புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
156 Posts - 79%
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
3 Posts - 2%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
1 Post - 1%
Pampu
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
321 Posts - 78%
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:55 am

First topic message reminder :

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 1-809810
சிறப்புரை (மு. வரதராசன்)


அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.

அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.

நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.

புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.

இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.

'குறிஞ்சி மலர்' வெல்க!

மு. வரதராசன்





குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:37 am

35



ஊண் பழித்து உள்ளம் புகுந்து - என்
உணர்வு அது ஆய ஒருத்தன்
-- மாணிக்கவாசகர்


அரவிந்தனிடம் தனியாகப் பேச வேண்டுமென்று அவனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போன முருகானந்தம் கூறலானான்: "இப்போது நான் சொல்லப் போகிற இந்தச் செய்தியில் நீ அவ்வளவு அக்கறை காட்டமாட்டாய் என்பது எனக்குத் தெரியும், அரவிந்தன். ஆனாலும் உன்னிடம் சொல்லி எச்சரிக்கை செய்துவிட வேண்டியது என் கடமை. உனக்காக இல்லாவிட்டாலும் பூரணியக்காவுக்கும் எங்களுக்கும் வேண்டியாவது இதில் நீ கவனமாக இருந்துதான் ஆகவேண்டும்."

"செய்தியைச் சொல் அப்பா! என்னவோ அடிப்படை பலமாகப் போடுகிறாயே?"

"வேறொன்றுமில்லை அரவிந்தன். தேர்தல் முடிகிறவரை நேரமில்லாத நேரங்களில் தனியாக ஒண்டியாக நீ வெளியே அதிகம் நடமாட வேண்டாம். காலம் சரியில்லை. நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிற மனிதர்களும் சரியில்லை. கெட்ட எண்ணங்களோடு மதம் பிடித்து அலைகிறார்கள்."

இதைக் கேட்டதும் முருகானந்தத்தின் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு மெல்லச் சிரித்தான் அரவிந்தன்.

"சிரிப்பதற்கு இது வேடிக்கை இல்லை. என் காதுக்குப் பல விதமான செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் கேள்விப்பட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் உன்னைக் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிக்கிறேன். இது விளையாட்டுக் காரியமில்லை" என்று சிறிது கண்டிப்புக் கலந்த குரலில் கூறினான் முருகானந்தம். அரவிந்தன் இதற்கு மறுமொழி கூறவில்லை.

பர்மாக்காரர் தொலைபேசி மூலம் இரண்டு முறை தன்னை அழைத்து மிரட்டியதையும் முருகானந்தத்திடம் சொல்லி விடலாமா என்று நினைத்தான் அரவிந்தன். அதை அவனிடம் தெரிவிப்பதனால் அவனுக்கு ஆத்திரம் உண்டாகி ஏதாவது வீண் வம்பு இழுத்துக் கொண்டு வருவான் என்று தோன்றியதால் சொல்லாமல் இருப்பதே நல்லதென்று அடக்கிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் முருகானந்தம் வெளியே சென்றதும் பாதி படிக்காமலே பைக்குள் வைத்திருந்த பூரணியின் கடிதத்தை எடுத்து மீண்டும் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான். வெப்பம் மிகுந்த சூழலில் குளிர்ந்த சுனை நீரில் மூழ்கினாற் போல் முருகானந்தத்தின் எச்சரிக்கையும், பர்மாக்காரரின் மிரட்டலும் குழப்பியிருந்த மனத்தைப் பூரணியின் கடிதம் மறுபடியும் இங்கிதக் கனவுகளிலே மூழ்கச் செய்தது. தான் கண்டு மகிழ்ந்த கல்கத்தா நகரத்தையும், தன் உள்ளத்து உணர்வுகளையும் ஓவியமாக்கி வரைந்தனுப்பினாற் போல் அந்தக் கடிதத்தையும் எழுதியிருந்தாள் அவள். அந்தக் கடிதத்தில் சண்பகம் மட்டும் மணக்கவில்லை. கருத்தும் மணந்தது, கருத்தோடு கலந்த உணர்வும் மணந்தது.

"பாரதத்தின் தலைசிறந்த கவிஞரையும் நாவலாசிரியரையும் ஆத்ம ஞானியையும் வீரரையும் அளித்த வங்கநாட்டு மண்ணில் அமர்ந்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்குச் சொல்லரிய பெருமிதம் உண்டாகிறது அரவிந்தன். தாகூரின் கவிதைகளிலுள்ள ஆழ்ந்த சோகமயமான அழகைக் காணும்போது, சரத்சந்திரரின் நாவல்களில் காணும் உயிருணர்வு ததும்பும் பாத்திரங்களையும், கிராமச் சூழ்நிலைகளையும் படிக்கும்போது மானசீகமாக வங்க நாட்டுக்கு வந்ததுண்டு. பலமுறை இராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரின் உள்ளொளி வெள்ளத்தில் திளைத்தபோதும், சுபாஷ்சந்திரரின் வீர வாழ்வை எண்ணி எண்ணி வியந்தபோதும் வங்கநாட்டுப் பொங்குபுகழ்ச் சிறப்புக்காக மெய்சிலிர்த்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் உள்ளத்தால் நூல்களின் உலகத்தில் சுற்றிப் பார்த்த கனவுப் பயணங்கள். இந்த வங்க பூமியின் வளம் நிறைந்த இடங்களில் சுற்றிப் பார்க்கும் போது இப்போதெல்லாம் இதன் அழகை நன்றாக உணர முடிகிறது! நன்றாகக் காண முடிகிறது!

அரவிந்தன்! இங்கு வந்த சில நாட்களாக இந்த இராமகிருஷ்ண மடத்துச் சூழலும், பல நாட்டுப் பிரதிநிதிகளாக மகாநாட்டுக்கு வந்திருப்பவர்களிடம் பழகுவதும் சேர்ந்து என் மனதுக்கு மிக உயர்ந்த பூரிப்பை அளிக்கின்றன. நான் உயர்ந்ததாக எதை அடைந்தாலும் அதில் உங்களுக்குப் பங்கு வேண்டும் என்பீர்கள் நீங்கள். அந்தப் பங்கை உங்களுக்குக் குறைவின்றி அளித்து விடுவதற்காகத்தான் இப்படி வளர்த்து நீட்டி எழுதிக் கொண்டே போகிறேன். கல்கத்தாவுக்கு நீங்களும் எங்களோடு வந்திருந்தால் எனக்கு எத்தனையோ மகிழ்ச்சியாயிருந்திருக்கும். உங்களுக்குத்தான் அச்சக நிர்வாகம், என் தேர்தல் வேலைகள், ஏழைப் பெண்கள் திருமண நிதி என்று ஊரிலிருந்து நகர முடியாமல் வேலைகள் சுமந்து கிடக்கின்றனவே!

வங்காளத்தில் நாட்டுப்புறத்துக் கிராமங்களைக் காணும்போது எதையும் உள்ளடக்கிக்கொண்டு நிறைந்திருக்கும் பெரிய மௌனம் தொடர்ந்த அமைதி தென்படுகிறது. நீர் நிறைந்த அல்லிக் குட்டைகள், பசுமைத் தவழும் வயல்வெளிகள், அடர்ந்த மரக் கூட்டங்கள், மாடிபோல் மேலே எடுத்துக் கட்டிய கூரைக் குடிசைகள், இவைதான் வங்கத்தின் கிராமங்கள். இந்தக் கிராமங்களில் தான் வங்காளத்து வாழ்வின் உயிர்த்துடிப்பைக் கண்டு மகிழ்ந்தேன் நான். தமிழ்நாட்டின் வாழ்வில் இருப்பது போல் ஒரு பழமையான பண்பாட்டின் சாயல் வங்காளிகளின் வாழ்க்கையிலும் இருப்பதைக் காண்கிறேன். 'வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என்று நம்முடைய பாரதியார் பாடியிருக்கிற பாட்டின் அழகை இங்கு கண்டுகளிக்கிறேன். மூலத்தார் வேட்டியும் முழுக்கை ஜிப்பாவுமாக வீரநடை நடக்கும் வங்கத்து ஆண்களையும், காதுகளில் பொன் வளையங்கள் அசைந்தாட நெற்றிக்கு மேல் கூந்தல் வகிட்டில் பளிச்சென்று மின்னும் குங்குமத் திலகத்துடன், எளிய புடவைகளையும் அரிய அழகுடன் அணிந்திருக்கும் வங்கத்துப் பெண்களையும் காணும்போது முழுமையான குடிமக்களுக்குரிய இயல்புகள் தோன்றுகின்றன. இங்குள்ள சகோதரிகளின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் பெருமைப்படத்தக்க ஓருணர்வு உண்டாகிறது எனக்கு.

நேற்று மாலை நானும் மங்களேசுவரி அம்மாளும் மாநாட்டுக்கு வந்திருந்த வேறு சில பிரதிநிதிகளும் கல்கத்தா நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தோம் அரவிந்தன்! நீங்கள் உடன் வரவில்லையானாலும் இந்தப் பெரிய நகரத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, என் மனம் நிறையக் கண்கள் நிறைய நீங்களும் இருந்தீர்கள், பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள், வியந்தீர்கள்!

கல்கத்தாவை ஹுக்ளி ஆறு இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது. ஹுக்ளிக்கு இப்பால்தான் ஹௌரா, இராமகிருஷ்ணா மடம் உள்ள பேலூர் எல்லாம் இருக்கின்றன. ஹௌராவையும், கல்கத்தாவையும் இணைக்கும் பெரிய பாலத்தைப் பார்க்கும்போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது எனக்கு. தட்சிணேசுவரத்துக்குக் காளி கோயிலுக்குப் போயிருந்தோம். அந்தக் கோயிலில் முன்பு இராமகிருஷ்ண பரமஹம்சர் பூசாரியாக இருந்தபோது எந்த அறையில் தங்கி வசித்து வந்தாரோ அதே அறையில் இன்றும் அவர் வாழ்ந்தபோது உபயோகித்த புனிதப் பொருள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தட்சிணேசுவரத்துக் காளி கோயிலின் முன்னால் ஹுக்ளிக் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. கோயில் பூசை நேரம் தவிர எஞ்சியபோதெல்லாம் பரமஹம்சர் இந்த ஆல மரத்தடியில் அமர்ந்து தான் ஆன்மீகச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பாராம். அவர் வாழ்ந்த அறையிலும் சிந்தித்த ஆலமரத்தடியிலும் நின்றபோது எம்மனத்தின் ஆழத்தில் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் அடக்கிச் சொல்ல முடியாத ஒரு தாகம், ஒரு தவிப்பு, மிகப்பெரிதாக, மிகச்சிறந்ததாக, மிக நல்லனவாக இந்த நாட்டுக்கு என்னென்னவோ செய்ய வேண்டும்போல் உண்டாயிற்று. மனதுக்குள் பூத்துச் சொரியும் நறுமண் மலர்களைப் போல் விரைவாகப் பேசிய பெரிய நினைவுகள் மலர்ந்தன. நினைவு தெரிந்த நாளிலிருந்து பலமுறை நான் உணர்ந்திருக்கும் இந்தத் தவிப்பைக் கொடைக்கானலில் தங்கியிருந்தபோது உங்களிடம் கூடச் சொல்லி விளக்க முயன்றதாக எனக்கு நினைவிருக்கிறது. முழுமையாகச் சொல்லி விளக்க என்னாலேயே முடியாத இந்த உணர்வு அண்மையில் சிறிது காலமாக அடிக்கடி உண்டாயிற்று எனக்கு.

நாங்கள் இங்கு வந்து சேர்ந்ததும், முதல்நாள் மகாநாட்டில் எனக்கு விந்தையான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. நான் மேடையில் பேசிவிட்டுக் கீழே இறங்கி என் இடத்தில் வந்து அமர்ந்ததும், மகாநாட்டுக்கென்று விசேடப் பிரதிநிதியாகச் சீனாவிலிருந்து வந்திருந்த சீனப்பெண்மணி ஒருத்தி என்முன் வந்து நின்று கொண்டு, "கண்களை இமைக்காமல் இப்படியே சிறிதுநேரம் உங்கள் முகத்தைக் காண்பிக்க வேண்டும்" என்று ஆங்கிலத்தில் வேண்டிக் கொண்டாள். நான் அந்த வேண்டுகோளின் பொருள் புரியாமல் மருண்டேன்.

"ஏன், எதற்காக?" என்று அருகில் இருந்த மங்களேசுவரி அம்மாள் அந்தப் பெண்மணியைக் கேட்டார்கள். "இந்த முகத்தையும் இதன் அகன்ற நெடுங்கண்களையும் காணும் போது அளவற்றதொரு தெய்வீக மகிழ்ச்சி என் உள்ளத்தில் ஏற்படுகிறது. இந்த முகத்தையும் விழிகளையும் காணும்போது விண்டுரைக்க மாட்டாததொரு தெய்வீகப் புனித உணர்வு பெறுகிறேன். இந்தப் பெண் பேசியபோது இவள் முகத்தையே தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆயினும் என்னுடைய பார்க்கும் தாகம் இன்னும் அடங்கவில்லை" என்று உருக்கமான குரலில் பதில் கூறினாள் அவள். எனக்கு ஒரே வெட்கமாகப் போயிற்று. அந்தச் சீனப் பெண்மணி என்னை அப்படியே உட்காரச் சொல்லிப் படம் பிடித்துக் கொண்டாள். 'தென்னிந்தியாவின் தெய்வீக அழகு (தி டிவைன் பியூட்டி ஆப் சவுத் இண்டியா) என்ற பொருள்படும் ஆங்கிலச் சொற்றொடரைச் சொல்லி அப்பெயருடன் தங்கள் நாட்டுப் பத்திரிகைகளில் என் படத்தை வெளியிடப் போவதாகக் கூறினாள். இங்கு நடைபெற்ற கிழக்கு ஆசியப் பெண்கள் மகாநாட்டில் முக்கால் மணி நேரம் ஆங்கிலத்தில் பேசினேன். என்னுடைய பேச்சு சிறப்பாகவும் புதுமையாகவும் இருந்ததென்று நம் மங்களேசுவரி அம்மாள் உட்பட எல்லோரும் சொல்கிறார்கள்.

'ஆண்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் வாழ்கிறார்கள். பெண்களாகிய நாம் அப்படி அல்ல. நம்முடைய ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாழ்வு பல தலைமுறைக்கு மணமும் பண்பும் நல்கிக் கொண்டே தொடரவேண்டிய வாழ்வாக இருக்கிறது. பெண்கள் நாற்றங்காலைப் போன்றவர்கள். பின்னால் விரிவான நிலத்தில் பெரிதாக வளர்ந்து விளையாட வேண்டிய பயிர்கள் முதலில் நாற்றங்காலில்தான் தோன்றுகின்றன. பூத்திருக்கும் இடத்திலிருந்து நெடுந்தொலைவுக்குத் தன் மணத்தைப் பரப்புகிற மனோரஞ்சிதப் பூவைப்போல் தாய்மை என்ற நிலையில் இல்லத்துக்கு அரசியாக இருந்து கொண்டே எல்லா காலத்துக்கும் மணம் பரப்புகிற சிறப்பும் பெண்களுக்கு உண்டு' என்று இப்படிப் பல கருத்துக்களைச் சொன்னேன். மறுநாள் இங்குள்ள பிரபல அமிர்தபசார், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் ஆசியப் பெண்கள் மாநாடு பற்றி எழுதியிருந்த தலையங்கங்கள் என்னுடைய பேச்சை முக்கியமாக எடுத்துக் காட்டியிருந்தன. அதைப் பார்த்ததும் மங்களேசுவரி அம்மாளுக்கு பெருமை தாங்கவில்லை. 'இந்தப் பேச்சாற்றலாலும் இந்தக் கண்களாலும் நீ உலகத்தையே வென்று வாகை சூடி வாழப் போகிறாயடி பெண்ணே' என்று என்னை வாய் நிறையப் புகழ்கிறார்கள் அந்த அம்மாள். அப்போது நான் யாரை நினைத்துக் கொண்டேன் தெரியுமா, அரவிந்தன்! அப்பாவை நினைத்து மெய் சிலிர்த்தேன். 'உலகத்து வீதிகளில் பண்பாட்டுப் பெருமையை முழக்கமிட வேண்டும்...' என்று நீங்கள் கூறியிருப்பதை நினைத்தேன்.

இங்கே ராஷ்பிகாரி அவென்யூ என்ற பகுதியிலும் ஹௌராவிலும் தமிழர்கள் நிறைய வசிக்கிறார்கள். இன்று இரவு அந்தத் தமிழ் அன்பர்களின் சங்கங்கள் சிலவற்றில் என்னைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள். நாளைக் காலையில் இங்கிருந்து காரிலேயே புறப்பட்டுக் கவி தாகூரின் சாந்தி நிகேதனம் இருக்கும் கிராமத்துக்குப் போய்விட்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம். வேறு நாட்டுப் பிரதிநிதிகள் சிலரும் எங்களோடு சாந்திநிகேதனுக்கு வருகிறார்கள்.

இப்போது தமிழ் அன்பர்களின் கூட்டத்துக்குப் புறப்பட நேரமாகிக் கொண்டிருப்பதால் இந்தக் கடிதத்தை இவ்வளவில் முடித்துத் தபாலில் சேர்க்கிறேன். சாந்தி நிகேதனத்திலிருந்து திரும்பியதும் ஊருக்குப் புறப்படுகிறோம். 'ஊருக்கு ஒன்றும் அவசரமில்லை, இவ்வளவு தூரம் வந்தது வந்தாயிற்று, காசிக்கும் போய்விட்டு ஊர் திரும்பலாமே' என்று மங்களேசுவரி அம்மாள் கூறுகிறார்கள். அப்படிப் போவதாயிருந்தால் சாந்தி நிகேதனத்திலிருந்து திரும்பியதும் உங்களுக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதுவேன். தேர்தல் எப்படி ஆனாலும் சரி, நீங்கள் கண்டபடி அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். முருகானந்தம், வசந்தா எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள். செல்லம், எம் தம்பிகள், தங்கை எல்லோருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:37 am


உங்கள் அன்பிற்கினிய பூரணி.

ஆர்வமும் அன்புப் பெருக்கும் போட்டியிடக் கடிதத்தை இன்னும் இரண்டு முறை படித்தான் அரவிந்தன். நவில் தொறும் நூல் நயம் போல் படிக்கப் படிக்கப் புதிய நயங்கள் நல்கிற்று அந்தக் கடிதம்.

அன்று இரவு உணவின் போது வசந்தா, பூரணியின் கடிதத்தைப் பற்றி அரவிந்தனிடம் விசாரித்தாள். அரவிந்தன் பதில் கூறினான். "பூரணியும் உன் அம்மாவும் காசிக்குப் போய்விட்டுத்தான் திரும்புவார்கள் போலிருக்கிறது."

"அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் கூட அப்படித்தான் எழுதியிருந்தாள் அண்ணா. கேட்டவர்களெல்லாம் அக்காவின் பேச்சைக் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகளெல்லாம் அக்காவின் சொற்பொழிவுகளைப் பற்றித் தலையங்கங்கள் எழுதியிருக்கின்றனவாம்."

அரவிந்தன் இரவு உணவாகிய சிற்றுண்டியை முடித்துக் கொண்டு எழுந்திருந்தபோது வசந்தா இன்னொரு நல்ல செய்தியையும் தெரிவித்தாள். "அண்ணா, உங்களிடம் சொல்வதற்கே மறந்து போய்விட்டேனே. முந்தா நாள் இலங்கை வானொலியிலிருந்து கடிதம் வந்தது. இன்றிரவு எட்டரை மணிக்குத் தேசிய ஒலிபரப்பில் அக்காவிடமிருந்து சிறப்புப் பேச்சாக பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கும் 'இறையுணர்வு' என்ற பேச்சை ஒலி பரப்புகிறார்களாம். நீங்கள் எங்கும் வெளியில் போய்விடாதீர்கள். இப்போது மணி எட்டு. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது. அக்காவின் பேச்சை நாம் எல்லோரும் கேட்கலாம்."

மாடிக்குப் போய் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு மணி எட்டரை ஆவதற்கிருந்தபோது கீழே இறங்கி வந்து வானொலிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தைத் தவிர எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். வானொலிப் பெட்டியைச் சுற்றி எல்லோரும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

பூரணியின் அந்த வானொலிப் பேச்சில் ஒரு பகுதி அரவிந்தனைப் புல்லரிக்கச் செய்தது.

"இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப் போகிறது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதற்கு இறையுணர்வு தேவையில்லை. இரையுணர்வே போதும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனத்தைக் கோயிலாக்கி நினைவுகளில் தெய்வம் நிலைக்க வாழ்ந்தவர்கள் நிறைந்த சமயம் நம்முடையது. 'ஊண் பழித்து உள்ளம் புகுந்த என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்றுதான் நம்முடைய மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். உணர்வுகளாலும் எண்ணங்களாலும்தான் மெய்யாக வாழ்கிறோம். வாடகைக் குடியிருப்பு மாதிரித் தேகம் நமக்குச் சொந்தமில்லாதது. தத்துவக் கண்கொண்டு பார்த்தால் நம்முடைய உடம்பு ஒரு பெரிய புண். தினசரி நீராடும் போது புண்ணைக் கழுவுகிறோம். வியர்வை தான் சீழ். வியர்வையும் அழுக்குமாகக் கற்றாழை நாற்றமும், முடை நாற்றமும் நாறுகிறதே, அதுதான் புண்ணின் நாற்றம். சோறு, கறி, நீர் எல்லாம் உடம்பாகிய புண்ணுக்குச் செலுத்துகிற மருந்துகள். புண்ணைக் கழுவி மருந்திட்டுத் துணியால் கட்டுப்போடுவார்களே, அதுபோல்தான் வேட்டி சட்டை அணிந்து கொள்வது. 'ஊண் பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய...' என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதில் இத்தனை தத்துவமும் அடங்கியுள்ளது. கீழைநாட்டுச் சமயங்கள் பக்தி செலுத்துவதற்கு மனம் தான் இடம் என்று கருதியவை. ஆனால் வறுமையும் வாழ்வும் போட்டிகளும் மிகுந்துவிட்ட இந்தக் காலத்தில் இரையுணர்வுதான் எங்கும் நிறைந்திருக்கிறது. இறையுணர்வைக் காணோம். ஒழுக்கம், நாணயம், பண்பு ஆகிய பொதுவாழ்க்கையின் நியாயங்கள் பறிபோகாமற் காக்கும் ஒரே வேலி இறையுணர்வுதான். மனம் வளர்வதற்கு மருந்தும் அதுதான்."

பூரணியின் இந்த வானொலிப் பேச்சு அன்றிரவு அரவிந்தனைப் பெரும் சிந்தனனக்கு ஆளாக்கிற்று. அன்றொரு நாள் கொடைக்கானலில் 'பூரணியை மணந்து கொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறியபோது நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் 'ஊண் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்' என்று திருவாசகத்தைக் கூறும்போது என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களில் புகழ்கிறாளா? அல்லது குத்திக் காட்டுகிறாளா? எடுத்துக் கொண்ட பொருளுக்காக இந்தத் தத்துவங்களைச் சொல்லி இப்படிப் பேசுகிறாளா?' என்று பலவாறு எண்ணினான் அரவிந்தன். அவளுடைய வானொலிப் பேச்சைக் கேட்ட அன்று மீண்டும் தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் அவளைப் பற்றி சில வரிகளை எழுதினான் அவன். 'பூரணி! நீ என்னோடு சம உயரத்தில் நின்று சிரித்துப் பொன் காட்டும் நிறமும், பூக்காட்டும் விழிகளுமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே, நான் நிற்கிற எல்லை உங்களுக்கு ஒப்பானதில்லை. இன்னும் உயரமானது, உயரமானது என்று கூறுவதுபோல் மேல் எல்லைக்குப் போய் நின்று பேசிவிடுகிறாய் நீ. உயரத்தில் ஏறிச்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதுதான் இப்போது என் மனத்தில் மறுபடியும் உறுதிப்படுகிறது. மலை நிலத்தில் பூத்த பூவைத் தரை நிலத்து மனிதன் சூடுவதற்குக் கை எட்டாது போலும்.'

இதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிய பின்புதான் அன்றிரவு அவனுக்கு உறக்கம் வந்தது. மறுநாள் காலை ஐந்து மணிக்கு முன்பே அவன் எழுந்துவிட்டான். தலைக்கனமும் சளியுமாக உடம்பு வலிப்பது போலிருந்தது. வெந்நீரில் குளித்தால் நல்லது என்று தோன்றியதால் வசந்தா எழுந்திருந்து விட்டாளா என்று பார்க்கக் கீழ் வீட்டுக்குச் சென்றான். கீழ்வீட்டில் யாருமே எழவில்லை. எழுந்த பிறகு வசந்தாவிடம் வெந்நீருக்குச் சொல்லிக் கொள்ளலாமென்று திரும்பிய அரவிந்தன் வெளியிலிருந்து சைக்கிள் மணி ஒலியும் அதையடுத்துச் செய்தித்தாள் ஜன்னல் வழியாக வீசி எறியப்படும் ஒலியும் கேட்டு நின்றான். போய்ச் சன்னல் அருகே விழுந்திருந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். விளக்கைப் போட்டுக் கொண்டு வராந்தாவில் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். தேர்தல் செய்திகளும் அடிதடி வம்புகளும் மூலைக்கு மூலை நிரம்பியிருந்தன. செய்தித்தாளில் படித்தால் மனம் தூய்மையும் நிம்மதியும் அடைகிறவிதமான செய்தியாக ஒன்றும் தெரியவில்லை. செய்தித்தாளின் நடுப்பக்கத்தில் மனம் அதிர்ந்து கலக்கமுறும்படியான இரண்டு செய்திகளையும் அரவிந்தன் கண்டான். மீனாட்சி அச்சகத்திலிருந்து நடிகர் நடிகையர்களின் கவர்ச்சிகரமான படங்களைத் தாங்கிக் கொண்டு 'சினிமா சுரங்கம்' என்ற பத்திரிகை ஒன்று வெளிவரப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைக் கண்ணுற்றதும் அரவிந்தன் வேதனையுற்றான். 'பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் மிக உயர்ந்த நூல்களையெல்லாம் மலிவு விலையில் வெளியிட்ட இடத்திலிருந்தா இப்படி ஒரு பத்திரிகை வெளியாகப் போகிறது? மீனாட்சிசுந்தரம் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் காலமான பின் இப்படியா ஆகவேண்டும் இந்த அச்சகம்? இதற்கு எல்லாம் நான் அங்கிருப்பது இடையூறாக இருக்குமென்றுதானே என்னைப் பிரித்து வெளியேற்றியிருக்கிறார்கள்? சே! சே! எவ்வளவு கீழ்மைக் குணம் இவர்களுக்கு?' என்று எண்ணிப் புண்பட்டான். 'நான் வருத்தப்பட்டு இனி ஆவதற்கு என்ன இருக்கிறது? வருத்தப்படுவதற்குத்தான் எனக்கு உரிமை ஏது?' என்று நினைத்து அதை மறந்துவிட முயன்று கொண்டே அடுத்த பக்கத்தைப் புரட்டினான் அவன்.

அடுத்த பக்கத்தில் 'விஷக் காய்ச்சலால் கிராமத்தில் பலர் சாவு' என்ற தலைப்பின் கீழ் பிரசுரமாகியிருந்த செய்தி ஒன்றில் அவன் பார்வை பதிந்தது. மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலுள்ள ஊர் ஒன்றில் அந்தக் கொடுமைக் காய்ச்சல் பரவி ஏழை மனிதர்களைப் பலிகொண்டு தொடர்கிற செய்தி அவனை வாட்டியது. அப்போதே அந்தக் கிராமத்துக்கு ஓடிப் போய்த் தன்னாலான சிறிய உதவிகளையாவது ஏழைகளுக்குச் செய்ய வேண்டுமென்ற துடிப்பு அரவிந்தனுக்குத் தவிர்க்க முடியாமல் உண்டாயிற்று. முருகானந்தமும் வசந்தாவும் எழுந்திருந்த பின் அவர்களிடம் சொல்லிக் கொண்டு போவதென்பது நடக்காது. அவர்கள் இருவருமே அவனைப் போகவிடமாட்டார்கள். தேர்தல் முடிகிற வரை எங்கும் வெளியேற வேண்டாமென்று முருகானந்தம் எச்சரித்திருக்கிறான். எனவே விஷகாய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குத் தொண்டனாகச் சென்றுவர வேண்டுமென்ற என் விருப்பத்தை முருகானந்தம் ஒப்புக்கொள்ள மாட்டானே! என்ன செய்யலாம் என்று சிறிது பொழுது தயங்கினான் அரவிந்தன். தயக்கம் தோற்றது. அவன் மனத்தில் எப்போதும் நிரம்பியிருக்கிற எல்லையில்லாக் கருணையுணர்வும் காந்தீயமும் வெற்றி பெற்றன. தான் அங்கே போவதை அவர்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தச் செய்தியைச் சுற்றிச் சிவப்பு மையால் கோடிட்டு வைத்த பின் ஒரு பையில் இரண்டு மூன்று சட்டை வேட்டிகளை அடைத்துக் கொண்டு தன் பெட்டியிலிருந்து கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன். ஐந்தே முக்கால் மணிக்கு மதுரை பஸ் நிலையத்திலிருந்து விஷக்காய்ச்சல் பரவியிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் போகிற பஸ் ஒன்று உண்டு. அதற்குள் பஸ் நிலையத்தை அடைந்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் விரைந்தான் அவன். நேரம் போதுமான அளவு இருக்கும்போதே, பஸ் நிலையத்தை அடைந்தான். பஸ்ஸில் இடம் கிடைத்துவிட்டது. புறப்படுவதற்கு சிறிது நேரமும் இருந்தது. ஒருவேளை முருகானந்தம் செய்தித்தாளில் தான் கோடிட்டு வைத்த பகுதியைப் பார்க்காமலோ புரிந்து கொள்ளாமலோ விட்டுவிட்டால் தன்னைப் பற்றி வீண் கவலைப் படக்கூடாது என்பதற்காகச் சட்டைப் பையில் எப்போதோ வாங்கி வைத்திருந்த அஞ்சல் அட்டையில் (போஸ்ட் கார்டு) அவசரமாக விவரம் எழுதி அங்கிருந்த தபால் பெட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டான் அரவிந்தன்.

அரவிந்தன் பஸ் ஏறுவதற்கு முன் தபாலில் இட்ட கடிதம் அன்று பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு முன்பே முருகானந்தமும், வசந்தாவும் செய்தித்தாளைப் பார்த்து புரிந்து கொண்டிருந்தார்கள்.

"அடுத்த பஸ்ஸிலேயே நீங்கள் பின் தொடர்ந்து போய்த் திருப்பி அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். இல்லாவிட்டால் டிரைவர் வந்ததும் காரை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். எங்கேயோ விஷக் காய்ச்சல் வந்திருந்தால் இவருக்கென்ன வந்தது?" என்று முருகானந்தத்திடம் கூறினாள் வசந்தா.

"நடக்காது வசந்தா! இந்த மாதிரி பிறருக்கு உதவுகிற காரியங்களில் அரவிந்தன் பிடிவாதக்காரன். யார் தடுத்தாலும் கேட்க மாட்டான்" என்று முருகானந்தம் மறுத்துவிட்டான். மேலும் இந்தச் சமயத்தில் அரவிந்தன் வெளியூரில் இருப்பது நல்லதென்று தோன்றியது முருகானந்தத்திற்கு. தேர்தல் பகைகளும், வம்புகளும் உள்ளூரில் அரவிந்தனை வட்டமிடுகிற சமயத்தில் அவன் யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்றிருப்பது ஒருவகையில் நல்லதென்று நினைத்தான், முருகானந்தம். அரவிந்தனுடைய தடைகளுக்கு அஞ்சாமல் தான் தாராளமாகப் பூரணிக்குத் தேர்தல் ஆதரவு தேடும் வேலைகளில் இறங்கவும் வசதியாயிருக்கும் என்று எண்ணினான் அவன். அதனால் அதிக அக்கறை காட்டவில்லை.

தேர்தல் சுறுசுறுப்பிலும், வேலைகளின் வேகத்திலும் நாட்கள் கழிவதே தெரியவில்லை. முருகானந்தம் பம்பரமாய்ச் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். காலையில் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு அவன் வீடு திரும்பப் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். பர்மாக்காரர் போட்டி கடுமையாயிற்று. 'உண்டு இல்லை' என்று அவர் இரண்டிலொன்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அரவிந்தன் கிராமத்துக்குப் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளே பூரணியும் மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவிலிருந்து திரும்பிவிட்டார்கள். மங்களேசுவரி அம்மாளுக்கு உடல்நிலை நன்றாயில்லாததால் காசிப்பயணத்தை நிறுத்திவிட்டுக் கல்கத்தாவிலிருந்து நேரே திரும்பிவிட்டார்கள். இருவரும் மதுரை திரும்பியதும், அரவிந்தன் மீனாட்சி அச்சகத்திலிருந்து பிரிந்த செய்தி அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. பூரணிக்குத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடியாய் இருந்தது அந்தச் செய்தி. தான் கல்கத்தா புறப்படும் முன்பே அது நிகழ்ந்திருந்தும் அதைப்பற்றித் தன்னிடம் கூறாமல் மறைத்த அவன் நெஞ்சுரம் அவளை மலைப்படையச் செய்தது. தங்களை வழியனுப்புவதற்காகச் சென்னை வரும்போது இரயிலில் அரவிந்தன் களையில்லாமல் இருப்பது போல் தனக்குத் தோன்றியதை நினைத்துக் கொண்டாள் பூரணி. அவளுக்கு உடனே அரவிந்தனைச் சந்திக்க வேண்டும்போல் இருந்தது. தானே அரவிந்தன் சென்றிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் புறப்படத் தயார் ஆனாள் அவள். "வேண்டாம் அக்கா? இரண்டு மூன்று நாட்களில் அரவிந்தனே திரும்பிவிடுவான். பார்த்துக் கொண்டு வரவில்லையானால் அப்புறம் அவசியம் அவனை நான் போய்க் கூட்டி வருகிறேன்" என்று பூரணியைத் தடுத்துவிட்டான் முருகானந்தம். ஆனால் அதற்குப் பின் ஒரு வாரம் கழித்தும் அரவிந்தனைப் பற்றித் தகவலேதும் தெரியவில்லை. பூரணியின் மனம் இனம் புரியாக் கவலைகளால் வருந்தலாயிற்று.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:38 am

36



நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும்
கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து...


கிராமத்துக்குச் சென்ற அரவிந்தன் என்ன ஆனான் என்ற விபரமே தெரியாமல் பூரணி, மங்களேசுவரி அம்மாள், வசந்தா எல்லோரும் கவலைப்பட்டு மனம் தவித்துக் கொண்டிருந்த போது, முருகானந்தம் மட்டும் அதைப் பற்றிய நினைவே இல்லாதவன் போல் தேர்தலில் பூரணிக்கு ஆதரவு தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்படி அவன் அலைவதற்காக வழக்கம் போல் அன்று காலையிலும் அவசரமாக வெளியில் கிளம்பிய போது வசந்தா சீற்றத்தோடு வந்து வழி மறித்துக் கொண்டாள்.

"நீங்கள் செய்வது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? எதற்கு இப்படி வீட்டு நினைவில்லாமல் அலைந்து திரிகிறீர்கள்? அக்கா இரவிலிருந்து சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார். அறைக்குள்ளேயே அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கிராமத்துக்குப் போய் அரவிந்தன் அண்ணனை எங்கிருந்தாலும் தேடிக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டு மறுவேலை பாருங்கள். அக்கா அங்கே போகிறேன் என்றாலும் போகவிடாமல் தடுத்துவிட்டு, நீங்களும் போகாமல் இருந்தால் என்ன அர்த்தம்? வீடே களையில்லாமல் போய்விட்டது. பூரணியக்காவின் வாடிய முகத்தைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது எனக்கு. உடனே காரில் அந்தக் கிராமத்துக்குப் போய் அண்ணனைத் தேடிக் கொண்டு வாருங்கள்."

வசந்தா இப்படி விரட்டியதும் வேகமாகத் திரும்பி உள்ளே சென்று மாடிக்குப் போய் பூரணியின் அறையில் பார்த்தான் முருகானந்தம். பூரணி கண்களில் நீர் நெகிழ வாட்டத்தோடு வீற்றிருந்தாள். மங்களேசுவரி அம்மாள் அருகில் உட்கார்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சிரிப்பின்றி கலகலப்பின்றிச் சிறுவர்களும் சிறுமிகளும் வெறும் பொம்மைகள் போல் அந்த அறைக்குள் சூழ்ந்திருந்தார்கள். முருகானந்தத்தைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாள் எழுந்து அருகில் வந்தாள். "மாப்பிள்ளை, வேறு எவ்வளவு முக்கியமான வேலையிருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் தயவு செய்து அந்தக் கிராமத்துக்குப் போய் அரவிந்தனைக் கூட்டிக்கொண்டு வந்து சேருங்கள். இவள் நேற்றிலிருந்து சாப்பிட மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். 'என்னை விட்டுவிடுங்கள்! நான் திருப்பரங்குன்றம் வீட்டுக்குப் போய்விடுகிறேன்' என்கிறாள். அரவிந்தன் திரும்பி வரவில்லை என்றதும் என்னென்னவோ நினனத்துச் சிறு பிள்ளைபோல் கலங்குகிறாள். இவள் கலங்கினால் வீடே கலங்கிப் போகிறது. தயவு செய்து எனக்காக நீங்கள் உடனே புறப்படுங்கள். இவளுக்குத் தேர்தல் வேண்டாமாம்! வெற்றியும் பதவியும் வேண்டாமாம்! அரவிந்தன் நலமாக இருப்பதை அறிந்து கொண்டால் போதுமாம்."

"அக்கா இவ்வளவு குழந்தைத்தனமாக இருப்பார்கள் என நான் நினைக்கவேயில்லை. அரவிந்தன் பொதுத்தொண்டு செய்யத்தான் போயிருக்கிறான். அங்கே அவனுக்குக் கெடுதல் செய்ய யாரும் இல்லை. தானே சுகமாகத் திரும்பி வருவான்" என்று பூரணியின் செவிகளிலும் கேட்கும்படி இரைந்து மங்களேசுவரி அம்மாளுக்குப் பதில் சொன்னான் முருகானந்தம். மங்களேசுவரி அம்மாளிடம் கூறுவது போல் அவனுக்கும் சேர்த்துப் பதில் கூறிலானாள் பூரணி.

"எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது அம்மா. நான் அமைதி செய்து கொள்ள முயன்றாலும் மனம் கேட்காமல் தானாகவே சஞ்சலப்படுகிறது. அவர் சென்றிருக்கிற கிராமத்துக்கே நானும் போய் அவருடைய பொதுத்தொண்டுக்கு உதவியிருக்கலாம் அல்லவா?"

"நீ எப்படி அங்கெல்லாம் போக முடியும் பூரணி? மலேயாவில் அந்த விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாயே? இன்னும் சில நாட்களில் புறப்பட வேண்டுமே? நச்சுக்காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போய் அலைந்து ஏதாவது உடம்புக்கு இழுத்துக் கொண்டு விட்டாயானால் பிரயாணம் தடைப்பட்டு நின்று போகுமே அம்மா. நான் சொல்லுகிறபடி கேள். இன்று மாப்பிள்ளையை நம் வீட்டுக் காரில் அனுப்பி அரவிந்தனை அழைத்து வரச் சொல்கிறேன். அவர் மாப்பிள்ளையோடு திரும்பி வரவில்லையானால் அப்புறம் நீயே அங்கு போகலாம்" என்று பூரணியை சமாதானப்படுத்திவிட்டு முருகானந்தத்தைத் துரிதப்படுத்தினாள் மங்களேசுவரி அம்மாள். முருகானந்தம் தேர்தல் வேலைகளுக்காக அன்று சில முக்கியத் தொகுதிகளில் சுற்றுவதாக இருந்தான். அதைக் கைவிட்டு அரவிந்தனை அழைத்து வருவதற்காகக் காரில் புறப்பட்டான்.

சில நாட்கள் கல்கத்தாவிலிருந்து திரும்பியது முதற்கொண்டு பூரணியின் மனத்தில் சொல்லமுடியாத ஊமைத் துயரங்கள் தோன்றித் தவிப்படையச் செய்தன. மழை வருவதற்கு முன் மண்ணிலிருந்து கிளம்பும் ஈரமும் வெப்பமும் இணைந்த புழுக்கத்தைப்போல் தாங்க முடியாத விதத்தில் பெரிதாக எதையோ தாங்கிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அருகில் அணுகிக் கொண்டிருக்கிறதோ என அவளுக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று. நல்ல இருட்டில் எதிரிகள் நிறைந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் ஒவ்வொரு கணமும் யாரோ ஓங்கி அறைய வந்து கொண்டிருப்பது போன்ற பொய்யான ஒரு தோற்றம் உண்டாகுமே, அப்படி ஒரு நடுக்கம் அவளுள் மெய்யாய் வருவது போலவும், வராதது போலவும் தோன்றித் தோன்றி ஊமைத் துன்பமாய் உறுத்திக் கொண்டிருந்தது. இருட்டறையில் தனிமையாய்த் திரிய நேர்ந்த குழந்தைபோல் அவளுக்குத் தனியாக இருக்கும் போதெல்லாம் பெரிதாய் அழவேண்டும் போலிருந்தது. மனத்துக்குள் மௌனமாக அப்படி அழுதழுது ஓர் இனம் புரியாத பேரவல உணர்வு, புறத்திலும் அழத்தூண்டியது. மதுரை திரும்பியதும் ஒவ்வொன்றாய் உற்சாகக் குறைவான அனுபவங்கள் அவளுக்கு ஏற்பட்டதுதான் அதற்குக் காரணமா?

கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பியதும் அரவிந்தன், அச்சகத்திலிருந்து சூழ்ச்சியால் நீக்கப்பட்ட விவரம் அவளுக்குத் தெரிந்தது. தனக்குத் தேர்தலில் ஆடம்பரமான ஆதரவு தேடாமல் இருக்கும் போதே எதிர்ப்பாளர்கள் கொடுமையான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அரவிந்தன் மிகப் பொல்லாததும் பயங்கரமாகத் தொற்றக் கூடியதுமான நச்சுக் காய்ச்சல் பரவியிருக்கும் கிராமத்துக்குத் தொண்டு செய்ய ஓடியிருப்பதும் திரும்பிய பின்பே அவளுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் நினைக்க நினைக்க 'பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' மனிதர்களிடம் சிறுமை சிறிது சிறிதாக விளங்கலாயிற்று அவளுக்கு. அவளும் அவளுடைய அரவிந்தனும் மனிதர்களின் கீழ்மையிலிருந்து விலகி உயரத்தில் ஏறிச்செல்ல இணையாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் உலகத்தின் கீழ்மைகள் இருவரையும் பாதிக்கின்றன. நிலத்துக்கு எட்டாதவனாய் எங்கள் நினைவுகளை ஏன் இப்படிக் குறிஞ்சியாகப் பூக்கச் செய்கிறாய் இறைவா! கமலாவையும் காமுவையும் போல் வாழும் ஆசையையாவது எனக்குத் தந்திருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவள் உள்ளம். 'அரவிந்தன் அருகில் இருக்கும் போது மறந்துவிடுகிற உடம்பின் நினைவு அவன் அருகில் இல்லாதபோது ஏன் இந்த உள்ளத்தை இப்படிப் பிழிகிறது?' என்று தன் உள்ளமே தானறியாத முரண்பாடுகள் நிறைந்ததாயிருப்பதை எண்ணி வாடினாள் அவள். அவளுக்கே புரியாத மன வேதனைகள் அவளை நிம்மதி இழக்கச் செய்திருந்தன. மௌனமாகத் தனியே இருந்து நெடுநேரம் நன்றாக அழவேண்டும் போல் வருத்தமாயிருந்தது அவளுக்கு.

அன்று இரவு முருகானந்தம் அரவிந்தனோடு கிராமத்திலிருந்து காரில் திரும்பி வீடு வந்தபோது பதினோரு மணிக்கு மேலிருக்கும். வாயிலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு, மாடியில் உறங்காமல் விழித்திருந்த பூரணிதான் ஓடிவந்து ஆவலோடு கதவைத் திறந்தாள். அங்கே கண்ட காட்சி அவளுடைய ஆவலை அவலமாக மாற்றிற்று. அரவிந்தன் அரவிந்தனாகத் திரும்பி வரவில்லை. உலகத்துத் துன்பங்களைப் போக்கும் முயற்சியில் அந்தத் துன்பங்களை எல்லாம் தன் நெஞ்சில் நினைவுகளாகச் சுமந்து கொண்ட புத்தனைப் போல் எந்த விஷக்காய்ச்சலிலிருந்து கிராமத்து மக்களை விடுவிப்பதற்காகத் தொண்டு செய்ய அவன் சென்றிருந்தானோ, அதே காய்ச்சலை உடல் நிறைய ஏற்றுக் கொண்டு வந்திருந்தான். எலும்பும் தோலுமாய் இளைத்துக் கறுத்துப் போயிருந்தது அரவிந்தனின் அழகு மேனி. சிரித்துக் கொண்டே இருப்பது போல் ஒரு கவர்ச்சிகரமான சாயல் அமைந்த அவனுடைய கண்கள் சோர்ந்து பள்ளமானவை போல் ஆகியிருந்தன. கார் டிரைவரும் முருகானந்தமும் கைத்தாங்கலாக அவனை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார்கள். தளர்ந்து தள்ளாடி நடந்தான் அரவிந்தன்.

"அக்கா உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் கிராமத்துக்குப் போனது நல்லதாயிற்று. வேளைக்குச் சோறு தண்ணீரின்றிக் கிராமத்து வெய்யிலில் இவன் பாட்டுக்கு அலைந்து திரிந்திருக்கிறான். தொண்டு தொண்டு என்று சுற்றி கடைசியில் தன் உடம்புக்கே காய்ச்சலை இழுத்துவிட்டுக் கொண்டுவிட்டான். நமக்காவது ஒரு வரி கடிதம் எழுதிப் போடக்கூடாதோ? அதையும் செய்யாமல் எவனோ ஒரு குடியானவனுடைய குடிசையில் விழுந்து கிடக்கிறான். அந்தக் கிராமத்தில் டாக்டர் கூட இல்லை. பத்து மைலுக்கு அப்பால் பக்கத்துக் கிராமத்திலிருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஒரு எல்.எம்.பி. வைத்தியர் வந்து போகிறார். அவன் அவரிடமும் சரியாக மருந்து சாப்பிடவில்லையாம். அவர் இவனைத் தேடிக் கொண்டு வந்தபோதெல்லாம், 'எனக்கு ஒன்றுமில்லை. நான் பிழைத்துக் கொள்வேன். கிராமத்து மக்களை இந்தப் பாழும் தொற்று நோயிலிருந்து காப்பாற்றுங்கள் போதும்' என்று கூறி அவரை அனுப்பிவிட்டானாம். நூற்று மூன்று டிகிரி காய்ச்சலோடு அந்தக் குடிசையின் ஈரம் கசியும் மண் தரையில் முள்ளாய்க் குத்தும் வைக்கோல் மெத்தையின் மேல் அநாதைபோல் விழுந்து கிடந்த இவனைக் கண்டபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது அக்கா. மறுபேச்சு பேசாமல் காரில் தூக்கிப் போட்டு இங்கே கொண்டு வந்தேன்" என்று துயர் கனிந்து தளர்ந்த குரலில் பூரணியிடம் கூறினான் முருகானந்தம்.

அந்தக் கோலத்தில் அரவிந்தனைக் கண்டபோது அப்படியே 'கோ'வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட வேண்டும்போல் துக்கம் பொங்கிற்று பூரணிக்கு. அரவிந்தனை மாடியறையில் கிடத்தினார்கள். பூரணி அவன் தலைப்பக்கமாய்ப் போய் நின்றாள். என்ன விசாரிப்பது என்று அப்போது இருந்த உணர்ச்சிமயமான நேரத்தில் அவளுக்குச் சொற்களே தோன்றவில்லை. கண்களில் நீர் நெகிழ அரவிந்தனை இமையாமல் பார்த்தாள். கண்ணீரில் அவன் உருவம் மங்கிக் கலைகிற வரை பார்த்துக் கொண்டே நின்றாள். அரவிந்தனுடைய கண்களிலும் நீர் திரண்டது. கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதுபோல் தளர்ந்து உள்ளொடுங்கின குரலில், "உன்னுடைய கடிதம் கிடைத்தது. சண்பகப்பூ மணத்தையும் சேர்ந்தே நுகர்ந்தேன். இலங்கை வானொலியில் உன் பேச்சையும் கேட்டேன்" என்றான் அரவிந்தன்.

"அதெல்லாம் இருக்கட்டும்! என் பெருமையை யார் கேட்டார்கள் இப்போது? என்னால்தானே இப்போது இத்தனை காலமாக உரிமையோடு வேலை பார்த்த அச்சகம் உங்களை வெளியேற்றி அனுப்பியிருக்கிறது? என்னால்தானே தேர்தலில் கீழான துன்ப அனுபவங்களை அடைந்தீர்கள்? என்னால் என்ன நன்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது? உங்களால் எனக்கு உலகம் புகழுகிற பெருமை கிடைத்திருக்கிறது. என்னால் உங்களுக்கு என்ன கிடைத்தது? என்ன கிடைக்கப் போகிறது?"

பூரணி தன் வாழ்விலேயே அரவிந்தனுக்கு முன் முதல் முறையாகக் கண்ணீர் சிந்தி அழுதாள். சாதாரணப் பெண்ணாகச் சாதாரண ஆசைகளுடன் அப்போதுதான் மாறிப் பிறந்தவள் போல் அழுதாள்.

"இப்படி அசட்டுத்தனமாக அழக்கூடாது பூரணி! நீ அழுவது எனக்குப் பிடிக்காது. இப்போது எதற்காக நீ இப்படி அழுகிறாய்? யாருக்கு என்ன வந்துவிட்டது?"

"நீங்கள் இந்த நிலையில் அரை உடம்பாய் வந்திருப்பதைப் பார்த்து அழாமல் என்ன செய்வது? அந்தக் கிராமத்துக்குத் தொண்டு செய்ய நீங்கள் போகவில்லை என்று யார் குறைபட்டுக் கொண்டார்கள்? எப்படி இருந்தவர் எப்படி இளைத்துப் போய்விட்டீர்கள்?"




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:38 am


"'உடம்பு ஒரு பெரிய புண்' என்று நீயே உன்னுடைய இலங்கை வானொலிப் பேச்சில் பேசியிருக்கிறாயே. அரை உடம்பானாலும் பாதிப்புண் ஆறிவிட்டதென்று தானே பொருள்?" என்று அந்தத் தளர்ந்த நிலையிலும் குறும்பாகச் சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் அரவிந்தன். வந்ததும் வராததுமாக முருகானந்தம் டாக்டர் வீட்டுக்கு ஓடியிருந்தான். பேச்சுக்குரல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மங்களேசுவரி அம்மாளும், வசந்தாவும் எழுந்திருந்து மாடிக்கு விரைந்து வந்தார்கள். பூரணி, "அம்மா! இவரைப் பார்த்தீங்களா? எப்படி ஆகிவிட்டார்?" என்று துயரம் பொங்க கூறினாள். அவள் குரல் நைந்து அழுவது போலிருந்தது. அரவிந்தன் படுக்கையில் கிடந்த நிலையைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாளும் வசந்தாவும் அதிர்ச்சியடைந்தார்கள். வசந்தா ஓடிப் போய் 'தர்மாமீட்டரை' எடுத்து வந்தாள். காய்ச்சல் நூற்றிரெண்டு டிகிரிக்கு மேல் இருந்தது. முருகானந்தம் டாக்டரோடு வந்தான். டாக்டர் பார்த்து முடிந்ததும் காய்ச்சல் தணிவதற்கு 'குளோரோ மைஸின்' மாத்திரை கொடுத்துக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டுப் போனார். போகும்போது முருகானந்தத்தை தனியே வாயில் வரை அழைத்துச் சென்று அவனிடம் மட்டும் 'டைபாய்டு' மாதிரி தோன்றுகிறது. ஐந்தாறு நாள் சரியான கவனிப்பில்லாமல் வேறு இருந்திருக்கிறார். எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனாலும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைதான். பத்து பதினோரு நாளில் விட்டாலும் விடும். நாற்பது நாள் வரை வதைத்தாலும் வதைக்கும். சனியன் பிடித்த காய்ச்சல் இது. மறுபடியும் நாளைக்கு வந்து பார்க்கிறேன். பெண்களிடம் இதையெல்லாம் இப்போது ஒன்றும் சொல்லிப் பயமுறுத்த வேண்டாம்" என்று கூறிவிட்டுப் போனார் டாக்டர். அதை அறிந்ததும் முருகானந்தத்தின் உள்ளத்தில் கவலை சூழ்ந்தது. எந்த நிலையிலும் மனோதிடத்தை இழக்காத அவனுடைய இறுகிய உள்ளமும் அப்போது அரவிந்தனுக்காக உருகி நெகிழ்ந்தது. கண்கள் கலங்கினான் அவன். நண்பனை இவ்வளவு பெரிய நலிவோடு காண்பது புது அனுபவம் அவனுக்கு. "நீங்கள் இப்படி அசட்டுத் தனம் பண்ணியிருக்கக்கூடாது அரவிந்தன். விஷக் காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போனதே தப்பு. போனதுதான் போனீர்கள், மற்றவர்களுக்குத் தொண்டு செய்ததோடு உங்கள் உடம்பையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாமோ? எப்போது உங்களுக்குக் காய்ச்சல் வந்துவிட்டதோ, உடனே புறப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டும். எந்த விதமாவது ஆகட்டும் என்று அங்கே இருந்தால் எப்படி?" என்று மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனை கண்டித்துக் கடிந்து கொண்டார்.

அன்றிரவு ஒருவருக்கும் அந்த வீட்டில் உறக்கம் இல்லை. மறுநாள் காலையில் அரவிந்தனுக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. இரவு அவன் மட்டும் நன்கு அயர்ந்து உறங்கியிருந்தான். ஆனால் மாலையில் மறுபடியும் காய்ச்சல் நூற்றிரண்டு டிகிரிக்கு ஏறிவிட்டது. டாக்டர் வந்து போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் மறுபடியும் உச்ச நிலைக்கு ஏறிக் கொள்வதுமாக ஒன்றும் உறுதி சொல்ல முடியாமல் இருந்தது. அந்த வீட்டில் ஒருவர் மனத்திலும் நிம்மதி இல்லை. ஒருவர் முகத்திலும் ஒளி இல்லை. அரவிந்தனுடைய காய்ச்சல் இறங்குகிற நேரத்தில் அவர்கள் கவலையும் சிறிது இறங்கியது. மாலையில் 'டெம்பரேச்சர்' ஏறுகிற போது அவர்கள் கவலையும் ஏறியது. பூரணி அரவிந்தனின் கட்டிலருகிலேயே அமர்ந்து பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் நீரும் மனத்தில் வருத்தமும் நீங்கிய நேரம் சிறிதும் இல்லை.

பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டுவிட்டாள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதைப் பற்றி யாருமே நினைக்கவில்லை. முருகானந்தம் கூடத் தேர்தல் வேலைகளாக அலைவதை நிறுத்திவிட்டான். அரவிந்தன் உடல்நிலை தேறி எழுந்தால் போதும் என்ற ஒன்றுதான் அப்போது அவனுடைய கவலையாயிருந்தது. ஏற்கெனவே தன்னால் தூண்டிவிடப் பெற்று அந்தந்த பகுதியில் தேர்தலுக்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை மட்டும் முருகானந்தம் தடுக்கவில்லை. தானாக நடப்பதைத் தடுப்பானேன் என்று வாளாவிருந்தான். அரவிந்தன் உடல் நலம் பெற வேண்டும் என்று திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலிலும், மதுரை மீனாட்சி கோயிலிலும் பழைய சொக்கநாதர் கோயிலிலும் நாள் தவறாமல் பிரார்த்தனைகளும் அர்ச்சனைகளும் நடத்திக் கொண்டிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். சின்ன டாக்டர், பெரிய டாக்டர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காய்ச்சல் தணிய என்னென்ன விதமான உயர்ந்த வைத்திய வசதிகள் எல்லாம் உண்டோ அவ்வளவும் அரவிந்தனுக்குச் செய்யப் பெற்றன. ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் தணிந்து போய்விட்டது போல் டெம்பரேச்சர் இறங்கும். மாலை மூன்று மணிக்கு மேல் மறுபடியும் பயப்படத்தக்க அளவு ஏறிவிடும். பூரணி அவன் தலைமாட்டிலேயே அமர்ந்து அழுவது நாள் தவறாத நிகழ்ச்சியாகி விட்டது. ஜன்னியில் பிதற்றும் போதெல்லாம் அவன் தன் பெயரைச் சொல்வதைக் கேட்டு அவளுக்கு மெய்சிலிர்க்கும்.

அரவிந்தன் கிழிந்த நாராகத் துவண்டு படுக்கையில் கிடக்கும் இளைத்த நிலையைக் காணக்காண நெக்குருகி நெகிழ்ந்து துடித்தது அவள் உள்ளம். எந்தச் சிரிப்பையும் முகத்தையும் நினைவு வைத்துக் கொண்டால் உலகம் முழுவதும் சுற்றி வாகை சூட முடியும் என்று அவள் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தாளோ அந்த முகத்தில் ஒளியில்லை. நகையில்லை. களையில்லை. காளைபோல் பீடுநடை நடந்தவன் கட்டிலில் துவண்டு கிடந்தான். பொன் போலும் மேனி எலும்பும் தோலும் தெரியப் பொலிவிழந்து காட்சியளித்தது. பகலில் அரவிந்தன் காய்ச்சல் குறைந்து தன் நினைவோடு இருக்கும் போது நா தழுதழுக்க கண்களில் நீரும் நெஞ்சில் உணர்வும் மல்கிக் கரைந்த குரலில், "இப்படி ஆகிவிட்டீர்களே?" என்று பூரணி கேட்கும்போது மெல்லச் சிரிக்க முயன்று கொண்டே, "நீ எதற்காக அழுகிறாய்? அழாதே பூரணி! தேறி எழுந்திருந்து மறுபடியும் பழைய மாதிரி ஆகிவிடுவேன். உன்னோடு மலேயா, பர்மா எல்லா இடத்துக்கும் நானும் இனிமேல் கூட வரலாம். அச்சகத்தையும் விட்டாயிற்று. எனக்கு முழுநேரமும் ஓய்வுதான்" என்று பதில் கூறுவான் அரவிந்தன். அப்போது அவன் கண்கள் தனி ஒளியுடனே மின்னும்.

"நீ பார்த்துக் கொண்டே இரு பூரணி! டாக்டர் கூடச் சொல்லியிருக்கிறார். இம்மாதிரிக் காய்ச்சல் வந்து போகிறபோது உடம்பிலுள்ள கெட்ட இரத்தமெல்லாம் போய் மறுபடி வளர்கிற போது மிக நன்றாக ஆகிவிடுவேனாம். நீதான் 'உடம்பு பெரிய புண்' என்று பேசியிருக்கிறாயே? எனக்கு அந்தப் புண் ஆறிக் கொண்டிருக்கிறது. தலைக்குத் தண்ணீர் வீட்டுக் கொண்டு அடுத்த திங்கள்கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேனா, இல்லையா என்று பார். மலையேறும் போது பின் தங்கினால் உனக்குக் கோபம் வந்துவிடுமே? நீதான் உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம், நாம் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்பாயே?"

தன் கட்டிலருகில் உட்கார்ந்து வாடிய முகத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு கண்கலங்கித் தோற்றமளிக்கும் பூரணிக்குத் தைரியமூட்டி உற்சாகப்படுத்துவதற்காக அடிக்கடி அவ்வாறெல்லாம் சிரித்தபடி சொல்வான் அரவிந்தன். பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டதைக் கூறியபோது அவன் அவளை கோபித்துக் கொண்டான்.

"எனக்காக நீ உன் பயணத்தை ஏன் நிறுத்த வேண்டும்? இங்கே மனிதர்களே இல்லையா, என்ன? வசந்தாவும் முருகானந்தமும் என்னைப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? நீ உன் திட்டப்படி மங்களேசுவரி அம்மாளுடன் புறப்பட்டுப் போயிருக்கலாமே?" என்று அவன் கோபித்தபோது பூரணி அவனைக் கடிந்து கொண்டாள்.

"நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. எனக்கு ஒரு இடத்துக்கும் போக வேண்டாம். இப்போது நீங்கள் பிழைத்தெழுந்தால் போதும். உங்களை விட எனக்கு எதுவும் பெரிதில்லை" என்று இதைக் கூறும்போது அவளுடைய அழகிய இதழ்கள் உணர்ச்சிவசப்படத் துடித்தன.

நான்கு வாரங்கள் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் ஏறிவிடுவதுமாக அலைக்கழித்தன. நாற்பதுநாள் அந்த நிலையில் இருக்குமென்று டாக்டர் சொல்லியிருந்தார். இதற்கிடையில் தேர்தல் நாள் வந்து சேர்ந்தது. அவர்கள் யாருமே அதை ஆவலோடு எதிர்பார்க்கவும் இல்லை. வரவேற்கவுமில்லை. தற்செயலாக அரவிந்தன் அன்று சிறிது நலமடைந்து தெம்பாகவே இருந்தான். நண்பர்கள் வந்து முருகானந்தத்தை வற்புறுத்தவே அவன் அன்று காலையில் ஓட்டுச் சாவடிக்குப் போய்ச் சுற்றினான். முருகானந்தம் எதிர்பார்த்த ஆதரவுகள் கூடியிருந்ததே ஒழியக் குறையவில்லை. ஊரிலுள்ள கார்களும் குதிரை வண்டிகளும் பர்மாக்காரருக்காக அலைந்து வாக்காளர்களைத் தேடிக் கொண்டு வந்து ஓட்டுச் சாவடிகளில் சேர்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அதில் இரகசியம் என்னவென்றால் சில இடங்களில் பர்மாக்காரருடைய காரில் முருகானந்தத்தின் மனிதர்களே சவாரி செய்து ஓட்டுச் சாவடிக்குப் போய் பூரணிக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். புது மண்டபத்து மனிதருக்குப் பர்மாக்காரர் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்க்கும் போது வெற்றி அவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இருப்பதாகத் தெரியவில்லை. ஊரிலும் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள். முருகானந்தம் மட்டும் நம்பிக்கை இழக்காமல் உற்சாகமாகவே இருந்தான். பெரும் போர் நிகழ்ந்து ஓய்ந்த களம் போல தேர்தல் நாள் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும் ஆவல் மட்டும் நகர் முழுவதும் தேங்கி நின்றது. தேர்தலன்று இரவு முருகானந்தம் வீடு திரும்பியபோது அரவிந்தனிடம் தன் நம்பிக்கையைத் தெரிவித்தான். அதைக்கேட்டு அரவிந்தன் நகைத்தான். "பார்க்கலாம் நீ சொல்கிறபடி பூரணிக்கு வெற்றி கிடைப்பதாயிருந்தால் அது மாபெரும் இலட்சிய வெற்றியாக இருக்கும்" என்றான். அரவிந்தனுடைய உடல்நிலை அன்றும் மறுநாளும் காய்ச்சல் ஏறாமல் சுமாராகவே இருந்தது.

மறுநாள் பூரணியை அருகில் உட்காரச் செய்து பிரயாண அனுபவங்களைக் கூறச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தான் அவன். 'டேப் ரிகார்டர்' போடச் சொல்லி அவளுடைய பேச்சுக்களை மீண்டும் அவள் அருகில் இருக்கும் போதே கேட்டு மகிழ்ந்து பாராட்டினான்.

"பொய்படாக் காதல் ததும்பி மேற்பொங்கிற்று என்று முடியுமே. அந்தப் பாட்டை ஒரு தடவை நீயே நேரில் பாடு. உன்னை எதிரில் வைத்துப் பார்த்துக் கொண்டே அந்தப் பாட்டைச் செவிகள் குளிரக் கேட்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது" என்று குழந்தையைப் போல் வேண்டினான். அவள் அவன் விருப்பப்படியே அதைப் பாடினாள். பாடி முடித்துவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தபோது அங்கே கண்களில் நீர் தளும்பி நிற்பதைக் கண்டாள்.

"ஏன் அழுகிறீர்கள் இப்படி? சிறு குழந்தையல்லவே நீங்கள்?"

"அழவில்லை; பூரணி! ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறேன். உன் பேச்சும், பாட்டும் என்னைக் குழந்தையாக்கி விடுகின்றன."

"உங்களுக்கு வேறு வேலையென்ன? எதையாவது சொல்லிக் கொண்டிருங்கள்!"

அரவிந்தன் இமையாமல் அவள் முகத்தைப் பார்த்தான். சிரித்தான். பூரணி தலைகுனிந்தாள். "இந்தா! இவைகளைப் படித்துப் பார். என் மனத்திலே உன் பேச்சுக்கள் உண்டாக்கிய மணம் எத்தகையதென்று நீயே புரிந்து கொள்வாய்" என்று தன் குறிப்பு நோட்டுப் புத்தகங்களை எடுத்து அவள் கையில் கொடுத்தான். அவள் நாணத்தோடு வாங்கிக் கொண்டாள். அரவிந்தனின் முகம் ஒருகணம் அற்புதமாக மலர்ந்தது; நகைத்தது. அடுத்த கணம் அவன் பெருமூச்சு விட்டான். கண்களிலும் முகத்திலும் ஏக்கம் நிழலிட்டது. வேதனையோடு கட்டிலில் புரண்டு படுத்தான் அவன்.

இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் அவனுடைய காய்ச்சல் அன்று மாலை உச்சநிலைக்குப் போய்விட்டது. டாக்டர், வந்து பார்த்து ஏதோ மருந்தைக் கொடுத்து விட்டுப் போனார். அன்று மாலை பூரணியின் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணி முடிவு சொல்ல வேண்டிய நாளாததால் முருகானந்தம், வசந்தாவையும் வீட்டில் இருந்த செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் முதலியவர்களையும் அழைத்துக் கொண்டு ஓட்டுகள் எண்ணப்படும் இடமாகிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குப் போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருந்தாள்.

வீட்டில் பூரணி மட்டுமே அரவிந்தன் அருகிலிருந்தாள். காய்ச்சல் கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நூற்று மூன்று டிகிரிக்கு மேலே போய் ஜன்னி கண்டு பிதற்றுகிற நிலையில் சுயப்பிரக்ஞையின்றி இருந்தான் அரவிந்தன். அவளுக்கு மிகவும் பயமாயிருந்தது. அப்போது மாடிக்குக் கீழேயிருந்து மங்களேசுவரியம்மாள், "பூரணி நீ தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாயாம். ஐயாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் உனக்கு வெற்றியாம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே படியேறி வரும் ஒலி கேட்டது. அந்த அம்மாள் மலர்ந்த முகத்தோடு மாடியறைக்குள் வந்தாள்.

"அம்மா! தேர்தல் எக்கேடும் கெட்டுப் போகட்டும். டாக்டருக்கு உடனே டெலிபோன் செய்யுங்கள். இங்கே இவருக்கு ஜன்னி கண்டுவிட்டது. பேச்சுமூச்சு இல்லை" என்று வெடித்துப் பொங்கிவரும் அழுகைக்கிடையே அலறினாள் பூரணி.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:39 am

37



சொல்லரிய பல துறையும்
துயர பெரிய தமிழ் நாட்டில்
மெல்ல மெல்ல நலம்காண
மேலெழுந்தமிழ்ச் செல்வன்
செல்லரித்த பழமையெல்லாம்
சீர்திருத்த முன் வந்தோன்
புல்லரித்து மனம் வாடப்
போகின்றான் போகின்றான்


மதுரை மாவட்ட அதிகாரியின் அலுவலகத்தில் தேர்தல் முடிவு தெரிவிக்கப்பட்ட போது, மாலை மங்கி, இருள் சூழும் நேரம் ஆகியிருந்தது. வானத்தில் முழு நிலவு பால் வண்ணமாய்த் தன் கதிர் பரப்பத் தொடங்கியிருந்தது. அன்று பௌர்ணமி நாள். நல் முடிவைக் கேட்ட மகிழ்ச்சியோடு வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட அலுவலகத்து வாயிலுக்கு வந்து நின்ற முருகானந்தம் அங்கு கூடியிருந்தவர்கள் 'பூரணி தேவி வாழ்க!' என்று விண்ணதிர வாழ்த்தொலி முழங்கியதைக் கேட்டுக் களித்தான். கூடியிருந்த முகங்களிலெல்லாம் நியாயம் வென்றதென்ற பெருமிதப் புன்னகை நிலவியது. கைகளிலெல்லாம் வெற்றி பெற்ற பூரணிக்கு அணிவிக்கக் கொணர்ந்த மாலைகள் மலர்ந்தன. பூரணி அங்கு வரவில்லை என்றதும் அவள் வெற்றியை எதிர்பார்த்துப் பாராட்ட வந்தவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. "வசந்தா! நீ காரில் புறப்படு. முன்னால் போய் நல்ல செய்தியை அக்காவுக்கும் அரவிந்தனுக்கும் அம்மாவுக்கும் சொல். இவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதைப் பாராட்டி அக்காவுக்கு மாலை அணிவிக்க வந்திருக்கிறார்கள். நான் எல்லோரையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். அக்காவை தயாராக இருக்கச் சொல். இன்றிரவு எல்லோருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிடு. அரவிந்தனுக்குக் கூட காலையில் நாம் வரும்போது காய்ச்சல் குறைந்து தெம்பாக இருந்தது. மாடியறையிலிருந்து நடத்தி வந்து கூடத்தில் அரவிந்தனை உட்காரச் சொல். பின்னாலேயே நாங்களும் வந்து விடுகிறோம்" என்று கூறி வசந்தாவையும் சிறுவர்களையும் முன்னால் வீட்டுக்கு அனுப்பினான் முருகானந்தம். வந்தவர்கள் யாவரும் ஆர்வத்தோடு முருகானந்தத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வார்டிலிருந்தும் மாலைகளோடு மனிதர்கள் வந்திருந்தார்கள். ஒரு பெரியவர், "ஆச்சரியப்பட வேண்டிய வெற்றியப்பா இது. வெளிப்பகட்டு இல்லாமல், விளம்பரம் இல்லாமல் மனிதர்களின் நம்பிக்கையில் பெற்ற வெற்றி. சத்தியத்துக்கு கிடைத்த வெற்றி. இதை நன்றாகக் கொண்டாட வேண்டும். பால் போல் நிலா காய்கிறது. இரட்டை குதிரைச் சாரட்டில் புஷ்பாலங்காரம் செய்து நான்கு மாசி வீதிகளிலும் அந்தப் பெண்ணை ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டும். பாண்டு வாத்தியம், இரட்டை மேளம், வாண வேடிக்கை எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்" என்று தணியாத ஆசையோடு முருகானந்தத்துக்கு அருகில் வந்து கூறினார். யாருடைய அன்பையும் புறக்கணிக்க முடியாத நிலையில் இருந்தான் முருகானந்தம். பூரணிக்கோ அரவிந்தனுக்கோ இந்த ஏற்பாடுகள் பிடிக்காதவையாக இருக்குமென்று அவன் உணர்ந்திருந்தாலும் மக்களின் அன்பு வெள்ளம் கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. பூரணியின் வெற்றியே அதற்காக உழைத்துப் பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சொந்த வெற்றியாகத் தோன்றியது. அதனால் அடக்க முடியாத கோலாகலப் பெருக்கில் என்னென்னவோ ஏற்பாடுகள் செய்தார்கள் அவர்கள். அவர்களை எந்த உற்சாகத்திலிருந்தும் விலக்காமல் தானும் அவர்களோடு ஒருவனாகக் கலந்து கொண்டு விடுவதைத் தவிர முருகானந்தத்தால் வேறெதுவும் அப்போது செய்ய முடியவில்லை. நகர மண்டபத்துக்கருகில் அம்மன் சந்நிதியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுத் தானப்ப முதலித் தெருவுக்குப் போய் அங்கே பூரணியை அழைத்துக் கொண்டு நான்கு மாசி வீதிகளிலும் சுற்றுவது என்று ஏற்பாடு ஆயிற்று. ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன.

திருமண ஊர்வலங்களுக்கு வழக்கமாகப் போகும் இரட்டை வெண்புரவிச் சாரட்டு மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்று அம்மன் சந்நிதி வாயிலில் அழகாய் நின்றது. பாண்டு வாத்தியக் குழுவினரின் உற்சாக முழக்கமும் இரட்டை மேளமும் அற்புதமாய் ஒலித்தன. திருவிழாக் கூட்டம் போல் மக்கள் வெள்ளம் கூடி விட்டது. முருகானந்தம் கையில் ஒரு பெரிய தும்பிக்கை ரோஜா மாலையோடு ஊர்வலத்தின் முன் பகுதியில் நின்றான். அருகில் வேறு பலரும் மாலைகளோடு நின்றார்கள். பூரணியை வாழ்த்தியும், தேர்தல் வெற்றியைப் பாராட்டியும் வாழ்த்தொலிகள் ஒலித்தன. ஊர்வலம் ஒலிவெள்ளமாய் எழில் வெள்ளமாய் மெல்ல மெல்ல நகர்ந்தது. தெற்குக் கோபுர வாயில் வழியாகச் சுற்றி மேலக் கோபுரத் தெருவில் புகுந்து தானப்ப முதலித் தெருவில் திரும்பியது.

அழகாக எடுப்பாக நீண்டு அகன்ற அலங்காரச் சாரட்டை இழுத்துக் கொண்டு கம்பீரமான வெண்புரவிகள் சென்றன. வானத்தில் வாணவேடிக்கை ஒளிக்கோலங்கள் பரப்பியது. மகிழ்ச்சி என்ற பேருணர்வு ஒளி, ஒலி வடிவமாகவே மாறிவிட்டதுபோல் பாண்டு வாத்தியக்குழு, மனமும் நடக்கும் கால்களும் குதூகலத் துள்ளல் பெறத்தக்க அற்புதமானதொரு பண்ணை முழக்கியது. நாயனக்காரர்களும் இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். கூட்டமெங்கும் பூக்களின் மணம், செவிகள் எல்லாம் இசைகளின் ஒலி, வீதியின் இருபுறத்து வீடுகளிலும் ஊர்வலத்தைக் காண முந்தும் மலர்ந்த முகங்கள். மங்களேசுவரி அம்மாளின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது ஊர்வலம். வீட்டு வாயிலை அடைவதற்குச் சிறிது தொலைவே இருந்தது. இதோ வீட்டை அணுகிவிட்டார்கள். ஐயோ! அந்த மகிழ்ச்சியினிடையே இதென்ன குரல்? "நிறுத்துங்கள் நிறுத்துங்கள்" என்று தலைவிரி கோலமாக அழுது கொண்டே ஓடி வந்தாள் வசந்தா. முருகானந்தத்தின் கையிலிருந்த மாலை நழுவியது. மனமும் உடம்பும் நடுங்கின. பாண்டு மேளம், வாழ்த்தொலிகள் எல்லாம் திடீரென்று வீதியே ஊமையாகி விட்டதுபோல் ஒலியவிந்து நின்றன. ஒரே ஒரு விநாடியில் எல்லோரும் எல்லாமும் இயக்கமற்றுப் பொம்மைகளாய் பொலிவிழந்தவர்களாய் அப்படியே கட்டுண்டு நகராமல் நின்றுவிட்டார்கள். முருகானந்தம் அலறிக் கொண்டு வீட்டுக்கு ஓடினான். டாக்டர் களையற்ற முகத்துடன் தலைகுனிந்து வெளியேறிக் கொண்டிருந்தார். கீழே கூடத்தில் செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் ஆகியோர் இரைந்து கதறியழுது கொண்டிருந்தார்கள். மாடியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் உரத்த குரலில் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல் அலறி அழுது கொண்டிருந்தார்கள். வானமும் பூமியும் மற்றெல்லாப் பூதங்களும் இடிந்து சிதைந்து தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது முருகானந்தத்துக்கு. மாடியறைக்குப் போய்ப் பார்த்ததும், 'அரவிந்தா' என்று அலறிப் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு குமுறினான் முருகானந்தம். பூரணி வேரற்ற மரம்போல் தரையில் கிடந்து கதறிக் கொண்டிருந்தாள்.

அந்த அறையில் கட்டிலில் அரவிந்தன் தெய்வமாகியிருந்தான். கண்ணால் பார்த்து, வாயால் பேசி, காலால் நடந்து, மண்ணில் உடம்போடு வாழும் சின்னப் பொய் வாழ்விலிருந்து விடுபட்டுப் போயிருந்தது அந்த அன்புப் பெருமகனின் நல்லுயிர். ஊராரின் துன்பங்களுக்கெல்லாம் விடிவு தேடிய நல்லவன் உடம்பாகிய துன்பத்திலிருந்து விடுதலையடைந்திருந்தான். பூரணி தேர்தலில் சத்தியத்தின் பலத்தால் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்பட்ட கருணை வள்ளல் அந்த வெற்றியின் மகிழ்ச்சியைத் தான் இருந்து நுகராமல் போய்ச் சேர்ந்துவிட்டான்.

"எல்லோர் வாயிலும் மண்ணைப் போட்டுப் போய் விட்டாயே, என் தங்கமே" என்று மங்களேசுவரி அம்மாள் கதறினாள். ஒவ்வொன்றாகப் பழைய நிகழ்ச்சிகளை நினைக்க நினைக்க அணை உடைந்த வெள்ளம் போல் அழுகை பொங்கிற்று பூரணிக்கு. நிராதரவான பேதைபோல் அவள் அலமலந்து அலறினாள்.

"பார்த்துக் கொண்டே இரு! தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு அடுத்த திங்கள்கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேன்" என்று சில தினங்களுக்கு முன் அரவிந்தன் தன்னிடம் சிரித்துக் கொண்டே கூறிய சொற்களை இப்போது அவள் எண்ணினாள், உள்ளம் துடித்தது. அப்படியே தன்னுடைய மூச்சும் நின்று போய்விடக் கூடாதோ என்று தவித்தாள் அவள். "சிலப்பதிகாரத்தில் பாண்டியன் இறந்தவுடன் அவன் தேவி தன்னுயிரைக் கொண்டு அவனுயிரைத் தேடுவாள் போல் இறந்தாளென்று இளங்கோ பாடியிருக்கிறாரே! அதே போல் என்னுயிரைக் கொண்டு நான் அரவிந்தன் உயிரினைத் தேட முடியுமா?" என்று நினைந்து நினைந்து அழுதாள்.

வீட்டுக்கு வெளியே மாலைகளோடு காத்திருந்த மனிதர்கள் நிழல்கள் நகர்வது போல் நடந்து மௌனமாக ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்கள். அந்த அறைக்கு வெளியே வந்து கண்கலங்கித் தலைகுனிந்து சோக வடிவங்களாய் நின்றார்கள். அவர்களில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் மெல்ல அறைக்குள் நுழைந்து நா தழுதழுக்க உணர்வு நெகிழ்ந்து துடிக்கும் அவலக் குரலில்,

"இளைஞனே நீ இன்று சாகவில்லை; சாகமாட்டாய். வறுமையும், வாட்டமும் ஏழ்மையும் ஏக்கமும் நிறைந்த இந்தத் தமிழ் மாநிலத்தில் தலைமுறைக்கு ஒரு தரம் நீ பிறப்பாய்; பிறக்க வேண்டும். பிறந்து நல்லனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று உருக்கமாக நிறுத்தி நிறுத்தி கூறிவிட்டுத் தம் கையிலிருந்த மாலையை அரவிந்தன் உடலில் சூட்டினார். எல்லோருடைய உள்ளத்தையும் உருகச் செய்தன அவர் செய்கையும் சொற்களும். பூரணி அழுகைக் கிடையே நிமிர்ந்து பார்த்தாள். இச்சொற்கள் அவள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. மாலையணிந்த தோற்றத்தில் உயிரோடும், உணர்வோடும் குறும்புநகை குலவ அரவிந்தன் படுத்திருப்பதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது. திருப்பரங்குன்றத்து மலையில் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு ஏறப்போவதாகக் கூறின போது இப்படித் தானே சிரித்தான் அவன்! சவமாகக் கிடக்கும் இந்த நிலையிலும் இந்த மாலை அவனுக்கு எத்தனை அழகாக இருக்கிறது? எழுந்து நிற்க முடியாதபடி, கீழே விழுந்துவிட்ட அந்தத் துக்கத்துக்கு நடுவே அவளுக்கு விந்தையானதொரு பேராசை உண்டாயிற்று. மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிழல்கள் போல் மௌனமாக நின்று கொண்டிருந்தவர்கள் கைகளில் இருந்து பெரிய பெரிய பூ மாலைகளை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து அரவிந்தனுடைய உடலில் சூட்டி அழகு பார்த்தாள். உயிரோடு வாழும்போதே, 'இப்படி ஒரு மண மாலையை அவனுடைய கழுத்தில் அவள் சூட்டியிருக்க வேண்டும்.' எல்லார் கையிலுமாக எல்லா மாலைகளையும் வாங்கிச் சூட்டிவிட்டு நின்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இப்படி நினைத்த போது மீண்டும் கண்களில் நீர் பனித்தது அவளுக்கு. பல நாட்களுக்கு முன் எப்போதோ மங்கையர்கழகத்தில் தான் உள்ளமுருகிப் பேசிய திலகவதியின் பேச்சு இப்போது அவளுக்கு நினைவு வந்தது. திலகவதியைப் போல் மனத்தால் மட்டும் வாழ்ந்து மணம் பரப்பும் வாழ்வுதான் தனக்கும் விதியால் நேரப்பட்டிருக்கிறதென்று அப்போது அவளுக்குத் தெரியாது. 'திலகவதியின் கலிப்பகை சோழ நாட்டுப் போரில் மாண்டான். என்னுடைய அரவிந்தனை வாழ்க்கைப் போரே மாய்த்துவிட்டது' என்று நினைத்த போது மேலும் துயரம் கொதித்தது. அவள் மனத்தில் 'உடலால் செத்துப் போய்க் கொண்டே உள்ளத்தால் வாழ்ந்த திலகவதி போன்ற புனிதப் பெண் தமிழ்நாட்டில்தான் அம்மா பிறக்க முடியும்' என்று தந்தை சொல்லிக் கொடுத்திருந்ததை நினைத்தபோது உடல் புல்லரித்தது அவளுக்கு. 'எனக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரில் தம்பி இருக்கிறான். உடன்பிறந்த தம்பிகளையும் தங்கைகளையும் காத்து வாழ வைப்பதற்காக நானும் வாழவேண்டும்' என்று அவள் உள்ளத்தில் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே திலகவதியார் கதை தன் மனத்தைக் கவர்ந்து உருக்கி வந்திருப்பதைப் படிப்படியாக நினைத்துக் கண் கலங்கினாள். அவள் நெஞ்சை உணர்வுகள் சூழ்ந்து கொண்டு தேள்களாய்க் கொட்டின.

சிறிது நேரத்துக்குப் பின் அவள் கண்களில் மீண்டும் ஒளி தென்பட்டது. அழுகை நின்றது. அரவிந்தனின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். குனிந்த தலை நிமிராமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேறிப் பக்கத்து அறைக்குள் புகுந்தாள். உள்ளே ஏதோ உடைபடுகிற ஓசை கேட்டது.

பின்னும் சிறிதுநேரம் கழித்துப் பக்கத்து அறையிலிருந்து மீண்டும் அவள் வெளியே வந்தபோது நெற்றியில் திலகம் இல்லை. கைகளில் வளையல்கள் இல்லை. செவிகள், மூக்கு, கழுத்து எங்கும் அங்கிருந்த அணிகலன்கள் கழன்று மூளியாகியிருந்தன. அலைகள் அடங்கிய பெண் கடல்போல் மெல்ல வந்து முருகானந்தத்தை நோக்கி "மேலே நடக்க வேண்டியதைச் செய்யுங்கள்" என்று நிதானமாகச் சொன்னாள் பூரணி. அவள் முகத்தில் உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத சாந்தி நிலவிற்று அப்போது.




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:40 am

நடக்க வேண்டியவைகள் நடந்தன. தேர்தல் வெற்றியைக் கொண்டாட வந்த ஊர்வலம், சோக ஊர்வலமாக மயானம் வரை தொடர்ந்தது. அந்த நள்ளிரவின் அமைதியில் முழுநிலா வானத்தின் கீழே வையையின் வடகரையிலே அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கை மண்ணில் கலந்து பொய்யாய்ப் போய்விட்டது. நிலவைப் பிடித்துச் சில க்றைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகத்துக்குத் திலகம் இல்லாமல் துடைத்துப் போய்விட்டான் அரவிந்தன். தரளம் மிடைத்து ஒளிதவழக் குடைந்து இருபவழமும் பதித்த இதழ்களில் சிரிப்பில்லாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் உடன் வரும் துணையைப் பூரணி இழந்துவிட்டாள்.

அன்றிரவு எல்லோரும் வீடும் திரும்பும்போது இரண்டு மணிக்கு மேலிருக்கும். அரவிந்தன் இருந்த அறையில் அவனுடைய குறிப்பு நோட்டுப் புத்தகங்களும், அவற்றின் மேல் அவள் இலங்கையிலிருந்து வாங்கி வந்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்த கைக்கடிகாரமும் இருந்தன. அந்த கடிகாரத்தை அவனுடைய கையில் கட்டும் போது 'காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடவிடுகிறேன்!' என்று அவள் கூறியதற்கு 'நாம் மனிதர்கள், காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்' என்று அரவிந்தன் புன்னகையோடு கூறிய பதிலை நினைத்தாள் பூரணி. குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் தன்னைக் குறிஞ்சிப் பூவாக உருவகம் செய்து அவன் எழுதியிருந்த வாக்கியங்களைப் படித்தபோது புனிதமானதொரு உணர்வை அடைந்தாள் அவள். அன்றிலிருந்து அவள் மனமே நினைவுகளின் மயானமாகிவிட்டதோ? அங்கே புதைந்த நினனவுகளின் கழிவிரக்கத்தில் அமிழ்ந்து வாடினாள் அவள். சில வாரங்கள் கழித்துச் செய்தித்தாளில் பூரணி, தான் தேர்தலில் வெற்றி பெற்றடைந்த பதவி தனக்குத் தேவையில்லை என்று விட்டுவிட்டச் செய்தி வெளியாகியிருந்தது. அதை விடுவதற்கு முன் பலர் வேண்டிக் கொண்டிருந்தும் அவள் அரசியல் தனக்குத் தேவையில்லை என்றும் சமூகத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தன் வாழ்வை செலவழிக்கப் போவதாகவும் கூறி மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு ஏனையோரை வியப்பில் ஆழ்த்தியது.

ஈடுசெய்ய முடியாத அந்தப்புண் அவளைச் சிறிது காலம் துன்புறுத்தியது. துக்கத்தில் ஞானம் பிறந்தது. அகக்கண்கள் திறந்தன. வாழ்க்கையின் மெய்யான தத்துவம் புலப்பட்டது. பெண்மையின் பயனை வழிமாற்றிக் கொண்டு மணிமேகலை போல் அறச்செல்வியாக மேலெழுந்தாள் பூரணி. 'வாழ்க்கை அவரவருக்கும் நேர்ந்தபடி வருவது. தாயின் கையிலிருக்கும் தின்பண்டத்துக்கு அவசரப்பட்டு அடித்துக் கொண்டு குழந்தைகள் மாதிரி விதியின் கையிலுள்ள வாழ்வுக்கு நைப்பாசைப்பட்டுப் பயனில்லை' என்று அவள் உணர்ந்து ஆற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஞான ஒளிபரப்பும் சொற்பொழிவுகளைச் செய்தாள். பொதுப்பணிகளில் ஈடுபட்டு அலைந்தாள். உலகத்து நாடுகளில் எல்லாம் அறிவு முழக்கமிட்டு வாகை சூடினாள். கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவே ஒளி சிதறி நடந்து செல்வதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தாள். பூரணமான ஞானத்தோடும் பூரணமான பயன்களோடும் பூரணி பெரு வாழ்வு வாழ்ந்தாள். தான் வளர்த்து வாழவிட்ட தம்பிகளும் தங்கைகளும் இன்ப வாழ்வு வாழ்வதைக் கண்டுகொண்டே தான் வாழாமல் இழந்து விட்டதை மறக்க முயன்றாள் அவள். மறைக்க முயன்றாள் எனினும் பொருந்தும்.

ஆனால் ஊருக்கெல்லாம் ஞானத்தைப் போதித்தும் அறிவுரை கூறியும் வாழும் தனக்குள் ஏதோ ஓர் ஆறாப்புண் இருந்து வதைப்பதை மட்டும் அவளால் மறக்க இயலவில்லை. திருப்பரங்குன்றத்து மலை ஏறும் போதெல்லாம் அங்கு சாசனம் போல் பூரணி-அரவிந்தன் என்று கல்மேலிட்ட எழுத்துக்கள் தெரிந்து அவளைக் கண்கலங்க வைத்தன. அழகும் தூய்மையும் பண்பும் உள்ள தமிழ் இளைஞர்களை எங்கு கண்டாலும் அரவிந்தனின் நினைவு வந்தது அவளுக்கு. அன்று அந்தப் பெரியவர் கூறியதுபோல், அரவிந்தன் தலைமுறை தோறும் பிறக்க வேண்டுமென்று அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம் புண்ணாக இருந்தது. தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் ஆறவில்லை அந்தப் பெரும்புண்.

காலம் ஓடுகிறது. வயது ஐம்பதுக்கு மேல் ஆகியும் தளராத உடலோடும் நரையாத குழலோடும் அழகான பல் வரிசையோடும் அவள் இருப்பதைப் பார்த்து அவளுடைய தம்பியின் சிறு பெண் குழந்தை, "எங்க அம்மா இந்த வயசிலே பல்லெல்லாம் விழுந்து தலை நரைச்சுக் கிழவி ஆகிவிட்டது. நீ மட்டும் இப்படி இருக்கிறாயே!" என்று சிரித்துக் கொண்டே மழலை மொழியில் வக்கணையாகக் கேட்கிறது!

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விடுகிறாள் பூரணி. அவள் மனம் துக்கத்தை உணருகிறது. கண்கள் நீர் சிந்துகின்றன. சதா காலமும் எதற்காக அவள் மனம் மௌனமாகவே அழுது கொண்டிருந்ததோ அதற்காக வாய்விட்டே அழுகிறாள். குழந்தை அவளுடைய அழுகைக்குக் காரணம் புரியாமல் மருண்டு பார்க்கிறது, மயங்கித் திகைக்கிறது!

கால ஓட்டத்தில் எத்தனையோ பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. பூரணி ஏதோ பெண்கள் மாநாட்டுக்காகக் கோடைக்கானலுக்கு மீண்டும் வந்திருக்கிறாள். அந்த ஆண்டும் குறிஞ்சி பூக்கும் முறை; மலை நிறைய குறிஞ்சி பூத்திருக்கிறது. காலையில் மாநாடு முடிந்துவிட்டதனால் அன்று மாலை உடன் வந்திருக்கும் வேறு சில பெண்களோடு ஏரிக்கரைக்குச் செல்கிறாள் பூரணி. இளம்பெண்கள் எல்லோரும் படகில் சுற்றப் போய்விடுகிறார்கள். பூரணி அருகிலிருந்த வீதியில் தனியே உலவச் செல்கிறாள். அங்கே ஒரு புகைப்பட நிலையத்தின் வாயிலில் வந்ததும் எதையோ கண்டுவிட்டு இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவள் கண்களைக் கவர்ந்தது அந்தப் புகைப்பட நிலையத்தின் காட்சியறையில் இருந்த ஒரு படம். முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அரவிந்தனும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அங்கே வைக்கப்பெற்றிருக்கிறது! நினைவுபடுத்தக்கூடாத பழைய துயரக் கனவை யாரோ நினைவு படுத்திவிட்டதுபோல் ஆறுதலணை உடைந்து வேதனை பாய்கிறது அவள் மனதில். அந்தப் படம், அந்த மாலைகள், அளவற்று பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் எல்லாம் அவள் மனத்தின் பழைய நினைவுகளைக் கிளறுகின்றன. அந்தப் பூக்களையும் அவை குலவிக் காட்சியளிக்கும் மலைத்தொடர்களின் அழகையும் இரசிக்கத் தூண்டும் எழிலுணர்ச்சியையும் தன் மனத்துக்குத் தந்துவிட்டு மறைந்தவனை எண்ணித் தவித்து நிற்கிறாள் அவள். 'படத்தில் வாழ்கிறோம்; வாழ்வில் இல்லை' என்ற தாபம் மனம் கொள்ளாமல் பெருகுகிறது. எங்காவது ஓடிப்போய்க் குமுறிக் குமுறி அழுது அந்த அழுகையின் முடிவில் இதயமே தானாக வெடித்துச் சிதறிச் செத்துப் போய்விட வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. படிப்பும், புகழும், பெருமையும், வயதும் மறந்து சர்வசாதாரணமாக பேதைச் சிறு பெண் போல் அங்கே கண் கலங்கி நிற்கிறாள் அவள். துக்கத்துக்கு முன் படிப்பும் ஞானமும் என்ன செய்துவிட முடியும்?

தனியாகக் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போய் அங்கே தானும் அரவிந்தனும் முன்பு அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தாங்க முடியாமல் சுமையேறிக் கிடக்கும் துக்கங்களை அழுது கரைக்க வேண்டும்போல ஒரு துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. உலகத்து மக்களின் துக்கத்துக்கெல்லாம் ஆறுதல் கூறி அறிவுரை வழங்கித் தன் பார்வையாலும், பேச்சாலும், பண்பட்ட தூய வாழ்வாலும், உதாரண நங்கையாயிருக்கும் அவள் அப்போது தன் இதயச்சூடு தணியாமல் அநாதைபோல் மலைத்து மயங்கி நிற்கிறாள்.

குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருந்த மேட்டில் போய் அமர்ந்து தன்னைப் பிறரும், பிறரைத் தானும் கவனிக்காத தனிமையில் வாய்விட்டுக் கதறி அழுகிறாள், பூரணி. உலகத்தில் மனிதப் பூண்டே அடியோடு அழிந்து அமிழ்ந்து மூச்சுப் பேச்சற்று மூழ்கிப் போன தனிமையில் அந்த மலைத்தொடர்கள் மட்டும் மௌனமாய்ப் பரந்து கிடப்பது போலவும் அதனிடையே எல்லா துக்கங்களுக்கும் எல்லா ஆற்றாமைகளுக்கும் எல்லா ஏக்கங்களுக்கும் எல்லா வேதனைகளுக்கும் எஞ்சி மிஞ்சிய ஒரே ஒரு சொந்தக்காரியாய் தான் மட்டுமே உட்கார்ந்து குமுறியழுது கொண்டிருப்பது போலவும் சொற்களின் துணைகொண்டு விளக்க முடியாததொரு தவிப்பை அடைகிறாள்.

அருகே கோயில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு 'இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்டவனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறி தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்கு முன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூரச் சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய் சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச் சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. 'துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? 'அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது' என்று பித்து பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

"பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!"

என்று மெல்லப் பாடிக்கொண்டே கண்களில் வடிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறாள். கண்களில் நீரையும், மனத்தில் துயரத்தையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிற போது முருகனே அரவிந்தனாக மாறி நின்று மீண்டும் சிரிக்கிறான்! கைகூப்பி வணங்கிவிட்டு முடிவற்ற மலைத் தொடர்களின் தனி வழியே இறங்கி நடக்கிறாள் அவள். வழியின் இருபுறமும் வெள்ளம்போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறு கொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.
---------------

குறிஞ்சி மலர்
கனவு நிறைகிறது

காலமெனும் பூச்செடியில்
கனவு மலர் பூத்தாச்சு
சாலமிகும் விதிக்கொடுமை
சார்ந்துவர உதிர்ந்தாச்சு!


இந்த முடிவுரையைப் படிக்கத் தொடங்குமுன்பே வாசகர்கள் என்மேல் சீற்றமடைந்திருப்பார்கள் என்று என்னால் உய்த்துணர முடிகிறது. 'அரவிந்தன்' என்ற இலட்சிய இளைஞன் 'இறந்திருக்கக் கூடாது' என்று கடுமையாக வாதமிடுவார்கள், கண்டிப்பார்கள், கடிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்தக் கதையின் ஆசிரியன் ஒரே பதிலைத் தான் கூறமுடியும். அரவிந்தன் சாகவில்லை! இந்தத் தலைமுறையிலோ நாளைக்கு வரப்போகும் தலை முறையிலோ, இந்தத் தமிழ் மண்ணில் அன்பும் அருளும் பண்பும் அழகும் நிறைந்து தோன்றும் இளைஞனை - இளைஞர்களை - எங்கே கண்டாலும் அங்கே அரவிந்தன் பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துக்கள்!

நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு ஞானப் பூங்கோதையாய் நின்று நோயும், வறுமையும் நிறைந்த மனிதர்களிடையே அருளொளி பரப்பி உயரிய வாழ்வு காண ஆசைப்படும் பெண் திலகத்தை - திலகவதிகளை எங்கே கண்டாலும் அங்கே பூரணி பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துங்கள்! பூரணியும், அரவிந்தனும் வெறும் கதாபாத்திரங்களல்லர். அவர்கள் தமிழனத்து ஆண்மை, பெண்மைக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்கள். மனிதர்களுக்குத் தான் அழிவு உண்டு. தத்துவங்களுக்கு அழிவில்லை. அவை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை, உயர்ந்தவை. இந்தக் கதையில் பூரணி இறக்கவில்லை. அவள் என்றும் அழியாதவள்.

ஞான ஒளி பரப்பித் தமிழும் தொண்டுமாக நூறு வயதுக்கு மேலும் ஔவையார் போல் தாய்த் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் பூரணி. உயர்ந்த மலைச் சிகரங்களில் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பாக மலரும் குறிஞ்சி மலரைப் போல் காலவெள்ளத்தில் எப்போதாவது ஒரு முறைதான் அவளைப் போல் பெண்மலர் பூக்கிறது. இலக்கியங்களில் வாழ்கிற குறிஞ்சி மலரின் பெருமை போல் காவியங்களில் வாழ வேண்டிய பெண் அவள். என்னால் அவளுடைய கதையை வெறும் வசனத்தில் தான் எழுத முடிந்தது. என்ன செய்வது? அரவிந்தனைப் போல் கவியுள்ளம் எனக்கு இல்லையே!

என் பூரணி கையில் தீபத்தையும், கண்களில் நீரையும் ஏந்திக் கொண்டு இரக்கத்துக்குரிய ஆண், பெண்களின் இருண்ட வாழ்வில் ஒளி சிதறி நடந்து கொண்டே இருக்கட்டுமென்று உங்கள் சார்பில் அவளை வாழ்த்தி முடிக்கிறேன். வாழ்க பூரணி! வாழ்க அரவிந்தன்!

மணிவண்ணன்

முற்றும்




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக