புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_m10ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:09 pm

First topic message reminder :


ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!

இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

என்னென்ன தோஷங்கள்?

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:44 pm


கேது திசை இருக்கும்போது திருமணம் செய்யலாமா?


இறையருளும் குருவருளும் இருந்தால், எந்தத் தடையையும் வெல்லலாம். எந்த தோஷத்தின் வீரியத்தையும் குறைக்கலாம். ஆகவே கவலை வேண்டாம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

ஆனாலும் திருமணத்திற்குத் தடை தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்,

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தார், 33 வயது,7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

அவருக்கு ஒருமுறை அல்ல இருமுறை திருமணம் நடந்துள்ளது, ஆனாலும் தற்போது தனியாகத்தான் உள்ளார்.

ஏன்? என்ன ஆனது?

முதல் கணவர் விபத்தில்உயிரிழந்தார். (இவருக்குப் பிறந்த குழந்தைதான் இந்தப் பையன்.

இரண்டாவதாக விவாகரத்து பெற்றவரை மணந்தார், ஆனால் அவர் சில மாதங்களிலேயே தன் முதல் மனைவியோடு மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கிவிட்டார். இந்தப் பெண் மீண்டும் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.

இப்போது அந்தப் பெண்மணியின் கேள்வி... எனக்கு ஏன் திருமணம் நிலைக்கவில்லை? ஏதாவது தோஷம் உள்ளதா?

நன்றாக கவனியுங்கள். இவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. ராகு கேது தோஷமும் இல்லை.

ஆனாலும் ஏன் மணவாழ்க்கை நிலைக்கவில்லை?

மிக எளிமையான விஷயம்தான். அதாவது மிகச் சாதாரணமான விஷயம்தான் நடந்திருக்கிறது அப்போது.

இவருடைய முதல் திருமணம் நடக்கும் போது கேது திசை நடந்தது.

இரண்டாவது திருமணமும் அதே கேது திசையில் தான் நடந்தது,

எனவேதான் இரண்டும் நிலைக்கவில்லை.

முதல் கணவர் இறந்தது அவர் ஜாதகப்படி மாரக திசை,

இந்தப் பெண்ணுக்கு கேதுதிசையின் காரணமாக நிலைக்காத கணவர் அமைய வேண்டும் என்பது விதி. ஆகவே அது நடந்தது.

இரண்டாவது கணவர் ஆயுளுக்கு பங்கம் இல்லை. அதனால் மனம் மாறி முதல் மனைவியிடமே அவரைக் கொண்டு சேர்த்தது,

இப்போது சொல்லுங்கள்... தோஷமே இல்லாதவருக்கும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? இல்லையா?

எனவே தோஷங்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்,

உங்கள் ஜாதகத்திற்கும் இன்றைய கிரக நிலைகளுக்கும் உள்ள தொடர்பை கவனித்து, என்ன திசா புத்தி நடக்கிறது என ஆராய்ந்து மண வாழ்க்கை அமைத்துக் கொண்டால் சிறப்பைத் தரும்.

சரி... கேது திசையில் திருமணம் செய்யக்கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

அதற்கு முன்னதாக, முதலில் கேதுவைத் தெரிந்து கொள்வோம்,

ஓரிரு வரிகளில் சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:45 pm

சர்க்கரை நோயாளியிடம் லட்டு கொடுத்தால் என்ன செய்வார்? அவர் சாப்பிடமாட்டார். சாப்பிட்டால், இன்னும் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். வேறுயாரிடமாவது கொடுத்து விடுவார்.

அதுபோலத்தான் கேது பகவான் ஒருவருக்கு பொருளைக்கொடுத்துவிட்டு அதை அனுபவிக்க விடமாட்டார். அல்லது அந்த பொருளினால் பிரச்சினைகளைக் கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்,

கேதுவின் திசா ஆண்டுகளான 7 வருடமும் இது நீடிக்கும்.

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

ஒரே பதில்... ஏழு வருடத்தையும் அமைதியாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதன் மீதும் பற்றில்லாமல் துறவியைப்போல் வாழ்ந்தால், துன்பம் இல்லாமல் கடந்து போய்விடலாம். எதன் மீதாவது ஆசையோ பற்றோ வைத்தால் அவ்வளவுதான்... அதை உங்களுக்கு உடனடியாகக் கொடுத்து அதன்மூலமாக பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போவார்.

வேறு பரிகாரமே இல்லையா என்று கேட்கிறீர்களா?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பரிகாரம் என்பது தோஷத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, தோஷத்தையே இல்லாமல் செய்துவிடாது.

தோஷ வீரியத்தை எப்படிக் குறைக்கலாம்? உங்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறேன்.

“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை” என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் உண்மையான அர்த்தம் பிள்ளையாரில் தொடங்கி அனுமனிடம் முடிக்க வேண்டும் என்பதே.

காரணம் கேது என்பவர் பாம்பின் வால் பகுதி ஆவார், எனவே துதிக்கை உள்ள விநாயகரும், வால் உள்ள அனுமனும் கேது திசையின் வீரியத்தை கட்டுப்படுத்தவார்கள்.

மேலும் கேது பகவானின் அதிதேவதை வழிபாடும் பலம் சேர்க்கும்.

யமதர்ம ராஜனின் உதவியாளர், நம் பாவபுண்ணியங்களை கணக்கிட்டுவரும் “சித்ரகுப்தன்” தான் கேதுவின் அதிதேவதை.

அவர் காஞ்சிபுரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் சித்திரகுப்தன். அந்தக் கோயிலுக்குச் சென்று 7 விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். நன்மை நடக்கும். அப்படிக் கோயிலுக்குச் செல்லும் போது, மறக்காமல் உங்கள் ஜாதகத்தையும் எடுத்துச் சென்று அவர் காலடியில் வைத்து வணங்குங்கள்.

பௌர்ணமி அல்லது சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உணருங்கள்.

இன்னும் சில பரிகாரங்கள்...

நவக்கிரகத்தில் உள்ள கேது பகவானுக்கு சித்ரான்னம் எனும் உணவு அல்லது புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து தானம் வழங்குங்கள். நன்மை கிடைக்கும்.

இதையெல்லாம் செய்ய முடியாவிட்டால், சித்தன் போக்கு சிவன் போக்கு” என அமைதியாக இருங்கள். எல்லாம் நன்மையே.

ஆமாம் அந்தப் பெண்ணுக்கு என்னதான் தீர்வு சொன்னீர்கள்? என்று கேட்கிறீர்களா?

3 வது திருமணமே நிலைக்கும் எனச் சொன்னேன்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:46 pm

கணவன் ஓரிடம்... மனைவி வேறிடம்! இது மாங்கல்ய தோஷமா?


மாங்கல்ய பலம் கேள்விப்பட்டிருக்கிறோம்தானே. அதேபோல் மாங்கல்ய தோஷம் என்பதையும் அறிந்திருப்போம்.

அது என்ன மாங்கல்ய தோஷம்?

அதாவது ஒரு ஜாதகத்தில் 8ம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். குறிப்பாக பெண் ஜாதகத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படும். அப்படியானால் ஆண்களுக்கு பார்க்கமாட்டார்களா? என்று யோசிக்கலாம்.

திருமணப் பொருத்தத்தின் போது “ பெண் ஜாதகத்திற்குத்தான் ஆண் ஜாதகம் பொருந்துகிறதா” என்று பார்க்கப்படுமே தவிர, ஆண் ஜாதகத்திற்கு பெண் ஜாதகத்தைப் பார்க்கக்கூடாது.

இரண்டுமே ஒன்றுதானே. என்னங்க இது... என்று யாரேனும் சொல்லலாம். ஆனால் பார்க்கப்படும் முறையானது இப்படித்தான்.

உதாரணமாக “பெண் பார்க்கப் போகிறோம்” என்று தான் கூறுவார்கள், மாப்பிள்ளை பார்க்கப்போகிறோம் என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?

மாப்பிள்ளை வீடு பார்க்க போகிறோம் என்றுதான் சொல்லுவோம். சொல்லுவார்கள்.

அதுபோலத்தான் “ பெண்ணுக்குத்தான் ஆணே தவிர, ஆணுக்குப் பெண் அல்ல”

சரி விஷயத்துக்கு வருவோம்.

இப்போது புரிகிறதா மாங்கல்ய தோஷம் பெண்ணுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று.

என்ன செய்யும் மாங்கல்யதோஷம்.

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு “மாரக கண்டம் “ ஏற்படுத்தும் என்பதே, பெரும்பாலோர் சொல்லுவது!

இது உண்மையா? எட்டாம் இடம், அதன் அதிபதி கிரகத்தின் நிலை, நவாம்சநிலை இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.

மாரகம் மட்டுமே தான் தருமா? இல்லை,

கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பு. அதைவிடுத்து கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என வாழ்ந்தால் அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

இதுவும் மாங்கல்யதோஷம்தான்.

பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும் மாங்கல்யதோஷம்தான்.

நிச்சயமாக அவருடைய கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தான் இருப்பார்.

சில மாதங்களுக்கு முன், சென்னையில் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்கவந்தார்,

அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

“எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. எங்கள் திருமணத்தின்போது என் கணவர் மும்பையிலும், நான் பெங்களூரிலும் பணியில் இருந்தோம்.

என் கணவர் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். பிறகு அவர் போராடி சென்னைக்கு மாறுதலாகி வந்தார்,

அதன்பின் நான் கஷ்டப்பட்டு சென்னைக்கு மாறுதல் வாங்குவதற்குள், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்று விட்டார்,

நான் இங்கு என் மாமியாருடன் இருக்கிறேன். நானும் என் கணவரும் எப்போது தான் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம்? என்று கேட்டார்.

நான் இவர் ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்த விஷயம் மண வாழ்க்கை சிறப்பில்லை என்பதுதான்.

ஆனால் தோஷத்தையும் சில தியாகங்கள் மூலமாக சரிசெய்ய முடியும்.

அவரிடம் நீங்கள் வேலையை ஏன் விடக்கூடாது? வேலையை விட்டுவிட்டால் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழமுடியுமே... எனக்கேட்டேன்.

அவர் தன் வேலையை விட முடியாது என சொல்லிவிட்டார். “ அப்படியானால் இப்படித்தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்’’ என்று உறுதியாய்ச் சொன்னேன்.

தோஷ பரிகாரம் என்பது ஆலய வழிபாட்டால்தான் சரியாகும் என்பதில்லை,

இப்படி சில தியாகங்களாலும் சரியாகும்.

அதாவது ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் “பொருள்பற்று, உயிர்பற்று” என இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

பொருள்பற்று என்பது பொருளாதாரம் சார்ந்தது,

உயிர்பற்று என்பது வாழ்க்கை சார்ந்தது,

நிச்சயமாக, உறுதியாக இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அனுபவிக்க கொடுத்துவைக்கப்படும். மற்றதை விலக்கியே வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நோயற்று இருந்தால், பணம் தராது. பணம் தந்தால் எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்காது. இது யதார்த்தமான உண்மை.

இன்னும் சில விஷயங்கள்... அடுத்தடுத்துப் பார்ப்போம்.

என் நண்பனின் திருமணத்தன்று மாங்கல்யம் காணமல் போனது.

இது ஏன்? எதனால்? பார்ப்போம்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:48 pm

தாலி தானம் செய்யுங்கள்; தோஷம் நீங்கும்!


என் நண்பனின் திருமணம். அப்போது தாலி கட்டுவதற்கு முன்பு மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்கள். அதன்படி மண்டபத்தில் எல்லோரிடமும் ஆசி பெறப்பட்டது. பிறகு மணமேடைக்கு வந்து தாம்பூலத் தட்டைப் பார்த்தபோது, ஐயர் உட்பட சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆமாம்... திருமாங்கல்யத்தைக் காணவில்லை!

ஆசிர்வாதம் செய்த எவரோ ஒருவர் மாங்கல்யத்தைக் களவாடிவிட்டார்.

வேறு வழியே இல்லை. அவசர அவசரமாக விரலிமஞ்சள் வைத்து மாங்கல்யம் தயார் செய்து தாலி கட்டினார் நண்பர்,

ஒருமாதம் கழித்து என்னைப் பார்த்தவர் “ ஏன் இப்படி நடந்தது? இது ஏதாவது அபசகுனமா?’’ என்றும் கேட்டார்.

இங்கே ஒரு விஷயம்... நண்பருடையது காதல் திருமணம். எனவே, ஜாதகம் ஏதும் பார்க்கப்படவில்லை.

நான் அவர் ஜாதகத்தையும் அவர் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ஒரே வரியில் சொன்னேன்... “ஒன்றும் பயப்பட வேண்டாம். இது “புனர்பூ தோஷம்” மட்டுமே. மாங்கல்ய தோஷம் ஏதும் இல்லை என்று சொல்லி, தைரியம் தந்து அனுப்பினேன்.

அவருக்கு திருமணம் முடிந்து தற்போது 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

அது என்ன புனர்பூ தோஷம் என்று கேட்கிறீர்களா?

ஜாதகத்தில் “சனிபகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவரும், இவர் வீட்டில் அவர் இருந்தாலும் அதாவது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

அப்படி என்னென்ன செய்யும்?

இந்த தோஷம் திருமணத்தின்போது மட்டுமே வேலை செய்யும், அதாவது திருமணத்தின் போது சண்டை சச்சரவுகள் , மண்டபம் மாறுதல் என பல குழப்பங்களைத் தந்து திருமணமே நின்று போகும் அளவுக்கு பாதிப்பைத் தந்து மன உளைச்சலைத் தரும்.

உண்மையில் என் நண்பரின் மனைவிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. ஆனாலும் அது தன் தோஷ வீரியத்தைக் காட்டியதால்தான் மாங்கல்யம் களவு போனது.

அவருக்கு 7 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அமர்ந்து தோஷத்தைத் தந்தது. களவு போனதால் தோஷம் நீங்கியது.

களவு போகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?

இங்கே சில விளக்கங்கள் சொல்லியாகவேண்டும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கை என்பது 12 ராசிகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேலை செய்யும்.

நான் பெரிய விளக்கம் தந்து உங்களை குழப்பப்போவதில்லை,

1) இப்படி மாங்கல்யம் களவு போவது

2) மாங்கல்யத்தில் பின்னம் ஏற்பட்டு அதை சரி செய்து மீண்டும் அணிவது( எப்படியும் ஒருமுறையாவது கழட்டி மாட்டவேண்டி வரும்)

3) வேதனையோடு சொல்கிறேன், குறைந்தபட்சம் அடகு வைக்கப்படும் சூழல் உண்டாகும்.

4) திருடர்களிடம் பறிகொடுப்பது

5) ஏதோ ஒரு சூழ்நிலையில் வேண்டுதலுக்காக ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுப்பது.

இப்படி பல வகையிலும் தோஷம் தன் வீரியத்தைக்காட்டும்.

ஆனால் ஒருபோதும் யாருடைய விதியையும் முடித்துவிடாது.

விதி முடியாமல் யாரும் இறைவனை அடைய முடியாது.

எனவே மாங்கல்யதோஷம் என பெரிய பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

அப்படியானால் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்?

திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் தாலி கோர்த்தல் என்ற வைபவம் நடக்கும் அல்லவா! அப்போது அந்த திருமாங்கல்யத்தை ஏதாவது அம்மன் ஆலயத்தில் செலுத்திவிட்டு, புதிதாக மாங்கல்யம் செய்து அணிந்து கொள்ளலாம்.

ஏழைப்பெண்ணுக்கு அவர்களின் திருமணத்திற்கு உங்கள் செலவில் மாங்கல்யம் செய்து தாருங்கள், மிகப்பெரிய புண்ணியம் உண்டாகும்,

தர்மம் செய்வது (யாருக்கும் தெரியாமல்) எப்படிப்பட்ட தோஷத்தையும் இல்லாமல் செய்துவிடும்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:50 pm

பலம் சேர்க்கும் அம்மன் வழிபாடு!

புனர்பூ தோஷங்களைப் பார்த்தோம். அதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

புனர்பூ தோஷம் என்பது சனிபகவான் மற்றும் சந்திரபகவான் இணைவதால் ஏற்படும் தோஷம் என்பதை நாம் அறிவோம்.

சனிபகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

அதேசமயம் சந்திரன் ஒரு ராசியைக் கடக்க வெறும் இரண்டே கால் நாட்கள் மட்டுமே ஆகும்.

சனி, ஈஸ்வரன் பட்டம் பெற்று “சனீஸ்வரன்” என்று அழைக்கப்படுகிறார் என்ற கதை விளக்கம் உண்டு, ஆனால் நான் அதற்குள் செல்லவில்லை,

உண்மையில் “சனை” என்றால் மெதுவாக என்று அர்த்தம்,

“சரம்” என்றால் வேகம் என்று பொருள். நகருதல் என்றும் அர்த்தம்.

எனவே இவரை “சனைச்சரம்” என்றுதான் அழைக்கப்பட்டார், இதுவே மருவி சனீஸ்வரன் என்று நிலைத்தது.

சனைச்சரம் என்றால் மெதுவாக நகர்பவர் என அர்த்தம் ஆகும்.

ஆனால் சந்திரன் “ மன காரகன்” மனம் என்பது எவ்வளவு வேகமானது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நீங்களே அறிந்ததுதான்.

இப்போது உங்களுக்கேப் புரிந்திருக்கும்,

இரட்டை மாட்டு வண்டியில் ஒருமாடு வேகமானதாகவும், மற்றொரு மாடு மெதுவானதாகவும் இருந்தால் வேலைக்கு ஆகுமா?

அதுபோலத்தான் இந்தக் கிரக இணைவு.

மனம், எண்ணம் வேகமாக இருக்கும், ஆனால் உடல் ஒத்துழைக்காது.

அதாவது இரவு படுப்பதற்க்குமுன் “நாளைக்கு நேரமா எந்திரிக்கனும். 7 மணிக்கெல்லாம் அவரை பார்த்துவிட்டு, 9 மணிக்கெல்லாம் EB பில் கட்டிட்டு, 10 மணிக்கு ஆபீஸ் போயிரனும்”

என்றெல்லாம் பிளான்பண்ணி , காலையில எந்திரிக்கிறதே 8 மணியாத்தான் இருக்கும். மொத்த பிளானும் காலி!

இதுதான் ஐயா நிதர்சனம். இதைப் பரிகாரங்களால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாது.

உங்கள் பழக்கவழக்கத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

மிக முக்கியமாக “ தியானம் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.”

என்னால் தியானத்தில் அமர முடியவில்லை, அமர்ந்தாலும் ஏதேதோ கற்பனைகள் ஓடுகிறது, என்பவர்களுக்கு...

“தியானத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறீர்களா? ஆம் என்றால் இனி எந்த மந்திர உச்சாடனமும் செய்யாதீர்கள்.

“ கண்களை மூடி உங்கள் கவனத்தை உங்கள் மூக்கு நுனியை மட்டும் கவனியுங்கள், அதாவது எந்த மூக்கின் வழியாக (வலதா,இடதா) சுவாசம் நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள்”

சத்தியம் செய்கிறேன்... அதிகபட்சம் 15 நாட்களில் உங்கள் தியானத்தில் எந்தக் கற்பனைகளும், எண்ணங்களும் மனம் அலைபாயும் செயல்களும் வரவே வராது.

மனம் ஒருமுகப்படும். இப்போது உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை மனதால் உச்சாடனம் செய்யுங்கள். அனைத்தும் உங்கள் வசப்படும்.

இதுவே சித்தர்கள் சொன்ன ரகசியம்.

சரி இப்போது ஆலயப் பரிகாரங்களை பார்க்கலாம்,

திருமலையில் உள்ள சீனிவாசபெருமாள் சனி அம்சம் என கருதப்படுபவர், அதேசமயம் அந்த திருமலை சந்திர ஸ்தலம் என்று போற்றப்படுகிறது.

எனவே வளர்பிறை காலத்தில் திங்கட்கிழமை அன்று இரவு முழுவதும், அல்லது பௌர்ணமி நாளில் இரவு முழுவதும் திறந்தவெளியில் இருந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,

அதன் பிறகு ஏற்படும் அற்புதத்தைப் பாருங்கள்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:50 pm

திருமலையில் ஶ்ரீவராகசாமி ஆலயம் திருக்குளத்திற்கு அருகே உள்ளது. அவரையும் தரிசித்து விட்டு, குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்,

ஏன் அந்த படி?

அங்கே கொங்கணர் சித்தர் உள்ளார். ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர். அவர் அங்கே ஜீவசமாதி ஆனவர்.

இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

சரி திருப்பதி சென்று வருகிறோம். வேறு ஏதாவது பரிகாரம் உண்டா? உண்டு.

சனி சந்திரன் சேர்க்கை என்பது மன உறுதியைக் குலைக்கும், எனவே காலை சூரியோதயத்தில் அதிலும் அருணோதயத்தில்( சூரிய பகவானின் தேரோட்டி அருணன் ஆவார், சூரிய உதயத்திற்கு முன்பு தேரோட்டியான அருணனே முதலில் தோன்றுவார்) ஆதித்யஹிருதயம் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யுங்கள். அது மன உறுதியைக் கொடுக்கும். எடுக்கின்ற முயற்சியில் தெளிவும் வெற்றியும் கிடைக்கும்.

ஶ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன உறுதி கிடைக்கும்.

சக்திவடிவான அம்மன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்,

ஐயப்பனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட நல்லது நடக்கும்.

எல்லை மற்றும் காவல் தெய்வங்களான அதிலும் பெண் தெய்வங்களை வழிபட அற்புதமானப் பலன்கள் கிடைக்கும் ( திரௌபதி அம்மன், மாரியம்மன், மாகாளி போன்ற தெய்வங்கள்).

இன்னும் சில..

மாற்றுதிறானாளிகளுக்கு முடிந்தவரை உதவுங்கள். வசதி இருந்தால் மூன்றுசக்கர வாகனம், ஊன்றுகோல், இன்னபிற வசதிகளை செய்து தாருங்கள்.

ஆன்மிக நடைப்பயணம் செல்பவர்களுக்கு வசதிகளைச் செய்து தாருங்கள். தண்ணீர் பந்தல், நீர்மோர் வழங்குதல் போன்ற தானங்களைச் செய்யுங்கள்; வாழ்க்கை சிறப்பாகும்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:53 pm

இரவில் தூக்கமில்லாமல் தவிப்பவரா நீங்கள்?


கடந்த அத்தியாயத்தில், பரிகாரங்களைப் பார்த்தோம். பூட்டுக்குச் சாவி கையில் இருந்தால்தானே தைரியமாகப் பூட்டுவோம். அதனால், பரிகாரங்களை முதலில் உங்களுக்கு எடுத்துரைத்தேன். இப்போது பரிகாரம் தெரிந்துவிட்டது அல்லவா. புனர்பூ தொடர்பான தோஷங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் பார்ப்போம்.

‘விபத்து நடக்கும் இடம்’ என்ற அறிவிப்புப் பலகை, சாலையோரத்தில் இருக்கும், பார்த்திருக்கிறோம்தானே. அப்படித்தான் இதுவும்!

வாருங்கள்... தோஷங்களையும் பிரச்சினைகளையும் பார்க்கலாம்.

புனர்பூ தோஷமானது திருமணத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தருகிறது என்று பார்த்தோம். மேலும் சிலரது திருமணங்களில் என்னவெல்லாம் நடந்தது என பார்ப்போம்,

இப்போதும் என் நண்பரின் திருமணத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் சொல்லப் போகிறேன்.

என் நண்பரின் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இனிதாக நடந்து மாங்கல்யமும் கட்டி முடித்தார். ஆனால் மாங்கல்யத்தை மணமாலைக்கு உள்ளே விட்டு கட்டியதால், மாலைமாற்றும் வைபவத்திற்கு மாலையை எடுக்க முற்படும்போதுதான் இந்த விபரம் தெரிய வந்தது,

மாலையை எடுத்தால் மாங்கல்யமும் சேர்ந்தே வரும், என்ன செய்வது கட்டிய மாங்கல்யத்தை பிரிக்கக்கூடாது,

எனவே மாலையைப் பிரித்து மீண்டும் கட்டிவிட்டு இந்த மாலைமாற்றும் வைபவத்தைச் செய்தார்கள்,

இதில் கவனிக்கப்படவேண்டியது, எத்தனை விழிப்புடன் இருந்தாலும் கிரகங்கள் தன் கடமையை செய்யத் தவறுவதே இல்லை என்பதுதான்.

ஒரு பதட்டத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் புனர்பூ தோஷத்தின் மகிமை.

இன்னும் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

என் குடும்ப நண்பரின் மகளுக்கு நடந்த திருமணம் பற்றியது இது.

அந்தப் பெண் ஒருவரைக் காதலித்தார். ஆனால் என் நண்பர் ஏற்றுக்கொள்ளவில்லை.

என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் இந்த புனர்பூ தோஷம் உங்கள் மகளுக்கு இருப்பதாலும், அவர் ஜாதகப்படி காதல் மணம்தான் நடக்கும் என்று சொன்னேன்,

ஆனால் அவர் இது கௌரவ பிரச்சினை எனக் கூறி, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடித்து விட்டார்.

ஆனால் அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லாததால் திருமணத்தை நிறுத்திவிட்டார்,

இப்போதும் என்னிடம் ஆலோசனை கேட்டவரிடம் காதலித்த பையனையே மணம் முடித்து விடுங்கள் என்றேன். ஆனால், கேட்கும் மனநிலையில் அவர் இல்லை.

அடுத்ததாக இன்னொரு வரனை நிச்சயம் செய்து மீண்டும் பத்திரிகை அடிக்கப்பட்டது, முதல் பத்திரிகையை, குலதெய்வத்தின் சந்நிதியில் வைக்க சொந்த ஊர் சென்றார்.

அப்போது மாப்பிள்ளை போன் செய்து ஏதோ கேட்க, குலதெய்வத்திற்கு பத்திரிக்கை வைக்காமல் அப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இப்போது வாடிவதங்கி என்னிடம் வந்தவர், காதலித்த பையனையே பேசி முடிக்கிறேன். இருவர் ஜாதகமும் நன்றாக உள்ளதா எனக்கேட்டார். அ ற்புதமாக உள்ளது , சேர்த்து வையுங்கள் என பிரச்சினையை முடித்து வைத்தேன்.

யோசித்துப் பாருங்கள்... அவரின் வறட்டுப் பிடிவாதம் எவ்வளவு செலவு, அலைச்சல், மனநிம்மதி என பாதிக்கப்பட்டது. எப்படியெல்லாம் உளைச்சலுக்கு ஆளானார்.

என்னதான் முயற்சி செய்தாலும் கிரகங்களின் வீரியத்தைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தாலே, பரிகாரம் என்ற பெயரில் செலவு செய்வது வீண் என்பதை உணர்ந்துகொள்வோம். அப்படி நீங்கள் உணர்ந்தாலே, இந்தத் தொடரின் வெற்றி என மகிழ்வேன்.

பிரச்சினைகளைக் கண்டு பயந்து பரிகாரம் செய்கிறேன் என்று ஒளிவதை விட இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு கடந்து போவதே உண்மையான பரிகாரம்!

சரி இப்போது நாம் , “வாழ்க்கையில் என்ன செய்யும் இந்த புனர்பூ தோஷம்” என்பதை பார்க்கலாம்,

ஒரு நினைவூட்டல்:- ஒருவர் ஜாதகத்தில் சனிபகவானும், சந்திரபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவர், இவர் வீட்டில் அவர் என பரிவர்த்தனை அடைந்தாலும் இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

இது திருமணத்தில் தரும் பாதிப்பைப் பார்த்து விட்டோம். வேறு என்ன செய்யும்? அதையும் பார்க்கலாம்.

இந்த தோஷம் இருப்பவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கத் திணறுவார்கள், முடிவெடுத்த பின் செயல்படுத்தவும் தயங்குவார்கள்.

இதையெல்லாம் தாண்டி ... எடுத்த முடிவு.... பாவம் முடிவுக்கே வராது இழுத்தடிக்கும். அதாவது நடைபெறாத முயற்சியாகவே இருக்கும்.

இன்னும் என்ன? குழப்பவாதி, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிடுபவர், முடிவெடுக்க தயங்குபவர், தவறான முடிவுகளை எடுப்பவர் என்றெல்லாம் பெயர் சம்பாதிக்க நேரிடும்.

அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர், (மார்க்கெட்டிங்) டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர், ஓட்டுநர், உணவுத்தொழில்,

அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பவர்,

அதாவது நிலையாக ஒரே இடத்தில் வேலையில் இருக்கமாட்டார்,

எந்த வேலை அல்லது தொழில் செய்தாலும் மனநிறைவு இல்லாதவர், அடிக்கடி கன்னத்தில் கை வைத்துக்கொள்பவர்,

ஜாதகம் பலமாக இருந்தால் நாடுநாடாக சுற்றி பொருள் ஈட்டுபவர்,

மனசஞ்சலம் உடையவர், ஜாதகம் பலவீனமாக இருந்தால் மனநல பாதிப்பை அடைவார்,

இருளுக்கு பயப்படுவார், அமானுஷ்யத்தில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.

மதுப் பழக்கம் ஏற்பட்டால் மீளமுடியாதவர்.

இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்.

பகல் தூக்கம் விரும்புபவர்.

இளமையிலேயே நரைமுடி ஏற்படும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உடையவர். அடிக்கடி வாயுதொல்லை ஏற்படும்.

இவற்றில் இருந்து விடுபடுவதற்கு, தானம் செய்யுங்கள். திருமலை திருப்பதிக்குச் சென்று தரிசியுங்கள். தியானம் பழகுங்கள்.

தண்ணீர்ப் பந்தல், மோர்ப்பந்தல் அமைத்து எல்லோருக்கும் வழங்குங்கள்



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:54 pm

புத்திர தோஷம்... ஏன்? எதனால்?


இப்போது நாம் பார்க்கப் போவது ‘புத்திரதோஷம்’. ‘சந்ததி விருத்தி’என்று தலைமுறை என்றும் பரம்பரை என்றும் பெருமைபடச் சொல்வார்கள். இந்த சந்தான பாக்கியம் குறித்தும் அந்த தோஷம் தொடர்பாகவும் கொஞ்சம் அலசுவோம்; ஆராய்வோம்!

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைக் கூறினேன்.

அதாவது, இந்தத் தொடரின் நோக்கமே இந்தத் தோஷங்களைக் காட்டி உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்வது அல்ல! உங்களுக்கு மன ரீதியாக உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இந்த தோஷங்கள் எல்லாமே “கடந்து போகும்” என்று உங்களுக்கு உற்சாகத்தையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துவதே தொடரின் நோக்கம்.

புத்திரதோஷம் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, உங்களிடம் ஜோதிடம் சம்பந்தமாக சில தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மருத்துவம் அந்தக் காலத்திலேயே இருந்து வந்தது. ஆங்கில மருத்துவம் என்பது நடுவே வந்தது. சொல்லப்போனால், சில நூற்றாண்டுகளுக்குள் வந்த விஷயம்.

அப்போது, அதாவது அந்தக் காலத்தில் மருத்துவரே ஜோதிடராகவும், ஜோதிடரே மருத்துவராகவும் இருந்தார்கள்.

ஒருவரின் நாடி பிடித்து நோயின் தன்மை, பாதிப்பின் அளவு, தீர்வு என்ன? என அனைத்தும் அறிந்து கொள்வார்,

அதற்குமுன் அவரின் ஜாதகத்தை பார்த்து நோயின் தன்மை, நோய் தீரும் காலம் என அனைத்தையும் சொன்னார்கள். அதுவும் எப்படித் தெரியுமா? திசா புத்தி, கோச்சாரம் பார்த்து முடிவு செய்தார்கள்.

சரி... அதுக்கு இப்போ என்ன? என்கிறீர்களா?

இப்போதும் அதேபோல் ஜாதகத்தை ஆராய்ந்து நோயின் தன்மை, அது தீரும் காலம் முதலானவற்றை நிர்ணயம் செய்ய முடியும்,

சரி... புத்திரதோஷத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் புத்திர பாக்கியம் உண்டாக ஆண்,பெண் இருவர் உடற்கூறும் சரியாக இருக்க வேண்டும்.

இருவரில் ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் குழந்தை உருவாக தடையோ, தாமதமோ ஏற்படும்,

இதை மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு முன்பே எப்படிக் கண்டுபிடிப்பது?

எளிமையாகவும் உங்களுக்குப் புரியும்படியாகவும், என்ன மாதிரியான பரிகாரங்கள் என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:54 pm

முதலில் “புத்திரதோஷம்”என்பது என்ன?

எந்த மாதிரியான பாதிப்புகளை கிரகங்கள் செய்கின்றன?

அதற்கு விலக்கு உண்டா? அப்படியெனில் என்ன?

1) ஆண் ஜாதகத்தில் 5 ஆம் பாவகம்

பெண் ஜாதகத்தில் 9 ஆம் பாவகம் புத்திர பாக்கியத்தைக் காட்டும்.

2) குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருபவர். அவர் நிலை என்ன என்பதும் பார்க்கப்பட வேண்டும்.

3) ஐந்தாம் பாவக அதிபதி நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

4) உயிர் ஜனனம் என்னும் ஆன்ம காரகன் சூரியன் நிலை கவனிக்கப்பட வேண்டும்.

5) ஊழ்வினை காரணமாக நாம் பிறப்பெடுக்கக் காரணமான ராகுகேது என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.

6) ஆணின் உயிர் உற்பத்தியான விந்து, பெண்ணின் கருமுட்டை இவற்றின் காரகமான சுக்கிரன் என்ன ஆனார் என கவனமாகப் பார்க்க வேண்டும்.

7) வேகம், வீரியத்திற்கு காரணமான செவ்வாயின் நிலை கவனிக்கப்பட வேண்டும்.

8) உடல் தகுதியைக் காட்டும் சந்திரனையும் பார்க்கவேண்டும்.

9) இவை அனைத்தும் மட்டுமின்றி நவாம்சம் என்னும் அம்ச கட்டத்தையும் ஆராய வேண்டும்.


இதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? நாங்கள் என்ன ஜோதிடமா படித்திருக்கிறோம்? என்பவர்களுக்கு...

நான் இங்கே ஜோதிடம் கற்றுக்கொடுக்க வரவில்லை. உங்களை கற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை.

உங்கள் குழப்பங்களுக்கு எளிமையாக, புரியும்படியாக, தெளிவு பெறும் வகையில் விவரிக்கப் போகிறேன்.

எளிமையான பரிகாரங்கள் மூலம் உங்கள் பிரச்சினை தீர அதற்கு உரிய தெய்வங்களை உணர்த்தப் போகிறேன். அவ்வளவுதான்!

“நோய்நாடி நோய் முதல்நாடி” என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு.

நோய்நாடி - அதாவது மருத்துவரைப் பார்ப்பது.

நோய் முதல்நாடி - அதற்கு முன்னதாக ஜோதிடரைப் பார்ப்பது.





ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 03, 2018 11:58 pm

உணவில் மாற்றம் செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம்!

புத்திர தோஷத்திற்கானக் குறிப்புகளைப் பார்த்தோம், அதை முழுமையாக உங்களுக்கு புரியும்படியாகவும், உங்கள் ஜாதகத்தை நீங்களே பார்த்து அறியும்படியாகவும் சொல்ல இருக்கிறேன். எளிமையான பரிகாரங்கள் மூலமாக எப்படி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதையும் அடுத்தடுத்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமக்கு வரும் நோய்கள் பல விதமாக இருந்தாலும், அடிப்படையில் 3 விதமான விஷயங்களே மூலகாரணங்களாக அமைகின்றன.

அவை, வாதம், பித்தம், கபம்

வாதம்:- காற்று மற்றும் நிலம் தத்துவம், அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம், பக்கவாதம், ஜீரணக்கோளாறு, வாயுப் பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, ஒரு சிலருக்கு குளிர் காலங்களில் கால் பாதத்தில் இறுக்கப் பிடித்து கொள்ளும். இது ஒருசில நிமிடங்கள் வரை நீடிக்கும் இதுவும் வாதம்தான். வாதத்தில் ஒருவகைதான்.

இதில் புத்திரத் தடைக்கு என்ன காரணம் என்பதை கடைசியில் விளக்குகிறேன்.

பித்தம்:- நெருப்புத் தன்மை அதாவது உடல் சூடு,

நம் உடலின் சூடு ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதை நீங்கள் அறிவீர்கள், மேலும் நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு ( ஆகியவை உடல் அதிகமாக உஷ்ணமாவதால் ஏற்படுவது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். மூலம், ( உள் மூலம், வெளி மூலம் இரண்டுமே) அலர்ஜி, நமைச்சல், அரிப்பு, அல்சர் என்னும் குடல் புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி , தலைச்சுற்றல், வாந்தி , படபடப்பு முதலானவையும் பித்தம் சம்பந்தபட்டது.

கபம்:- நீர் தத்துவம். சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, இழுவை நோய் ( வீசிங்) , உள்ளங்கையில் வியர்ப்பது, தூசி, அலர்ஜி, சீதளம், பேதி, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று, விந்து நீர்த்துப் போதல், மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படுதல் இவை அனைத்தும் கபம் சார்ந்தது.

சரி இதற்கும் புத்திர தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்?


நெருப்பும், நீரும் பகை

காற்றும், நீரும் ஒன்று சேராது

நெருப்பும், காற்றும் நட்பு

நீரும் காற்றும் ஒன்று சேராது எனினும் பகையில்லை.



திருமணத்தில் தசவித பொருத்தம் எனும் 10 வித பொருத்தங்கள் உண்டு என்பதை அறிவீர்கள்தானே!

அதில் நாடிப் பொருத்தமும் ஒன்று.

சமான நாடி, மத்திய நாடி, பார்ச்சுவ நாடி என மூவகை நாடியும் இந்த வாதம்,பித்தம், சிலேத்துமம் (கபம்) என்பதின் வேறுவகை சொல்லாக்கம்தான்.



சமான நாடி :- காற்று

மத்ய நாடி:- நெருப்பு

பார்ச்சுவ நாடி:- நீர்

சமானம் அனைத்தையும் ஏற்கும்.

மத்யம் .. சமான மற்றும் பார்ச்சுவ நாடியை ஏற்கும்,

பார்ச்சுவ.. சமானநாடி ஏற்கும்.



இதில்தான் உள்ளது சூட்சுமம்

நெருப்பும் நெருப்பும் சேரும் போது உயிர்அணுக்கள் இறந்து போகும்.

இருவரும் நீர் எனும் போது ( பார்ச்சுவ) விந்து நீர்த்துப் போகும்

நெருப்பும் நீரும் இணையும்போது உயிர்அணுக்கள் பலவீனம் அடையும்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

சரி... என்ன செய்ய வேண்டும்?

திருமணப் பொருத்ததின் போது, ரஜ்ஜு பார்க்கும் போதே நாடியும் பார்க்க வேண்டும்.

சரி... இதை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

அதற்கு முன் சில விபரங்களைப் பார்ப்போம்



சூரியன்,செவ்வாய், கேது :- நெருப்பு

சனி, புதன்,ராகு :- காற்று

சந்திரன்,சுக்ரன்,:- நீர்



அப்படியானால் குருபகவான்? அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது எல்லாமும் ஆக இருப்பவர் குரு பகவான். அதாவது நில தத்துவம்.

மேற்கண்ட விபரங்களின் படி கிரக ஆதிக்கம் உடையவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக உடல் தட்பவெப்பத்தை சீராக்கலாம்.

சூட்டுத் தன்மை உடையவர்கள் கோதுமையைத் தவிர்க்க வேண்டும்,

நீர்த் தன்மை உடையவர்கள் கோதுமை, பச்சரிசி எடுத்துக்கொள்ள வேண்டும்,

காற்றுத் தன்மையினர் எளிதில் செரிமானம் ஆகும் உணவை உண்ணவேண்டும்,

நாம் இன்னும் புத்திர தோஷம் பற்றிய ஆரம்ப நிலையில்தான் உள்ளோம், இன்னும் விரிவாக, ஆழமாக முழுவிபரங்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக, நம்மில், நம்மால் பல மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதால், அந்த விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன்.



ஜோதிடம் அறிவோம் - ஜோதிடர் ஜெயம் சரவணன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக