புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
8 Posts - 2%
prajai
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலினை உறுதி செய் Poll_c10உடலினை உறுதி செய் Poll_m10உடலினை உறுதி செய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலினை உறுதி செய்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 20, 2009 5:31 pm


உடலினை உறுதி செய்








உடலினை உறுதி செய் Default









எதற்கு உடற்பயிற்சி?
விளையாட்டு மைதானங்களிலும், கடற் கரைகளிலும், சாலை ஓரங்களிலும்,
பூங்காக் களிலும் பலர் நடப்பதை பார்த்திருப்பீர்கள். உடற்பயிற்சியின்
முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவர் களின்
அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு
விஷயம்.

நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயைக் குணப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியம்
என மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் நன்மைகளைப் பார்ப்போம்.
1. நல்ல உடல் தோற்றம்
இரண்டு விதமான மனிதர்களைத் தவிர அனைவருமே நல்ல தோற்றத்துடன் இருக்க
ஆசைப்படுகிறார்கள். அவர்கள் யார் என்று அறிய முடிகிறதா? ஒருவகையினர் மனநல
மருத்துவமனையில் காணப்படும் உள் நோயாளிகள். இன்னொரு வகையினர் கல்லறைக்குள்
இருப்பவர்கள்! நல்ல உடல் தோற்றத்திற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்
கொள்கிறோம். 60 வயதை தாண்டிய முதியவர்கள் கூட – பெண்கள் உட்பட தலை
முடிக்கு ‘டை’ அடித்து வெள்ளையை கருப்பாக்கி மிகவும் இளமையாக தோற்றமளிக்க
முயல் கிறார்கள். இதனால் வெளிநாட்டு ‘டை’ கம்பெனி கள் போட்டாபோட்டி
போட்டுக் கொண்டு கடுமையான லாபத்தை ஈட்டுகின்றனர். சரி, இவர்கள் ஏன் டை
அடித்து இளமையாக காட்சி அளிக்க வேண்டும்? இளமையானவர்கள் என்று இவர்களை
யார் தெரிந்துகொள்ள வேண்டும்?
இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், சில உண்மைகள் வெட்ட
வெளிச்சமாகின்றன. இளமைத் தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு டை
வாங்கவும் தயார், பொய் முடி வைக்கவும் தயார். தலைமுடியை வயலில் நாற்று
நடுவது போல தலையில் அறுவை சிகிச்சை மூலம் நடவும் தயார். கருமையான முகத்தை
சிவப்பு நிறமாக்கும் (உண்மையில் அப்படி ஆகாது!) பலதரப்பட்ட பூச்சுக்கள்
வாங்கி பூசவும் தயார். இன்னும் சிலர் அமெரிக்காவுக்குச் சென்று அறுவை
சிகிச்சையும் மேற்கொள்கின்றனர்.
மேலே சொன்ன எந்த அழகு சாதனப் பொருட்களாலும் முதுமையை ஒருபோதும்
மறைத்துவிட முடியாது. இந்த ‘டை’களும், முக கிரீம்களும் மிகவும்
தற்காலிகமானவை. மேலும் இவை நம் உடலுக்கு ஊறு விளைவிப்பவை ஆகும். இவை
அனைத்துக்கும் பக்க விளைவு மற்றும் ஒவ்வாமை உண்டு. பக்க விளைவுகளின் நீண்ட
பட்டியல் கூட அழகு சாதன புட்டிகளிலேயே இணைத்திருப்பார்கள். ஆனால், அவற்றை
எவரும் படிப்பதாகத் தெரிய வில்லை. எந்த செலவும் இல்லாமல் முதுமையை
வெல்லும் இயற்கை மருந்து தான் உடற்பயிற்சி.
சீரான உடற்பயிற்சி உடலின் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் பழைய
செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கு கிறது. இடுப்புப் பகுதியையும்
வயிற்றுப் பகுதியையும் குறைத்து இயற்கையிலேயே இளமையான தோற்றத்தை
ஏற்படுத்துகிறது. அதுமட்டு மல்லாமல் தோலில் உள்ள இரத்த நாளங்களுக்கு
ஆக்ஸிஜன் அதிகம் கிடைப்ப தாலும் இளம் செல்கள் தொடர்ந்து தயாராவதாலும் தோல்
சுருங்காமல் இளமையாக இருக்கிறது.
நல்ல தோற்றத்திற்கு ஒரே வழி உடற்பயிற்சியே அன்றி வேறில்லை. இதற்குச்
செல வில்லை. பக்க விளைவு இல்லை. ஒவ்வாமை இல்லை. எனவே தான் கூறுகிறேன்.
இன்றிலிருந்து உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். நல்ல உடல் தோற்றத்துடன் இளமை
யாகவே இருக்கலாம். முதுமையைத் தள்ளிப் போட லாம்.
நல்ல உடல் தோற்றம் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.
உடல் எடை குறைப்பு
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
இதனால் உடல் பருமன் (Obesity) என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். உடல்
பருமன் என்பது ஒரு நோய் என்று சொல்லுகிறது மருத்துவ அறிவியல்.
நாம் செய்யும் உடற்பயிற்சியின் தன்மை மற்றும் நேரத்திற்கு ஏற்ப உடலில் ஆற்றல் (கலோரி) செலவிடப்படுகிறது.
வேலை கடந்த தூரம் (கி.மீ) நேரம் (மணி) செலவிடப்பட்ட
(கலோரிகள்)
மெதுவாக நடத்தல் 3.2 1 240
மிதமாக நடத்தல் 4.8 1 320
வேகமாக நடத்தல் 7.2 1 500
வேகமாக நடப்பதைப் போலவே ஓடுதலும் சிறந்த உடற்பயிற்சியாகும். மணிக்கு
7.2 கி.மீ முதல் 12 கி.மீ. வேகம் வரை ஓடினால் அது மிதமான ஓட்டம். மணிக்கு
12 கி. மீட்டருக்கு மேல் வேகமாக ஓடினால் அது அதிவேக ஓட்டம் ஆகும். இதுவே
ஏரோபிக் ரக உடற்பயிற்சி எனப்படுகிறது. ஏரோபிக் ரக உடற்பயிற்சி
மூலமாகத்தான் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால் 500 கலோரிகள்
செலவிடப் படுகிறது. எனவே அவர் தனக்குத் தேவையான தினசரி உணவை விட 500
கலோரிகள் உணவு அதிகம் உட்கொண்டால் கூட அது உடல் பருமனை ஏற்படுத்தாது.
மாறாக ஒருவர் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், அவர் தினமும் கூடுதலாக
உண்ணும் 500 கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் பல பகுதிகளில் தேக்கப்பட்டு,
அவர் ஒரு உடல்பருமன் உள்ளவராக மாறி விடுகிறார். உடற்பயிற்சி உடல்
எடையையும், உடலில் உள்ள கொழுப்பின் எடையையும் குறைக்கிறது.
நோய் தடுப்புத் திறன்
ஒரு நோய் வந்தபின் அதற்கு மருந்து சாப்பிட்டு அதைக் குணப்படுத்துவதைவிட
நோய் வருவதற்கு முன்னதாகத் தடுப்பதே சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்பது
நம்நாட்டு பழமொழி.
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். – திருவள்ளுவர்
நோய்கள் வருவதற்கு முன்னதாக அவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு வழி உள்ளது என்றால் அதுதான் உடற்பயிற்சி.
உடற்பயிற்சி மூலம் தடுத்து நிறுத்தப்படும் நோய்கள்
1. சர்க்கரை நோய் (Diabetes) 2. இதய நோய் (Heart Disease) 3. இரத்த
அழுத்தம் (Hypertension) 4. புற்று நோய் (Cancer) 5. மலட்டுத் தன்மை
(Impotence)
உலகளாவிய மருத்துவ முறை அலோபதி மருத்துவம். அதாவது MBBS படித்த
டாக்டர்கள் செய்யும் மருத்துவ முறை. மருந்து மூலமாகவும் அறுவை சிகிச்சை
மூலமாகவும் நோயைக் குணப்படுத்தும் இம்முறை மருந்தை அடிப்படை யாகக்
கொண்டது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கைரோ பிராக்டிக்
(Chiropractic) என்ற மருத்துவ முறை பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த
மருத்துவ முறை மருந்துகளை தவிர்த்து, நோய்கள் வரும் முன்னே காப்பதை
அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் சொல்வது எல்லாமே நோய் வந்த பின் அதற்கு
மருந்து மூலம் சிகிச்சை செய்வதை விட, நோய் வராமல் தடுப்பதற்கான
நடவடிக்கைகளில் முன்கூட்டியே ஈடுபடுவது தான்.
குழந்தைப் பருவத்திலிருந்தே திட்டமிட்டு செயல்பட்டால் பெரும்பாலான
நோய்கள் வராமலேயே தடுத்துவிடலாம். உடற்பயிற்சி என்பது இம்முறையின் மிக
முக்கியமான சிகிச்சை முறை. வழக்கமான பயிற்சியின் மூலம் முதுகெலும்பை
ஆரோக்கியமாக வைத்திருந் தாலே நோய் நம்மை அண்டுவதில்லை என்கிறார்
இம்மருத்துவ முறையின் தூதுவரான டாக்டர் கெப்ளான் என்பவர். இவர் எழுதியுள்ள
‘The life style of the fit & famous’ என்னும் புத்தகத்தை நீங்களும்
படித்துப் பயனடையுங்கள்.
நோய்கள் வராமல் தடுப்பதால் பணச் செலவு குறைகிறது. மருத்துவமனையில்
நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நோயால் நாம் இறந்துவிடுவோமா என்ற பய
உணர்வுடன் வாழ வேண்டியதில்லை.
எனக்கு இரண்டு டாக்டர்கள் உள்ளார்கள். ஒன்று எனது வலது கால்; மற்றொன்று எனது இடது கால் என்றார் ஜி.எம். ட்ரிவிலியன் என்ற அறிஞர்.
4. உடற்பயிற்சி ஒரு சுகமே
Exercise is a pleasure. வழக்கமாக உடற் பயிற்சி செய்பவர்களுக்கும்,
விளையாடுபவர் களுக்கம் இது நன்கு தெரியும். காலையிலோ அல்லது மாலையிலோ
தாங்கள் விளையாடும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும்
சொல்லப் போனால் விளையாட்டு என்பது போதைப் பொருள் போன்றது. அதற்கு எளிதில்
அடிமையாகிவிட முடியும். இந்த அடிமைத்தனம் ஆக்கபூர்வமானது, வரவேற்கத்
தக்கது. நான் கூட வாரம் மூன்று நாள் காலையில் ஓடுவேன். என்னைப் பொறுத்தவரை
காலையில் 1 மணி நேரம் ஓடுவதை விட ஒரு சிறந்த சுகம் எதுவும் இல்லை.
இந்த சுகத்தை தருவதும் நமது உடலே. யாராவது ஒருவர் என்னிடத்தில் வந்து 1
லட்ச ரூபாய் தருகிறேன் இன்று மட்டும் ஓடாமல் இருந்துவிடு என்றால்
சத்தியமாக நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
5. மனநலம் பெருகும்
மனநலமும் உடல்நலமும் ஒன்றோ டொன்று தொடர்புடையது. இவை ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள். மனநலம் நன்றாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்க
முடியும். உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மனநலம் நன்றாக இருக்கும்.
உடல்நலம் கெடுவதால் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்
பட்டவர்கள்கூட, குறித்த நேரத்தில் உணவு உண்ணமாட்டார்கள். தொடர்ந்து சோகமாக
இருப்பதால் உடலில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நோய் வருகிறது. இந்தவிதமான
நோய்களை Phycho-Somatic Disorder என்று அழைக்கின்றனர்.
மனநோய் எதனால் ஏற்படுகிறது? நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியை நினைத்துக்
கொண்டே இருப்பது. வேறு எதையும் நினைக் காமல் இருப்பது. இன்னும் சொல்லப்
போனால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. சிலர் காலப்போக்கில் தற்கொலை
செய்து கொள் கிறார்கள். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் கவலை. நாம் எந்த
வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் கவலை ஏற்படுகின்றது.
தினமும் கல்லூரியிலிருந்து வந்தவுடன் விளையாட்டு மைதானத்துக்குச்
செல்லும் மாணவனுக்கும், அலுவலகத்திலிருந்து விளை யாட்டு அரங்கத்திற்குச்
செல்லும் ஊழியருக்கும் கவலைப்பட நேரம் இல்லை. வழக்கமாக உடற்பயிற்சி
செய்கிறவர்கள் மனநலம் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை என்பதுதான் எனது
முடிவான கருத்து.
‘Stop Worrying and Start Living’ என்ற புத்தகத்தில் டேல் கார்னிஜி
என்பவர் இந்த நிலைக்குத் தரும் தீர்வு ‘Day Tight Compartment’ அதாவது,
நாள் முழுவதும் வேலைகளில் ஈடுபடுதல் என்பதாகும். பிஸியாக இருப்பவர்
களுக்கு கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?
வாழ்க்கையே வெறுத்துப்போய் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தாரம்.
அதற்கு நேரமும் குறித்தாராம். அவரது டாக்டரிடம் உறுதியாக தனது முடிவையும்
சொன்னார். டாக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக அதை ஆதரித்த
டாக்டர், அவர் சொல்லும் முறையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று
அந்த மனிதரை கேட்டுக் கொண்டார். அதாவது 20 கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடி
முடிக்க வேண்டும். அப்படி ஓடி முடிக்கும் போது தானாகவே விழுந்து
இறந்துவிடுவார் என்பதுதான் அந்த மருத்துவரின் அறிவுரை. இந்த நபர்
ஓடிப்பார்த்தார். முதல்நாள் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட முடிந்தது. வீடு
திரும்பினார். மறுநாள் 6 கிலோ மீட்டர். இப்படி நாலு வாரங்கள் கழித்து 20
கி.மீ. தூரத்தை கடந்த அந்நபர் டாக்டர் சொன்னதைப் போல் சாகவில்லை. மாறாக
அவருக்கு மீண்டும் ஓடவேண்டும் என்றஆசை ஏற்பட்டது. ஓட வேண்டும் என்றால்
உயிர் வாழ வேண்டும். அன்றிலிருந்து வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம்
இவருக்கு. இவர் பிற்காலத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகி பல
சாதனைகளையும் படைத்துள்ளார்.
மன நோயாளிகளை தினமும் ஒருமணி நேரம் ஓடவிட்டால் பலர் குணமடைவார்கள் போலிருக்கிறது.
6. தலைமைப் பண்புகள்
இன்று கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் கூட, தலைமைப் பண்புகள்
உள்ளனவா என்பதைக் கண்டுபிடித்த பின்னரே பட்டதாரிகளை பணி நியமனம்
செய்கிறார்கள். தெரிவு செய்த பொறியியல் வல்லுநர் தனது கட்டுப்பாட்டிற்குள்
இருக்கும் மற்றவர்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி நடத்திச்
செல்லக் கூடிய வல்லமை உள்ளவரா என்பதைச் சோதிக்கிறார்கள்.
கீழ்க்கண்ட தலைமைப் பண்புகள் சோதிக்கப் படுகின்றன
அ) மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன், (Ability to Motive)
ஆ) மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன். (Communication Skills)
இ) தோல்விகளைத் தாங்கி, வெற்றியை நோக்கி முன்னேறும் திறன். (Perseverence)
ஈ) தன்னம்பிக்கை (Self Confidence)
உ) சரியானவர்களுக்குப் பரிசளித்து தவறு செய்தவர்களுக்குத்
தண்டனையளிக்கும் திறன். (Ability to administer rewards and Punishments)
ஊ) சட்டதிட்டங்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்ளும் திறன் (Ability to understand and obey rules.)
கம்ப்யூட்டர் கம்பெனிகள் என்றில்லாமல், எல்லா பணிகளிலும் தலைமைப்
பண்புகள் உள்ளவர்களே வெற்றியடைய முடியும். இதைத் தான் சமூகநலன் என்று
உலகநல நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒரு கல்லூரி முதல்வர், வகுப்பு ஆசிரியர்,
மருத்துவர், விஞ்ஞானி, விமான ஓட்டுநர், போலீஸ் அதிகாரி என்று அனைவருக்
குமே தலைமைப் பண்புகள் அவசியமாகிறது. ஏன் ஒரு குடும்பத் தலைவன் கூட, தனது
வீட்டினை நடத்திச் செல்ல தலைமைப் பண்புகள் பெற்றிருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக