ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருக்கிறது '96' படம்..?

4 posters

Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by ayyasamy ram Thu Oct 04, 2018 10:13 pm

எப்படி இருக்கிறது '96' படம்..? 201810040847223521_DofWmOWWkAE0PXX._L_styvpf
--
சி.பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி,
த்ரிஷா, நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் '96'.
இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில்
மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

ராமசந்திரன் (விஜய் சேதுபதி), ஜானு(த்ரிஷா) இருவரும்
ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள்.
இருவருக்குமே உள்ளுக்குள் காதல். ஜானகி தனக்குள்
இருக்கும் காதலை அவ்வப்போது வெளிக்காட்டி
கொண்டாலும், ராமச்சந்திரனுக்கு அதை வெளிக்காட்ட
பயம்.

எதிர்பாராத காரணங்களால் பள்ளிப்பருவத்திலேயே
இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும்
22 வருடங்களுக்குப்பின் ஸ்கூல் ரீ-யூனியன் சந்திப்பில்
இருவரும் சந்திக்கின்றனர்.

மீண்டும் சந்தித்துக் கொண்ட இருவரும் வாழ்க்கையில்
ஒன்று சேர்ந்தார்களா? என்ன காரணங்களால் இருவரும்
பிரிந்தனர்? என்பதே '96' படத்தின் கதை.

டிராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதியின் நடிப்பு
பிரமாதம். சிம்பிளான தோற்றத்தில் அனைவரையும்
கவர்கிறார் த்ரிஷா. 22 வருடங்களுக்குப்பின் இருவரும்
பேசிக்கொள்வது மற்றும் ஒருவரைப் பற்றிய மற்றவரது
நினைவுகள், இருவருக்கும் இடையிலான பிளாஷ்பேக்
காட்சிகள் படத்தின் கூடுதல் பலம்.

படத்தின் முதல் பாதியில் வரும் ஸ்கூல் தொடர்பான
காட்சிகள் நம்மை அந்த தருணத்துக்கே அழைத்து சென்று
விடுகின்றன. பாடல்கள் படத்தில் சரியான இடத்தில்
இடம்பெறுகின்றன. குறிப்பாக காதலே காதலே பாடல்
ஒன்ஸ்மோர் ரகம்.

ஆனால் பிளாஸ்பேக்கில் சில ட்விஸ்ட்கள் அலுப்பை
ஏற்படுத்துகிறது. இடைவெளிக்கு பின்னர் வரும்
விஜய் சேதுபதி - த்ரிஷா பேசி கொள்ளும் காட்சிகள்
கொஞ்சம் போர்.

மொத்தத்தில் 96 படத்தை விஜய் சேதுபதி - த்ரிஷா
கூட்டணி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
-
----------------------------------------
நன்றி- தந்தி டிவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by சிவா Fri Oct 05, 2018 12:58 am

96 - திரைவிமர்சனம்
எப்படி இருக்கிறது '96' படம்..? 1538658281-7582

விஜய் சேதுபதி - திரிஷா நாயகன் நாயகியாக, அவர்களுடன் ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க, பிரேம்குமார் இயக்கத்தில் காமம் இல்லாத காதல் படமாக வெளியாகியுள்ளது 96.

கதைப்படி, சென்னையில் பிரபல புகைப்பட கலைஞராகவும், பகுதி நேர புகைப்படக் கலை டியூட்டராகவும் இருக்கும் விஜய் சேதுபதி தன் போட்டோகிராபி ஜுனியர்களுடன் தஞ்சை பகுதிக்கு செல்கிறார்.

அப்போது, அங்குதான் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடத்திற்கு போகிறார். அப்போது, சக மாணவியும், தன் வகுப்பிலேயே நல்ல பாடக்கூடிய திரிஷாவுடனான தன் காதலும் அவருக்கு ஞாபகம் வர, உடனே 96 பேட்ச் மீட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் பேட்ச் மீட் பார்ட்டிக்கு திரிஷா வந்ததும், 22 வருடங்கள் கழித்து சந்திக்கும் இவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது? விஜய் சேதுபதி திருமணம் செய்து கொள்ளாத்து ஏன்? இருவரின் காதல் கைகூடாமல் போக காரணம் என்ன? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காதல் ரசத்தோடு விடையளிக்கிறது 96 படத்தின் மீதிக் கதை.

ராமு எனும் ராமசந்திரனாக விஜய் சேதுபதி, வழக்கம் போலவே மிரட்டலாக நடித்திருக்கிறார். குழந்தை தனமாக இருக்கும் விஜய் சேதுபதிக்குள் உறங்கிக் கிடக்கும் பத்தாங் கிளாஸ் காதல், ஜானு வந்ததும் அவர் கொடுக்கும் உணர்வுகள் சூப்பர்.

ஜானுவின் பாட்டுக்காகத்தான், நான் ஸ்கூல் டேஸில் 90% அட்டென்டன்ஸ் எடுத்ததற்கு காரணம்... என உண்மையைபோட்டு உடைக்கும் இடங்களிலும், முன்னால் காதலியை தன் ப்ளாட்டுக்குள் கூப்பிடும் இடங்களிலும்... மனிதர், ஒவ்வொரு ரசிகனையும் பிரதிபலிப்பது அட்டகாசம்.

ஜானு எனும் ஜானகியாக த்ரிஷா, சிறப்பாக நடித்திருக்கிறார். சிங்கப்பூர் ரிட்டர்னாக ஒரு குழந்தைக்கு தாயாக சிங்கப்பூர் வாழ்க்கையை ஒற்றை வரி பதிலில் சொல்லும் விதத்தில் துவங்கி, விஜய் சேதுபதி வீட்டில் நடக்கும் சுவாரஸ்யங்கள் என நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷாவின் வகுப்புத்தோழி தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், சின்ன வயது ராம், ஜானு ஆகிய அனைவரும் கச்சிதம்.

வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் 96 பேட்ச் மீட் நடைபெறும் லொகேஷன் உள்ளிட்டவை அசத்தல். கோவிந்த் வஸந்தா இசையில், பாடல்களும், கதையோடு ஒட்டி உறவாடும் பின்னணி இசையும் சுப ராகம்.

பிரேம்குமார் இயக்கத்தில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் அவரவரது ப்ளாஷ்பேக் பள்ளிப் பருவ காதலை தட்டி எழுப்பி, மலரும் நினைவுகளில் மூழ்க வைத்திருப்பதில் 96 வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் '96', 99% காதல் படம், என்பதால் 100% வெற்றி நிச்சயம்.

வெப்துனியா


எப்படி இருக்கிறது '96' படம்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 10:41 am

எப்படி இருக்கிறது '96' படம்..? 138813_thumb

இங்கே, எல்லாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது.
அதில், கொண்டாட ஒரு காதலும் இருக்கிறது. அந்தக் காதலுக்கு,
ஒரு தேவதை உருவமும் கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம்.

தேவதைகளுக்கு ஏது பால் பாகுபாடெல்லாம். ஒரு சின்ன
அழுக்கடைந்த புகைப்படமோ, ராஜா அல்லது ரஹ்மானின்
ஒரு மென்சோகப் பாடலோ, பக்கங்களெல்லாம் காதல் நிரப்பி
வைத்திருக்கும் ஒரு புத்தகமோ, அந்தத் தேவதையின்
நினைவுகளை உங்களுக்கு மீட்டுத் தரலாம்.

ஒரு முழுநீளப் படம், உங்களை கடந்த காலத்துக்கு கைபிடித்து
அழைத்துச்சென்று அந்த தேவதையிடம் விட்டால்... அதுதான் `96.
-
-------------------
எப்படி இருக்கிறது '96' படம்..? 96-music-review_18336
1996- ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் ராமும் ஜானுவும்.
பள்ளியில் அரும்பும் இவர்களின் காதல் எதிர்பாராத பிரிவால்
தடயமே இல்லாமல் கலைந்துபோகிறது. சில நண்பர்களின்
முயற்சிகளால் இருவரும் 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கிறார்கள்.

இருவரிலும் நிறைய மாற்றங்கள். ஆனால், இருவருக்குள்ளும்
எந்த மாற்றங்களுமில்லை. இதைக் கண்டதும் உணர்ந்து
கொள்கிறார்கள் இருவரும். அதன்பின் என்ன, வழக்கமான
காதல் கதையாக இல்லாமல் பல தளங்களில் பரிணமிக்கிறது
அந்தப் பின்னிரவுப் பயணம்.

ஜானுவின் தேவதை ராமாக விஜய் சேதுபதி. கண்களில் நீர்
முட்டத் தேங்கி நிற்கிறார்... வெடித்துச் சிரிக்கிறார்...
வெட்கப்படுகிறார்... ஏக்கம், இயலாமை, தேடல்... என இன்னும்
என்னவெல்லாமோ செய்கிறார்.

அவ்வளவும் அழகாக இருக்கிறது. உடலாக இந்த யுகத்தில்
இருந்தாலும் மனதளவில் கடந்த காலத்திலேயே தேங்கிப்போன
மனிதன். சில காட்சிகளில் நமக்குள் இருக்கும் ராமை நினைவு
படுத்துவதால் நம்மையே திரையில் பார்ப்பது போலிருக்கிறது.

கமர்ஷியல் ஹீரோக்களுக்கு எவர் க்ரீன் அடையாளம் என்பது
நிச்சயம் ஒரு காதல் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில்,
விஜய் சேதுபதியின் எவர்க்ரீன் அடையாளம் இந்த `96.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 10:42 am


எப்படி இருக்கிறது '96' படம்..? 48a39358-8599-46e9-bb20-2860b431e7e2_17266
ராமின் தேவதை ஜானுவாக த்ரிஷா. இப்படி ஒரு த்ரிஷாவைப்
பார்த்து சரியாக 8 ஆண்டுகள் ஆகின்றன. ஜெஸ்ஸிக்கு
37 வயதானால் எப்படி இருக்கும், பேச்சிலும் உடல்மொழியிலும்,
குணத்திலும் அதிக பக்குவம் இருக்குமே அதுதான் ஜானு.

படம் முழுக்க குட்டிக் குட்டியான ரசனை நிமிடங்கள் ஏராளமாக
இருக்கின்றன. அதை அப்படியே நமக்குக் கடத்திய விதத்தில்
ஜெஸ்ஸியை மிஞ்சுகிறார் ஜானு.

சலூனிலிருந்து வெளியே வந்த பின், சிங்கிள் டேக்கில் ஒரு காட்சி,
காரிலிருந்து இறங்கிக் கண்ணீரோடு ஓடி, குளியலறையில்
உடைந்து அலறும் காட்சி - வாவ் த்ரிஷா. இதைவிட சிறந்த கம்பேக்
அவருக்கு இருக்கவே முடியாது.
இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க இவர்கள் இருவரும்தான்.
-
-----------------------------------------------------


எம்.எஸ். பாஸ்கரை பார்க்கும்போதெல்லாம் இப்படியொரு
பிரமாதமான நடிகர் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தாரே
எனத் தோன்றிக்கொண்டே இருக்கும்.

அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் சின்ன வயது
ராமாக வரும் அவரின் மகன், ஆதித்யா பாஸ்கர்.
ஜீன்களில் தங்கியிருக்கும் திறமை ஃப்ளாஷ்பேக் முழுக்க
வெளிப்படுகிறது.

சின்னவயது ஜானுவாக கெளரி கிருஷ்ணன். நடிப்பில் அவ்வளவு
முதிர்ச்சி. கதையின் கனத்தை அவ்வளவு எளிதாகத் தாங்கி
நிற்கிறார். மொத்தப் படத்தின் மையமே ஃப்ளாஷ்பேக்
காட்சிகள்தாம். ஆதித்யா, கெளரி இருவருமே அந்தக்
கதாபாத்திரங்களுக்குப் பக்கா பொருத்தம். நண்பர்களாக வரும்
பகவதி பெருமாள், `ஆடுகளம்' முருகதாஸ், தேவதர்ஷினி...
வாட்ஸ்அப் குரூப்பில் பதில் சொல்லும் அத்தனை பேரும் நம்மைச்
சுற்றிலும் இருக்கிறார்கள்.
ஃப்ளாஷ்பேக்கில் வரும் அவர்களின் ஜூனியர்களும் சிறப்பு!

நம் காதலுக்கு சாட்சியாக ஏகப்பட்ட ரகளையான எளிய
மனிதர்கள் இருப்பார்களே, சிலருக்கு பள்ளிக்கு வெளியே
கடை வைத்திருக்கும் பாட்டி, சிலருக்கு ஆட்டோக்கார
அண்ணன். ராமுக்கு ஸ்கூல் வாட்ச்மேன் ஜனகராஜ். ராம்
மட்டுமல்ல..

நாமும்தானே அவரைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிறோம்.
மனிதரைப் பார்த்தாலே வாஞ்சையாக இழுத்து அணைத்துக்
கொள்ளத் தோன்றுகிறது. இன்னொரு ரகளை சாட்சியாக
கவிதாலயா கிருஷ்ணன். ``எல்லாம் எனக்குத் தெரியும் போடா "
என அந்த ஒற்றை வரியிலேயே ராமின் அத்தனை காதலையும்,
ஏக்கத்தையும் சொல்லிச் செல்கிறார் மனிதர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by ayyasamy ram Fri Oct 05, 2018 10:44 am

எப்படி இருக்கிறது '96' படம்..? E0b44bb1-d610-485d-a926-e8d178ada2f8_17589
-
படத்தின் பாடல்கள் வெளியானவுடனே சூப்பர் ஹிட். சூப்பர்
ஹிட்டான பாடல்களை சரியான இடத்தில் பொருத்துவது
மிகப்பெரிய சவால். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்
இயக்குநர் பிரேம் குமாரும் இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தாவும். த்ரிஷா காரிலிருந்து இறங்கும் அதே
வினாடியில் துடிக்கத் தொடங்குகின்றன கோவிந்தின் வயலின்
நரம்புகள். பார்ப்பவர்களுக்குச் சிலிர்க்கிறது.

அப்படியே அடுத்தடுத்த காட்சிகளில் பின்னணி இசையில்
வெவ்வேறு உயரங்கள் தொடுகிறார். மியூஸிக்கல் லவ் ஸ்டோரி
என இந்தப் படத்தைத் தாராளமாகச் சொல்லலாம். படம் நெடுக
இளையராஜாவின் தாக்கம் இருப்பது பெரிய பிளஸ்!

ஓரிரவில் நடக்கும் கதையைச் சலிப்பு தட்டாமல் முன்னெடுத்துச்
செல்கிறது மகேந்திரன் ஜெயராஜு - சண்முகசுந்தரத்தின்
ஒளிப்பதிவு. மழை இரவில் தூரத்துப் பால்கனியில் காபிக்
கோப்பைகளோடு இருவரும் நிற்பது, கண்ணாடித் தடுப்பின்
முன் த்ரிஷா கைவைத்து அழ, அடுத்த காட்சியில் அங்கே
விஜய் சேதுபதி மட்டும் நிற்பது என நிறைய கவித்துவமான
ஃப்ரேம்கள். கதைக்கு நிறையவே பலம் சேர்க்கின்றன இத்தகைய
முயற்சிகள்.

ஓர் அழகான மென்சோகக் கவிதையைப் படமாக்கியது போல்
இருக்கிறது '96. ராமின் பார்வையில்... அதன்பின் ஜானுவின்
பார்வையில் மீண்டும் ராமின் பார்வையில் என
ஃப்ளாஷ்பேக்கை சுவாரஸ்யமாக்குகிறது திரைக்கதை.

வழக்கமான க்ளிஷேவாக இருக்குமோ என நாம் நினைக்கும்
போதெல்லாம் அதை உடைத்து வேறு கோணத்தில் கதையை
நகர்த்திப் போகிறார்கள் ராமுவும் ஜானுவும்.

அதே சமயம், எல்லாராலும் படத்தின் கேரக்டர்களோடு உடன்
பட்டுப் பயணிக்கமுடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. கொஞ்சம்
தவறினாலும் விரசமாகிவிடக்கூடிய கதை.

கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியேதான். அதீதப்
பொறுப்போடு அதைக் கையாண்டிருக்கிறார் பிரேம். `
சந்தோஷமா இருக்கேனான்னு எல்லாம் தெரியல... ஆனா
நிம்மதியா இருக்கேன்' போன்ற வசனங்கள் அந்தப் பொறுப்பை
வெளிக்காட்டுகின்றன.

இயக்குநராக மட்டுமல்ல எழுத்தாளராகவும் கவனம் ஈர்க்கிறார்
பிரேம்குமார்.

எப்படி இருக்கிறது '96' படம்..? A270afa8-b8b7-4ecf-8158-479c1c8f8b38_17347

படத்தின் குறை அதன் நீளம். இரண்டரை மணிநேரம்.
அதிலும் இரண்டாம் பாதி முழுக்க காட்சியமைப்புகள் குறைந்து
உரையாடல்களே அதிகமிருப்பதால், இன்னும் நீளமான படம்
போன்ற தோற்றத்தைத் தருகிறது. பள்ளிக் காட்சிகள் முழுக்க
முழுக்க காதலைச் சுற்றியே இருப்பது லேசாக உறுத்துகிறது.
அதைத் தவிர்த்து, சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம்.

ராம், ஜானு, அவர்களின் கதை, இசை என எல்லாமுமாக சேர்ந்து
நினைவுகளை கிளறிவிடுவதால் நமக்கும் கடந்தகாலத்திற்கு
ஒரு நடை போய்விட்டு வந்த அனுபவம் நேர்கிறது. சிலருக்கு
அரவமில்லாமல் மூலையில் அமர்ந்திருக்கும் மரபெஞ்ச்சின்
கிறுக்கல்கள் நினைவுக்கு வரலாம். சிலருக்கு தூண் மறைவில்
மங்கலாக தெரியும் நிழலுருவம் நினைவுக்கு வரலாம்.

சிலருக்கு பரணில் பழைய வாசனையோடு தூங்கும்
பொக்கிஷங்கள் சிலவற்றைப் பற்றிய நினைவுகள் வரலாம்.
ஆனால், அந்த நினைவுகளைத் தூண்டி அவற்றின் மேல்
மீண்டுமொரு முறை காதல் கொள்ள வைத்ததில் வெற்றி
பெற்றுகிறது '96'.
-
----------------------
நன்றி-விகடன்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by SK Fri Oct 05, 2018 2:06 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by ஞானமுருகன் Fri Oct 05, 2018 3:38 pm

பாா்கலாம வேண்டாம. நல்லா இருக்கா இல்லையா. ஒற்றை வாியில் கூறினால் நன்றாக இருக்கும்


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

எப்படி இருக்கிறது '96' படம்..? Empty Re: எப்படி இருக்கிறது '96' படம்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum