ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்

Go down

செம்பருத்தி  - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்  Empty செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்

Post by சிவா Mon Oct 01, 2018 6:37 am

செம்பருத்தி  - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்  Bd171110

அடர்த்தியில்லா மெலிந்த கூந்தல் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனைகளை போக்க எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், முடி உதிர்வு பிரச்சனைக்கு எப்போதும் முதல் மருந்து என்றால் அது செம்பருத்தி தான். செம்பருத்தி கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளித்து, அடர்த்தி மற்றும் மிருதுவான தன்மையை கொடுக்கிறது.

முடி உதிர்ந்த இடத்தில் முடி வளராமலேயே இருந்தாலும், தொடர்ந்து செம்பருத்தியை பயன்படுத்தினால் முடி வளரும். முடி உதிர்வு, அடர்த்தியான முடி வளர்தல், இளநரை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரே பூ என்றால் அது, செம்பருத்தி தான்.



செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து வலிமையான கூந்தல் வளர உதவுகிறது. மேலும், இதில் உள்ள அமினோ அமிலம் கூந்தலை ஆரோக்கியமாக, உறுதியாக மற்றும் மிருதுவாக வளர செய்கிறது. மேலும், இது உங்கள் முடிக்கு ஒரு கன்டிஷனராகவும் செயல்படும். அதுமட்டுமல்லாது, தலையில் அரிப்பு தொல்லை, பொடுகு தொல்லை மற்றும் பிற பிரச்சனைகளுக்கும் இது தகுந்த மருந்தாகும்.

இப்போது செம்பருத்தியை எப்படியெல்லாம் தலைக்கு பயன்படுத்தலாம் என்று காண்போம்.



2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்கள், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் தயிர், 4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை ஸ்காப்பில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். இதை அடுத்து, மிதமான சூடுள்ள தண்ணீரால் தலையை அலச வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்யலாம். பொலிவிழந்த வறண்ட கூந்தல், மிருதுவானதாக மாற வேண்டும் என நீங்கள் விரும்பினால் இதனை செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.



2 முட்டைகளின் வெள்ளை கரு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்களை எடுத்துக் கொண்டு ஒரு பேஸ்ட் பதத்திற்கு அதனை கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் தேய்க்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு இது உங்கள் தலையில் நன்கு ஊற வேண்டும். பின்னர், லேசான கெமிக்கல் கொண்ட ஷாம்பூவால் தலையை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே செய்யலாம். முட்டை சாதாரணமாகவே முடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. எனவே, இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து கூந்தல் வளர்ச்சியை பெறலாம்.



1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி இதழ்களை ஒன்றாக சேர்த்து கலந்து மிருதுவான பேஸ்டாக கலந்து கொள்ளவும். பின்னர், தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் முழுவதுமாக படும்படி நன்கு தேய்க்கவும். இதையடுத்து, முடி முழுவதுமாக இதை அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் இதனை தலையில் ஊற வைத்து பின்னர், மிதமான சூடுள்ள நீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம். கூந்தல் இழந்த இடங்களில் மீண்டும் கூந்தல் வளரவில்லையே என கவலைப்படுபவர்களுக்கு இந்த முறை நல்ல பலனை கொடுக்கும் என்றே கூறலாம்.



8 செம்பருத்தி பூக்கள், 8 செம்பருத்தி செடி இலைகள் மற்றும் 1 கப் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். செம்பருத்தி பூ மற்றும் இலைகளை கழுவி நன்கு அரைத்து கொள்ளவும். தேய்காய் எண்ணெயை சூடேற்றி அரைத்து வைத்த செம்பருத்தி கலவையை அதில் சேர்க்கவும். 2 நிமிடத்திற்கு அதனை சூடேற்றி பின்னர் மூடி வைக்கவும். அது குளிர்ந்தவுடன் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை எடுத்து ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்யவும். மீதமுள்ள எண்ணெயை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயை முழுவதுமாக தேய்த்த பிறகு 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மிதமான கெமிக்கல் கொண்ட ஷாம்பூவால் தலையை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதை தொடர்ந்து செய்யலாம்.



1 செம்பருத்து பூ, 3 முதல் 4 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொண்டு நன்று அரைத்து கொள்ளவும். அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர், மிதமான ஷாம்பூவால், மிதமான சூடுள்ள நீரில் தலையை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதை ட்ரை செய்யலாம். இதன்மூலம் வலிமை இழந்த கூந்தலை, முற்றிலும் ஆரோக்கியமான வலிமையான கூந்தலாக மாற்றலாம்.



ஒரு கை நிறைய செம்பருத்தி பூக்கள், கை நிறைய செம்பருத்தி இலைகள், கை நிறைய மருதாணி இலைகளை எடுத்துக் கொண்டு அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பாதி எலுமிச்சம் பழ சாற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைத்து பின்னர் கழுவி விடவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்யலாம். இதனை செய்வதன் மூலன் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி விடும்.



15 செம்பருத்தி இலைகள், 15 செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி உங்கள் கூந்தலை கழுவவும். சாரதாரணமாக உபயோகிக்கும் ஷாம்பூவை விட இது நல்ல பலனை கொடுக்கும்.



8 செம்பருத்தி பூக்களை தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து கொள்ளவும். இதை ஸ்கால்ப்பில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைத்து மிதமான சூடுள்ள நீரில் கழுவவும். வாரத்திற்கு இரு முறை இதை செய்யவும்.



ஒரு வெங்காயத்தை தோல் உரித்து நன்கு அரைத்து பின்னர் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்த செம்பருத்தி இலை சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஸ்கால்ப்பின் அனைத்து பகுதிகளிலும் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், மிதமான சூடுள்ள தண்ணீரால் தலையை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்ய நல்ல பலன் கிடைக்கும். இதனால் உதிர்ந்த முடியை மீண்டும் வளரச் செய்யலாம்.


செம்பருத்தி  - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செம்பருத்தி  - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்  Empty Re: செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்

Post by சிவா Mon Oct 01, 2018 6:44 am

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் ஆயர்வேத முறைகள்

தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி

கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது.

இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம். அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.




“மூலிகைகளின் அரசன்” என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரின்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.



பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.



நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.



முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.



தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.



ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.



மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீங்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.



தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்


செம்பருத்தி  - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum