ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_m10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10 
VENKUSADAS
முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_m10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_m10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10 
VENKUSADAS
முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_m10முதல் பார்வை: ஆண் தேவதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: ஆண் தேவதை

3 posters

Go down

முதல் பார்வை: ஆண் தேவதை Empty முதல் பார்வை: ஆண் தேவதை

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 1:09 pm

முதல் பார்வை: ஆண் தேவதை Aan-dhevathaijpg-1jpg
பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில்
சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு
வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை
வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'.

மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி)
மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக்
கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா
(ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை,
பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி
வேலையில் மிளிரத் துடிக்கிறார்.

இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம்
செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா
ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற
பிரச்சினை எழுகிறது.

பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்டு வீட்டு வேலை
செய்துகொண்டும், குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டும்
சமுத்திரக்கனி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆனால், பைக், கார் என்று கடன் வாங்கி வாகனங்கள்
வாங்கியதும், சொந்த வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கியதும்
ரம்யா பாண்டியனை ஆபத்தின் எல்லையில் கொண்டுபோய்
நிறுத்துகிறது.

அப்படி என்ன ஆபத்து நிகழ்கிறது, சமுத்திரக்கனி ஏன் வீட்டை
விட்டுச் செல்கிறார், அன்பான வாழ்க்கையில் ஏன் நிம்மதி
பறிபோனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது
திரைக்கதை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: ஆண் தேவதை Empty Re: முதல் பார்வை: ஆண் தேவதை

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 1:11 pm

முதல் பார்வை: ஆண் தேவதை Aan-de10
-
'பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தின் தூண்டுதலிலும்,
பெருநகரத்தில் உள்ள கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பையும்
அடிப்பையாகக் கொண்டு 'ஆண் தேவதை' படத்தின்
கதையைக் கட்டமைத்திருக்கிறார்
இயக்குநர் தாமிரா. அவரின் அக்கறையை வரவேற்கலாம்.

சமுத்திரக்கனிக்கு அளவெடுத்து தைத்த சட்டை போன்ற
பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் நிறைவாகச்
செய்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்
கொண்டே இருப்பது மட்டும் அவரது முந்தைய படங்களை
நினைவூட்டுகின்றன.

குழந்தைகள், பெரியவர்கள், மீட்டிங், மனைவி என்று
எங்கேயும் எப்போதும் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டே
இருக்கிறார். அந்தப் பாணி கொஞ்சல் அலுப்பூட்டுகிறது.

மற்றபடி, பொறுப்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார்.
லாட்ஜின் பக்கத்து அறையில் முனகும் சப்தம் தன்
குழந்தைக்குக் கேட்கக்கூடாது என்ற அவஸ்தையில்
பெருங்குரலெடுத்துக் கதை சொல்லும் உத்தி ஓரளவு
எடுபடுகிறது.

'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க
ஒரு நல்வாய்ப்பு வழங்கப்பட்டும், அதை ஜஸ்ட் லைக் தட் காலி
பண்ணியிருக்கிறார். அதுவும் தன் தோழியின் மரணத்தின்
போது அவர் காட்டும் அதிர்ச்சி மிகச் சாதாரணமாக
இருக்கிறது.

ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக
வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள்.
சுஜா வாருணி, ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி,
இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என்று படத்தில் ப
லரும் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்குப் படத்தில் எந்த முக்கியத்துவமும்
வழங்கப்படவில்லை.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும்
படத்தை ஓரளவு தாங்கிப் பிடிக்கிறது.

''நீ பார்க்குற வேலை உனக்குள்ள இருக்குற அழகான
பொண்ணைக் கொன்னுடுச்சு, நீ மகிழ்ச்சியா இருக்கியா'',

''பொம்பளைங்க உடம்புக்குள்ள புதையலைத்
தேடுறவங்களுக்கு புடவை துவைக்குறது தப்பாதான்
தெரியும்'' போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர்
தாமிரா கவனிக்க வைக்கிறார்.

நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை
சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்ற
சமுத்திரக்கனியின் கேள்வி யோசிக்க வைக்கிறது.

குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு,
தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட
தொடுதல், அலுவலக நண்பனால் நிகழும் பாலியல்
சீண்டல், அளவுக்கு மீறிய தவணை முறைக் கடனால்
வரும் தொல்லைகள் என்று படத்தில் நிறைய நல்ல
கருத்துகளை தேவையான அளவுக்குச்
சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவை எல்லாம் கருத்துகளாக மட்டுமே
இருக்கிறதே தவிர, படத்துக்கான வலுவான
காட்சிகளாக உருமாறவில்லை.

அதனால் திரைக்கதையும் எந்த சுவாரஸ்யமும்
இல்லாமல் கடந்து போகிறது.

சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் ஆகிய இருவரின்
அணுகுமுறைகளும் போலியானதாக உள்ளது. அதுவும்
தொண்டூழியம் செய்ததாக கனி சொல்வதெல்லாம்
கதாபாத்திரத்தின் சரிவு. திடீரென்று வளரும் சண்டை
பிரியும் அளவுக்கு மாறுவது சரியாக காட்சிப்
படுத்தப்படவில்லை.

பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் பாதிக்கப்பட்ட
நிலையில், அவருக்கு வேலை பறிபோன பிறகும் அதை
எதிர்க்காமல் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்,

சொகுசு வாழ்க்கைக்காகவும், கெத்துக்காகவும் மட்டுமே
ஆடம்பரமாக வாழும் தோழி கேட்டதற்காக கேள்வியே
இல்லாமல் கடன் கொடுப்பது எப்படி சாத்தியம் போன்ற
லாஜிக் கேள்விகள் எழுகின்றன.

கணவன் வேலைக்குப் போக, மனைவி குடும்பத்
தலைவியாகவே இருப்பதாகக் கூறுவது அபத்தம்.

மொத்தத்தில் நகர வாழ்க்கையின் சிக்கலைக் கூறும்
நல்ல கருத்துள்ள படம் பார்த்தால் போதும் என்று நீங்கள்
நினைத்தால் 'ஆண் தேவதை'க்கு நிச்சயம் ஆதரவு
தரலாம்.
-
------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: ஆண் தேவதை Empty Re: முதல் பார்வை: ஆண் தேவதை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 10:30 pm

இந்த பரபரப்பான இயந்திர வாழ்க்கை முறை
ஆடம்பரம். பணம் சம்பாதிக்க போட்டி போட்டு ஒரே ஓட்டம் இவை அனைத்தும்
நம் வாழ்வில் சந்தோஷத்தை பறித்து
கொள்கிறது.
இதை இந்த படம் காட்டுகிறது போல் தெரிகிறது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

முதல் பார்வை: ஆண் தேவதை Empty Re: முதல் பார்வை: ஆண் தேவதை

Post by SK Sun Oct 14, 2018 12:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முதல் பார்வை: ஆண் தேவதை Empty Re: முதல் பார்வை: ஆண் தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum