ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

Go down

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு Empty குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 12:03 pm

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு Vijaya-1jpg
-
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் - கோப்புப் படம்
-
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர்
ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில்
சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்
பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று
வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த
2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வருமானவரித்
துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள
மாதவ ராவ் உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள குட்கா
கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர்.


இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம்
வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்,
போலீஸ் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ்
எழுதிய ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சென்னை காவல்துறை ஆணையராக அன்றைய காலகட்டத்தில்
இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற
டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த
23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள்,
மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும்
லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்ததாக கூறப்பட்டது.


இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்குச்
சென்றது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் டில்லி சிபிஐ அதிகாரிகள்
விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக சென்னையில்
உள்ள உணவு மற்றும் பாதுகாப் புத் துறையைச் சேர்ந்த
சில அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும்
மாதவராவிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள்
சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள
சிபிஐ அலுவலகத்தில் மாதவராவ் சில தினங்களுக்கு முன்
ஆஜரானார்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை
நடத்தியதாகக் கூறப்படுகிறது.

-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு Empty Re: குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு

Post by ayyasamy ram Wed Sep 05, 2018 12:05 pm


குட்கா ஊழல் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சிபிஐ ரெய்டு Rajendran%20Housejpg
சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரனின் வீடு
-
விசாரணையில், குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம்
தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு
காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு
லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்?
என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை வீடியோவிலும், எழுத்து
மூலமாகவும் பதிவு செய்துள்ளனர். விரைவில் அடுத்தகட்ட
நடவடிக்கையைத் தொடங்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இன்று காலை தமிழக சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர்
ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
நடத்தி வருகின்றனர்.

சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,
விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர், முன்னாள்
அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை
நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி
வருகின்றனர். முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யும்
நோக்கத்துடன் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடர்பாளர் தி இந்துவிடம் (ஆங்கிலம்)
கூறுகையில் ‘‘குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர்
விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில்
காலை முதல் சோதனை செய்து வருகிறோம்’’ என கூறினார்.

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் காவல்
ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு நெருக்கமான முன்னாள் மற்றும்
தற்போதைய காவல்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள்,
சில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வீடுகளில் சோதனை
நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum