ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

4 posters

Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by சிவா Fri Sep 28, 2018 1:39 am



இத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே படத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேருக்கும் சரியான அளவில் (நடிப்புத்) தீனி போட்டு, அதற்கேற்ப திரைக்கதை ஒன்றை வடிவமைத்துத் தர மணிரத்னம் ஒருவரால் மட்டுமே முடியும்.

அந்த அளவுக்கு கண்ணைப் பறிக்கும் நட்சத்திரக் கூட்டம்! அந்த ஒரு காரணத்திற்காகவே, அனைவரும் எந்த விமர்சனத்தையும் படிக்காமல், பார்க்கலாமா என்ற கேள்வியைக் கேட்காமல் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்த்து வைக்கலாம்.

படத்திற்குப் பொருத்தமான பெயர். ஏன் என்பதை இறுதிக் காட்சி வரை உட்கார்ந்து திரையையே பார்த்து வந்தால் புரிந்து கொள்வீர்கள்!

இன்னொரு கோணத்தில் பார்த்தால், அரசியல் தலைவர் ஒருவர் மரணமடைந்து அவருக்குப் பின்னர் கட்சியில் யார் என்ற வாரிசுப் போர் வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ, அதனை அப்படியே உல்டாவாக மாற்றி தாதா கும்பல் ஒன்றின் கோடீஸ்வரத் தலைவன் மறையும்போது எப்படிப்பட்ட போராட்டம் உருவெடுக்கிறது என்பதை தனக்கே உரித்தான பாணியில் நட்சத்திர நடிகர்களின் துணையோடு சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அவருக்கு வழக்கம்போல் இணைந்து கைகொடுப்பது படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இன்னொரு கையாக உழைத்திருப்பது ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு (எடிட்டிங்).

படம் முழுக்க,  துரோகம் – அதிகாரத்தையும், பணபலத்தையும் கைப்பற்றப் போட்டா போட்டி, அதற்காக அண்ணன் தம்பி என்று பார்க்காமல் எதுவரை வேண்டுமானாலும் செல்வது, எதை வேண்டுமானாலும் செய்வது – எனச் செல்கிறது திரைக்கதை.

இவர்களுக்கிடையில் சிக்கிக் கொள்ளும் காவல் துறை அதிகாரியாக வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் இறுதியில் இவர்தான் உயர்ந்து நிற்கிறார். ஏன் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்! படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களை உச்சரித்து வெளிப்படுத்தும் வகையில் திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளுகிறார்கள் விஜய் சேதுபதியும், சிலம்பரசனும்!

அருண் விஜய்யும் குறைவைக்காமல் ஸ்டைலாக நடித்திருக்கிறார் என்றாலும், “என்னை அறிந்தால்” படத்தில் விக்டரை மீண்டும் பார்க்கும் பிரதிபலிப்பு போல் தோன்றுகிறது.

படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பவர் அரவிந்த்சாமிதான். வரதன் என்ற கோபக்கார மூத்த மகனாக, ஆக்ரோஷம்,அன்பு, கோபம், துரோகம்,பழிவாங்குதல், ஏமாற்றம், காதல், காமம், கட்டுமஸ்தான உடலோடு சண்டைகள் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் ஒருசேர எடுத்துக் காட்டும் கதாபாத்திரம். பின்னி எடுத்திருக்கிறார்.

குண்டடிபட்டு ஜோதிகா படுத்திருக்கும் நிலையில் அரவிந்த் சாமி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்தது என்ன என்பதை விவரிக்கும் காட்சியில் கைத்தட்டல்கள் வாங்குகிறார்.

அவருக்கேற்ற பொருத்தமான ஜோடி ஜோதிகா. நல்ல மருமகள், பாசம் மிக்க தாய், கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

ஆனால், அரவிந்த்சாமிக்கும், ஜோதிகாவுக்கும் இடையில் அவ்வளவு காதல் என்று காட்டிவிட்டு, பின்னர் அரவிந்த்சாமியின் இரண்டாவது காதல் மனைவி அதிதி ராவை நேரில் பார்த்தும் ஒன்றுமே நடக்காதது போல் ஜோதிகா அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதும், மனைவிக்குத் தெரிந்த பின்னரும் சாதாரணமாக அரவிந்த்சாமி அந்த சம்பவத்தைக் கடந்து போவதும் நம்ப முடியாத நெருடல்.

பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் கம்பீரமான தந்தை கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இவர்கள் அனைவரையும் – அத்தனை கதாபாத்திரங்களையும் – இறுதிக் காட்சிகளில் உண்மையில் நடந்தது என்ன என்பதை விவரித்து முடிச்சுப் போட்டு படத்தை முடிக்கும் இடத்தில் மணிரத்னம் தனது திறமையை நிரூபித்து உயர்ந்து நிற்கிறார்.

படத்திற்கு துணை நிற்கும் இன்னொரு அம்சம் – சொல்லவே வேண்டியதில்லை, ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசை! ஆனால் பாடல்கள் அந்த அளவுக்கு மனதில் நிற்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மெர்சலில் போட்ட ‘ஆளப் போறான் தமிழ்’ போன்று அசத்தலான பாடல் எதுவும் இல்லை. சில பாடல்கள் துண்டு துண்டாக இடையிடையே ஒலிப்பதும் மனதில் நிற்காமல் போவதற்கான காரணமாக இருக்கலாம்.

கவர்ச்சிக்கு ஒரு பக்கம் அதிதி ராவும், இன்னொரு பக்கம் சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பாவும் படத்திற்கு உதவியிருக்கின்றனர்.

படத்தின் முக்கால் பாதியில் தேவையில்லாத நீண்ட போராட்டமாக இருக்கிறதே என நாம் சலிப்படையும் நேரத்தில் ஏன் அப்படியெல்லாம் நடந்தது என்பதை நடந்து முடிந்த சம்பவங்களோடு முடிச்சுப் போட்ட இடத்தில் மணிரத்னம் தனது இருப்பைக் காட்டியிருக்கிறார்.

செக்கச் சிவந்த வானம் – பார்த்து இரசிக்க வேண்டிய அழகிய வானம்


– இரா.முத்தரசன்



திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by சிவா Fri Sep 28, 2018 2:16 am


செக்கச் சிவந்த வானம்: பிடித்தவையும் பிடிக்காதவையும்!


தொழிலதிபரோ அரசியல்வாதியோ அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறி ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதும், அந்தத் தலைவரின் மறைவுக்குப் பிறகு சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்துக்காக வாரிசுகள் சண்டையிடுவதும் நாம் கேட்காத கதையல்ல. இதுதான் செக்கச் சிவந்த வானமும். இதை ஒரு கேங்க்ஸ்டர் கதையாக உருவாக்கியிருக்கிறார் மணி ரத்னம்.

சென்னையின் மிகப் பெரிய தாதா, சேனாதிபதி (பிரகாஷ்ராஜ்). அமைச்சர்களுக்கு பினாமி, மத்திய அரசு வரை செல்வாக்கு எனத் தனது தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். அவருக்கு 3 மகன்கள், 1 மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த் சுவாமி), நடு மகன் தியாகு (அருண் விஜய்), இளைய மகன் எதிராஜ் (சிம்பு). வரதனின் நண்பன், ரசூல் இப்ராஹிம் (விஜய் சேதுபதி). காவல் ஆய்வாளர்.  

சேனாபதி கட்டி ஆளும் சாம்ராஜ்ஜியத்தை அவருக்கு அடுத்தபடியாக யார் ஆள்வது என வரதன், தியாகு மற்றும் எதிராஜ் ஆகியோருக்கிடையே யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தில் ரசூல் எந்தவிதத்தில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதுதான் செக்கச் சிவந்த வானத்தின் கதை.  படத்தின் பெயருக்கு ஏற்றவாறு பின்பாதி முழுக்கச் செக்கச் சிவந்து ரத்தக்களரியாகக் காட்சியளிக்கிறது.


முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் கதையின் வழியே மெல்ல நுழைகின்றன. அறிமுகக் காட்சிகளை நேர்த்தியான கேமரா ஷாட்களால் சந்தோஷ் சிவன் அற்புதமாகக் காண்பித்துள்ளார்.

வழக்கமான தாதா கதை என்றாலும், அதிலும் உணர்வுபூர்வமான காட்சிகளை விதைத்துள்ளார் மணி ரத்னம். விமான நிலையத்தில் தியாகு மற்றும் எதியை வரதன் வரவேற்கும் காட்சிகளில் நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றாக இருப்பதால் அந்தக் காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாகக் கிளறுகிறது.

அரவிந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி. அனைவருமே குறையில்லாத நடிப்பு. விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியில் ஜோதிகா, சிம்புவுடன் இயல்பாகப் பேசுவது ரசிகர்களைக் கவர்கிறது.

அருண் விஜய் மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். அவருடைய உடைகளும், உடல்மொழியும் ஈர்க்கின்றன.

எதிராஜாகத் தூள் கிளப்பியிருக்கிறார் சிம்பு. திரையரங்கில் விசில் பறக்கிறது. சிம்புவுக்கும் அவரது ரசிகர்களுக்கு செக்கச் சிவந்த வானம் மறக்கமுடியாத படம்.

இத்தனை பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் யாருக்கும் கூடுதல் முக்கியத்துவம் இல்லை, யாரையும் உயர்த்திப் பிடிக்கவும் இல்லை. இது திரைக்கதையின் பலம்.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவுக்குப் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் முக்கியமான காட்சிகளில் தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இவர்கள் குறைந்த காட்சிகளிலேயே தோன்றினாலும், அந்த மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான வேறுபாடுகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு தாதா, தனது குழந்தைகளை எப்படி வளர்ப்பார், அவருடைய மகன்கள் எவ்வித மனநிலையுடன் வளர்வார்கள் என்பன போன்றவை வசனங்கள் மூலமாக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குடும்பத்தில் பெண்களுக்கான முக்கியத்துவமும் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிட்டான பாடல்களைப் பின்னணி இசையாகப் பயன்படுத்தியுள்ளார் மணி ரத்னம். ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அளிக்கும் பரவசம் படத்தைக் குதூகல உணர்வுடன் பார்க்க வைக்கிறது.



முதல் பாதி விறுவிறுவென சென்றது. ஆனால் இரண்டாம் பாதி அந்தளவுக்கு வேகமில்லை.

டிரெய்லர்களில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதுவே படமாக விரிகிறது. ஆச்சர்யங்கள் எதுவுமில்லை.

எத்தனை எத்தனை நடிகர்கள், நடிகைகள். ஆனால், இந்தக் கதைக்கு இத்தனை பேர் தேவையா? அதிதி, டயானாவின் கதாபாத்திரங்கள் இல்லாமலேயே படம் அதே பாதையில், அதே வேகத்தில் பயணித்திருக்குமே!

விஜய் சேதுபதியின் இயல்பான நக்கல், அருண் விஜய்யின் ஸ்டைல் மற்றும் அரவிந்த் சாமி, சிம்புவின் அசத்தலான நடிப்பு என இந்தக் கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

நட்சத்திரப்பட்டாளங்களைச் சரியான விகிதத்தில் கையாண்டு பொழுதுபோக்குப் படத்தை அளித்துள்ளார் மணி ரத்னம்.



திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by krishnaamma Fri Sep 28, 2018 9:02 am

//அரவிந்த்சாமிக்கும், ஜோதிகாவுக்கும் இடையில் அவ்வளவு காதல் என்று காட்டிவிட்டு, பின்னர் அரவிந்த்சாமியின் இரண்டாவது காதல் மனைவி அதிதி ராவை நேரில் பார்த்தும் ஒன்றுமே நடக்காதது போல் ஜோதிகா அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதும், மனைவிக்குத் தெரிந்த பின்னரும் சாதாரணமாக அரவிந்த்சாமி அந்த சம்பவத்தைக் கடந்து போவதும் நம்ப முடியாத நெருடல்.//


நேத்துதான் கோர்ட் தீர்ப்பு வந்தது....இவங்களுக்கு அது முன்னமேயே லீக் ஆகிவிட்டதா ???? ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by krishnaamma Fri Sep 28, 2018 9:06 am

//பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் கம்பீரமான தந்தை கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியில் ஜோதிகா, சிம்புவுடன் இயல்பாகப் பேசுவது ரசிகர்களைக் கவர்கிறது. //


பிரகாஷ் ராஜ் & விஜய் சேதுபதி எப்பவுமே  சூப்பர் தான் !  அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by ayyasamy ram Fri Sep 28, 2018 1:22 pm

தொழில்நுட்ப அம்சங்களுடன் 'செக்கச்சிவந்த வானம்' ரசிக்க வைக்கிறது!
-
திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Ccvjpg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by krishnaamma Sat Sep 29, 2018 2:51 pm

நேற்று இரவு பார்த்தோம்....ஓக்கே ரகம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by சிவா Sat Sep 29, 2018 5:13 pm

ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்


திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by SK Sat Sep 29, 2018 8:03 pm

சிவா wrote:ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1279813
தல இப்படி சொன்ன எப்படி download link கொடுத்து சொல்லுங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by சிவா Sat Sep 29, 2018 8:07 pm

SK wrote:
சிவா wrote:ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1279813
தல இப்படி சொன்ன எப்படி download link கொடுத்து சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1279832

இன்று தியேட்டரில் பார்த்தேன், ஆன்லைனில் படம் தெளிவாக உள்ளது, ஆனால் சத்தம் விளங்கவில்லை.



திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம் Empty Re: திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum