புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
171 Posts - 80%
heezulia
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
1 Post - 0%
prajai
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
1 Post - 0%
Pampu
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_m10மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும்


   
   
Logeshclep
Logeshclep
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 06/02/2018
https://www.facebook.com/KFITAMIL/

PostLogeshclep Thu Oct 25, 2018 10:30 am

மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும்
திரு S.P. கந்தசாமி, செயலாளர், கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன், இந்தியா - சென்னை
...............................................................................................................................................
பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சம், இந்த அண்ட சராசரம் வினாடிக்கு வினாடி விரிவடைந்து கொண்டே போவதைப்பார்த்து விண் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் திகைக்கிறார்கள். இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில், கடற்கரையில் இருக்கும் ஓர் துகள் மணல் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அந்த பூமியில் மழைக்கால நீர் குமிழி போல் தோன்றி மடிவதே, நானும், நீங்களும் இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலே, நாம் தவிர்த்திருக்கக்கூடிய எத்தனையோ துக்கங்கள், அலங்கோலங்கள், குழப்பங்கள், வெறுப்புகள், மனப்புண்கள், அறியாமைகள், பேராசைகள், கோபங்கள், பொறாமைகள்! எப்போதாவது ஓரு சமையம் உன்னதமான மன நிலைகள்! எண்ணங்கள்!

நம்மை சுற்றிலும் நாம் கூர்ந்து கவனித்தால் என்ன பார்க்கிறோம்? தினசரி செய்தித்தாளைப் பார்த்தாலே உலகில் என்னவெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். ஓயாத வன்முறை, பயங்கரவாதம், அதிகரிக்கும் போராட்டங்கள், வேதனைகள், அறியாமை, சுற்றுச்சூழல் சீர்கேடு என்று மனித குலத்தின் துக்கத்தை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். உலகில், வறுமை கோட்டிற்கு கீழே  முன்னூறு கோடி மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகின் இயற்கை வளங்களில், எண்பது சதவிகிதமானது, வெறும் பன்னிரண்டு சதவிகிதமுள்ள செல்வந்தர்களின் ஏகபோக உரிமையாக உள்ளது. இராணுவ தளவாடங்களுக்காக, உலகின் நாடுகளனைத்தும் செய்யும் ஓராண்டுக்கானச் செலவில், ஒரே ஒரு சதவிகிதம் பணம் மட்டும் கல்விக்காக செலவிடப்பட்டால் போதும், உலகின் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வழி பிறக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டால் வருடா வருடம் உலகில் நாற்பது அல்லது ஐம்பது லட்சம் குழந்தைகள் மடிகிறார்கள். ஆதாரமான புள்ளி விவரங்கள் இவைகளை தெரிவிக்கின்றன. ஆறாம் அறிவாம் பகுத்தறிவைப் பெற்றிருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நாம் வாழும் உலகின் நிலைமை இதுதான்! இவ்வளவு மோசமாய் நாம் ஏன் வழி தவறி விட்டோம்?

நமது மானுட வாழ்க்கையை நோக்குங்கால், குதூகலம் இல்லாததோர் தன்மையை காண முடிகிறது. வியக்கத்தக்கதாகவும், பேரழகானதாகவும் இருக்கும் பிரபஞ்சம், ஒரு வித லயத்தோடும் பிரபஞ்ச ஒழுங்கோடும் இயங்குகிறது. அதன் அங்கமாய் உள்ள நம் பூமியும் அவ்வாறே உள்ளது. ஆனால், பூமியில் வாழும் நாமோ, பிரபஞ்சத்தின் லயத்திற்கும், ஒழுங்கிற்கும் எதிர்மாறான பண்புகளோடு, போராட்டத்துடன் வாழ்கிறோம். அசாதாரணமான சிந்திக்கும் அறிவைக் கொண்டிருக்கும் நம்மால் எதையும் அலசி ஆராய்ந்து பகுத்துணர முடியும். ஆனால், அந்த அறிவை நாம் இதுவரை முழுதும் பயன்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. மேலும் மேலும் மாயைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் நமது மனம் பலவீனப்பட்டுள்ள்து. நம் உள் மனதில் ஆழமான மாற்றத்தை கொண்டுவரக்கூடிய அளவிற்கு நம் மனம் வலிமை படைத்து இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், அந்த வலிமை செயல்படாமல் இருக்கிறது. நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள எண்ணச் சிறைகளில், கருத்துச்சிறைகளில் நாம் சிறை பட்டுள்ளோம். நமது மனம் நெருக்கடியிலும், குழப்பத்திலும், கலக்கத்திலும் இருப்பதையும், சீர்கேடு எனும் விதை, மேலும் மேலும் வீரியம் பெற்று, பல்வேறு திசைகளில், துறைகளில் முளை விட்டு துளிர்ப்பதையும் நம்மால் காண முடிகிறது. உண்மையிலேயே, உணர்ச்சி வயப்படாத, பாரபட்சமற்ற சீரிய முறையில், நம் உலக வாழ்க்கையின் தன்மையை காண்பவராக நாமிருக்கும் பட்சத்தில், அற்புதமான இந்த மானுட வாழ்விற்கு நாம் தகுதியானவர்தானா என்றே கேட்கத்தோன்றும்.வியக்கத்தக்க அழகுடன் கூடிய இவ்வுலகில் மனிதனாய் பிறந்து வாழ நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை குளறுபடி செய்து நாம் வீண் செய்துகொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

ஆழமான பயங்களும், இன்ப வேட்கையை நாடி ஓயாமல் அலைவதுமே, நமது வாழ்க்கையின் சாரமாக தோன்றுகிறது. உடனடி மோட்சம் பெற்றுத்தரும் வழிமுறைகளுக்காக ஏங்கும் நாகரீகத்தைச் சார்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். துவாரபாலகர்களாய் நிற்கும் பயம் மற்றும் இன்பவேட்கை என்பவற்றை எதிர்கொண்டு ஜெயிக்காமல், நாம், ஞானம் என்ற கர்ப்ப கிருஹத்துள் நேரடியாய் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறோம். தொல்லைகளும் சிக்கலும் மலிந்த இவ்வுலகில், நம் வாழ்க்கையானது மேலும் மேலும் ஆழமற்றதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கிறது. வாழ்வில் சலிப்பும், மனித வழ்க்கையில் குறைபாடும் இருப்பதைப் பற்றிய உணர்வும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பத் துறையில் நாம் அடைந்துள்ள வியக்கத்தகு முன்னேற்றம் நாம் அறிந்ததே. ஆனால், அந்த அளவு மனோரீதியாக முன்னேற்றம் இல்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. விரைவில் சென்று அடைய முடிவதால், இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்தை விஞ்ஞான வளர்ச்சி குறைத்துவிட்டது என்று நாம் சொல்லலாம். ஆனால் நமது வாழ்க்கை முறை இரண்டு மனிதர்களிடையே தூரத்தை அதிகப்படுத்தி விட்டதே, நெருக்கத்தை குறைத்து விட்டதே! பூமியை சூறையாடி விட்டோம், ஜீவ சக்தியின் ஆணிவேர்களாக இருந்து, அதை போஷிக்கும் பஞ்சபூதங்களை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம், சிதைத்துக்கொண்டிருக்கிறோம். இது பெற்ற தாயை அவமதித்து இழிவு படுத்துவது போன்ற செயலாகும். நாம் வாழும் இப்பூமி மிகவும் அசாதாரணமானது, அரிதானது - ஆனால் நாம் பூமியின் பாதுகாப்புப்பற்றி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறோம்.

உள் மனதிலும் வாழ்க்கை இயந்திரத்தனமானதாகவும், படைப்புத்திறனற்றதாகவும் ஆகிக்கொண்டு வருகிறது. தினந்தோறும் மென்றதையே மென்றுகொண்டு, ஒரே மாதிரியான உணவுவகைகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப்போல், மனம் பழக்கப்பட்டுபோன ஒரே முறையில் இயங்கி வருகிறது. காலை உணவு, மதிய சாப்பாடு, இரவு உணவு என்று வெளிப்புற உணவு பட்டியல் பற்றி நாம் அறிவோம். தென்னிந்தியாவைச் சேர்ந்தவராய் இருப்பின், தினசரி உணவுப்பட்டியல் இட்லி, சாம்பார், தோசை என்ற இந்த பழக்கப்பட்ட உணவு வகைகளை தினம் தினம் சாப்பிடுவோம். ஆனால், நான் குறிப்பிடுவது பிறப்பிலிருந்து இறப்பு வரை தினம் தினம் நாம் உண்ணும் உள்மன உணவுப் பட்டியலை! எதிர்கால நம்பிக்கைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், பயங்கள், வெறுப்புகள் போன்றவை நம் உள்மன உணவுப் பட்டியலாக இருக்கிறது! நாமே போட்டுக்கொண்ட ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்குள் நாம் வாழ்கிறோம். உலகில் பொறுப்பாக செயல்பட வேண்டியதற்கான தெளிந்த சிந்தனையும் தெளிவான நோக்கும் உடையவராக நம்மை நாம் எண்ணிக்கொள்கிறோம், அவ்வாறு உணர்கிறோம். ஆனால், ஞானிகள் சுட்டிக்காட்டியதைப் போல், அழகான வண்ணஜாலமாய் இருக்கும் உலகில் உலவி வரும் குருடராய்தான் நாம் இருக்கிறோம். சீர்கேடுற்று நலிவடைந்து வரும் நாகரீகத்தால் விழுங்கப்பட்டு, இந்த பரிதாபகரமான நிலையில் நாம் தொடர்ந்து வாழ்கிறோம்.

கோடிகணக்கான புத்தகங்கள், அறிவுரைகள், இலட்சக்கணக்கான பிரார்த்தனை கூடங்கள், ஆயிரக்கணக்கான கல்லூரிகள் என்று இருந்தும் நம் வாழ்க்கையின் தன்மை என்ன? நம் மன நிலை என்ன? நாளுக்கு நாள் சீரழிந்து அல்லவா வருகின்றன. இச்சீரழிவிற்கு ஆணிவேரான காரணமென்ன? சிறப்பான, மகிழ்வான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூலவேர் ஒன்றிருப்பதை கண்டு கொள்ளாமல், அத்தியாவசியமில்லாத விஷயங்களில் நாம் நமது கவனத்தை இழந்து விட்டோமா? நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் யுகமான இக்கலியுகத்தில், நாம் இப்படித்தான் வாழவேண்டுமென்பது நம் தலைவிதி, கர்மம் என்று கூறிவிடுகிறோம். அவ்வாறு கூறுவது, எண்ணுவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. தலைவிதி என்று சொல்லிவிட்டால், நாம் செய்வதற்கு என்று ஒன்றுமில்லை; கர்மம் என்ற வினைக்கட்டிலிருந்து நாம் தப்ப முடியாது. ஆக, இந்த ஆறுதல் அளிக்கும் எண்ணத்தோடு நாம் பலகாலமாய் வாழ்ந்து வருகிறோம். அடிப்படையில் 'கர்மம்' என்ற கருத்து, நம்மை கட்டுப்படுத்துவதாகவும், தளைப்படுத்துவதாகவும் உள்ள செயல்பாடு என்று தான் பொருள். கர்மத்திலிருந்து விடுதலை என்று கூறும்போது, இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை என்பதைப் பற்றி பேசவேண்டியதும் நியாயம்தானே? ஞானிகள் கூறியது போல, கடந்த கால எண்ணங்களால், அனுபவங்களால் கட்டுப்படுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து நாம் விடுதலை பெறுவது என்பது சாத்தியம்தானா? நம் சிந்தனையில், நம் உள்மனதில், அடிப்படையான மாற்றத்தை, முழுமையான தீவிர மாற்றத்தை கொண்டுவர நம்மால் முடியுமா? நம் எண்ணங்கள் உருவாக்கியிருக்கும் மாயங்களை, குழப்பங்களை, அலசி ஆராய்ந்து, வெளிக்கொணர்ந்து காட்டும், துருவி ஆராயும் தீப்பொறியைக்கொண்ட மனம் நமக்கெல்லாம் வாய்க்குமா? அப்படி வாய்த்தால், அனைத்தையும் தெளிவாக நம்மால் பார்க்க முடியும், சிந்திக்க முடியும். ஆய்வு செய்யும் உள்மன தீப்பொறியுடன் கூடவே நம் மனதில் குதூகலத்துடன் வாழ முடியுமா? அவ்வாறில்லாமல், வாழ்வே ஓர் பெரிய சுமை என்று பாரமாக நினைத்து சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உயர்ந்த போதனைகளைக் கேட்டும், படித்தும், அவைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் நாம், நம் ஆறாவது அறிவின் குறைபாட்டை பார்க்கும் திறன் நமக்கு உள்ளதா? ஆனந்தமும், ஜீவ ஓட்டமும் உள்ள புதியதோர் மனித கலாச்சாரத்தை நாம் வளர்க்க உதவ முடியுமா? நாம் வாழும் இந்த பூமியை பாதுகாப்பதாகவும், மானுட நன்னெறியையும், காருண்ய குணத்தையும் மதிப்பதாகவும் உள்ள ஓர் புதியதோர் கலாச்சாரத்திற்கு நாம் வித்திட முடியுமா? அவ்வாறான கலாச்சாரத்தை ஏற்படுத்த, நாம் நமது வாழ்க்கையின் செயல்பாட்டில் எங்கு தொடங்க வேண்டும்? நம் அன்றாட வாழ்வில் பரிபூரண ஒழுங்கு முறையை கொண்டு வருவதில் தொடங்கவேண்டுமா?
உண்மையான, கடுமையான, கண்ணுக்கெதிரே நிதர்சனமாகத்தெரியும், ஆபத்தான நிலைமையில், இன்று உடனடி பதிலைக்கோரும் மனித குலத்தின் பிரதிநிதியாக உள்ள நாம் ஒவ்வொருவரும் எதிர் நோக்குகிறோம். மதம், அரசியல், பொருளாதாரம் என்ற பெயரில் பூசல்களும், சண்டை சச்சரவுகளும், குழப்பங்களும், பயங்கரவாதமும், இயற்கைசூழலை பாழ்படுத்தப்படுவதும், பெருகிவரும் இந்த ஆபத்தான நிலைமையை இப்போதைக்கு ஓரங்கட்டி வைத்துவிட்டு, நிதானமாக, இருபது வருடங்கள் கழித்து தீர்வு (கற்பனையானதோ, தீர்வு காண எளிமையானதோ) கண்டு கொள்ளலாம் என்று மெத்தனமாய் இருக்கக்கூடிய சமுதாயச் சூழ்நிலையில் நாம் இல்லை.
இன்றைய ஆபத்தான நிலைமை, நமக்கு சவால் விடுகிறது. கல்வி, சமயம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பாதுகாப்பு, சுற்றுசூழல் என நம் வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் இந்த ஆபத்தான நிலைமை பரவியுள்ளது. அந்த சவாலுக்கான சரியான, முழுமையான, புத்திசாலித்தனமான பதிலை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.
பல காலமாக, இந்த ஆபத்தான நிலைமையை மேலோட்டமாகவும், சிறு சிறு பகுதிகளாகவும், சிறிதளவே பயன் தரும் முறைகளிலும் நாம் சமாளிக்க முயன்று வந்துள்ளோம். இந்த ஆபத்தான நிலைமை எப்படியாவது தானே தீர்ந்துவிடும் என்று நம்மை சமாதானப்படுதிகொள்ளும் கருத்தை கொண்டிருக்கிறோம். அல்லது, இந்த ஆபத்தான நிலைமை தொலைதூரத்தில் இருப்பதாகவும், நம்மை அது அண்டாது, பாதிக்காது என்றும் சமாதானப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில், நமது சமுதாயத்தின் நிலைமை முற்றிலுமாக மாறி இருப்பதைப் பார்க்கிறோம். இப்போது இந்த ஆபத்தான நிலைமை நம் வீட்டுக்கதவைத் தட்டுகிறது.வீடு தீப்பிடித்துக்கொண்ட நிலை - தீயை அணைக்க வேண்டும். பீச்சாங்குழலில் நீர் அடித்து தீயணைக்க முயன்று கொண்டிருக்கிறோம்! ஆபத்தான நிலைமையின் கடுமைக்கு ஏற்றதாய் நம் பதிலும், அணுகுமுறையும் ஆழமானதாக, பலமுள்ளதாக இல்லை.
இந்நிலையில், இந்த ஆபத்தான நிலைக்கும், அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாய், ஆணிவேராய் இருக்கும் காரணம் எது என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பே. நம் உள்மனது செயல்படும் விதம் பற்றி அறிந்துகொள்ளாமல், நாம் அறியாமையில் இருக்கும் காரணத்தால், நாமே இந்த நிலைக்கு காரணமாய் இருக்கிறோம் என்றும், உண்மையான பிரச்சினை நமக்குள் இருப்பதாகவும், நாம் வெளியில் காணும் நெருக்கடி, ஆபத்தான நிலைமைக்கு, நம் உள்மன நெருக்கடியின், குழப்பத்தின் பிரதிபலிப்பே என்றும், சான்றோர் நமக்கு சுட்டிக்காட்டி வந்துள்ளனர். புத்தகங்கள் படிப்பதாலோ, வெறும் புத்தக அறிவு பெற்றிருப்பதாலோ, நம்மை, நம் செயல்பாட்டை முழுவதுமாக உணர்ந்து கொள்ளும் மனத்தெளிவு கிடைப்பதில்லை என்பதை அறிகிறோம். மனதின், எண்ணங்களின், நுட்பமான இயக்கத்தை ஆழமாக கூர்ந்து நாம் கவனித்தல் வேண்டும். மனதை கூர்ந்து கவனிக்குங்கால், சொந்த கருத்துகளும் கோட்பாடுகளும், தீர்மானங்களும், விருப்பு வெறுப்புகளும் குறுக்கிடக்கூடாது. இவ்வாறு செய்வது, 'நிதர்சனமாக உள்ளதை உள்ளபடி பார்ப்பது' என்பதாகும். இவ்வாறு ஒருவரால் கூர்ந்து பார்க்க முடிந்து, அதனால் அவர் மனத்தெளிவு பெற்ற நிலையில், வெறும் நம்பிக்கைகளும், மதங்களும், நாம் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் நம்மைப் பற்றிய அடையாளங்களும் தோற்றுவிக்கும் 'நான்' என்ற ஆழ்மன பிரிவினை உணர்வே, பிரச்சினைகளின் மூலகாரணமாய் இருப்பதைக் காண்போம்.

துரதிர்ஷ்ட வசமாக, நான் என்ற ஆழ்மனப் பிரிவினைப்படுத்தும் உணர்வை பலப்படுத்தி, ஆழப்படுத்தும் வாழ்க்கை முறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிப்புற சூழலையும், வாழ்க்கை வசதிகளையும், மேம்படுத்திக்கொள்வதில் நாம் மூழ்கிப்போயிருப்பதால், கவனிக்கப்படவேண்டிய விஷயமான இந்த ஆபத்தான நெருக்கடியின் மூலகாரணத்தை நாம் பார்க்க தவறுகிறோம். பல்வேறு வகைகளால் பின்னப்பட்ட சிக்கலான சமுதாய அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய உலகில், அதிக அளவில் சட்டங்களை இயற்றுகிறோம் - ஆனால் குறைந்த அளவிலேயே வாழ்க்கைக்கு பயன்படும் கல்வியை புகட்டுகிறோம். இப்போதைய சமுதாயம் நமக்கு அளிக்கும் சுகங்களில் மூழ்கிவிட்டது ஒரு பக்கம்; நிரந்தரமானதும், மேன்மையானாதும், புலன்களுக்கு அப்பாற்ப்பட்டதுமான ஒன்றை அடைய ஏங்கும் ஆழமான உள்மன தேடல் ஒரு பக்கம் என நாம் திண்டாடுகிறோம். முரண்பாடான இந்த இரண்டு நிலைகளையும் நாம் விரும்புவது, சூடான ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்பதைப் போன்றது! மனித மனங்களின்மேல் டீவீ, இன்டெர்னெட் என்பவைகளின்  அசாத்திய தாக்கம், புதிய தொழில்நுட்ப சாதனைகள் மற்றும் புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழும் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால், மனோரீதியில் மாற்றம் ஏதுமில்லாமல், மனோபாவத்திலும், கருத்திலும் பத்தாம்பசலியாகவே இருந்துகொண்டு, நம்மை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தான நிலைக்கு தகுந்த பதிலளிக்காமல், செல்லரித்துப்போன முறைகளில் செயல்படுகிறோம். இன்றைய சமுதாயப் புயலை சந்திக்க, கடந்த காலத்திய மனோபாவமும், நம்பிக்கைகளும் போதுமானவைகளாக இருப்பதில்லை.
நாம் நாணையம் உள்ளவர்களாக இருந்தால், நமக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் கடுமையான சிக்கல்களையும், சங்கடமான சூழ்நிலைகளையும், ஆழமான முறையில் புறிந்து கொள்வதில் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். "ஆணிவேரான காரணங்களை ஆராய்ந்து பார்த்து, அதற்கு தகுந்தவாறு நமது செயல்பாடு இருக்கவேண்டும்" என்ற முக்கியமானதோர் உண்மையை நம் ஞானிகள் நமக்கு அடிக்கடி சுட்டிகாட்டி உள்ளனர்.

இவையெல்லாம் உடனடி பயன் தராதவை, தத்துவரீதியானவை அல்லது நடைமுறைக்கு ஒத்துவறாதவை அல்லது எட்டமுடியாத நிலைமையைப் பற்றி தேவையற்ற பேச்சு என்றும், இப்போது இருக்கும் நெருக்கடி நிலைமைக்கு உடனடி நடைமுறை அணுகுமுறைகளே தேவை என்றும் கூறி நாம் மெத்தனமாக இருந்துவிடலாம். ஆம்! உடனடி நடைமுறை அணுகுமுறைகள் முக்கியவைதான். அதே சமயம், ஆணிவேரான காரணங்களை நாம் பார்க்காமல் விட்டுவிட்டால், நாம் ஏற்படுத்தக்கூடிய நடைமுறை அணுகுமுறைகள் சீக்கிரம் சிதைந்துவிடும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனித வரலாறு இந்த உண்மைக்கான பல ஆதாரங்களை கொண்டுள்ளது. ஆணிவேரான காரணங்களை அறிந்துகொள்ளாமல், நாம் எடுக்கும் செயல்பாடுகள், அணுகுமுறைகள், நம்மை எந்த அளவு இந்த நெருக்கடியில் கொண்டு வந்து விட்டுள்ளன என்பதை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனிதராகிய நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதின் அவசியத்தைப் பற்றியும், அதன் மூலம் நமது குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் வாழ்க்கையில், பெரிய மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்பைப் பற்றியும் ஆழமாக நாம் சிந்திக்க வேண்டும்.

இப்போது இருக்கும் நம் வாழ்க்கை முறையில், நம் கலாச்சாரத்தில் அடிப்படியான மறுமலர்ச்சி ஏற்பட்டு, நாம் வாழும் இந்த உலகத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்றால் நாம் புதியதோர் கலாச்சாரத்தை தழுவியாக வேண்டும். பணத்தையும், பதவியையும், சமுதாய அந்தஸ்த்தையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கும் இப்போதைய கலாச்சாரத்திற்கு எதிர்மறையான ஒரு கலாச்சாரம் நம்முள் உருவாக வேண்டும். அதை உருவாக்க நாம் என்ன செய்யமுடியும்? அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ, மத குருமார்களோ, ஏட்டுக்கல்வியோ அதை உருவாக்க முடியாது. கடந்த ஆயிரம் வருடங்களாக உள்ள மனித வரலாற்றை நாம் பார்க்கும்போது இதை தெரிந்துகொள்ளலாம். நம்முடைய சந்ததியின் வருங்கால நன்மைக்காக, புதியதோர் கலாச்சாரத்தை நம் சமுதாயத்தில் மலரவைக்கும் பொறுப்பு தனி மனிதனாகிய நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
...................................................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:46 pm

சிந்தித்து செயலாற்றத் தூண்டும் கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி @Logeshclep

இதுபோன்ற கட்டுரைகள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அரசாங்கம், அரசியல்வாதிகளால் தன் இந்த சமுதாயம் இயங்குகிறது என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும்.

நாம் தான் சமுதாயம், நமது மாற்றமே சமுதாய மாற்றம் என்பதை மக்கள் உணரத் துவங்கினாலே புதியதோர் சமுதாயம் புத்துணர்ச்சியுடன் மலரும்.





மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:47 pm

தினசரி செய்திகள் பகுதியிலிருந்து கட்டுரைகள் பகுதிக்கு மாற்றியுள்ளேன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



மனித நெருக்கடியும் புதிய கலாச்சாரமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Logeshclep
Logeshclep
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 06/02/2018
https://www.facebook.com/KFITAMIL/

PostLogeshclep Thu Oct 25, 2018 2:58 pm

சிவா wrote:தினசரி செய்திகள் பகுதியிலிருந்து கட்டுரைகள் பகுதிக்கு மாற்றியுள்ளேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1283076

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக