ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதியவனும் மதியவளும்

4 posters

Go down

பதியவனும் மதியவளும் Empty பதியவனும் மதியவளும்

Post by கார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 2:31 pm

ரதியவள் போல் பேரழகில்
கருநிறத்தில் இருந்திட்டால்
நம் கதையின் மதியவளே

மதியவளின் மனமதனை
ஆள்பவனோ மதுவதனின்
மடியதனில் கிடந்திட்டான்
அனுதினமும் பதியவனே

பதியவனின் கதியுனர்ந்த
மதியவளோ பணமென்னும்
நிதி செய்ய படிபித்தால் பதியவனை

மதியவளின் சொல்லதனில்
உதித்தனவே மதிமாற்றம் பதியவனில்
மதியவளின் சொல்லதனை
மதித்தானே மதிமனதன்
பதியவனே புதியவனாய்

கதியந்த காலத்தை
நிதியதனின் கைவசத்தால்
விதியதனை வென்றிடவே
விழித்திட்டான் வீருகொண்டான்
விடைபெற்றான் மதியவளின்
விருப்பமின்றி புதியவனாய்

புதியவனாய்...புதியவனாய் ....
படைக்களமும் புகுந்திட்டான்
படைவீர முகமெடுத்தான்
சதி செய்த நாட்டினரை
கொதி யுண்ட குருதியினால்
குதித்தெழுந்தான் துடித்தெழுந்தான்
மிதித்து சென்றான் வதைத்து சென்றான்
சதிகார படையதனை பதியவனே

பலத்தோடு போரிட்ட
பதியவனின் மதி ஒளிந்து
குதித்தானே சதிகாரன் –முதுகில்
குருவாளில் துளைத்தானே

விதிவசத்தால் வீழ்ந்திட்டான்
வீரனவன் பதியவனே
விதியவனின் விளையாட்டில்
பதியவனும் போய்விட்டான்
பரமேசன்…….கைவசமே

பதியவனின் மரண கதியறிந்து
பதியவனின் முகமதனை பாராமல்
மதியவளும் மறுநொடியே மரித்தனளே

மதி மயங்கி கிடந்திட்டான்
மதுவினது கைவசத்தால் என ஏசி
பதியவனை எலனமாய் சிரித்தவர்கள்
துதித்தார்கள் பின்னாளில்
அவன் வீர துதிபாடி

இரு சடலமதை
சிதையில் இட்டு கொளுத்தியதால்
கிடைதிட்ட சாம்பலதை
திதி கொடுத்து
நதியதனில் கரைத்தனரே
நதியினது உதவியினால்
நன்றாக கலந்தனரே
நற்சேர்க்கை பெற்றனரே
நாம் அறிந்த காதலர்கள் ......
பதியவனும் மதியவளும் .

நாமகிரி செந்தில் குமார்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by ayyasamy ram Sun Sep 23, 2018 4:45 pm

அறியாயோ.... அஞ்சுகமே .....
என்ற தலைப்பில் பக்கம் 5ல் இக்கவிதை
ஈகரையில் பதியப்பட்டுள்ளது
-
கவிதையில் சுவைக்காக மீண்டும் ரசிக்கலாம்

-
பதியவனும் மதியவளும் 103459460 பதியவனும் மதியவளும் 3838410834
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by T.N.Balasubramanian Sun Sep 23, 2018 5:05 pm

ஒருவர் முடிக்க
மற்றவர் தொடர
இருவர் கதையை
இருவர் கவிதையாக்க
ஈகரை முழுதும் ரசித்ததே
மறைந்த நினைவுகளும்
மலர்ந்ததே .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by கார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 6:36 pm

T.N.Balasubramanian wrote:ஒருவர் முடிக்க
மற்றவர் தொடர
இருவர் கதையை
இருவர் கவிதையாக்க
ஈகரை முழுதும் ரசித்ததே
மறைந்த நினைவுகளும்
மலர்ந்ததே .

ரமணியன்


மேற்கோள் செய்த பதிவு: 1278815

உண்மை அய்யா,

திரு செந்தில் போன்ற கவிஞர்கள் மீண்டும் ஈகரைக்கு வர வேண்டும். என்னையும் கவி பாட வைத்தவர் திரு.செந்தில் அவர்கள்.உடல்நிலை காரணமாக அவரால் வர இயலவில்லை ஆனால் அவர் இயற்றிய கவிதையை மறக்கவும் முடியவில்லை.கிராமத்து குயில்களாய் சிறகடித்து பறந்த நாங்கள் கவி பாத்திரத்தோடு உயிரோட்டமாய் இருந்த காலங்களை மறக்க இயலுமா..

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை .

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by கார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 6:42 pm

ayyasamy ram wrote:அறியாயோ.... அஞ்சுகமே .....
என்ற தலைப்பில் பக்கம் 5ல் இக்கவிதை
ஈகரையில் பதியப்பட்டுள்ளது
-
கவிதையில் சுவைக்காக மீண்டும் ரசிக்கலாம்

-
பதியவனும் மதியவளும் 103459460  பதியவனும் மதியவளும் 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1278814)

இந்த கவிதை தொகுப்பு முழுவதும் எழுதிவைத்து பதியவில்லை பின்னூட்டம் பார்க்கும் பொழுது வந்து விழுந்த வார்த்தைகள் கவிதையாக உருவான து.

எதுகை , மோனை பார்க்கவில்லை, சீர் , சந்த்தி கேட்கவில்லை, எங்களுக்கு என்ன தெரிந்த்தோ அதை வடித்தோம்.

இந்த கவிதை முடியும் வரை நாங்கள் சந்தித்து பேசியது கூட கிடையாது.

திரு.செந்தில் அவர்கள் இந்த கவிதை தொகுப்பு புத்தக வடிவில் வர வேண்டி அவர் எழுதிய முன்னுரை உங்களுக்காக.




நாங்களும் பாடலும் ......
எப்பொழுதெல்லாம் மனதுக்குள் ஒரு வீரியத் தேடல் உருவாகி என் இரவு தொலைகிறதோ அப்பொழுதெல்லாம் இணையம் புகுவதுண்டு. அவ்வாறு புகுந்து தமிழின் அணியழகில் மெய் தொலைத்து மிதக்கும்போது, “ஈகரை தமிழ் களஞ்சியம்” என்றொரு இமையத்தை இணையத்தில் கண்டறிந்தேன். வலைத்தளத்தில் தமிழ்மகள் மென்னுலா சென்றுகொண்டிருந்தாள். அவ்வுலாவில் பல்லக்கின் பிடியை உலகெங்குமிருந்து தமிழ்க் கரங்கள் பற்றி தன் தோளில் சுமந்த வண்ணம் இருந்ததைக் கண்டு அந்நிகழ்வில் அன்னிச்சையாய் என்னகமும் ஓடி ஒட்டிக்கொண்டது. புதிதாய் இணைந்த ஒரு கரத்தை பலரும் தன் ஊக்க மொழிகள் கொண்டு மெருகேற்றினர். என்னைப் போலவே இணைந்து பதிவின் மூலம் வளம் வந்துகொண்டிருந்த ஒருவர் என் கவிதைகளை காணும்போதெல்லாம் என் முகமறியாது இருந்தபோதிலும் வந்து பின்னூட்டத்தில் மனமுருகி பாராட்டியதோடு என் எழுத்தின் இதய துடிப்பை எடுத்தியம்பி அதற்க்கான அர்த்தத்தை பிறபித்தவர். கிராமிய சாரல்களை அதிகமாய் நேசிப்பவர். மண்வாசனை அனைவரும் அறிந்திருக்க, புழுதியின் சுவை  அதில் புரண்டு திரிந்தவனுக்கத்தான் தெரியும் அதை தன் அகத்துள் எப்பொழுதும் அடக்கி வைத்திருப்பவர். தமிழ் வரலாறு வாழ வேண்டும் என நினைப்பவர். புதைந்து போன மற்றும் கண்டுகொலப்டாமல் இருக்கும் தமிழ் வரலாற்றை மீட்க வீண்டும் வெளிக்கொணர வேண்டுமென நினைப்பவர். என் நேசமிகு நண்பர், கவிஞர் கார்த்திக் செயராம் அவர்கள்.    
எப்பொழுதாவது வந்து ஈகரையில் ஒன்றிரண்டு கவதைகளை பதிந்து செல்லும் நான் அறியாயோ அஞ்சுகமே என்ற கவிதையையும் அப்படித்தான் பதிந்தேன். வழக்கம்போல் பின்னூட்டத்தில் கார்த்திக்கின் கருத்துரைகள் இடம்பெறும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் கருத்துகளோடு

கந்தலுடன் சேற்றின் கரைகளோடு
இடை மறைக்கப்பட்ட ஒரு ஆண்
சுத்த கிராமத்து
வெற்றிலை பாக்கை மென்று
உமிழ்நீரை வாயில் சுமந்த வண்ணம்
எள்ளல் மொழியோடு
கொஞ்சல் மொழியலகில்
தன் அத்தை மகளை
வம்பிழுத்து அவளின் வாய்மொழியை
வாங்குவதாய்
ஒரு கிராமிய பாடலை பதிவிட்டிருந்தார்
பாடலை படித்தவுன்

அதற்கென்று எசப்பாட்டு படிக்கும்
பெண்ணொருத்தி
கனத்த மாரழகை
கண்டாகி சேலையில் மறைத்து
சல்லிக் காசுகளை
முந்தானையில் முடிந்து அதை
தன் பின்னிடையில் சொருகி
தன் தனங்களை போன்றே
தலையில் கொண்டை முடிந்தவளாய்
ஒரு பச்சைத் தமிழச்சி  
என்னுள் தோன்றிவிட்டாள்..
என் எண்ணத்தை மடை மாற்றி ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி உய்ர்வாழ்ந்த தருணம் அது. உண்மையில் என் சுயத்தை இழந்து என் எண்ணக்குவியல்கள் ஒரு பெண்ணென மாறியிருந்த நாட்கள்  ..

விளையாட்டாய் துவங்கிய பதிவு பின்னூட்டத்தில் வளர்ந்து தொடராக வந்து
அதிக வரவேற்பை பெற்றதால் நூலாக வாசகர் கண்முன் வைக்க அப்போதே எங்களுக்கு எண்ணம் தோன்றிவிட்டது    

நாங்கள் இதற்கென்று அலங்காரம் அமைக்கவில்லை, எடுப்பு தொடுப்பெல்லாம் ஏதுமில்லை, எதுகை மோனை எண்ணவில்லை. ஒரு குதூகலமான போட்டியில், இயல்பாக அப்பாத்திரத்தின் உயுரோட்டத்தில் நாங்கள் மிதந்து கொண்டிருந்ததால் வந்து விழுந்த வரிகளை அமைத்தும் சமைத்தும் இருக்குறோம். ஈகரையில் இருவரும் கவிஞர்களாய் பிறபெடுத்தோம்
இந்த நூலும் அங்குதான் பிறபெடுத்தது.
ஈகரையின் நிர்வாகிகள் திரு.ராஜா, ரமணியன் ஐயா, விமந்தினி, கிருஷ்ணம்மா மற்றும் படைப்பாளார்கள், வாசகர்களோடு
இரு தாய்களிடமிருந்து பிறந்த ஒரு குழந்தையை அள்ளி வாசகரிடம்
கொடுக்கும் பணியை ஏற்று ஆதிரா பதிப்பகம் மிகசிறப்பான வடிவமைப்பை அட்டைப் படம், உள்பக்கம் என அசத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக பேராசிரியர், எழுத்தாளர், முனைவர் நாங்கள் பாசமாக அக்கா என்றழைக்கும் கவிஞர் ஆதிரா முல்லை அவர்கள். எப்பொழுதும் மிகச்சிறந்த கவியாளுமைகளின் வட்டத்தில் இருக்கும் அவர் தன் இலக்கியப்பாதையில் நாங்களும் ஓடிவர எங்களுக்கு ஊக்கத்தையும் உற்ச்சாகத்தையும் ஊட்டிக்கொண்டிருப்பவர். இந்த நூல் வெளிவர முழு முதற்காரனமாகவும் இருப்பவர் மற்றும் முகநூல் நண்பர்கள் இவர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் எப்பொழுதும் நன்றி பாராட்டும்  

என்றும் நேசமுடன்
  நாமகிரி செந்தில்குமார்
கரம் பற்றியவாறு
கார்த்திக் ஜெயராம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Sep 23, 2018 8:32 pm

கார்த்திக் செயராம் wrote:
ஒரு பச்சைத் தமிழச்சி  
என்னுள் தோன்றிவிட்டாள்..
என் எண்ணத்தை மடை மாற்றி ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி உய்ர்வாழ்ந்த தருணம் அது. உண்மையில் என் சுயத்தை இழந்து என் எண்ணக்குவியல்கள் ஒரு பெண்ணென மாறியிருந்த நாட்கள்  ..

மேற்கோள் செய்த பதிவு: 1278817
மனதில் உள்ளதை அள்ளி தெளித்து உள்ளீர் கார்திக் ஜெயராம்
அருமை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பதியவனும் மதியவளும் Empty Re: பதியவனும் மதியவளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum