ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?

3 posters

Go down

தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? Empty தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?

Post by சிவா Tue Sep 11, 2018 3:35 am

நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன? இந்த கேள்வியை எப்போதாவது நாம் நமக்குள் கேட்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. மணக்க மணக்க யாராவது சமைத்துக் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு, அவ்வளவு தான். மணக்க மணக்க சாம்பாரோ, சட்னியோ வைத்துவிட்டு, கடைசியில் தாளிச்சக் கொட்டுவதற்குள்ளேயும் சில ரகசியங்கள் இருக்கின்றன. ஆனால் நாமோ அது அழகுக்கு என்றும் சுவைக்கு என்றும் மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இல்லை. அதற்குள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன.



இந்திய சமையலில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை கடாயில் விட்டு, மிதமான சூடு வந்தவுடன், கடுகு, சீரகம், போன்றவற்றை சேர்த்து அதனை பொரிய விடுவார்கள். அவை நன்கு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, பச்சை அல்லது சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் அல்லது மிளகு தூள் சேர்ப்பார்கள். இவை அனைத்தும் நன்கு பொரிந்தவுடன் இந்த கலவையை, சுவை மிகுந்த பருப்பு , வறுவல், போரியல், சாம்பார், சட்னி ஆகியவற்றில் சேர்ப்பார்கள். பொதுவாக ஒரு உணவில் தாளிப்பு சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் இந்த தாளிப்பில் மிகப் பெரிய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன என்பது ஒரு ஆச்சர்யமான தகவல். அதனைப் பற்றி இப்போது நாம் காணலாம்.



தாளிப்பு பற்றிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், மஞ்சள், மிளகு போன்ற மசாலா பொருட்களை அரை மணி நேரத்திற்கு அதிகமாக சமைக்கும்போது அதில் உள்ள செயல்படும் சேர்மங்களான குர்குமின் மற்றும் பைபரின் போன்றவைகள் அதன் தன்மையை இழக்கின்றன. ஆனால் அவற்றை தாளிப்பில் பயன்படுத்தும்போது, அதன் தன்மை தக்க வைக்கப்பட்டு குடலுக்கும் உடலுக்கும் நன்மையைச் செய்கின்றன.

பூண்டு

கிருமி எதிர்ப்பு தன்மை பூண்டுக்கு அதிகம் உண்டு. அதனால் தான் பூண்டை தாளிப்பின் போது அந்த சாறு இறங்கும்படி நம்முடைய பாட்டி தட்டிப் போட்டு தாளிப்பார்கள். இந்திய சமையலில் பூண்டு கூட தாளிப்பில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். பூண்டிற்கு கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்பு உண்டு. இதனால் தொற்று மற்றும் கிருமிகள் மனித உடலைத் தாக்குவதில்லை. தாளிப்பில் பூண்டை பயன்படுத்தும்போது ஒரு பாதி அளவே சமைக்கப்படுவதால் அதன் மருத்துவ குணங்கள் தக்க வைக்கப்படுகின்றன. ஆனால் பூண்டு விழுதை சமையலில் சேர்க்கும்போது முழுவதுமாக சமைக்கப்படுவதால் அதிக வெப்பத்தின் காரணமாக அதன் மருத்துவ தன்மை மறைகிறது.



சாம்பார் அல்லது பருப்பு போன்றவற்றில் கொத்துமல்லி இலைகளை பொடியாக நறுக்கி போடாமல் தாளிப்பு நிறைவடையாது. இதனைச் செய்வதால் அந்த உணவின் சுவை மட்டும் அதிகரிப்பதில்லை, உங்கள் செரிமான மண்டலமும் மேம்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் உடற்காப்பு மூலக்கூறுகள் உள்ளன, மேலும் அவை செரிமான தசைகளை மேலும் தளர்த்தும். வயிற்று பிடிப்பு அல்லது குடல் நோய்க்குறி மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.



எல்லா தாளிப்பிலும் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடக்கின்றது. செரிமான கோளாறுகளை சமன் செய்ய மட்டுமில்லாமல், அசிடிட்டி மற்றும் வயிற்றுபோக்கிற்கும் சிறந்த தீர்வைத் தருகின்றன. மிளகாய் விதைகளின் நன்மைகள் மிளகாய் விதைகளின் நன்மைகள் சிவப்பு மற்றும் பச்சை மிளகாயின் விதைகளில் வைட்டமின் ஏ, பி, கே ஆகியவை அதிகமாக உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.



மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் போற்றப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டுமில்லாமல், மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, தொற்று பாதிப்பைப் போக்கவும், இருமல் மற்றும் தொண்டையில் உண்டாகும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இது சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.

தசைவலிக்கு கடுகு

கடுகில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது, இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை, கீல்வாதம், தசை வலி ஆகியவற்றிற்கு நன்மையைச் செய்கின்றது. முடிவுரை முடிவுரை ஆகவே தாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டீர்களா? உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தாளிப்பு உதவுகிறது என்பதால் உடனடியாக உங்கள் உணவில் இதனை இணைத்துக் கொள்ளுங்கள். இதன் நன்மையைப் பெற்றிடுங்கள்.


தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? Empty Re: தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?

Post by SK Tue Sep 11, 2018 10:23 am

தாளிச்சிடீங்க தல  
தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? 103459460 தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? 103459460 தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? 103459460


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? Empty Re: தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?

Post by krishnaamma Wed Sep 19, 2018 8:50 am

அருமையான பதிவு சிவா....பயனுள்ளதும் கூட ! ..... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாளிப்பு என்றால் என்ன?  ஏன் ? Empty Re: தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum