ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். ....

Go down

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Empty குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். ....

Post by krishnaamma Thu Oct 04, 2018 10:58 pm

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். 

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Maxres10

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... 14b1fe10

குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். 

குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?

நவக்கிரக குருவையா,
ஞான குருவையா?

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். 

அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு. 

குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?

இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன?

தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். 
அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். 

நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.

திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை.

தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். 

‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். 

ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.

உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், 

ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். 
இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.

ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.  

வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி.

கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.

இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார். 

அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.

ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. 

வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.

எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.

இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்?

தொடரும்.....


Last edited by krishnaamma on Thu Oct 04, 2018 11:07 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Empty Re: குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். ....

Post by krishnaamma Thu Oct 04, 2018 11:01 pm



குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Guru-b10

ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ
குருவே நம:

இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம்.

குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். 

இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவக்கிரகங்கள். 

ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. 

இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். 

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி.

ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான்.

குரு பலம் இருந்தால் திருமணம்  நடைபெறும்.

குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.  

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். 

அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,  

இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். 

வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.

அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம். 

வியாழக்கிழமைதான்  என்றில்லை, 

எந்த நாளிலும் அவரை வழிபடலாம். 

மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். 

குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும். 

ஞான குரு வேறு, 


நவகிரக குரு வேறு 

என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம்.

நன்றி whatsup  !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Empty Re: குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். ....

Post by krishnaamma Thu Oct 04, 2018 11:08 pm

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Brihas10
குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... 11b30c10


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். .... Empty Re: குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum