புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_m10 வடசென்னை - சினிமா விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடசென்னை - சினிமா விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 5:40 pm

 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_Vada-Chennai-Movie-Review_MEDVPF
-
நடிகர் தனுஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் வெற்றிமாறன்
இசை சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு வேல்ராஜ

------------------------------
-
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது.
சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட
நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர்.

வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்
அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர்,
பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.

ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர்
மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில்,
வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்
கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண
வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம்
விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி
இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.
-
 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_1_Vada-Chennai-Review7._L_styvpf
-

இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி
ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே
அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான
மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.

எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில்,
வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த
திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால்
மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த
அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.

சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு,
அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர்.
இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது
இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட
அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும்
சேர்ந்து திட்டமிடுகின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 5:41 pm

 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_2_Vada-Chennai-Review6._L_styvpf
-


இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும்
இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு
தனுஷின் கை ஓங்குகிறது.

கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது?
தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தாரா?

படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்?
சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்?
அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின்
மீதிக்கதை.
-
-----------------------------------
 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_3_Vada-Chennai-Review3._L_styvpf
-


ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்
தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்
படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை
பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும்
வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள்
ரசிக்க முடிகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை
கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.

காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்
என்று சொன்னால் அது மிகையாகாது.

வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே
வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும்
அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது.

அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை
மெருகேற்றியிருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 5:42 pm

 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_4_Vada-Chennai-Review2._L_styvpf
-


அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில்
தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி
நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான
கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு
நடித்திருக்கிறார்கள்.

ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார்,
கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.

ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை
வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன்,
சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற
கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலு
சேர்த்திருக்கிறார்கள்.

பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம்
திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர்
வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின்
வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு,
அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக
அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.

முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில்
காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது.
வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை
கொடுக்கிறது.
-
 வடசென்னை - சினிமா விமர்சனம் 201810171307387588_5_Vada-Chennai-Review4._L_styvpf
-


உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும்
இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான
எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும்,
மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும்
செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக
வந்திருக்கிறது.

மொத்தத்தில் `வடசென்னை' அதகளம்.
-
------------------------------------------
நன்றி- மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 7:09 am



போட்டி திரையில் மட்டும்தான்: தனுஷுக்கு சிம்பு வாழ்த்து
!
- வடசென்னை - சினிமா விமர்சனம் VadaChennai_2

-
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் -
வடசென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர்,
சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்
போன்றோர் நடித்துள்ளார்கள்.

இசை - சந்தோஷ் நாராயணன். வடசென்னை படத்தின்
கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார்
வெற்றிமாறன்.

எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப்
பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்
என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் படம் இன்று வெளியானதையொட்டி தனுஷுக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என் ரசிகர்கள் மற்றும்
என் சார்பாக வாழ்த்துகள்.

நம்முடைய போட்டி திரையில் மட்டும்தான்.
சமூகவலைத்தளங்களில் அல்ல. என்னுடைய ரசிகர்களும்
சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களும் நல்ல
படங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
----------------------------------
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக