ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியச் செய்திகள்

5 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..


ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.


தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*


இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு


Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவனாசான் Fri Sep 14, 2018 6:29 am

எங்கள் ஊரில் @போளூர் திவண்ணாமலையில் இரவு நல்ல
மழை பெய்தது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 7:59 pm

மனிதவள மேம்பாட்டில் இந்தியா 130 வது இடத்தில் (மொத்தம் 189 நாடுகள் கொண்ட பட்டியல்) உள்ளதாக ஐ.நா., மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐநா., வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் தற்போதைய நிலவரப்படி 200 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்களில் பெண்கள் சமநிலைக்காக காத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடுகையில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் பெண்களுக்கு மிக சிறிய அளவிலேயே வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.

சமநிலையற்ற தன்மையும், பருவநிலை மாறுபாடும் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கு பெரிய சவால்களாக உள்ளன. ஆரோக்கியமான நீண்டகால வாழ்க்கை, கல்வி அறிவு, கவுரவமான வாழ்க்கைத் தரம் ஆகிய 3 அடிப்படை விஷயங்கள் வளர்ச்சிக்கு நீண்டகால தடைகளாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 0.640 ஆக உள்ளதாக ஐ.நா., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம், அதனால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அரசு வகுத்து வரும் திட்டங்கள், மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு ஆகியன, இந்தியாவின் வளர்ச்சி மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:00 pm

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் கவுகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை காரணமாக பாராமுல்லா - குவாலிகண்ட் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:01 pm

வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது. முதல் 10 இடங்களில் 5 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன.



01. டப்ளின்(அயர்லாந்து)
02. சான்ஜோஸ்(அமெரிக்கா)
3. செங்டு(சீனா)
4. சான்பிரான்சிஸ்கோ(அமெரிக்கா)
5. பெய்ஜிங்(சீனா)
6. டில்லி(இந்தியா)
7. மணிலா(பிலிப்பைன்ஸ்)
8. புஜோவு(சீனா)
9. டியான்ஜின்(சீனா)
10. ஷியான்மென்(சீனா).



முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:01 pm

தெலுங்கானாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜ போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்று அவரது கட்சி, தனது நிலையை மாற்றிகொண்டு, சிறிய மாநலத்தில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார். மக்கள் தலையில் ஏன் இந்த செலவை ஏற்படுத்தினீர்கள் என சந்திரசேகர ராவை கேட்க விரும்புகிறேன். தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடும். வலிமையான சக்தியாக மாநிலத்தில் உருவாகும். மதரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பது தெரியும். மாநிலத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:02 pm

டில்லியில், ஒரு இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் வேகமாக பரவின.இந்த வீடியோவை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங்கும் பார்த்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்னாயக்கிற்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், டில்லி, துணை கமிஷனர் ஆன்டோ அல்போன்ஸாவிடம், இளம்பெண் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், 'என் நண்பரான தோமர், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; என்னை சரமாரியாக தாக்கினார்' என, கூறியிருந்தார்.

இதையடுத்து, டில்லி போலீசார், தோமர் மீது வழக்குப் பதிவு செய்து, தோமரை, நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தோமர், டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:02 pm

பிரிட்டனின் இரண்டு செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உளளது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று துவங்குகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களையும் இந்தியா வணிக நோக்கில் விண்ணில் ஏவ உள்ளது. இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ் ஏ ஆர். என்ற செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், பனிப்படலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்காகவும், 444 கிலோ எடை கொண்ட எஸ்1 - 4 என்ற மற்றொரு செயற்கைக் கோள் பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலமாக நாளை இரவு 10:07 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 1.07 மணிக்கு துவங்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44 வது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:03 pm

சென்னை புழல் சிறையில், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 5 கைதிகள், வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சருடன், சிறைத்துறை டிஜிபி நடத்திய ஆலோசனையின் பேரில், இந்த கைதிகள் சிறை மாற்றப்பட்டுள்ளனர்.


முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Sat Sep 15, 2018 8:04 pm

மதுரை : ரூ.7 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்


மதுரை வரிச்சியூர் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.


முக்கியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவனாசான் Sun Sep 16, 2018 8:54 pm

திரு. ராஜா பா.ஜ. கட்சி பொறுப்பாளர் அவர்கள் காவல்துறையையும் நீதித்துறையையும் காட்மாக சாடி பேசியுள்ளார் .திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன வெட்கம் ,மானம் ,சூடு,
சொரனை என்று பெரியோர் கூறுவது போல் இல்லாமலா>>>>>அவர்களும் வாழ்கின்றனர்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum