புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
Raji@123
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_lcapஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_voting_barஇசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 7:23 am

இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன் Tamil-Daily-News-Paper_3865734338761
--
‘‘புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டி,
தாய் ஊட்டும் காலத்தைத் தவிர மற்றப்போதெல்லாம்
வெகு குதூகலத்துடன் துள்ளிக் குதிக்கின்றது.

பெரியதாகி, நுகத்தடியை வைப்பதற்காகக் கழுத்தில்
கயிறைக் கட்டியவுடன் அதன் குதூகலங்களெல்லாம்
போய்விடுகின்றன.

அதன் முகத்தில் துக்கக்குறி தோன்றுகிறது.
உடம்பு எலும்பளவாய் மெலிகின்றது. அதுபோல, உலக
விஷயங்களில் ஈடுபடாதிருக்கும் வரையில் ஒரு பையன்
கவலையற்று சந்தோஷ சித்தனாகவே இருப்பான்.

கல்யாணமாகி உலகக்கட்டு ஒன்று ஏற்பட்டுக் குடும்பப்
பொறுப்பை வகிக்க வேண்டி வந்ததும், அவனுடைய
சந்தோஷங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.

முகத்தில் துக்கம், துன்பம், கவலை இவற்றைக் குறிக்கும்
அடையாளங்கள் தோன்றுகின்றன; காலையில் வீசும்
காற்றைப்போல சுயேச்சையாகவும், அன்றலர்ந்த
பூவைப்போல புதியதாகவும், அழகிய பனித்துளியைப்
போல பரிசுத்தமாகவும், ஆயுள் உள்ளளவும் பாலகனாகவே
இருப்பவன் எவனோ அவன்தான் பாக்கியவான்.’’
- இது பகவான் ராமகிருஷ்ணரின் அருள்வாக்கு.

வாழ்க்கை ஆறு வயதிலே தொடங்கி, அறுபது வயது வரை
போகின்றதென்றால் ஒவ்வொரு ஐந்து வருடத்திலும்
ஒவ்வொரு மாற்றமிருக்கிறது. ஐந்தைந்து வருடங்களில்
பாராளுமன்றங்களும், சட்டசபைகளும், மந்திரி சபைகளும்
மட்டும் மாறுவதில்லை; மனிதனுடைய மனதும் உடம்பும்
மாறுகின்றன.

ஒவ்வொரு கோடைகாலமும், பனிக்காலமும், மழைக்
காலமும் அந்த வித்தியாசத்தை  உணர்த்துகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, உதக மண்டலத்தின்
குளிர்காற்று என் உடம்புக்கு மிகவும் இதமாக இருந்தது.

இப்பொழுது சென்னை நகரத்து வாடை கூட ஒத்துக்
கொள்வதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் நானும்,
முன்னாள் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
அவர்களும், தம்பி எம்.எஸ்.விஸ்வநாதனும், இந்திய  
கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. அம்பிகாபதியும் சோவியத்
யூனியனுக்குச் சென்றிருந்தோம்.

மாஸ்கோ நகரத்துப் பனிமழையில் ‘ஓவர் கோட்’
இல்லாமல் அலைந்தோம்; பூட்ஸ் இல்லாமல் செருப்புக்
காலோடு நடந்தோம். நகர மாந்தர் எங்களைப் பார்த்துத்
திகைத்தார்கள்.

இப்போது, பனிக்காற்றை சுவாசித்தாலே எனக்கு முகம்
வீங்கிக்கொள்கிறது. காலங்களாலே பருவங்கள் மாறுகின்றன.
பருவங்களாலே உடல் மனோநிலைகள் மாறுகின்றன.
பொறுப்புகள் வருகின்றன. நெஞ்சு நிறைய இருந்த நிம்மதி
மெதுமெதுவாகக் குறைந்து அந்த இடத்தில், துக்கமும் துயரமும்
உட்காரத் தொடங்குகின்றன.

குரங்குகள் போல மரங்களில் தாவித் திரிந்த காலம் போய்,
யானையைப் போல ஒவ்வொரு படிக்கட்டிலும் காலை பார்த்து
வைத்து இறங்க வேண்டிய நிலைமை வருகிறது.

இன்பத்துக்காக ஏங்கிய நெஞ்சு, இப்போது நிம்மதிக்காக
ஏங்கத் தொடங்குகிறது. லௌகீகத்தில் ஈடுபட்ட
குடும்பஸ்தனுக்குப் பொறாமையும் குறையத் தொடங்குகிறது.

சலனமும் சபலமும் ஆட்டிப் படைக்கின்றன. எங்கே நிம்மதி எ
ன்று தேடச் செல்கிறது. சிலரை வீட்டை விட்டு ஓடச் சொல்கிறது.
சிலரைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

பகவான் ஸ்ரீபரமஹம்சர் வேறொன்றும் கூறுகிறார்:

‘‘சில வேளைகளில் மதப்பற்றுள்ள பக்தர்களுடன்
சில லௌகீகர்களும் என்னிடம் வருகின்றனர். லௌகீகர்களுக்கு
மத விஷயமான சம்பாஷைணைகளில் விருப்பம் இருப்பதில்லை.

ஈஸ்வரனைப் பற்றி பக்தர்கள் விரிவாகப் பேசிக்
கொண்டிருக்கும்போது, இந்த லௌகீகர்கள் பொறுமை
இல்லாமல் ‘எப்போது திரும்பிப் போவது? இன்னும் எவ்வளவு
நேரம் இங்கு இருக்கப் போகிறீர்கள்?’ என்று ரகசியமாகக்
கேட்கிறார்கள்;

பக்தர்கள் ‘கொஞ்சம் பொறு; போய்விடலாம்’ என்கிறார்கள்.
அவர்களோ, ‘அதுவரை நாங்கள் படகிலே உட்கார்ந்திருக்கிறோம்’
என்று போய்விடுகிறார்கள்.

புறாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தால் அது
பொறுக்கித்தின்ற தானியம், அங்கே இருப்பதை உணரலாம்.
அதுபோலவே உலகப் பற்றுள்ளவனுக்கு அவனது விவகாரமே
கழுத்தில் ஏறி நின்றுகொண்டிருக்கும்.’’

-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 7:25 am

கைவிலங்கு, கால்விலங்குகளை மாட்டிக்கொண்ட பிறகு
நிம்மதியற்ற நிலை என்பது எல்லாருக்கும் வந்தே தீருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே துன்பங்களை விலக்கிக்கொண்டு
வருவது எப்படி என்பதை, இதற்கு முன்னர் நான்
சொல்லியிருக்கிறேன்.

இப்போது லெளகீகர்கள் எந்தெந்த வழியில் நிம்மதியை
நாடலாம் என்பதை விவரிக்க வருகிறேன். சங்கீதம் மனத்தை
இளகச் செய்கிறது. கல்லைக் கனியாக்குகிறது.
தாலாட்டுப் பாடினால் தூக்கம் வருகிறது; சோக கீதம்
பாடினால் அழுகை வருகிறது;
காம ரஸப் பாட்டில் உணர்ச்சி வெறி ஏறுகிறது;
கடவுள் பக்திப் பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது. நமது கடவுள்
வடிவங்கள் அனைத்துக்குமே, ‘இசை’ ஆதார வடிவமாக
நிற்கிறது.

வீணை இல்லாத கலைமகளா?
மத்தளம் இல்லாத நந்தியா?
புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணனா?
நாட்டியம் ஆடாத நடராஜனா?

விஞ்ஞானத்தில் ஒரு உண்மை உண்டு. சில வகையான
அலைகள் உடம்பை ஆட்டிப் படைக்கின்றன. நான்கு
வேதங்களையும் ஓதும்போது, நான்கு வகையாக ஓதுகிறார்கள்.

அந்த ஒலி அலைகள் வானவெளியையும், சுவாசிக்கின்ற
காற்றையும் சுத்தப்படுத்துகின்றன. ‘ஓம்’ என்கிற பிரணவ
மந்திரத்தைக் கூட்டாக உச்சரிக்கும்போது, அந்த ஒலி
இயற்கையில் எதிரொலிக்கிறது.

அவரைக் கொடிக்கு சங்கு ஊதினால் அது நன்றாகக்
காய்க்கிறது. இடைவிடாத கோயில் மணியோசையில் காற்றே
சங்கீத மயமாகி விடுகிறது. வீணை, வயலின், சிதார் போன்ற
நரம்புக் கருவிகளில் பிறக்கும் இசை, காது நரம்புகளைச்
சுகப்படுத்தி, இதயத்தை மென்மையாக்குகிறது.

பூபாளம் பாடிக்கொண்டே பொழுது விடிகிறது.
ஆனந்த பைரவி பாடிக்கொண்டே உலகம் இயங்குகிறது.
நீலாம்பரி பாடிக்கொண்டே தூங்கப் போகிறது.

மல்லாரி ராகம் வாசித்தால் சுவாமியின் ரதம் கிளம்புகிறது.
அமிர்தவருஷிணி பாடினால் மழை பொழிகிறது.
புன்னாகவராளி பாடினால் பாம்பு கூடப் படம் எடுத்து
ஆடுகிறது.

அறிவற்ற ஜந்துகளையும், அசையாப் பொருட்களையும்கூட
இசை தன் வசப்படுத்திக் கொள்கிறது. அந்த இசையின்
மூலமும், நாட்டியத்தின் மூலமும் இயற்கையாகவே ஒரு
நிம்மதியை மனிதன் பெற முடியும்.

ஆனால் இசை, ஸ்ருதி சுத்தமாக இருக்க வேண்டும்.
நாட்டியம் ஆடும் பெண், பார்ப்பதற்கு லட்சணமாக
இருக்க வேண்டும். பதம் பாடுகிறவர்கள் புரியும்படி பாட
வேண்டும். பக்க வாத்தியங்கள் சுகமான இசை எழுப்ப
வேண்டும்.

கோரமான வர்ண விளக்குகளால் கண்ணைக் கெடுக்கக்
கூடாது. நாட்டியம் ஆடுபவர்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு,
இளம் வெள்ளை முதலிய ஆடைகளையே அணிந்திருக்க
வேண்டும்.

இசையும் நாட்டியமும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க
முடியாதபடி இருந்தால், அதைப் பார்ப்பவனையும்
கேட்பவனையும் அதைவிட்டுப் பிரிக்க முடியாது.
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 7:26 am

அந்த லயத்தின் பெயரே சுகம்; அந்த சுகத்தில் கிடைப்பதே
நிம்மதி. எனக்கு பிடித்த ராகங்கள் ஆனந்த பைரவி,
சுபபந்து வராளி, மோகனம், சாருகேசி, சகானா, காம்போதி,
சங்கராபரணம் ஆகியன.

மற்றும் சில ராகங்களும் உண்டு. திருமண வீட்டில் தாலி
கட்டும்போது வாசிக்கப்படுவது, ஆனந்த பைரவி. அந்த
நேரத்திற்கு அது எவ்வளவு பொருத்தமான ராகம்!

அந்த ராகம் காதில் விழும்போதே, கவலைகள் மறந்து
விடுகின்றன. மேல்நாட்டு இசை என்ற பெயரில்,
டபரா டம்ளர்களைப் போட்டு அடித்து, உயிரை
வாங்குகிறார்கள் இப்போது?

வாத்தியங்களிலும் அமங்கல வாத்தியங்கள் உண்டு.
அவை தாரை, தம்பட்டை, கொம்பு முதலியன.
அவை வெறியை எழுப்புகின்றன. போர் வீரனையும்,
யானைகளையும் கிளப்பி விடவே அந்நாளில் அவை
பயன்படுத்தப்பட்டன.

ஊதுவத்தி வாசனையில்கூட மங்கலம், அமங்கலம் என்ற
இரண்டு வகை உண்டு. ஒரு வகையான ஊதுவத்தி இறந்து
போனவர்களின் சடலத்தின் அருகே வைக்கப்படுவது.
மற்றொன்று சுபகாரியங்களுக்குப் பயன்படுத்தப்படுவது.

அதுபோலவே வாத்தியங்களிலும் அமங்கலம் உண்டு.
கச்சேரியில், அமங்கல ராகங்களைப் பாகவதர்கள் பாடாமல்
இருப்பது நல்லது.

முகாரி ராகம், கேட்பவனுக்கு நாளைய பொழுதைப் பற்றிய
கவலையை எழுப்புகிறது. இன்ப ராகங்கள் நம்பிக்கையை
உண்டாக்குகின்றன. வீட்டிலே தகராறு, நிம்மதி இல்லை
என்றால் கலை நிகழ்ச்சியில் போய் உட்காருங்கள்.

நமது இசையில், பக்தி ரஸத்தோடு, காம ரஸமும் அதிகம்
கலந்திருப்பதற்குக் காரணம் இதுதான். ஞானத்தைப்
போலவே காமமும் ஒருநிலை யோகம். சிற்றின்ப ரஸம்
ஒரு வகையான நம்பிக்கையை ஊட்டுகிறது.

கண்ணனைப் பற்றிப் பாடிய ஆண்டாளும், காதல்
உணர்வுகளையே ஒருவகை ஞானமாக வெளியிட்டாள்
அல்லது ஞானத்தை காதல் வழியே காட்டினாள்.

‘கட்டியணைத்தேன்; முத்தம் கொடுத்தேன்’ என்றெல்லாம்
பாடப்படும் காதல் பாடல்கள், நிம்மதியற்ற லௌகீகனுக்கு
ஒரு நிம்மதி ஏற்படுத்தவே ஏற்பட்டன.

முழுக்க ஞான மார்க்கத்தை உபதேசிக்கும் ஞானிகள்,
தாங்கள் இருக்கும் உயர்ந்தநிலையைக் கருதி இதை
வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவது நியாயமே!

ஆனால், உலக வாழ்க்கையில் உள்ளவனின் நிம்மதிக்கு
வேறு வகையான வழிகளையும் அவர்கள் சுட்டிக்காட்டி
இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்து மதம் ஒப்புக்கொண்டுள்ள
சில உண்மைகளை, பச்சையாகவும் பகிரங்கமாகவும்
சொல்லி குடும்பஸ்தனுக்கு அமைதியைத் தருவது நல்லது
என்று கருதுகிறேன்.

காமம் அல்லது காதல் என்பது மத விரோதமானது அல்ல
என்பதால்தானே கம்பனுக்குப் பிறகு
அருணகிரி நாதராயினும், ஆண்டாளாயினும் மற்றும்
ஆழ்வார்கள் நாயன்மார்களாயினும், அனைவருமே அதை
பக்தியோடு கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

இன்ப உணர்வின்போது பல பிரச்னைகள் மறக்கப்படுகின்றன.
அதை இசையாகக் கேட்கும்போது கேள்விச் சுகமே கூடப்
போதுமானதாக இருக்கிறது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து
அனுபவிப்பதைவிட இசைக் காமத்தில் ஆன்மாவுக்கு
ஒரு லயம் இருக்கிறது.

சுகமான சங்கீதம், சுகமான பாடல் - நெஞ்சுக்கு நிம்மதி.
நம்முடைய இசையின் தாத்பரியத்தைக் காஞ்சிப் பெரியவர்கள்
கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:

இசையின் மூலமாகவே ஈஸ்வர அனுபவத்தைப் பெற முடியும்
என்பது அவர்களது வாதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 7:27 am

அவர்களது பொன்மொழிகள் அப்படியே இங்கே தரப்படுகின்றன:

‘‘கல்வித் தெய்வமான சரஸ்வதி, கையிலே வீணை வைத்திருப்பது
எல்லாருக்கும் தெரியும். பரமேஸ்வரனின் பத்தினியான
சாக்ஷாத் பராசக்தி கையிலே வீணை வைத்திருப்பதாகக்
காளிதாஸர் ‘நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார்.

அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக்
கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற ஸப்த சுரங்களின்
மாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

‘ஸரிகம பதநி ரதாம் தாம் வீணா ஸங்கராந்த காந்தஹெஸ்
தாந் தாம்!’ அப்படிச் சங்கீதத்தில் மூழ்கியுள்ள ‘சிவகாந்தா’
(சிவனின் பத்தினி) சாந்தமாகவும் (அமைதியாகவும்),
ம்ருதுனஸ்வந்தாவாகவும் (ெமன்மையான திருவுள்ளம்
படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாசர்.

அவளை நமஸ்கரிக்கின்றேன் என்கிறார்.
‘சாந்தாம் ம்ருதன ஸ்வாந்தம் குசபரதாந்தாம் நமாமி
சிவகாந்தம்!’ அவர் ஸ்லோகத்தைச் செய்துகொண்டு
போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில்
அமிழ்ந்திருப்பதாலேயே சாந்தஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள்
என்று தோன்றுகிறது.

அதேபோல ஸங்கீத அனுபவத்தினால்தான் அவளுடைய
உள்ளம் மிருதுளமாக புஷ்பத்தைப் போல மென்மையாக,
கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

சாக்ஷாத் பராசக்தியை இப்படி சங்கீத மூர்த்தியாக பாவிக்கும்
போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில்
தோய்ந்து ஆனந்தமாகவும், சாந்தமயமாகவும் குழந்தை
உள்ளத்தோடும் உள்ள சியாமளாவைத் தியானித்தால்
அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள்.

அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக்
கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும்
சந்நதியில், சாந்தமும் ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம்,
கருணை, அன்பு ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று
தெரிகிறது.

வேத அத்தியயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக்
கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற
ஈஸ்வரனனுபவத்தைத் தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலமும்,
நல்ல ராக, தாள, ஞானத்தின் மூலமும் சுலபமாகவும்,
சௌக்கியமாகவும் பெற்று விடலாம்.

இப்படி, தர்ம சாஸ்திரம் எனப்படும், ஸ்மிருதியைத் தந்திருக்கும்
யக்ஞவல்கிய மஹரிஷியே சொல்லியிருக்கிறார்.
வீணாகானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

‘அப்ரயத்னேஷ்’... கடுமையான முயற்சி இல்லாமலே-
ஸங்கீதத்தில் மோக்ஷமார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார்.
நம் மனத்தைத் தெய்வீகமான ஸங்கீதத்தில் ஊற வைத்து,
அதிலேயே கரைந்துபோகச் செய்தால் கஷ்டமில்லாமல்
ஈசுரவனை அனுபவிக்கலாம்.

நாம் பாடி, அனுபவிக்கும்போதே இந்த ஸங்கீதத்தைக்
கேட்கிறவர்களுக்கும் இதே அனுபவத்தைத் தந்துவிடலாம்.

வேறு எந்தச் சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படிச்
சமமான அனுபவ ஆனந்தம் தரமுடியாது. ஸங்கீதம் என்ற
மார்க்கத்தின் மூலம், தங்கள் இதயங்களைப் பரமேஸ்வரனிடம்
சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள்,
ஸங்கீதமே சாக்ஷத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சிகளாக
இருக்கிறார்கள்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 7:30 am

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம், ஈசுவரன் அல்லது
பிரம்மா, அம்பாள் ஸங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள்
என்றால், பிரம்மாவும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய
அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும்.

அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து,
ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆன்மா
பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப்
புரட்டுகிறோம். தவிர ஸங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன.
எல்லாவற்றிலும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில்,
மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களில் தோலில்
புரட்டுகிறார்கள்.

வீணை, பிடில், தம்புரா போன்ற நரம்பு வாத்தியங்களில்
தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு
நடுவே இழைந்து வரும் ‘அனுரணனம்’ என்ற இழைப்பு ஒலி
நயமான இன்பம் தருகிறது.

ஒருதரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக்கொண்டே
நிற்கிறது. முதல் மீட்டில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது
மீட்டில் எழும்பும் ஒலியோடு தழுவி நிற்கிறது.
இதுவே ‘அனுரணனம்.’

புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள தந்திர
வாத்தியங்களில், காற்றைப் புரட்டுகிறார்கள்.
ஹார்மோனியமும் ஒரு விதத்தில் வாத்தியந்தான்.
அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது.

புல்லாங்குழலிலும், நாயனத்திலும் துவாரங்களை விரலால்
மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால்,
ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி
எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.

சப்தத்தைப் புரட்டுவதோடு அங்கங்களையும் புரட்டி விட்டால்
நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தை காதால் கேட்டு,
அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும் பெறுகிறோம்.

நாட்டியத்தில் இவற்றோடு ‘கண்ணால் பார்த்து ‘அங்காசர்ய’
ஆனந்தமும் (அங்கங்களை முறைப்படி அசைப்பதால்,
புரட்டுவதால் ஏற்படும் இன்பமும்) பெறுகிறோம். நவரஸ
உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம்
மட்டுமல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்க சரிய
(அங்கப்புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான்,
நிருத்தம் என்ற கலை ஏற்பட்டிருக்கிறது.

ஈசுஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்து நாலு உபசாரங்களில்,
சங்கீதத்தோடுகூட நிருத்தமும் உபசாரமாகச் சொல்லப்படுகிறது.
கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம்
தருகின்றன.

சுரம் பாடும்போது, சப்தமும், லயமும் மட்டும் இன்பம் தருகின்றன.
ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது,
அல்லவா? நிருத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு
சேர்த்து ஆனந்தம் தருகிறது.

இந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும்.
காந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள்; அவர்கள் எப்பொழுதும்
பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள்.

மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே
காந்தர்வ வேதம் எனப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.’’
-
--------------------------------------
அர்த்தமுள்ள இந்துமதம்- கவிஞர் கண்ணதாசன்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 011.
நன்றி- தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:40 pm

மனதை கிறங்க வைக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக