தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
இந்த படையலை!!

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!

கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!
-
---------------------------------
-ராஜி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by ayyasamy ram Wed Oct 31, 2018 10:52 am

உச்சகட்ட தீபாவளி...

கைக்கு எட்டியது உடுத்த கிடைக்குமா...????
தீபாவளி ஜவுளிக்கான லோன் கிடைக்குமா..
என்ற ஒரு குண்டை போட்டார் அப்பா...
ஒரு வாரம் சோகமாய் இருந்த வீடு சந்தோசமானது
லோன் கிடைத்ததாய் அப்பாவிடமிருந்து வந்த செய்தியால்...
எப்பொழதும் போல கோ.ஆப்.டெக்சில் தான் ஜவுளி...

எங்கள் அனைவருக்கும் ஸ்கூல் யூனிபார்ம் எடுத்திடலாம்
என்றார் அப்பா...

அழுது அடம் பிடித்து கலர் சட்டைக்கு அப்ரூவல் கிடைத்தது
அம்மாவின் சிபாரிசில்

அப்பா சைக்கிளில்???? செல்ல நாங்கள் எல்லோரும்
டவுன் பஸ்ஸில் சென்று சேர்தோம்..ஒரே கூட்டம் கடையில்

எப்படியோ வேட்டி..சேலை..சட்டை..டவுசர்..பாவாடைதுணி
என வாங்கியது போக மீதியில் இரண்டு ஜமுக்காளமும்
வாங்கியாச்சு..

பட்டாணி..உப்புகடலை..பகோடாவுடன் வீடு வந்து சேர்தோம்..
ஒரு நாள் பூராவும் தெருவே வந்து பார்த்துபோனது
எங்கள் வீட்டு ஜவுளியை...

டேய் ஜெயபால் டைலரிடம் கொடுத்திருக்கேன் போய்
அளவு கொடுதிடுங்க. நல்லா லூசா கொடுங்கடா
இரண்டு மூன்று வருடம் வர்றமாதிரி
என்றார் அப்பா..

லேட்டஸ்ட் பாபி ஸ்டைல் நீண்ட ரவுண்டு காலர்..
இரண்டுபக்கமும் மூடி வைத்த பாக்கட் என அளவு
கொடுத்தாச்சு.family uniform..

தினமும் பள்ளி விட்டு டைலர்கடை வழியாகத்தான்
சுற்றி வருவோம். தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு
வரை கட்டிப்போட்ட துணி அப்படியே பண்டலாக
இருந்தது..பிரிக்கவே இல்லை...

தச்சாச்சா என்று கேட்டோம் தீபாவளிக்குமுதல்
நாள் வா என்றார் டைலர்..

தீபாவளிக்கு முதல் நாள் அன்று பள்ளி அரை நேரம்தான்.
மதியம் சாப்பிட்டுவிட்டு நான்கு மணிவாக்கில் சென்று
கேட்டோம்...வெட்டியாச்சு தையல் ஒடிக்கிட்டிருக்கு
ராத்திரி சாப்பிட்டு எட்டு மணிக்குவா என்றார்...டைலர்.

விடிந்தால் தீபாவளி..கிடைக்குமா கிடைக்காதா
திக்.. திக்..என்று இருந்தது.

உண்மையிலேயே வெட்டிதச்சிருந்தா பிட்டுகள் கீழே
கிடக்கிறதா என பார்தோம்.. கிடந்தன துண்டுகள்..
சந்தோசமாய் இருந்தது

இரவு சாப்பிட்டு சற்று தாமதாக சென்றோம்.
ஓன்பது மணி..தெருவில் சிலர் மத்தாப்பு  புஸ்வாணம்
ஏற்றிக் கொண்டிருந்தார்கள்..நாய்கள்வேற அங்கங்கே
குறைத்தது..

கடையைசென்று சேர்தோம்..உட்காருங்கபா
இதோ பட்டன்கட்டி காஜா எடுத்தாவுது..
ஒரு அரைமணிநேரம் ரெடியாயிடும் என்றார் .

காஜாபையன் தூங்கிவழியவே பளார் என ஒ
ரு அடி விட்டு போய் டீ வாங்கிட்டுவா என
சொம்பை கொடுத்தார்..

பாதியில் விட்டுவிட்டு விட்டால் போதும்என கிளம்பியவன்
வர வெகுநேரமானது...
#பெட்ரூமாஸ் லைட் வெளிச்சம்...
#தையல்மிஷின் ஓடும் சத்தம்...
#மர்பி ரேடியோவில் விவத்பாரதியின் தேன்கிண்ணம்...????????
#பி.பி.சீனுவாசின் ரம்மியமான இரவு பாடல்..
#M.A.Jacob..ன் கார்பட் விளம்பரம்..
#புளிய மர காற்று..
#எங்கோ கேட்கும் ஓரிரண்டு வெடி சத்தம் ''
ரம்மியமாக இருந்தது..அந்த சூழல்...

ஒருவழியாக தினதந்தி பேப்பரில் சுற்றி மேலே
நூற்றிஇருபது ரூபாய் கூலி என எழுதிக்கொடுத்தார்.
இரவு பதினோருமணி வீடு வந்துசேரும்போது...

ஒரே ஒரு குறை அயன்பண்ணி தரவில்லை
சட்டையை அழகாக மடித்து பாய்க்கும் தலையணக்கும்
இடையில் வைத்தால் அயர்ன் செய்தது போல இருக்கும்..

கைக்குஎட்டியது ஒரு வழியாக கட்ட கிடைத்து விட்ட
சந்தோசம்

அடுப்பில் அம்மா சுடும் முருக்கு..அதிரசம்..சோமாஸ்
வாசனையில் விடிந்தால் தீபாவளி கொண்டாடபோகும்
மகிழ்ச்சியில் கண்உறங்கினோம்

அந்த தீபாவளியை யாராவது பார்தால் அனுப்பி
வையுங்களேன். குதூகலம் குதூகலம்

- படித்ததில் பிடித்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by krishnaamma Wed Oct 31, 2018 11:40 am

அருமையான திரி சிவா....வந்து படிக்கிறேன்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Fri Nov 02, 2018 8:23 pm


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f389 தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e9தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1eaதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f5தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1fbதீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1e6தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1f1தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f1ee தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 1f4ab


5 நாள் பண்டிகையாக தீபாவளி ஐந்து நாள் மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது, அதன் படி,

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்.
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்.
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டிற்கு வெளியில் தெற்கு நோக்கி வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு தக்காவறு ஒரு நபருக்கு ஒரு தீபம் என்ற வகையில் தீபம் வைக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழும் சூழல் உருவாகும்.

இன்று திரயோதசி திதி இருக்கும் நேரத்தில் சுப ஹோரையில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி, தீபாவளியன்று மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வதால் பொன் பொருட்கள் மென்மேலும் சேர்க்கை உண்டாகும்.

: இன்று தீபாவளி திருநாள் அதிகாலை 3-00 மணி முதல் காலை 6-00 மணிக்குள் எண்ணெய் ஸ்நானம் செய்து வீட்டில் தீபம் ஏற்றி வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். லட்சுமி பூஜை செய்வதால் வருடம் முழுவதும் நம் வீட்டில் லட்சுமி தங்கியிருந்து அருள் பாலிப்பாள்.

இன்று பகல் 1-12 மணி முதல் 3-36 மணிக்குள் உள்ள காலத்தில் தில தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும்.

இன்று முதல் கார்த்திகை மாத அமாவாசை வரை உள்ள முப்பது நாட்கள் புனித நதி ஸ்நானம் புண்ணிய தீர்த்த ஸ்நானம் சமுத்திர ஸ்நானம் செய்யவும் சகல விதமான தோஷ பரிகாரங்கள் செய்யவும் உகந்த காலமாகும். இந்த ஸ்நானம் சூரிய உதயத்திற்கு முன் செய்வது சிறப்பு.

யமத் துவிதியை பகல் 03-00 மணிக்கு மேல் 06-00 மணிக்குள் துவிதியை உள்ள நாள் யமத் துவிதியை ஆகும். இன்று யமதர்மராஜன் தன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாள் ஆகும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று எள் இலை அல்லது வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.

நரக சதுர்த்தசி குளியல் நேரம் அதிகாலை 3-00 மணி முதல் 6-00 மணிக்குள் குளிக்க வேண்டும். நல்லெண்ணையை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து கொதிக்கும் வெந்நீரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரசம் பட்டை, புரசம் பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, மாவிலிங்கப் பட்டை ஆகிய ஐந்து வகையான மூலிகைப் பட்டைகளை ஊறவைத்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். காலை 8-00 மணி முதல் 9-00 மணிக்குள் சுக்கிரன் ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.


தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by ayyasamy ram Sat Nov 03, 2018 7:53 am

கங்கைக்குளியலுடன் பொங்கும் மகிழ்ச்சி!
-
தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Vm8
-


நம் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்
பண்டிகையாக "தீபாவளி' விளங்குகிறது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி
அளிக்கும் பண்டிகை. தீமைகளின் உறைவிடமாகத்
திகழ்ந்த நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அழித்த
நாளை நாம் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.

தீமைகள் அகன்று நன்மைகள் சேரும் நன்னாளாகத்
தீபாவளி திகழ்கிறது.

இப்பண்டிகையின் போது செல்வ வளம் அளிக்கும் திருமகள்
வழிபாடும் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது. தீபங்களை வ
ரிசையாக ஏற்றிவைத்து வணங்கப்படுவதால் தீபாவளி என்று
(தீபம் + ஆவளி) சிறப்பித்து அழைக்கப்படுகின்றது.

தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து
நீராடி புத்தாடை அணிந்து வீடுகளில் விளக்குகள் ஏற்றி
இறைவனை வழிபடுகின்றோம்.

அன்று காலையில் நண்பர்களையும், உறவினர்களையும்
சந்திக்கும் பொழுது "கங்காஸ்நானம் ஆச்சா?" என்று
ஒருவருக்கு ஒருவர் கேட்டு வாழ்த்தி மகிழ்ச்சியடைகின்றோம்.

ஏனெனில்,, இந்நாளில் புனிதமான கங்கை நீரில் நீராடுவது
மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது. ஆனால் அன்று
எல்லோரும் காசிக்கு சென்று கங்கை நீராடுதல் என்பது
இயலாதது ஒன்றாகும்.

பகவானே அதற்கு ஓர் உபாயமும் தந்தருளினார்.
ஆம், நாம் அன்று விடியற்காலை எண்ணெய் குளியலுக்காக
பயன்படுத்தும் எண்ணெயில் மகாலட்சுமியும் வெந்நீரில்
(சுடுநீரில்) கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம்.

அதனால் தான் நாம் இருக்கும் இடத்திலேயே கங்காஸ்நானம்
செய்தவர்களாக கருதப்படுகின்றோம். தென்னாட்டில்
சில கோயில்களின் தீர்த்தங்களும் கங்கை நீருக்கு ஒப்பாகக்
கருதப்படுகின்றது.

சில திருக்கோயில்களின் வரலாறும் கங்கையுடன்
தொடர்புடையது.

வட இந்தியாவில் காசி திருத்தலத்தில் தீபாவளி நாளில்
"அன்னபூரணி' வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது.


அன்று அங்கு நடைபெறும் லட்டு தேர் பவனி காண
வேண்டியது ஒன்று. தேவி வடிவங்களில் "அன்னபூரணி'யும்
ஒன்று. அமர்ந்த கோலத்தில் வலக்கையில் பொன்
அகப்பையும், இடக்கையில் மணிகள் பதித்த பொற்கலசத்தில்
பாற்சோறும் ஏந்தி அனைத்து உயிர்களுக்கெல்லாம் உணவு
வழங்கும் தாயாக விளங்குகின்றாள் அன்னை அன்னபூரணி,

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வடகாடு கோயிலூர்
போன்ற கோயில்களில் அன்ன பூரணி வழிபாடு நடைபெற்று
வருவது குறிப்பிடத்தக்கது.


தஞ்சை அருகே சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகத் திகழும்
திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளி அருள்புரியும் இறைவி
"அன்னபூரணி' என்று அழைத்துப் போற்றப்படுகின்றாள்.

நாமும் இத்தீபாவளித் திருநாளன்று, நாம் வணங்கும்
தெய்வமூர்த்திகளுடன் புனித கங்கா மாதாவையும்,
பசிப்பிணியை போக்கும் அன்னபூரணி தேவியையும்
சேர்ந்து வழிபட்டு வாழ்வில் அனைத்து நலனையும்
பெறுவோமாக!
-
-------------------------------------
- கி.ஸ்ரீதரன்
வெள்ளிமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபாவளி செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Empty Re: தீபாவளி செய்திகள் | கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum