புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_m1060 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 1:11 pm


60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் 22a
-
மறதி நோயால் தொலைந்த அப்பாவைத் தேடும்
மகனின் பயணமே ‘60 வயது மாநிறம்’.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட அப்பாவை
அதற்கான பாதுகாப்பு இல்லத்தில் விக்ரம் பிரபு
சேர்க்கிறார். அங்கிருந்து கணப்பொழுதில்
‘காணாமல்’ போகிறார் பிரகாஷ் ராஜ்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக்
காத்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அப்பாவைக் கண்டுபிடித்துத் தரவேண்டிய போலீஸோ,
தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. பிறகு, அப்பா
பேராசிரியர், பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம்
போதித்தவர் என்பதால் மீண்டும் விசாரணை சூடு
பிடிக்கிறது. பிரகாஷ்ராஜ், ஒரு கொலை செய்துவிட்டு
தப்பிக்கும் சமுத்திரக்கனி கூட்டணியில் சிக்குகிறார்.
இவர்கள் எல்லோரும் குமரவேல் வீட்டில் மறைந்து
வாழ்கின்றனர்.

அப்பாவைத் தேடிக் கிளம்பிய விக்ரம்பிரபு அவரைக்
கண்டடைந்தாரா என்பதன் ஊடாக உறவின் புரிதலும்,
அனுபவங்களுமே படம்! மனதின் மென் உணர்வுகளை,
பாசிட்டிவ் காமெடி கலந்து தரும் தன் வழக்கமான
ரூட்டில் ராதாமோகன்!

மிக நுட்பமாக தந்தையின் இடத்தை நடிப்பில் நிறைவு
செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை பார்த்த எந்த
மேனரிசத்தையும் கொண்டு வராமல் மறைத்து,
அன்பு ஒன்றையே காட்டும் அவரின் நடிப்பு முனைப்பு
அருமை!

‘வெள்ளை நாய், கருப்பு நாய்’ கதை மனப்பூர்வமாக
சிந்திக்க வைக்கிறது.

அடர்த்தியும், அழுத்தமுமாக பெர்ஃபார்மன்ஸ்
தேவைப்படும் இடத்தில் கம்பீரமாக அமர்கிறார்
பிரகாஷ்ராஜ். அப்பாவைத் தொலைத்த மகனின்
பரிதவிப்பை முழுவதுமாகக் கொண்டுவருவதில்
நியாயம் செய்திருக்கிறார் விக்ரம்பிரபு.

அப்பாவை இதுவரை புரிந்துகொண்டதை விட,
மற்றவர்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போது
உடைந்து நொறுங்கும்போது நெகிழ்ச்சியில்
ஆழ்த்துகிறார்.
-
60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் 22b
-

ஒரு கொலை செய்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலையில்
குமரவேல் வீட்டில் அடைக்கலமாகி விடும் சமுத்திரக்கனி,
நுணுக்கமான உடல்மொழியில் கச்சிதம். அவர் அந்தக்
குடும்பத்தில் ஐக்கியமாகி தன்னை உணர்கிற நிமிடங்கள்
அற்புதமானவை.

ஹோமிலிருக்கும் ஞாபகமறதி நோயாளிகள், அவர்களின்
ஃப்ளாஷ்பேக் ஒவ்வொன்றும் மற்றுமொரு சிறுகதைக்கான
வாய்ப்பு. விக்ரம் பிரபுவின் மனம் விரும்பும் இந்துஜா
அழகுத் தேர்வு. பொறுப்பாகவும், கனிவுடனும் கேரக்டருக்கு
வலிமை சேர்க்கிறார்.

வீட்டு உரிமையாளராக குமரவேல் பெரிய ஆறுதல்.
இவ்வளவு இயல்பான நடிகரை ராதாமோகன் மட்டும்தான்
பயன்படுத்த வேண்டுமா? வசனங்களில் விஜி பளீர்!

விளாச வேண்டிய இடத்தில் விளாசி, பிற இடங்களிலும்
அழுத்தம். பேரமைதி தவழும் இடங்களைத் தனித்து
விட்டு மனம் ததும்பும் இடங்களுக்குச் சிறு இசை
அளிக்கிறார் இளையராஜா.

தேடும் உலகத்தின் புனைவை விவேக் ஆனந்தின்
ஒளிப்பதிவு அச்சு அசலாகக் கொண்டு நிறுத்துகிறது.
அவ்வப்போது தலை நீட்டும் நாடகத்தனத்தைத்
தவிர்த்திருக்கலாம். மனிதமும், மனசும் நிறைந்திருப்பதால்
நெஞ்சில் நிற்கிறது.
-
-------------------------------------

- குங்குமம் விமர்சனக்குழு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 1:29 pm

ஐயா இந்த படத்தின் விமர்சனம் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் 

https://eegarai.darkbb.com/t147560-60#1276128



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:39 pm

SK wrote:ஐயா இந்த படத்தின் விமர்சனம் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் 

https://eegarai.darkbb.com/t147560-60#1276128
மேற்கோள் செய்த பதிவு: 1277494

முதிர்ந்த வயது /ஞாபகமின்மை பற்றிய கதை என்பதால் தான் ,
உங்களை போன்ற இளைஞர்கள் எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன்
இதை சுட்டிக்காட்டுவீர்கள் என அறிவதற்காக பதிவிடப்பட்ட
ரெண்டாம் பதிவு என்றெண்ணுகிறேன் .மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 14, 2018 3:45 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:ஐயா இந்த படத்தின் விமர்சனம் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் 

https://eegarai.darkbb.com/t147560-60#1276128
மேற்கோள் செய்த பதிவு: 1277494

முதிர்ந்த வயது /ஞாபகமின்மை பற்றிய கதை என்பதால் தான் ,
உங்களை போன்ற இளைஞர்கள் எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன்
இதை சுட்டிக்காட்டுவீர்கள் என அறிவதற்காக பதிவிடப்பட்ட
ரெண்டாம் பதிவு என்றெண்ணுகிறேன் .மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277537

60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் 1571444738
-
ஏற்கனவே உள்ள விமரிசனம் மாலைமலரில் வந்தது ஆகும்
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 7:03 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:ஐயா இந்த படத்தின் விமர்சனம் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் 

https://eegarai.darkbb.com/t147560-60#1276128
மேற்கோள் செய்த பதிவு: 1277494

முதிர்ந்த வயது /ஞாபகமின்மை பற்றிய கதை என்பதால் தான் ,
உங்களை போன்ற இளைஞர்கள் எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன்
இதை சுட்டிக்காட்டுவீர்கள் என அறிவதற்காக பதிவிடப்பட்ட
ரெண்டாம் பதிவு என்றெண்ணுகிறேன் .மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277537

ஹா ஹா ஹா
முடியல.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 7:17 pm

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் அவர்களின் நடிப்பு மிக மிக அருமையாக உள்ளது, சமுத்திரக்கனி மற்றும் சில நடிகர்கள் நன்றாக நடித்துள்ளார்கள்/

மொத்தத்தில் ஹீரோ & ஹீரோயினைத் தவிர மற்ற அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.





60 வயது மாநிறம் - திரைப்பட விமரிசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக