ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 7:29 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 7:19 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 7:18 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 4:35 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 4:32 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 4:26 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 4:24 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 4:21 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 4:19 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 3:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:56 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 3:50 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 3:47 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 1:45 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:11 pm

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 10:22 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 10:21 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 10:20 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 10:15 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 10:14 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 1:50 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 10:38 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 10:33 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:17 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 8:08 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 6:55 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 2:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 11:31 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 7:56 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 7:42 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:36 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 7:10 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 7:04 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:58 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 6:14 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 3:29 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 3:23 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:21 pm

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:20 pm

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:07 pm

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 7:59 am

Admins Online

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!

Go down

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்! Empty கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!

Post by ayyasamy ram on Sun Oct 14, 2018 9:05 pm

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்! Viral-pennjpg
-


மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடித்த
‘தீ வண்டி’ படம் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அதில் இடம்பெற்ற ‘ஜீவாம்சமாய் தானே…’ என்ற பாடலும்
செம ஹிட். வகுப்பறையில் ஒரு அரட்டைப் பொழுதில்
இந்தப் பாடலைச் சென்னையைச் சேர்ந்த செளமியா பாட,
ஜிமிக்கி கம்மல் ஷெரிலை நம்மூரு இளந்தாரிகள்
கொண்டாடியதைப் போல, செளமியாவைக்
கொண்டாடுகிறார்கள் சேர நாட்டினர்!

மலையாளிகளின் ஃபேஸ்புக் பக்கங்களை எட்டிப் பார்த்தால்,
அங்கே செளமியாவின் குரல் நிரம்பிவழிகிறது.
கேரள முன்னணி ஊடகங்களும் அவரைத் தேடிப்பிடித்து
நேர்காணல் செய்து கவுரவித்துள்ளன.

இதனால் ஏக மகிழ்ச்சியிலும் அதேநேரம் தன்னடக்கத்தோடும்
பேசத் தொடங்குகிறார் செளமியா.

“எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே இசை ஆர்வம் அதிகம்.
அதுக்கு முழுக்க காரணமாக இருந்தது என்னோட பாட்டிதான்.
என் பாட்டி சுதாராவ் அகில இந்திய வானொலி நிலையத்தில்
இசைத் துறையில் ‘ஏ கிரேடு’ ஆர்டிஸ்டாக இருந்தவங்க.

வீட்டுல சமைக்கும்போதுகூட பாட்டி பாடிக்கிட்டேதான்
சமைப்பாங்க. இசையில் அவுங்கதான் என்னோட வழிகாட்டி.
பள்ளியில் படிக்கும்போதே பாட்டுப் போட்டிகளுக்குப்
பயிற்சி கொடுத்து பாட்டி என்னை அனுப்பி வைப்பாங்க.

அவுங்க மூலம்தான் எனக்கும் இசை ஆர்வம் வந்துச்சு.
ஆனா இப்போ எனக்குக் கிடைச்ச பெருமையைப் பார்த்து
சந்தோசப்பட பாட்டி உயிரோட இல்லை” என்று
வருத்தப்படுகிறார் செளமியா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்! Empty Re: கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!

Post by ayyasamy ram on Sun Oct 14, 2018 9:05 pm


செளமியாவின் தாய்மொழி கன்னடம். அவரது பூர்விகம்
பெங்களூரு. ஆனால், தமிழ்நாட்டில் செட்டிலான குடும்பம்.

செளமியா சென்னையில் இருந்ததால், தமிழும் அத்துப்படி.
இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தற்போது திருவனந்தபுரத்தில்
உள்ள ஸ்ரீசுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் முதலாமாண்டு
படித்துவருகிறார்.

கேரளாவில் டிரெண்டிங்கான ‘தீ வண்டி’ பாடலை
வீடியோ எடுத்த கதையைச் சொல்லும்போது அவரது
முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.

“இசைக் கல்லூரி வகுப்பில் ஏதாவது திரைப்படப்
பாடல்களைத் தோழிகளுடன் சேர்ந்து அடிக்கடி பாடிக்கிட்டு
இருப்போம். அப்படித்தான் அன்றைக்கும் பாடினோம்.

அப்போ நான் ‘தீ வண்டி’ படத்துலேர்ந்து
‘ஜீவாம்சமாய் தானே…’ எனும் மலையாளப் பாடலைப்
பாட ஆரம்பிச்சேன். அதை ஃப்ரண்ட்ஸுங்க செல்போனில்
வீடியோ எடுத்ததும் எனக்குத் தெரியாது.

என்னோட வகுப்புத் தோழன் ஸ்ரீஜித் அதை
‘டிரெண்டிங் கேரளா’ன்னு ஃபேஸ்புக் பக்கத்தில் போட,
லட்சக்கணக்கான பார்வையாளர்கள், பல ஆயிரக்கணக்கான
பகிர்தல்ன்னு எங்கேயோ போயிடுச்சு” என்கிறார் செளமியா.

“இதுல முக்கியமான விசயம் என்னன்னா,
தமிழும் கன்னடமும் தெரிஞ்ச அளவுக்கு எனக்கு மலையாளம்
தெரியாது. பேசுனா புரிஞ்சுக்குவேன். ஆனால், பதில் பேசத்
தெரியாது.

அந்தப் பாடலுக்கும் அர்த்தம் தெரிஞ்செல்லாம் பாடல.
நாயகன், நாயகியை வர்ணித்து, நீதான் என் உயிர்ன்னு
பாடுறாருன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.

ஒரு வீடியோ வைரல் ஆகுறப்ப, என்ன நடக்கும்னு நேரடியா
இப்போதான் பார்க்குறேன். அது நமக்கே நடக்கும்போது
கிடைக்குற அனுபவம் நிச்சயம் வேற லெவல்!” என்று
பூரிக்கிறார் செளமியா.

சரி, கேரளாவில் இப்போது உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்
என்று கேட்டதும் சிலிர்க்கிறார் செளமியா.
“பாடலைக் கேட்டுட்டு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள்,
நண்பர்கள்னு பலரும் பாராட்டுனாங்க. சாதாரணமா இப்போ
பஸ்ல போனாக் கூட, பக்கத்து சீட்டுல இருக்குறவங்க
‘ஆ பாட்டு பாடிய குட்டி நீயானோ?’ன்னு கேட்குறப்போ
அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்கிறார்.
-
------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்! Empty Re: கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 9:23 am

வாழ்த்துக்கள் தங்கை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்! Empty Re: கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum