ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்

Go down

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம் Empty மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 5:37 am

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம் Spt4
-

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்
கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா
89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள்
எடுத்துள்ளது.

இப்போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்டில் முதல் முறையாக
தடம் பதித்த இந்திய இளம் வீரர் பிருத்வி ஷா, சதம் விளாசி
அசத்தினார்.

134 ரன்கள் குவித்த பிருத்வி, "முதல் டெஸ்ட் போட்டியில்
சதமடித்த இளம் இந்திய வீரர்' என்ற பெருமையை
பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் இந்த ஆட்டத்தில்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான முதல் சறுக்கலாக,
அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கணுக்கால் காயம்
காரணமாக கடைசி நிமிடத்தில் போட்டியிலிருந்து விலகினார்.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா - லோகேஷ் ராகுல் களம்
கண்டனர். இதில் லோகேஷ் ராகுல் டக் அவுட்டாகி
அதிர்ச்சியளித்தார். ஷானன் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின்
கடைசி பந்தில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சேதேஷ்வர் புஜாரா, பிருத்வி ஷாவுடன்
இணைந்தார். இந்தக் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை
சேர்த்தது. தேர்ந்த சர்வதேச ஆட்டக்காரர் போல விளையாடிய
பிருத்வி, முதல் பந்திலிருந்தே உத்வேகத்துடன் ஆடினார்.

வேகப்பந்து வீச்சுகளை விரட்டியடித்த அவர்,
சுழற்பந்துவீச்சுகளுக்கும் சுணங்கவில்லை.

அவர் 56 பந்துகளிலும், புஜாரா 67 பந்துகளிலும் அரைசதம்
கடந்தனர். மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா
25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள்
எடுத்திருந்தது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் பிருத்வி ஷா,
தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை
99 பந்துகளில் பதிவு செய்தார்.

இந்நிலையில், 42.6-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார் புஜாரா.
14 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்திருந்த அவர்,
ஷர்மான் லீவிஸ் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் ஷேன்
டெüரிச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
புஜாரா-பிருத்வி கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு
206 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார். மறுமுனையில்
154 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்திருந்த
பிருத்வி, 50.2-ஆவது ஓவரில் தேவேந்திர பிஷு பந்துவீச்சில்
அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்துக்கு வந்த ரஹானே 5 பவுண்டரிகளுடன்
41 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

ரஹானே-கோலி கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள்
எடுத்தது. பின்னர் ரிஷப் பந்த் களம் புக, மறுமுனையில்
கோலி 100 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில்
கோலி 72, பந்த் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷானன் கேப்ரியல்,
ஷர்மான் லீவிஸ், தேவேந்திர பிஷு, ரோஸ்டன் சேஸ் தலா
ஒரு விக்கெட் எடுத்தனர்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம் Empty Re: மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 5:38 am


பாராட்டு...

சச்சின்:
"உங்களது முதல் இன்னிங்ஸில் இவ்வாறு சிறப்பாக
ஆடுவதைக் காண அருமையாக இருக்கிறது பிருத்வி ஷா.
தொடர்ந்து பயமின்றி விளையாடுங்கள்'.

ரோஹித் சர்மா:
"எங்களை ஒரு அருமையான ஆட்டத்தை காணுமாறு
செய்துள்ளீர்கள் பிருத்வி ஷா'

மிக்கெல் வாகன்:
"அற்புதம்... 18 வயது... டெஸ்டில் முதல் போட்டி...
இந்திய அணிக்கு மேலும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்து
விட்டதாகத் தெரிகிறது'.

ஹர்பஜன் சிங்:
"18 வயதில் இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம்.
அதிலும் முதல் ஆட்டத்தில் சதம். சிறப்பாக ஆடினீர்கள்
பிருத்வி'.

விவிஎஸ் லஷ்மண்:
"முதல் டெஸ்டிலேயே அற்புதமாக சதம் அடித்துள்ளீர்கள்
பிருத்வி ஷா. 18 வயது வீரர் இயல்பாக ஆடுவதைக் காண
அருமையாக உள்ளது. உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம்
இருக்கிறது'.

கிடாம்பி ஸ்ரீகாந்த் (பாட்மிண்டன் வீரர்):
"முதல் ஆட்டத்திலேயே சதம் அடிப்பதைவிட சிறப்பானது
வேறென்ன? வாழ்த்துகள் பிருத்வி'
-
-------------------------------
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம் Empty Re: மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 5:40 am





3

ஒரு பார்மட்டின் அறிமுக ஆட்டத்தில் பிருத்வி ஷா
சதம் அடிப்பது இது 3-ஆவது முறை.

ஏற்கெனவே, உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சி கோப்பை
மற்றும் துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் களம்
கண்ட முதல் ஆட்டங்களில் பிருத்வி சதமடித்தது
குறிப்பிடத்தக்கது.

2

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, இளம் வயதில் சதமடித்த
2-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
பிருத்வி ஷா. சர்வதேச அளவில் இவர் 7-ஆவது இடம்
பிடித்துள்ளார்.

293

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிதாக களம்
காணும் 293-ஆவது வீரர் பிருத்வி ஷா ஆவார்.

99

இந்த ஆட்டத்தில் பிருத்வி ஷா 99 பந்துகளில் சதமடித்தார்.
முதல் டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள்
வரிசையில் பிருத்வி 3-ஆவது இடத்தில் உள்ளார்.
முதலிடத்தில் ஷிகர் தவன் (85), அடுத்த இடத்தில் டுவைன்
ஸ்மித் (93) உள்ளனர்.

15

டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் காணும்
ஆட்டத்தில் சதமடிக்கும் 15-ஆவது இந்திய வீரர் பிருத்வி ஷா.

4

சர்வதேச அளவில் முதல் டெஸ்டில் சதமடிக்கும் "இளம் வீரர்கள்'
வரிசையில் பிருத்வி 4-ஆவது இடத்தில் உள்ளார். இவருக்கு
முன்பாக வங்கதேசத்தின் முகமது அஷ்ரஃபுல், ஜிம்பாப்வேயின்
ஹாமில்டன் மஸாகட்ஸா, பாகிஸ்தானின் சலீம் மாலிக்
ஆகியோர், பிருத்வியை விட குறைந்த வயதிலேயே தங்களது
முதல் டெஸ்டில் சதம் கண்டுள்ளனர்.
-
------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம் Empty Re: மே.இ. தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இளம் வீரர் பிருத்விக்கு இமாலயத் தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை
» இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் ஷர்துல் தாகூர்
» இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வலுவான நிலை
» நியூ., எதிரான டெஸ்ட் போட்டி: டிராவிட் சதம்
» இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஜாகீர் கான் விலகல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum